Categories
தேசிய செய்திகள் பல்சுவை

71வது குடியரசு தினம்… ஜொலிஜொலிக்கும் டெல்லி…..!!

டெல்லி இந்திராகாந்தி விமனநிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர்  தேசிய கொடியை பிரதிபலிக்கும்  மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடபடவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமானஆப்ட்ராபிக் கண்ரோல் டவர்  நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண கொடி போல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

99 பேருக்கு ஆப்பு… வாழ்நாள் தடை…. TNPSC அதிரடி …!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு… மக்கள் கவலை..

தங்கம் விலை  உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (24/01/2020) தங்கத்தின் விலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்..!!

பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-”மாணவர்களுக்கு அனுமதி இல்லை” திடீர் எச்சரிக்கை …!!

அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதஉள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (துவக்க அனுமதி பெற்று முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உட்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய […]

Categories
பல்சுவை

2ஆவது நாளாக….. ”சரிவை கண்ட பெட்ரோல் , டீசல்”…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

2ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் – ஃபோன்பே ஏடிஎம்

ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது. மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள ‘Stores’க்கு செல்லவேண்டும். அதிலுள்ள ‘PhonePe ATM’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

யாரும் இல்லை….”காலியான 1,706 ஆசிரியர் பணி” அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”10th , 12th வினாத்தாள் தொகுப்பு விற்பனை” பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு …!!

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நோ… நோ…. ”தெறித்து ஓடும் மாணவர்கள்” நீட் எண்ணிக்கை குறைந்தது …!!

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 24…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 24 கிரிகோரியன் ஆண்டு : 24_ ஆம் நாளாகும் நெட்டாண்டு :  342_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 341_ நாட்கள் உள்ளன   இன்றைய நாள் நிகழ்வுகள் 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். 914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.[1] 1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார். 1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார். 1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. இலங்கை-அருகே காற்றழுத்த தாழ்வு நிலை….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை  பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், வெப்பம் அதிகளவு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுவை மாநிலம் காரைக்கால் 2 […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்’ சென்னையில் அறிமுகம்!

ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளியேறிய வோடஃபோன்… அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டமான லிப்ரா க்ரிப்டோகரன்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயம் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் – வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா …!!

வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ரூ. 1,77 ,500 வரை சம்பளம்…. ”கெத்தன அரசு வேலை”…. TNPSC குரூப் 1 அறிவிப்பு …!!

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகள் : துணை ஆசிரியர் பணி – 18 துணை காவல் கண்காணிப்பாளர் – 19 வணிக வரி உதவி ஆணையர் – 10 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 14 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ரூரல் டெவெலப்மெண்ட் – 07 தீயணைப்பு மீட்புதுறை மாவட்ட அதிகாரி – 01 மொத்தம் – 69 காலி பணியிடங்கள் […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

12-வது படிச்சா போது காத்திருக்கு..! தமிழ்நாடு வனத் துறையில் வேலை..! 

தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் தன்மை: வனக் காப்பாளர் பணியிடங்கள்: 227 பணியின் தன்மை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்கள்: 93 வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ.18,200/- ரூ.57,900/- கல்வித் தகுதி: […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மத்திய பட்ஜெட்… ஒரு வரலாற்று பார்வை….. !!

இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி”  பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]

Categories
பல்சுவை

“தங்கம் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை…

இன்று தங்கம் விலை அதிகரித்து உள்ளதால்  வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தற்போது சென்னையில் 22 கேரட் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”திணறும் நீட் பயிற்சி மையங்கள்” பெற்றோர்கள் வேதனை …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான  நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் […]

Categories
கட்டுரைகள் கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

“காலத்தால் அழியாத கோவில்” எப்பேர்ப்பட்ட நிலநடுக்கம் வந்தாலும்…… ஒரு கல்லு கூட நகராது…… மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை…!!

1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2020 பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்ன? சிறப்பு தொகுப்பு …!!

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]

Categories
பல்சுவை

தங்கம் விலை அதிகரிப்பு… கவலையில் வாடிக்கையாளர்கள்..!!

இன்று தங்கம் விலை அதிகரித்து உள்ளதால்  வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தற்போது சென்னையில் 22 கேரட் […]

Categories
பல்சுவை

”பெட்ரோல், டீசல் அதிரடி சரிவு” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 23…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 23   கிரிகோரியன் ஆண்டு : 23_ ஆம் நாளாகும்   நெட்டாண்டு : 343_ ஆம் நாள்   ஆண்டு முடிவிற்கு : 342_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் 393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். 1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு …!!

அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் பணி புரிவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலரும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”14ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10… 12ஆம் வகுப்பு…. புதிய பாடத்திட்டம்….. மாதிரி வினாத்தாள் வெளியிட்ட PTA…!!

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதால் பாடப் புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், மாதிரிவினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் அச்சிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு..!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை குறைவு … மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தற்போது சென்னையில் 22 கேரட் […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல், டீசல்” வாகனஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :   சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள் …..!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”தேர்வுகளுக்கு கால்குலேட்டர் அனுமதி” CBSC அதிரடி உத்தரவு …!!

கற்றல் குறைபாடுள்ள 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழி மாணவ மாணவிகள் தங்களது பொதுத்தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தி தங்களது தேர்வினை எழுதலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 22…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 22   கிரிகோரியன் ஆண்டு : 22_ ஆம் நாளாகும்   நெட்டாண்டு : 344_ ஆம் நாள்   ஆண்டு முடிவிற்கு : 343_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 613 – கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான். 1506 – 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. 1517 – முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். 1555 – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர் தோற்றது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. ”HWBஇல் சேருங்க” ….. கெத்தா சம்பாதிங்க …!!

மொத்த காலிப் பணியிடங்கள் : 277 பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: Technical Officer-D 28 Stipendiary Trainee – 65 Category- II Stipendiary Trainee- 92 Nurse/A – 04 Scientific Assistant/B (CIVIL) – 05 Scientific Assistant / B (Radiography) – 01 Technician – C – 03 Sub Officer/B – 05 Stenographer Grade – II – 02 Stenographer Grade – III – “Group C, – 08 Upper Division […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

இதுக்கு தான்…. 5..8ஆம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்கிறோம்….. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!

மாணவர்களின் திறனை கண்டறியவே பிற  மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சற்று உயர்வு… கவலையில் வாடிக்கையாளர்கள்..!!

இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தற்போது சென்னையில் 22 கேரட் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“5, 8ஆம் வகுப்பு தேர்வு மையம்” புதிய அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது. முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள்,  குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம […]

Categories
பல்சுவை

குறைந்தது பெட்ரோல், டீசல்.. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 21…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டு : 21_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 345_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 344_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர். 1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். 1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன. 1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754 இல் மீலக் கட்டப்பட்டது. 1774 – முதலாம் […]

Categories
பல்சுவை

சென்சஸ் 500 புள்ளிகளை நாள் உயர்விலிருந்து விலக்குகிறது; கோட்டக் மஹிந்திரா வங்கி, டி.சி.எஸ்., ஆர்.ஐ.எல்….

சந்தை நிலவரம்….. ஈக்விட்டி வரையறைகளான சென்செஸ் மற்றும் நிப்டி திங்களான இன்று ஆரம்ப வர்த்தகத்தில் புதிய உயர்வை எட்டிய பிறகு பிற்பகல் முதல் ஒப்பந்தங்களில் அரை சதவீதம் குறைவாக வர்த்தகம் செய்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில் சென்சஸ் 180.49 புள்ளிகள் அதிகரித்து 41,764.88 ஆகவும், நிப்டி 12,293.35 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டு 59 புள்ளிகள் இழப்பை ஏற்பட்டது. பவர்கிரிட் சென்சஸ் மற்றும் என் என்ஃப்டி 50 டபேக்கில் உள்ள பங்குகளில் ஆதிக்கம் செலுத்தியது. டி.சி.எஸ் 2.48 சதவீதத்தை […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

ஆடி (Audi Q8) சொகுசுக் காருக்கு சொந்தக் காரரான கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடி க்யூ8 (Audi Q8) சொகுசுக் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதிலும், கார் ஓட்டுவதிலும் அலாதி பிரியம் கொண்டவர். ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் கோலி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆடி நிறுவனம் தனது புதிய சொகுசுக் காரான ஆடி க்யூ8 (Audi Q8) மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த […]

Categories
பல்சுவை

குறைந்தது பெட்ரோல், டீசல்.. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 20…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 20 கிரிகோரியன் ஆண்டு : 20_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 346_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 345_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1265 – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது. 1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார். 1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின. 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் […]

Categories
செய்திகள் பல்சுவை

அதிகரித்த விலை… பொங்கி எழுந்த மக்கள்… அதிர்ச்சியில் முகவர்கள்…!!

பாலின் விலை உயர்வால் மக்கள் அவதி….. தமிழகத்தில் அரசாங்கத்திற்கு உதவியாக ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பால் தயிர் நெய் இவற்றின் விலையை ஆவின் பாலகம் நிணயித்து வந்தது. தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை செய்வதும் விலை நிர்ணயிப்பதுமாய் இருக்கிறார்கள். இந்நிலையி இன்று முதல் தனியார் பாலின் விலை ரூ 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பால் முகவர்களும் மக்களும் பெரும் அதிர்ச்சியிலும்  உள்ளார்கள். இன்றைய நாட்களில் நகரங்களில் பசும்பால் வாங்குவது மிகவும் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வேலைவாய்ப்பு

உங்களுக்கு தகுதி இருக்கா ? ”பிசிசிஐ_யில் வேலை” கெத்தான வாழ்க்கை …!!

இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தேர்வுக்குழு உறுப்பி9னர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை சில நாள்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தினார். இதனால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மகளிருக்கான அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அனைத்து உறுப்பினர்களும் புதிதாக தேர்வு […]

Categories
வானிலை

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாககவும். தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு பெய்யும். மேலும் வரும் 22, 23-ம் தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம்  மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்’

 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இந்தத் தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |