கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். […]
Category: வேலூர்
மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் கவசம்பட்டு மற்றும் கருத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சிவகுமார், விக்னேஷ், செல்வம், ஹரி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக மணலை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் மோதி பலியான சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அருகே உள்ள டவஸ்கார்புரத்தில் அருண் குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் ஆம்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து […]
போதையில் மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் […]
வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியன்(55). இவர் தற்போது இரவுநேர காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்து தன்னுடைய மகளை திட்டியுள்ளார். எனவே இளைய மகன் வினோத் தங்கையை திட்டக்கூடாது என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த இரட்டை குழல் துப்பாக்கி எடுத்து தன்னுடைய மகனை சுட்டுள்ளார். இதனால் வினோத் சம்பவ […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவி ராயபுரத்தில் வசிப்பவர் சுதாகர்(36). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வாத்து வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதையடுத்து பாலாற்றங்கரையில் குடில் போடு கடந்த 8 நாட்களாக 3000 வாத்து குஞ்சிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மேய்ச்சலுக்கு வாத்துகளை ஒட்டி சென்றுள்ளார். அப்போது வாத்துகள் அங்கு தேங்கியிருந்த நீரை குடித்துள்ளது. இதையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே வாத்து குஞ்சுகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதை […]
லாரியில் 16 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கலெக்டர் சன்முகசுந்தரத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோடிஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு லாரி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதனை மடக்கி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது […]
கார் டிரைவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள மெட்டுக்குளம் பகுதியில் கார் டிரைவரான தினேஷ் வசித்து வருகிறார். இவர் ரூபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த் என்ற மகன் இருக்கின்றான். அதோடு ரூபிகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பாகாயம் தொரப்பாடி பகுதியில் கடந்த 10ஆம் தேதி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
முதல்வர் வரும் நேரத்தில் மரக்கழிவுகளை தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர். வேலூர் மாவட்டம் கிரீன் சர்கில் சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகாமையில், நேற்று காலை 11 மணிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அவருடைய சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கழிவு துண்டுகளை தீயிட்டு எரித்துள்ளார். இந்த நெருப்பானது பெரிய அளவில் பற்றி எரிந்தது. இதனால் உருவான அதிகமான புகையை அப்பகுதியில் சென்ற மாநகராட்சி […]
பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் இருக்கும் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்தவர் சுரேந்தர். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் […]
வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீஸ் உடை அணிந்து பண வசூலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாலிபர் ஒருவர் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளார். அப்போது வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கும் போதும் அவர் பணத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் […]
சசிகலாவை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சிகிச்சையை முடித்துவிட்டு சசிகலா தமிழகத்திற்குத் திரும்பவுள்ளார். சசிகலாவின் ஆதரவாளர்களான அதிமுகவினர் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாதன் தலைமையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக உள்ளது. இது குறித்து ஜெயந்தி பத்மநாதன் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரமிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த […]
திருமண வயது பூர்த்தியடையாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது 14 வயதுடைய அந்த சிறுமிக்கும் 19 வயதுள்ள வாலிபனுக்கும் நேற்று காலை விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்த மாணவிக்கு 18 […]
மினி வேனில் கடத்தி வரப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்ட சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வேலூரை நோக்கி வந்த ஒரு மினி வேன் சுங்கச்சாவடியில் நின்றுள்ளது. அந்த வேன் டிரைவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் அவரை அழைத்து […]
முருகன் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வேண்டி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணியிடம் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கணவன் மனைவியான முருகன் மற்றும் நளினி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முருகன் நளினி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருவரும் […]
வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் […]
மது குடித்து விட்டு பாட்டிலை வீசியதில் ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றுள்ளது இந்தத் திருவிழாவிற்கு சென்ற வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பள்ளியின் சுவற்றின் மீது அதை வீசியுள்ளனர். அப்போது உடைந்த பீர் பாட்டிலின் துண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை மீது பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த எழிலரசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் எழிலரசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 13ஆவது சட்டத் தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுள்ளார். இதில் அவர் பேசியபோது “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையையாக உள்ளனர். இந்த விடுதலையை உறுதியளிக்கும் வகையில் தற்போது ஆளுநர் கையெழுத்திட உள்ளார். […]
ஆசிரியை திடீரென்று மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்தார். அவர் தர்மநீதி கிராமத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள […]
ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்று உள்ளார். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து விருப்பாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரதீபா, பாகாயம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் […]
வாக்காளர் அடையாள அட்டையை அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலரும் கலெக்டர் சண்முகசுந்தரமும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் […]
சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். […]
லாரி டிரைவர் திடீரென மரணித்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பஜார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மணிகண்டன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]
மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]
குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]
மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் ராயன்பேட்டை காமராஜர் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவர் கொசஸ்தலை ஆற்று பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் […]
மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும் காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும் 2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர் எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். […]
உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் […]
வேலூர் மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகார தோட்டப்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை மேற்கண்ட பதினைந்து கடைகளில் இருந்து எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட், நிக்கோட்டின் பொருட்கள், 25 ரோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் […]
எருதுவிடும் விழாவில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்நார் செம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 316 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஓடும் வீதியில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த எருது விடும் விழாவில் 26 பேர் […]
கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப் டேவிட் நகரில் பிரவீன் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக செதுவாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று அதிலிருந்து தற்போது மீண்டு விட்டார். ஆனாலும் பிரவீன் அந்தோணி மன உளைச்சலில் இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை […]
சிறப்பு வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 லட்சத்து 4 ஆயிரத்து 5௦௦ ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், கருணாநிதி, சக்திவேல் போன்றோர் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டுனர்கள் சீருடை அணிந்து உள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றனரா என்றும், அதிக […]
பாறையிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த ச்டம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் பகுதியில் அஜய் என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள நெக்னாமலை தண்ணிபாறை முருகன் கோவிலுக்கு தனது உறவினர் சந்தோஷத்துடன் அஜய் சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த போது திடீரென பாறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதனால் […]
திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் உள்ள குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மனுஷா, அவரது மகன்கள் பிரேம், விஷ்ணு மற்றும் தனுஷ் ஆகியோரும், அவருடைய மகள் இந்துமதி, உறவினர் சினேகா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகனான நாகராஜ் ஆகிய அனைவரும் ஒரு காரில் பழனிக்கு […]
சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்த குற்றத்திற்காகவும், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காகவும் 11 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ரவி […]
சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர். […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். பொங்கல் திருநாளை ஒட்டி அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகில் எருது விடும் விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இவ் விழாவை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதி ஏற்ற பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப் பாய்ந்தன. எருது விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு என்ற கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென இவரின் மீது மின்சாரம் பாய்ந்து […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான எழிலரசி என்பவரை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உணவு சமைப்பது தொடர்பாக விக்னேஷ் மற்றும் எழிலரசி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் […]
பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் […]
சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுவானம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் சாராயம் விற்ற காரணத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சௌந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை […]
ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி […]
போலீஸ் நிலையத்தில் மேஜையில் வைக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு காவல் நிலையம் உள்ளது. அங்கு விருதம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வடக்கு காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது ஜெகதீசன் அவரது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கு உள்ள மேஜையில் […]
அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனோகரனின் மூன்றாவது மகள் வேனிஷா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் வீட்டில் இருந்துவிட்டார்,. இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை […]
வேலூரில் போலியான கால் சென்டரை நடத்தி மக்களை ஏமாற்றி வந்த பண மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த சுப்பையா தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் இளம் பெண்கள் பலர் வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது கால் சென்டர் என்ற பெயரில் 15 பெண்கள் வேலை செய்து வருவது தெரியவந்தது. இவர்கள் பணியில் அமர்த்தி […]
தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]
ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]