மின்வாரிய தலைமைப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 53 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் […]
Category: வேலூர்
பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மொலாகரம்பட்டி பகுதியிலிருக்கும் ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகளிடையே பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு சமைக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் பலவகையான சிறுதானியங்களைக் கொண்டு பலவகையான உணவுகளைச் சமைத்துக் காட்டி கல்லூரி மாணவிகள் அசத்தினர். நமது மூதாதையர்கள் நூறு வருடங்களுக்கும் மேல் உயிர் வாழ்ந்ததற்கு காரணம் பாரம்பரிய உணவு […]
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]
ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]
விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் […]
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் […]
வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வழக்கம் போல எட்டு மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் பிரபாகரன்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அருள் தன்னை […]
வேலூரில் பழுதாகி நின்ற ரயிலை சரி பார்த்த ரயில்வே ஊழியர் மீது மற்றொரு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கோதண்டபட்டி கிராமம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயிலின் இன்ஜின் பகுதியில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் ரயில் நின்று விட்டது. இதனால் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் காட்பாடி வாணியம்பாடி […]
மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]
ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]
இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]
பாலாற்றில் தனது தாயுடன் கால்நடைகளைக் கழுவிக்கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடகரை பாலாற்று பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையால் சுமார் 10 அடியிலிருந்து 20 அடி மேல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக ஆம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளன. இதனை அறியாமல் வடகரை பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் […]
தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட […]
நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் […]
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]
வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]
வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]
அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]
வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]
குடியாத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதன் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் குடியாத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதிகளில் கவுண்டனை மகான் ஆற்று […]
வேலூரில் வங்கி வாசலில் பெண்ணிடம் இருந்த 40 ஆயிரம் மற்றும் 35 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போன சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா.இவர் நேதாஜி சாலையில் உள்ள கனரா வங்கிக்கு அருகே பணம் மற்றும் நகையை கொண்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு உங்களின் பணம் கீழே கிடக்கின்றது என்று கூறியுள்ளான். இதையடுத்து நிர்மலா சற்று […]
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் […]
வேலூரில் வானத்தில் இருந்து மர்மப்பொருள் ஓன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே வி குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பகுதியில் திடீரென வானத்திலிருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம பொருள்ஓன்று கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கீழே விழுந்த அந்த மர்ம பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதில் 2 எல்.ஈ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின்படி காவல் […]
வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது , கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் , இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள் இதற்கு […]
வேலூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஓப்புக்கொண்டதால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரின் மகன்சவூரணிஸ் கோஷ் என்பவர் இசிஇ 2 – ஆம் ஆண்டு படித்து வந்தார் . இவர் கடந்த 23 ஆம் தேதி ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]
கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]
எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில் OPS உறுதியாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி […]
வேலூரில் தேர்தல் அதிகாரிகளால் தனியார் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை விதித்து பின்பற்றிவருகிறது. இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்பது […]
வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக விற்பனையாளரிடம் இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் அந்த இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத் தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் […]
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நான்கு […]
ஜோலார்பேட்டையிலிருந்து 50 வேகனில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில் மாலை அலங்காரங்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில் தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து அலங்காரங்களுடன் ரயில் […]
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]
வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]
மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!
அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த 5 பசுமாடுகள் நுறை தள்ளிய படி மர்மமாக இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் கிராமத்தில் கோபி என்ற விவசாயி ஏழு பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார். தீவனத்தை உண்ட மாடுகளில் 5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால் 5 மாடுகளும் கீழே விழுந்து இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது . மேலும் பாதிக்கப்பட்ட […]
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குளிர்ந்தகாற்றுடன் திடீரென மழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்து சாலைகளிலும் […]
போக்குவரத்து துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எட்டு சவரன் நகை […]