தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
Category: வேலூர்
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால் சிலர் இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவு மீறியதாக 4,100 பேர் மீதி தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் […]
வேலூர் அருகே ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் ரோட்டில் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவர் அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஸ்டாண்ட் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது மனைவிக்கு தீராத மூட்டு வலி இருப்பதால் அதனை குணப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் டிரைவர் வெங்கடேசன் […]
தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை […]
குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது. இதையடுத்து பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஓன்று தோட்டத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது. […]
மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் கையூட்டு பெற்ற தனித்துணை ஆட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டம் இருங்குழியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் நில பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக தெரிகிறது. இதனை விசாரித்த கண்ணமங்கலம் சார் பதிவாளர் தனித்துணை ஆட்சியர் தினகரனை பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த தினகரன் ரஞ்சித்குமார்க்கு சொந்தமான நிலப்பத்திரத்தை விடுவிக்க கையூட்டு கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் […]
வேலூர் அருகே ஒடுக்கத்தூர் பகுதியில் மத்திய அரசு நலத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் யாவும் முறையாக நடக்கின்றனவா? என்பது குறித்து விசாரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென ஒடுகத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 432 வீடுகள் […]
வேலூர் அருகே தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கேவிகுப்பம் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே முதியவர் ஒருவர் மாடு வாங்குவதற்காக ரூபாய் 48,000 பணத்துடன் […]
வேலூரில் அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையை ஒட்டி மயானகொள்ளை திருவிழா நடைபெறும். இதில் ஆண் பக்தர்கள் மண்டை ஓடு, எலும்புத் துண்டு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்த படியும் காளி உள்ளிட்ட பெண் அம்மன் வேடமணிந்து சாமி அம்மன் ஊர்வலம் மேற்கொள்வர். அதேபோல் ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும், தலையை துண்டித்து அதனை வாயில் கவ்வி கொண்டவாறு […]
கவனமின்மை யின் காரணமாக ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாலாஜாவில் இருக்கும் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. உதயகுமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் வாசல் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. நேற்று மாலை வேளையில் […]
18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி […]
வேலூர் மாவட்டம் அருகே குடிபோதையில் குடிசையை எரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பனையபுரம் பகுதியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் அதே தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ரமேஷுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று குடிபோதையில் இருந்த மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், ரமேஷ் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் தீ வைத்தார். இதில் […]
வேலூர் அருகே மகளிர் காவல்நிலையத்தில் போதிய காவல் அதிகாரிகள் இல்லாததால் வழக்கு விசாரணை நடத்த திணறி வருகின்றனர். வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சுமார் சராசரியாக ஒரு நாளைக்கு 7 வழக்குகள் நாள்தோறும் விசாரணைக்கு வருகின்றனர். சுமார் 10க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எழுத்தர் என 10க்கும் […]
வேலூரில் அடிபட்டு உயிரிழந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் […]
காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]
வேலூர் அருகே இறந்த தாயின் உடல் உறுப்புகளை அவரது மகன் மகள்கள் தானம் செய்ய முன்வந்தது அங்குள்ளோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த மைசூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜமுனா. கணவனை இழந்த இவரது மகள் மற்றும் இரண்டு மகன்களை படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. மகன்களில் ஒருவன் மின்சாரவாரிய ஊழியராகவும் மற்றொருவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் ஜமுனா சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் […]
வேலூர் அருகே காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேலூர் மாவட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியானது மேல் வல்லம் கிராமத்தில் நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 199 காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன. காதலன் காதலியுடன் கொண்டாடவேண்டிய நாளில் காதலி இல்லாத முரட்டு […]
வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி வேலூர் மாவட்டம் இடையஞ்சத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவலறிந்து சமூகநலத்துறை அலுவலர், வேலூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் களப்பணியாளர் ஆகியோர் இடையஞ்சாத்து சென்று திருமணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை […]
சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும் விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் […]
வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் […]
வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில் அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே […]
வேலூர் மாவட்டத்தில் சீனாவிலிருந்து வந்த 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வீட்டிலேயே வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அரக்கோணம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர் போன்ற ஊர்களை சேர்ந்த இவர்களை அவரவர் வீட்டிலேயே தனியாக வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 நாட்கள் வரை அவர்கள் மருத்துவ குழு கண்காணிப்பிலேயே இருப்பார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே வேலூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாமில் […]
வேலூர் அருகே தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஏஜென்சீ ஷோரூமில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல சத்யா ஏஜென்சி கிளை ஒன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டுவருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். அதேபோல் […]
விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிளகாய் அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பகுதியை அடுத்த பேட்டையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வினோதமான பூஜையில் நடைபெற்றன. அங்குள்ள கோவில் பூசாரியான அருள்பெரும்ஜோதி என்பவரின் மார்பு மீது உரல் வைத்து மாவு இடித்தனர். மிளகாய் பொடியை கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 […]
மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் […]
சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]
காவேரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்தினால் வேலூரில் தண்ணீர் பஞ்சத்துக்கே இடம் கிடையாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்க, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார். அதில், காவேரி-கோதாவரி […]
பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட மூவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது காதலனுடன் வந்த இளம்பெண் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர்கள் கத்திமுனையில் காதலனை மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர். இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கே வி குப்பம் மேல்மாயில் பகுதியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காளை விடும் விழா நடைபெறும். இந்த விழாவில் பல இளைஞர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இவ்வாண்டும் மயிலார் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட […]
வேலூரில் 3 நாட்களில் மகளின் திருமணத்தை காண இருந்த விவசாயி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் வேலூர் சந்தைக்கு தனது மோட்டார்சைக்கிள் வாகனத்தில் சென்று விட்டு பின் அங்கு பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியுள்ளார். இவருடன் அவரது உறவினரான நவீன்குமார் உடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் […]
வேலூரில் காதலனை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூர் பச்சையப்பாஸ் துணி கடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கோட்டை பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. […]
வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]
உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடிக்குச் சென்று தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால், […]
காட்பாடியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி 4 சவரன் தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி […]
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்,” 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,” என்றும் கோரிக்கை […]
பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]
பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]
குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது […]
பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]
வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]