சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சித்துராஜபுரத்தில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் கையில் அரிவாளுடன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஜான் பீட்டரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இதில் கோபமடைந்த ஜான் பீட்டர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பீட்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Category: விருதுநகர்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிபிபியர்ஸ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடன் சுமையால் அவதிப்பட்ட அந்தோணி ராஜ் லிபிபியர்ஸிடம் உனது தாயிடம் பணம் கேள் எனக் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து லிபிபியர்ஸ் தனது தாய் ஜெயசீலியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதன்பின் லிபிபியர்ஸ் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் அருகில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தொழிற்சாலையின் எதிரே இருக்கும் டீ கடையில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜபாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் காரியாபட்டி பஜார் அருகில் இருக்கும் டீக்கடை முன்பு படுத்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் அவரது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கணேசன் டீக்கடை முன்பு படுத்திருந்த தனது தந்தையை எழுப்பியுள்ளார். அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷம் குடித்து விட்டேன் […]
விருதுநகரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர் […]
உயர் மின் கோபுர விளக்கு விழுந்ததால் ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடலில் இருக்கும் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி உள்ளது. இந்தப் பழுதினை சரி செய்யும் பணியில் மணி நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென உயர் கோபுர மின் விளக்கு தினேஷின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் வசிக்கும் பிரபு என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த திவ்யா மன உளைச்சலில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
குப்பைகளை எரிக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கிருஷ்ணசாமி -ஜெய லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டிற்கு முன்பு இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்துள்ளார். அப்போது ஜெயலட்சுமியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனியில் ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான வீர லட்சுமிக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு வீர லட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலைகள் கடந்த 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக தர்மராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்புத்தூரில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பாண்டியின் மனைவி ஆனந்த ஜோதி என்பவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பாண்டி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி மீனா […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர், இந்திரா நகர், தாயில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்து வருவதோடு நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் குரங்குகள் சேதப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசுகளை […]
1 1/2 வயது குழந்தை டிராக்டர் கலப்பையின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய நிஷாந்த் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்திரப்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த என்மத்ராவ் ஆகியோர் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி பட்டாசுக்கு தேவையான திரியை தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் என்என்மத்ராவ், லிட்டின், ஹேமந்த் ராவ் ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான திரிகளை தயார் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி கவிதா […]
அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் அமைந்துள்ளது. இதில் 10 பேர் 25 லட்ச ரூபாய் வரை கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வரி கட்டாத குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் […]
பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில் வீரர் பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு வெளியே வைத்து பட்டாசு கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டாசுகள் வெடித்து ஆலையின் உள்ளே கருந்திரி வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்துவிட்டது. இதனால் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஊரணிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பால்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ஊரணி கரையில் பால் சாமியின் ஆடைகள் இருந்ததை பார்த்து உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே குண்டாற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த குற்றத்துக்காக வெள்ளைச்சாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த ராமர், […]
தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெண் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அலுமினிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கூரைகுண்டு கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான சுடர் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் பற்றி […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது வீட்டில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]
ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராமர் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு நேரத்தில் வீட்டின் கூடத்தில் அடைத்து வைத்து விட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இரண்டு ஆட்டுக்குட்டிகள் கணமல் போனது கண்டு ராமர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் கொத்தனாரான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தனகுமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த சந்தனகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம், காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட […]
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சாப்ட்வேர் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்த்த சுரேஷ் தற்போது விடுமுறையில் சிவகாசிக்கு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களான தொழிலதிபர்கள் டேனியல், மோகன் ஆகியோருடன் உறவினர் வீட்டு விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் மாத்தூர் ரிங் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]
பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியரை மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூமாரி என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அனைத்து மாணவ மாணவிகளிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூமாரி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெம்பூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இட மாறுதல் காரணமாக பூமாரி பள்ளியை […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு உமாராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது உமாராணியை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உமாராணி சத்தம் போட்டதால் […]
ஜன்னல் மற்றும் கதவுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டணஞ்செவல் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புது வீட்டிற்கு தேவையான 6 மர ஜன்னல்கள், நிலகதவுகள் போன்றவற்றை வேல்முருகன் வாங்கி வைத்துள்ளார். நேற்று காலை புது வீட்டிற்கு சென்று பார்த்த போது வாங்கி வைக்கப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல்கள் காணாமல் போனதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். […]
காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புறம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தால் தீயை அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர […]
பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம். துரைசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவரது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் விக்னேஷ் தனது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 […]
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து முன்னால் சென்ற லாரி மணல் மேட்டில் ஏற முயன்றது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து சுப்ரமணியன் மோட்டார் […]
ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி யில் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று மின்கசிவு காரணமாக ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் பற்றி எரிந்த தீயை […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி பகுதியில் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிறிதுகாலம் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 18ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலைக்கு ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் […]
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் ஜோதி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இதனால் கண் விழித்து வெளியே வந்து பார்த்த ஜோதிமுருகன் தனது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]
தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் வலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு தனது நண்பரான ராஜ் உள்பட 4 பேருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் கன்னியாகுமரி நோக்கி சென்றுள்ளார். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜ் ஓட்டி சென்ற நிலையில் சந்துரு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் கவுசிகா நதி பாலத்தில் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவில் ஓய்வுபெற்ற பேராசிரியரான சூரிய சந்திரர் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சந்திர செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உடையானம் பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராக்கம்மாள், தற்போது தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது மனைவி சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை […]
விருதுநகர் மாவட்டதில் 11 வயது சிறுமி வாளை கிழி ஆசனத்தை அந்தரத்தில் தொங்கியபடி செய்து உலக சாதனை படைத்தது உள்ளார். விருதுநகர் மாவட்டம் சூலக்கரையாச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியினர். இவர்களுடைய மகள் முஜிதா(11) கடந்த ஐந்து வருடங்களாக யோகா கற்றுக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் இந்த சிறுமி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி 8 நிமிடம் 25 மீட்டர் உயரத்தில் வளையத்தின் மேல் உடம்பை […]
தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சுனாபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையை வைத்து மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தன்னைப்பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக […]
முன் விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி பகுதியில் டிராக்டர் ஓட்டுநரான ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஸ்வரன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ராமர் தரகம்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு தனியார் மது பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் அங்கு சென்று […]
மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கிழக்குப் பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்த மலை அடிவாரத்தில் எம்.ஜி.ஆர் நகர், மலையடிப்பட்டி, அழகை நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலை உச்சியில் இருக்கும் ராமர் கல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தால் அது பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கூலித் தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியராஜனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை […]
சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியை உடனடியாக சரி செய்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் இருக்கும் மின்கம்பி திடீரென அறுந்து […]
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டம் கரிசல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இதற்கான இடத்தை அப்பகுதி மக்கள் தேர்வு செய்து கொடுத்த பிறகு அரசு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா பாஸ்வான் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நிம்மி குமாரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நிம்மி குமாரி சாலையை கடக்க முயற்சி செய்த போது அடையாளம் தெரியாத வாகனம் இளம்பெண் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிம்மி குமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆனந்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆனந்தி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஆனந்தி பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆனந்தியின் பெற்றோர் […]
விடுதியில் இருந்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் அமைந்துள்ள மில்லில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போகியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர் மரகதம் காவல் நிலையத்தில் […]