தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் […]
Category: விருதுநகர்
சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர், […]
கட்டிட தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்துவருகிறார். இவர் கட்டிட பணிக்காக சிமெண்ட் கலவை இயந்திரத்தை பள்ளிப்பட்டு பகுதிக்கு கொண்டு சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் […]
பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற ஒரு மனைவி உள்ளார். அப்பகுதியில் மற்றொரு முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதாவிற்கும் நாச்சியார்விற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள் ஐயனார், முருகன், மாரீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் போன்ற நான்கு பேர் நாச்சியாருடன் தகராறு செய்துள்ளனர். […]
மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில் 5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]
சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள சுண்டங்குளத்தில் வசிப்பவர் கருப்பசாமி. சம்பவம் நடந்த அன்று சுண்டன்குளத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது சின்னகாமன்பட்டியை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கருப்பசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை […]
சண்டையை தீர்க்க நினைத்த நாட்டாமையை மர்ம நபர்கள் அடித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் உள்ள குன்னக்குடி கிராமத்திற்கு அடுத்துள்ள செந்தட்டியபுரம் கிராமத்தில் வசிப்பவர் வள்ளிநாயகம். இவர் ஒரு விவசாயி மற்றும் அந்த ஊர் நாட்டாமையாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வள்ளிநாயகம் தலையிட்டு இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதில் ஒரு தரப்பினர் தாக்க […]
கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். […]
மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஸ்ரீனிவாசன்,மற்றும் படந்தாலையை சேர்ந்த நேசகுமார், லதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் புகையிலை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைகளை காவல்துறையில் […]
விருதுநகரில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அதில் 16 ஆயிரத்து 497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் […]
சரக்கு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சாத்தூர் பகுதியில் உள்ள பங்களா தெருவில் வசிப்பவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில் அவர் அங்கேயே கீழே விழுந்தார். இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுமன் நகரில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்லூர்சந்தை ரோட்டிற்கு சென்று, அங்கு ரோட்டில் நின்று கொண்டு சண்முகராஜ் தீடீரென அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீசார், சண்முகராஜ் ரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதனையடுத்து ரோட்டில் நின்று அவதூறாக பேசிய குற்றத்திற்காக சண்முராஜை […]
சிவகாசியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் சாலைகள் சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிவகாசி யூனியன் எஸ்என் புரத்தில் உள்ள பஞ்சாயத்து ஸ்டேட் பேங்க் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகரத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கிக் கீழே […]
ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார். நேற்று […]
தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]
விருதுநகரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் நேற்று முன்தினம் வரை விருதுநகரில் மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 ஆயிரத்து 476 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு […]
வேலைக்கு செல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பாண்டியராஜன் வேலைக்கு செல்லாமல் அவ்வபோது கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு நாட்களை கழித்துள்ளார். இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து வேலைக்கு போகாத விரக்தியில் மனமுடைந்த பாண்டியராஜன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]
கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]
ரஜினி பாஜகவை ஆதரிப்பதற்கு முடிவு எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி கூறியுள்ளார் . பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம ஊர் பொங்கல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கௌதமி பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட […]
கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு […]
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் […]
விருதுநகரில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கோரோனவால் பாதிக்கப்பட்டு 16,517 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் 72 ஆயிரத்து 757 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெறுவோர் 99 பேர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்த படவில்லை. இதனிடையே மேலும் ஏழு பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. 1708 பேருக்கு […]
சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகை கௌதமி கழுத்தில் மாலையை கையில் கிளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இதற்கு மத்தியில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் பல மாவட்டங்களில் பொங்கல் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பாக நேற்று நடிகை குஷ்பூ பொங்கல் விழா நடத்தினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பாக […]
விருதுநகர் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து அஜித் ரசிகர்கள் சுத்தப் படுத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் வாரம்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளிக்க வைத்து, முடி திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடை அணிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த மனப்பான்மை பெரிதும் பாராட்டப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது மாதிரியான […]
மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா […]
காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]
பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை […]
சுடும் பாலை சிறுமியின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அர்ஜுனன்- கலாவதி. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மைக்ரோ நிதி நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர் . மாதந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தம்பதியரால் தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால் தம்பதியர்கள் […]
நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]
குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய […]
பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி தங்கம். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் நைசாக மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் காசு மணிகள் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த நாணயங்களை பெற்றுக்கொண்டு இதற்கு பதிலாக […]
நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]
சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட […]
முகநூல் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திநகர் பகுதியில் அனுஷியா (28) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.அதன்பின் அவர்கள் கோவையில் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். அனுசியா ரூ.1 லட்சம் கடன் […]
தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே […]
தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பேசிய ஒரு சிறுமியின் வீட்டிற்கு செல்வதாக உறுதியளித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி அக்கூட்டத்தில் ராஜகீர்த்திகா என்ற 7ம் வகுப்பு மாணவிக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரைப் பார்ப்பதற்கே அந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளார். கூட்டம் தொடங்கியதும் அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை சொல்லலாம் என்று கூறி “மைக்” வழங்கப்பட்டது. அப்போது […]
போலீஸ்காரர் 8 வருடங்களாக வளர்த்த நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மனம் உடைந்து அதனை போலவே மெழுகு சிலை அமைத்து பராமரித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் ரேணுகாந்த் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய் குட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து வாங்கி இருக்கிறார். அதன்பின் அந்த நாய்க்குட்டிக்கு பவுலி என்னும் பெயரை வைத்து 8 […]
விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகி 28 நாட்களே ஆன பெண் விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (23). இவர் தனது உறவினரான வைரசீமான் என்பவரை காதலித்து சென்ற 28 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வைரசீமான் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு அடுத்த […]
நள்ளிரவில் தீக்குச்சி நிறுவனம் தீடிரென பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அமீர் பாளையத்தில் காந்தி என்பவர் சொந்தமாக தீக்குச்சி நிறுவனம் நடத்தி வறுகிறார். இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் குச்சி குடோனில், தீ குச்சி தயாரிப்பதற்காக பல லட்சம் மதிப்புடைய தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் மளமள […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் மூலமாக சகோதரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சகோதரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் 27 வயதுடைய கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் சகோதரிக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் […]
தங்கை ஒருவர் தான் விளையாட அக்கா செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராமலட்சுமி – முருகன். இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(15) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மற்றும் அபிநிக்கா பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கொரோனா முடக்கம் என்பதால் இவர்கள் இருவரும் நேரம் போவதற்காக தங்கள் அப்பாவின் செல்போனில் மாறி மாறி கேம் […]
ராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் 3 அடி உயரம் கொண்ட செங்கலில் விருச்சாசனத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றபடி உலக சாதனை செய்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டால்பின்ராஜ் செங்கலை 3 அடி உயரத்திற்கு அடுக்கி அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை ஒன்றரை மணி நேரம் நின்று உலக சாதனை செய்தார். இதற்கு முன்பு இந்த சாதனையை சென்னையை […]
20க்கும் மேற்பட்ட நபர்கள் நாய்கள் கடித்ததால் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெருவில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேருக்கு அதிகமாக கடி பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு […]
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவிபாண்டி என்பவர் வெச்சக்கரபட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரவிபாண்டி மீது மோதியது. இதில் ரவிபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் ரவிபாண்டியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆலோசனை நடத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 ஆவது குருபூஜை விழா வரும் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன. குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய […]
இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) […]