Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 பேர்….. 8 வயது சிறுமி….. பலாத்காரம் செய்து கொலை….. 1 அசாம் வாலிபர் கைது…. 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை  விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை …!!

அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட சென்ற சிறுமி… சீரழித்த கயவன்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தரமற்ற தண்ணீர்” கல்லடைப்பால் பலர் மரணம்….. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. விருதுநகரில் சோகம்…!!

விருதுநகரில் தரமற்ற தண்ணீரால்  ஏற்பட்ட சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450க்கும் மேற்பட்ட  கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே  குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகமானது  பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வந்தாலும் , இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்கள் நிலத்தடி நீரையே குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர். இந்நிலையில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனியாபுரம், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவுக்காக சாலையைக் கடந்த புள்ளிமான் – வாகனம் மோதி உயிரிழப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது. இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகள் நேருக்கு நேர் மோதல்…இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர்!

விருதுநகர்: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ட்ராவான தேர்தல் முடிவு” திடீர் கலவரம்….. டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு….. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ  மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆண்டு விழாவில் விழிப்புணர்வு……. தனியார் பள்ளி புதிய முயற்சி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் 34 வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளின் ஆடல், பாடல் சுற்றுப்புற சூழல் குறித்த விளக்க நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதில் இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் நடனங்களும், மழைநீர் சேகரிப்பு சுற்றுச்சூழல் […]

Categories
கடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”கலெக்டர் ஆபீஸில் 70 வயது பாட்டியின் கொடூர முடிவு ”….. விருதுநகரில் பரபரப்பு

ஏலச்சீட்டு நடத்திவந்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாமியார் கிணறு தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 70). அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவரிடம் சீட்டுப்பணம் பெற்ற சிலர் பணத்தைத் திரும்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் குருவம்மாள் தவித்து வந்துள்ளார். தொடர்ந்து பணம் செலுத்தியவர்கள் குருவம்மாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு தரப்பினரிடையே கடும் மோதல்….. வானம் நோக்கி துப்பாக்கி சூடு…. 10 பேர் படுகாயம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் இருதரப்பினர் இடையே மோதல் முற்றியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: ஊராட்சி மன்ற தலைவராக துப்புரவு பணியாளர் வெற்றி ….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரஸ்வதி  போட்டியிட்டார். இவர் கான்சாபுரம் பகுதியில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சின்னங்கள் குளறுபடியால் தேர்தல் ரத்து..!!

சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளைநிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை…!!

பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில்  வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவி போட்டி… வங்கி மேலாளர் கொலை… 7 பேருக்கு சிறை..!!

ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவிப் போட்டியில் இளைஞர் கொலை…!!

சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கிராம கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமாசுப்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான இவர் தன்னை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ததற்காக  ஊர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ராமசுப்பு மனு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரம் நடும் போது நிகழ்ந்த அதிசயம்…….. ஆராச்சியில் தொல்லியல்துறை…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு…..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள  பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை.!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்கவசம் சரியாக அணியாததால் உயிரிழந்த காவலர்….. விருதுநகரில் கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய்  ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான கியூப் போட்டி: சென்னை மாணவர் முதல் பரிசு!

மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார். கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், சென்னையைச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“படைபுழு தாக்குதல்” விவசாயிகளுக்கு இலவசபூச்சி கொல்லி மருந்து வழங்கிய வேளாண்துறை….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே படைபுளு தாக்குதலிலிருந்து மக்காச் சோளப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை  அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு படைபுளு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு தவிர்க்கும் பொருட்டு வேளாண்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்…..!!

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”மதுக்கடையை அகற்றுங்க” விருதுநகர் ஆட்சியரிடம் மனு….!!

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அதிகாரிகள் அலட்சியம்” குழிக்குள் விழுந்து பலியான 3 வயது சிறுவன்…… விருதுநகரில் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பந்தல் போடு….. ஒட்டு கேளு…. திமுகவினர் அலப்பறை ….. விரட்டிய போலீஸ் ……!!

வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிவர்களை போலீசார் விரட்டியடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 கல்லூரி….. 150 மாணவர்கள்….. 2 நாள்….. மாநில அளவில் நீச்சல் போட்டி….!!

விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கின.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட 14 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த நீச்சல் போட்டியில், இறுதிப் போட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“குடி போதை” தெப்பத்தில் தவறி விழுந்து வாலிபர் மரணம்….. விருதுநகரில் சோகம்….!!

விருதுநகரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தெப்ப குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பரிசு பெட்டி” 40 வகையான பட்டாசு ரூ575 மட்டுமே……. தீபாவளி சிறப்பு சலுகை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கை கொடுத்த பருவ மழை….. தென் மாவட்டங்களில் விவசாய பணிகள் தீவிரம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள்  முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள்,  தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு வெடிக்குண்டுடன் காட்டுக்குள் சுற்றிய வேட்டையர்கள்…. அதிரடியாக கைது செய்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின்  நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைதறி கூடத்தில் வெடிகுண்டு வீச்சு….. விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு  கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்திய மாணவர்களுக்கு சுத்தம் செய்யும் பணி… மதுரை நீதிமன்றம் அதிரடி..!!

விருதுநகரில் மது அருந்திய 8 மாணவர்களை காமராஜர் இல்லத்தை சுத்தசெய்யகோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையையடுத்த தேவரங்கூர் கலை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த எட்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தது. இதை அடுத்து தங்களை வகுப்புகளில் அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கொடுக்கல் வாங்களால் பலியான பெண் … அதிர்ச்சியில் ஊர் மக்கள் ..!!

அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உலக நாடுகள் பங்கேற்கும் போட்டி” தகுதியிருந்தும் நிதி இல்லை… சிறுமி வேதனை!!..

7  நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார்.  விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல  சாதனை படைத்துள்ளார்.  கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப்  சிலம்ப போட்டியில்  மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி  வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாட்டு வெடிகுண்டு”தயாரித்த இளைஞர் கைது… விருதுநகரில் பரபரப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான  மூலப் பொருட்களையும் பறிமுதல் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள் விருதுநகர்

மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!

அத்திவரதர்  மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில்  40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து  செய்தியாளர்களிடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூரில் தண்ணீர் தட்டுப்பாடு… கருவேல மரத்தை அகற்ற நடவடிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த   சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக  வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10-ஆம் வகுப்பு மாணவன் “உலக சாதனை” 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்கள்….!!

விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைத்தறி தொழிலாளிகள் போராட்டம் வாபஸ்…!!

விசைத்தறி தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டதையடுத்து  போராட்டத்தை கைவிட்டனர். விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சத்திரப்பட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பேண் டேஜ் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும்  அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் விபத்தில் சிக்கிய பெண் பலி…கார் ஓட்டுநர் கைது…!!

அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய  பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர்  விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   இவர்கள்  மீது மோதியதில் நான்கு பேரும்  தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை  விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே  குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த  மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
மருத்துவம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்துாரில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ..

விருதுநகர்  மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின்  நிறுவனர் உமையலிங்கம் அவர்கள்  தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்  .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ  குழுவினர் மக்களுக்கு  கண்பரிசோதனை செய்து  ஆலோசனைகளும்  வழங்கினரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை  கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விண்ணப்பம் வழங்குவதில் பாரபட்சம் ,தனியார் பள்ளியை முற்றுகை செய்த பெற்றோர்கள் “விருதுநகரில் பரபரப்பு !!…

விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில்  பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் […]

Categories

Tech |