“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறை பருகுவதால் ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை சீர்செய்ய முடியும் . எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் . எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி கல்லீரல் வலிமை பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும். தினமும் உடலில் எலுமிச்சை சாறு தேய்த்து […]
Category: இயற்கை மருத்துவம்
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு. செய்முறை: முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல் கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!
வயிற்றுப்புண்கள்,குடல்புண், அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும் ஆரோக்கியம் நிறைந்த கம்பங்கூழ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கம்பு மாவு – 1 கப் மோர் – 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு. சீரகம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும். பின் ஆறியதும் […]
தாய்மார்கள் தினமும் சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும். தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!
உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப் எலுமிச்சைப் பழம் – ஒன்று சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் ஐஸ்கியூப்ஸ் – சிறிதளவு உப்பு – சிறிதளவு செய்முறை: சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை, ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன் […]
அன்னாசிபழம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் அன்னாசிபழம் உதவுகிறது . இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது . மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும் வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது . உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி […]
கொய்யாபழம் அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும் மற்றும் நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]
சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் . சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் செரிமானம் சீராகும். சீத்தாப்பழத்துடன் உப்பை கலந்து பருக்கள் மேல் பூசி வர பருக்கள் குணமாகும். சீதாப்பழ விதைகளை பொடியாக்கி, சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகி பேன் தொல்லையிலிருந்து விடு படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலுடையது .சீத்தாப் பழ விதையோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து […]
மிகவும் எளிமையான முறையில் பல்வலியில் இருந்து விடுபட 5 டிப்ஸ்களை இங்கே பார்ப்போம் . பச்சை வெங்காயத்தை கடித்து மென்று வருவதால் பல்வலி காணாமல்போகும் . காட்டன் பஞ்சை கிராம்பு எண்ணெயில் நனைத்து, பல்வலி உள்ள இடத்தில் தேய்த்து வரும் போது , நல்ல நிவாரணம் பெறமுடியும். மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் சொத்தைப் பல், பல்வலி, வாய் துர்நாற்றம் படிப்படியாக நீங்கிவிடும் . கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து இருக்கும் போது பல்வலி […]
இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]
சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும் முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் . புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில் உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை […]
பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது .இது தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை ஊற வைத்து , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில் வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான சருமத்தை பெற வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]
இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் . நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]
பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் உதவும் மருந்துசோறு செய்வது எப்படி என்று காண்போம் . தேவையான பொருட்கள்: அரிசி-1கப் தேங்காய் பால்-1கப் தண்ணீர்-2கப் மருந்து பொடி-3 டேபிள்ஸ்பூன் பூண்டு-2 மருந்து பொடி செய்ய: சதகுப்பை-50 கிராம் மருந்து சாத பட்டை கருவா-50கிராம் சீரகம்-25 கிராம் சாலியா-100 கிராம் தாளிப்பதற்கு : சின்ன வெங்காயம்-1கப் நல்லெண்ணெய்-50மில்லி கருவா-2 கிராம்பு-3 ஏலம்-3 இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன் தயிர்-2 […]
வேப்பிலையை கொண்டு எளிய முறையில் கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி என பார்ப்போம் . வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, சேகரித்துக் கொள்ள வேண்டும் .தினமும் […]
இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]
உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதில் அத்திக்கு நிகரில்லை என்பார்கள் .அதன் ஒருசில பயன்களை இங்கு காணலாம் . தினமும் 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடுவது போதுமானது . எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் […]
ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காயின் மருத்துவக் குணங்களை பற்றி அறியலாம் வாங்க . பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன. இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் […]
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது. ஜூன் மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம். நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். இந்த பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் […]
சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது . சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான […]
முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் . சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது. ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் . திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் […]
ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட சருமத்திலிருந்து விடுபடலாம். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய், கேரட், தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும். மாறாக பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]
கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]
வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் . கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து உள்ளன. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் […]