Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை … சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல்  கொட்டி தீர்த்தது.  இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

டெல்லியில் 3-வது நாளாக பரவலாக கனமழை ….!!

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது. டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது. க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“தென்மேற்கு பருவக்காற்று“ 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழைக்கும் சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதா தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தென் மேற்குப் பருவக்காற்றால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ….!!

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகயில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி ….!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. ”3மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்”…. வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி,தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை ( ரெட் அலர்ட்) மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எலும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மாநில மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

”குளச்சல் – தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும்”

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ..!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

இன்று இரவு 7 மணி முதல் – அறிவிப்பு

உதகை – நீலகிரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காற்று, வீசுவதால் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதகையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை கொட்டி வருகிறது. முன்னேற்பாடாக மாவட்ட […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக்தில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின்  மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதீத கனமழை பெய்யும் என ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு […]

Categories
நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் ‘Red Alert’ எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு ….!!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் […]

Categories
சற்றுமுன் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை…. 2ஆம் தேதி இரவு 11.30க்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!!

கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் கோட்டயம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் மூழ்கடித்தது. திருவனந்தபுரம், கொல்லம், பதலம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை […]

Categories
பல்சுவை வானிலை

சென்னையில் 2-வது நாளாக கனமழை கொட்டியது…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது.   தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை …..!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதே போல் தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற சுற்று வட்டார […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

5 மாவட்டத்தில்…. இடி, மின்னலுடன் அதி கனமழை…. அலார்ட் வானிலை ஆய்வு மையம் ..!!

கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  அடுத்து  24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
வானிலை

7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் ஜூலை 21, 22 தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு 23 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]

Categories
உலக செய்திகள் வானிலை

“அம்மா ஓடுங்கள்” சிறுவனின் எச்சரிக்கை… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தாய் – வெளியான அதிர்ச்சி வீடியோ

சிறுபொழுதில் தனது தாயின் உயிரை காப்பாற்றிய அச்சிறுவனுக்கு பாராட்டுக்களை  தெரிவித்து வருகின்றன. ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில் தாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க அவர்களது மகன்கள் இருவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அம்மா ஓடுங்கள் என்று குரல் எழுப்ப அதனைக்கேட்டு திரும்பிக்கூட பார்க்காமல் எழுந்து ஓடினார் அவர்களின் தாய். அப்போது அங்கிருந்து நகர்ந்த உடன் பெரிய மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதாவது கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி , தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

11am TO 3pm மக்களே உஷார்…! ”யாரும் வெளிய போகாதீங்க”… தமிழகத்துக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சென்னையில் நேற்று இதுவரைக்கும் 2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெப்பம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் – பாலசந்திரன்

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் ஆம்பன் புயல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

வங்கக்கடலில் உருவானது ”உம்பன் புயல்” வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக்கடலில் ‘உம்பன் புயல்” உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தற்போது புயலாக மாறி இருக்கிறது. இதற்க்கு ”உம்பன்” என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதற்குப் பிறகு வடகிழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தூத்துக்குடியில் ”புயல் எச்சரிக்கை” கூண்டு ஏற்றம் …!!

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என  என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]

Categories
சற்றுமுன் வானிலை

BIG BREAKING: நாளை ‘ஆம்பன் புயல்’ உருவாகிறது …!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை  உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு ”ஆம்பன் புயல்” வருமா ? வானிலை ஆய்வு மையம் விளக்கம் ..!!

தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை ,ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காவிரி டெல்டா, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

கடும் வெயிலில் மழை..!”12 மாவட்டங்களுக்கு இருக்கு”.. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்த காரணத்தால் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் கடந்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே எங்கும் செல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்த்து விடுகின்றனர். இது மட்டுமின்றி சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையான […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, வெப்பச் சலன மழை பெய்து வருகின்றது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியெடுத்தது . இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories

Tech |