உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழின் உயிரெழுத்தில் ‘அ’ வுக்கு அடுத்து ‘ஆ’ என்ற எழுத்து வருவது ஏன்? அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! ‘இ’ வுக்கு அடுத்து ‘ஈ’ என்ற எழுத்து வருவது ஏன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! ‘உ’ வுக்கு அடுத்து ‘ஊ’ என்ற எழுத்து வருவது ஏன்? உழைப்பே ஊக்கம் […]
Category: கட்டுரைகள்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். […]
உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் […]
1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]
உழைத்தால் உலகம் உன்வசம்!!!
ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதரும், தொழிலதிபருமான ராக்பெல்லர் என்பதைத் தெரிந்துகொண்டார். “ஐயா, நீங்கள்தான் ஏகப்பட்ட பணமும், புகழும் பெற்றுவிட்டீர்களே! இன்னும் இந்த வயதான காலத்தில் ஏன் உழைக்கிறீர்கள்? நிம்மதியாகத் தூங்க வேண்டியதுதானே?” என்றார். “சரிதான், இப்பொழுது விமானி இவ்விமானத்தை நல்ல உயரத்தில் பறக்க வைத்துவிட்டார். […]
முயற்சியே வெற்றியின் முதல்படி!
“முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே’ என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர்கள் பலர் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் கூட்டிலிருந்து இறை தேடி செல்லும் பறவை தனக்கு தேவையானது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சிறகை விரிக்க தொடங்குகிறது . நம்பிக்கையை வெற்றியின் முதல் படி . வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை. பிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை […]
குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம் தேதி […]
பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார். […]
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே உலுக்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்களை பாதுகாக்கும் பணி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சுப்பிரமணியசாமி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகி இருப்பதற்கும் உதவினார் மோடி. மேலும் […]
இன்று இந்தியாவில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. அதை ஏன் கொண்டாடுகின்றோம் என்று காண்போம். உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15_ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.Sir பட்டம் இந்தியரும் , பாரத ரத்னா விருது வென்ற தலைசிறந்த பொறியாளரான Sir MV என்று அழைக்கப்படும் ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளை பொறியியல் தினமாக கொண்டாடுகின்றோம். 1860_ஆம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த மோக்ஷகுண்டம் […]
கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம். தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் , நினைவு நல்லது வேண்டும் , கனவு மெய்ப்பட வேண்டும் , மண்ணும் மரமும் பயனுற வேண்டும் , அவற்றினால் மனிதனும் உருப்பெற வேண்டும், பெண் விடுதலை வேண்டும் , நம் பாரதம் பாரெங்கும் பெருமை அடைய வேண்டும் என்று கவிதை எழுதுபவன் கவிஞ்சனன்று. கவிதையே வாழ்க்கையாக கொண்டு […]
செப்டம்பர் 8-ஆம் தேதி ஏன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். கல்வியறிவு குறித்த மனித கவனத்தை ஊக்குவிப்பதற்கும் சமூக மற்றும் மனித வளர்ச்சிக்கான உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உணவு , உடை , இருப்பிடம் அனைத்தையும் முழுமையாக பெற்று நிம்மதியான வாழ்வுக்கு கல்வியறிவு முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கும், குழந்தை இறப்பைக் குறைப்பதற்கும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இது ஒரு அவசியமான கருவியாகும். கல்வியறிவு ஒரு குடும்ப நிலையை […]
சர்வதேச எழுத்தறிவு தினத்தை அனுசரித்து வரும் யுனெஸ்கோ 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவரும் கல்வி அறிவு பெறுவார்கள் என்று உறுதியளித்துள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினம் கல்வியறிவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உலகளவில் கல்வியறிவுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்ளவும் உதவுகிறது. எழுத்தறிவு என்பது ஒரு நபரின் வாசிப்பு அல்லது எழுதும் திறன், மக்களை இணைக்கும் மற்றும் மேம்படுத்தும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் திறன் மற்றும் இது ஒரு அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் […]
சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தில் யுனெஸ்கோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்களின் அனைத்து நாடுகளின் குறிக்கோள்களும் கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்களுக்கு ஏற்ப பல்வேறு திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் “கல்வியறிவு மற்றும் ஆரோக்கியம்”, சுகாதாரக் கல்வியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது ஐக்கிய நாடுகளின் எழுத்தறிவு சகாப்தத்தில் 2007-2008 ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. குறிப்பாக 2008-ஆம் ஆண்டுக்கான சர்வதேச […]
உலகளவில் சுமார் 775 மில்லியன் மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 775 மில்லியன் அளவுக்கு மக்கள் குறைந்தபட்ச கல்வியறிவு திறன் கூட இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் 5 நபர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு விழுக்காடு பெண்கள் தான் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். 60.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கல்வியறிவு அற்றவர்கள் எண்ணிக்கை மீது அதிக […]
செப்.8 சர்வதேச கல்வியறிவு நாள் …!!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8_ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு நாள் கடைபிடிக்கப்படுகின்றது. யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம் எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965 ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின்மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்.. 1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த குமரன் […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]
நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]
பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]
தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி […]
அரசியலும் அவசியமும்…!!
அரசியல் – நாட்டின் ஜனநாயகத் தூண்களின் முதலாவதும் முக்கியமானதும் ஆகும். அரசியலே அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. இப்படி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நாட்டின் நடப்பை நிர்ணயிக்க கூடிய அரசியலை எத்தனைபேர் மதிப்புமிக்க ஒரு சேவையாக பணியாற்றி கருதுகின்றனர். அதிகாரத்தின் மேல் கொண்ட பயத்தாலும் தன் மேல் கொண்ட தீராத தாகத்தாலும் அரசியலை ஒதுக்கி வைத்து பார்வையாளர்களாகவே பலர் இருந்துவிட்டு போக பார்க்கின்றனர் காரணம் எதுவாக இருந்தாலும் […]
தலைமுறைகள் தேய்வதில்லை…!!
” இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை: பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்” – இவை அனைத்தும் நமது இளைஞர்களை பற்றி யாரோ இப்போது கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நாம் அனைவரும் போற்றுகின்ற கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதாக சுட்டப்படுகிறது. சாக்ரடீஸ் ‘ஏன்’ என்று கேள்வி கேட்டு அறிந்த பின்னரே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறிய மாபெரும அறிஞர். இளைஞர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க முயன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு, […]
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 – ஜூலை 27, 2015) பொதுவாகடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்(DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை […]
இளைய இந்தியா பலமா ? பாரமா ?
பல ஆண்டுகளாக இந்தியாவின் பெரும் சுமையாக, பிணியாகக் கருதப்பட்டது. அதன் மக்கள் தொகை .மண்ணுக்கும் மரம் பாரமா என்ற எண்ணம் போய் மக்கள் தொகை நாட்டுக்கு பாரம் என்ற எண்ணம் உருவானது. பாரத்தைக் குறைக்கவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்” போன்ற திட்டங்கள் உருவாகி அது ,நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று உருமாறி பின்னர் மொத்த குடும்பத்திற்கு ஒருவர் போதுமே என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.அப்படி பாரமாக இருந்த மக்கள் தொகை என்னும் சுமை இப்பொது இளைய இந்தியா […]