Categories
தேசிய செய்திகள்

5,666 மாதிரிகளில் 53 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் கோவிட் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! 8 மாதங்களாக தீராத வயிறு வலி… பரிசோதனையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…?

கர்நாடகாவின் மைசூர் நகரில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்றனர். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பையும் இடையிலேயே நிறுத்தி விட்டார். இந்நிலையில் இறப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்ற போது அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

40 வருடங்கள் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய பெண் துணை மேயராக தேர்வு… குவியும் வாழ்த்து….!!!!!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கயா மாநகராட்சியில் சிந்தாதேவி என்ற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 40 வருடங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பக்தர்களின் வசதிக்காக!!…. சபரிமலையில் புதிய விமான நிலையம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அட!!… இது புதுசா இருக்கே…. தகன மேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய முட்டாள் கிளப்…. எதற்காக தெரியுமா….?

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதை பொருள் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார். அப்போது தகன மேடையில் கேக் வெட்டி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மனித நேயம்..! விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்….. ஹீரோ டிரைவர் உள்ளிட்டோருக்கு ‘நற்கருணை வீரன்’ விருது…. உத்தரகாண்ட் காவல்துறை அறிவிப்பு..!!

வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கோர விபத்து…. 9 பேர் பலி….. 28 பேர் படுகாயம்…. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு….‌!!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு கிரிக்கெட்

கொஞ்சம் கூட யோசிக்கல….. 100 மீட்டர்ல கார்….. சரியான நேரத்தில் பண்ட் உயிரை காப்பாற்றிய டிரைவர், நடத்துனரை கவுரவித்த ஹரியானா ரோட்வேஸ்..!!

டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், சொகுசு கார் மோதி தீப்பிடித்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு உதவிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகியோரை ஹரியானா ரோட்வேஸ் நேற்று கவுரவித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அந்த இடத்திலேயே உதவிய ஹரியானாவை சேர்ந்த இருவர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… “புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை”… தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆய்வு கூட்டம்… “கொரானா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு”… கேரளா அரசு அறிவுறுத்தல்..!!!!

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…!! புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.‌‌… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு ஸ்பெஷலாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ எல்லாம் வேஸ்டா போயிட்டே!… காதல் திருமணம் செய்த ஜோடிக்கு!…. போலீஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: “என் மகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தினான்”…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24-ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில், துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகமது கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஷீசனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 27-ம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பின், துனிஷா சர்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையில் துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இருமல் மருந்தால் உயிரிழப்பு:  தயாரிப்பு நிறுத்தம்..!!

கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டா மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம். Dok-1 Max மருந்தை எடுத்துக் கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் குற்றம் சாட்டியது. நொய்டா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை ஆய்வுக்கு அனுப்பினர் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள். ஆய்வில் மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதால் அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பை பொருத்தவரை தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று மேரியான் பயோடெக் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
தேசிய செய்திகள்

தலாய்லாமாவை உளவுப்பார்த்த பெண்?…. பின்னணி என்ன?…. போலீசார் கைது நடவடிக்கை….!!!!

பீகார் மாநிலம் புத்த கயாவில் “புத்த மஹோத்சவம்” எனப்படும் புனித போதனை நிகழ்ச்சியானது கடந்த டிச.29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இவற்றில் திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இன்று டிச 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா சென்ற 22ம் தேதி கயாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் சீனப் பெண் ஒருவர், […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…! 56 அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் மாற்றம்…. மாநில பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சாதிப் பெயர்களை சொல்லி ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் மாணவர்கள் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த வித சாதிய பாகுபாடு இல்லாமல் கல்வியை கற்க வேண்டும். இதற்காக பள்ளியில் படிக்கும் சமயங்களில் அவர்களுடைய மனதில் சாதி குறித்து எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட 56 அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளின் பெயர்களை பள்ளிக்கல்வித்துறை மாற்றியுள்ளது. பெயர் மாற்றப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷான்: விவசாயிகளே ரூ.2000 பணம் வேணுமா….? புது வருஷத்தில் காத்திருக்கும் குட் நியூஸ்…!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. நாளை (ஜனவரி 1) முதல் எல்லாமே மாறப்போகுது….. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்…..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே……!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி தாக்கல் செய்யாதவர்களுக்கு…. இன்றே கடைசி வாய்ப்பு…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு  இன்றுடன்  முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து இன்றைக்கும்  தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“விருமன் பட பாணியில் நடு ரோட்டில் பைக்கில் கட்டியணைத்து டூயட்”… காதல் ஜோடி கைது…. போலீசிடம் சிக்கியது எப்படி….?

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வீட்டுக்கடன் வாங்க திட்டமா…? ரொம்ப கம்மியான வட்டியில்…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை தினத்தில் சக ஊழியர்களை தொந்தரவு செய்தால்”….”இனி இதுதான் தண்டனை”… அதிரடி அறிவிப்பு….!!!!!

பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ரிஷப் பந்த் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்”…புஷ்கர் தாமி உறுதி…!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று என்னால் நேரடியாக அங்கே வர முடியல”…. வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி…..!!!!

மேற்கு வங்கத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள தான் நேரடியாக வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். காணொலி காட்சியின் மூலம் பிரதமர் பேசியதாவது, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் நேரில் வர திட்டமிடப்பட்டு இருந்தேன். எனினும் சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியினை….. அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. இந்நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியினை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கான டெபாசிட் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போஸ்ட்-ஆபீஸ், வயதானோருக்கான […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகையை கொன்றுவிட்டு நாடகம் போட்ட கணவர்…. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியாகுமாரி. இவர் கடந்த புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 2 1/2  வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் பிரகாஷ் குமாரை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை…. எப்போது தொடக்கம்?… வெளிவரும் தகவல்கள்….!!!!

கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டவுடன், மெட்ரோ ரயில்கள் வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதையை கடந்து சென்று விடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதை ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப் பகுதியில் இருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்திருக்கிறது. கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே துறையை நவீனப்படுத்த மாபெரும் முதலீடு”…. பிரதமர் மோடி தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. 20% வரி யாருக்கெல்லாம் பொருந்தும்?…. இதோ முழு விபரம்….!!!!

வருடந்தோறும் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். அத்துடன் அந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை அவர் சமர்ப்பிக்கிறார். தற்போது புது வரி முறையிலும், பழைய வரி முறையிலும் எவ்வளவு வருமானத்திற்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். புது வரி விதிப்பின் படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனில், வருடத்திற்கு ரூபாய்.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், அதற்கு 20% வரி செலுத்த வேண்டும். பழைய வரிவிதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன்…. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. வெறும் 35 பைசாவில் ரூ.10 லட்சத்திற்கான காப்பீடு…. இதோ முழு விவரம்….!!!!

இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் 10 லட்சத்திற்கான காப்பீடு வழங்குகின்றது. ரயில் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் ஐ ஆர் சி டி சி பயண காப்பீட்டு கொள்கை என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் நல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டினர் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பயணிகளின் மரணம் அல்லது நிரந்தர உடல் மூலம் ஏற்பட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரருக்கு…. அனைத்து உதவிகளும் வழங்கப்படும்…. முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவு….!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட்டுக்கு முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, காயமடைந்த  ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!!…. இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்த பிரதமர் மோடி….!!!!

இந்தியாவின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் ஹவுரா பகுதியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று மரணமடைந்துள்ள நிலையில், காணொளி காட்சி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயில் சேவையானது […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை அவர்களால் தான் உறுதிப்படுத்த முடியும்”…. மத்திய அமைச்சா் பேச்சு….!!!!

தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) “பிரஹாரி” கைப்பேசி செயலியை மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது ” சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வாறு வேலிகள் அமைக்க இயலாத பகுதிகளில் பிஎஸ்எஃப் சாா்பாக உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… கணக்கு போட்டா ஒரு நாளைக்கு 9 வருதேப்பா…. இந்தியாவின் மிகப்பெரிய உணவுப் பிரியர் இவர்தான்…!!!!!

இந்தியாவில் 2022-ல் அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபருக்கு Zomato நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய உணவுப் பிரியர் 2022‌ என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உணவு சமைப்பதை விட ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கிறார்கள். உணவு ஆர்டர் செய்வதில் zomato செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் Zomato செயலியில் டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற நபர் தினந்தோறும் 9 ஆர்டர்கள் வீதம் ஒரு வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே கவனம்!!… “அபராதத்துடன் சிறை தண்டனை”…. மறந்து கூட இதை செஞ்சிடாதீங்க…. !!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

உறைந்த ஏரியில் பலியான தம்பதியினர்… “இந்தியாவிற்கு வரும் குழந்தைகள்”…. யாருடன் தெரியுமா…??

அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. “ஒரே நேரத்தில் 2 காதலர்கள்”…. பேஸ்புக் காதலால் நள்ளிரவில் இளம்பெண் கொடூர கொலை…. பகீர் பின்னணி இதோ….!!!!

கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின்  பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண்  பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!!… ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… ICICI வங்கியின் சூப்பர் அறிவிப்பு….!!!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ வெட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகளிலும் வீட்டு கடன்களுக்கான வட்டி, வாகன கடன்களுக்கான வட்டி போன்றவைகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வு டிசம்பர் 29-ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“இது தேர்தலில் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்”…? காங்கிரஸ் எதிர்ப்பு…!!!!!!

உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என […]

Categories
தேசிய செய்திகள்

கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய ஜோடி…. வெளியான வைரல் வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது. இந்த வீடியோவை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்மந்தப்பட்ட அந்த ஜோடி அஜய்குமார்(22), கே.ஷைலஜா (19) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் சண்டை போட்ட பயணிகள் மீது எப்ஐஆர்…. மத்திய மந்திரி அதிரடி நடவடிக்கை…..!!!!

பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 4 இந்திய பயணிகள் ஒன்று சேர்ந்து விமானத்திலிருந்த மற்றொரு இந்திய பயணியை தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்யா வெளியிட்டுள்ள பதிவில் “தாய்ஸ்மைல் ஏர்வே விமானத்தில் பயணிகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து கொல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING: விபத்து.. ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |