Categories
தேசிய செய்திகள்

அட அப்படியே ஜொலிக்குதே!…. சீரடி சாய்பாபாவுக்கு இப்படியொரு காணிக்கையா?…. வாயடைத்துப்போன பக்தர்கள்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியிலுள்ள உலக பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு பல நாடுகளிலிருந்தும் வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் பல வேண்டுதல் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் பக்தர்கள் அது நிறைவேறியதும் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தால் ஆன தலைப்பாகையினை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பக்தர் கனாரி சுபாரி பட்டேல் என்பவர் வைரக்கற்கள் பதித்த தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சாய்பாபா […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள் பராமரிப்புக்காக “ஸ்வஸ்த்கர்ப்” செயலி…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!!

ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து கர்ப்பிணி பெண்களின் பராமரிப்புக்காக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. “ஸ்வஸ்த்கர்ப்” எனும் இச்செயலியை பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கி இருக்கின்றனர். இந்த செயலி மருத்துவ வசதிகளானது குறைவாகவுள்ள கிராமப் பெண்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த செயலியின் வாயிலாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். அத்துடன் உரிய நேரத்தில் மருத்துவரை அணுக பரிந்துரை செய்யும். மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“துனிஷா சர்மா தற்கொலை வழக்கு”…. முன்னாள் காதலருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. கோர்ட்டு உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் இந்தி சீரியல் நடிகையான துனிஷா சர்மா(21) சென்ற 24-ம் தேதியன்று சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்” என்ற தொடரில் தன் முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் மீது துனிஷா சர்மாவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் சென்ற 25-ம் தேதியன்று […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு “இது தேவையில்லை”…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கை” நாடு முழுவதும் உஷார்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!!

ஜனவரியில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா அலை ஏற்பட்டாலும் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் BF7 பரவல் வேகமெடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது BF7 வகையா என்பது கண்டறியவில்லை. இந்நிலையில், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாட்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முந்தைய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! இந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன்…. மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.50,000 வேண்டுமா…? ஜனவரி-15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு பம்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே இன்று இலவச டிக்கெட் வெளியீடு…. முந்தினால் முன்னுரிமை…. மறந்துராதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. உங்க குழந்தைகளுக்கான சிறந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 நாள் தான் டைம்…. சீக்கிரமா வேலையை முடிங்க…. வருமானவரித்துறை எச்சரிக்கை…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிச.31ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு….. உடனே முந்துங்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை,நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ. 1 லட்சம் கடன்…. மத்திய அரசின் மொத்த கடன் குறித்த தகவல் வெளியீடு….!!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசின் ஒட்டு மொத்த கடன்‌‌ ரூ. 147.19 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கடனை நாட்டின் மக்கள் தொகையுடன் கணக்கிட்டு பார்த்தால் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் 1,05,000 ரூபாய் கடனாளியாக இருப்பர். இந்நிலையில் மத்திய அரசின் கடன் தொகையை மொத்த மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது ஒவ்வொரு இந்தியரும் 1,05,000 ரூபாய்க்கு கடனாளியாக இருக்கிறார்கள். இதே மாநில அரசுகள் வாங்கிய கடன்களை […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள அஞ்சலக துறையில் மத்திய அரசு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சலக துறையில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான பொதுமக்கள் அஞ்சலக துறையில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா திட்டம், தொடர்பு வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில் நாம் தற்போது பால் ஜீவன் பீமா திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

“தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது இதுதான்”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‌ என கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ஆந்திராவில் அதிர்ச்சி.! சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலி…. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிப்பு..!!

ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு…. 7 பேர் உயிரிழப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக இப்படியா பண்ணனும்?… மனைவியை டார்ச்சர் செய்த கணவர்…. விசித்திரமான விவாகரத்து வழக்கு….!!!!

உத்தரப்பிரதேசம் லக்னோ குடும்ப நீதிமன்றத்திற்கு விசித்திரமான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கூறியிருப்பதாவது, “லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் பாலியல் ரீதியிலான வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யும் செயலி வாயிலாக மாதந்தோறும் நல்ல வருவாய் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு செயலி வாயிலாக இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்யும்படி இளைஞர் கேட்டு உள்ளார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு ஸ்பெஷல்: இந்த லோன் பெற கட்டணம் கிடையாது…. SBI கொடுத்த SUPER NEWS…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. புத்தாண்டு நேரத்தில் வாகனக் கடன், தனிநபர் கடன், தங்கக் கடன் ஆகியவற்றை பெறுபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த லோன்களை நீங்கள் SBIஇன் […]

Categories
தேசிய செய்திகள்

சாதிய பாகுபாட்டின் உச்சம்… குடிநீரில் மலம், இரட்டைக் குவளை… அடுத்தடுத்து பாயும் வழக்குகள் … மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் அடுத்த வேங்கை வயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை சிலர் கலந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நீரை அருந்திய குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறியுள்ளார். உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை  சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்த விஷயம் […]

Categories
தேசிய செய்திகள்

நிலம் கையகப்படுத்துவது தமிழர்களிடம்… ஆனால் வேலை மட்டும் அவங்களுக்கா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!!

கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி!!…. இன்ஸ்டா பிரபலம் 22 வயதில் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் கெலோ விகாரம் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் இன்ஸ்டா பிரபலம் ஆவார். அதோடு தனியாக யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனலில் பெரிதாக பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் இவரை 10,000 பேர் பின் தொடர்கிறார்கள். அதன் பிறகு லீனா பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அடிக்கடி செய்திகளிலும் வருவார். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“ப்ப்ப்பா” என்னா அடி…. அதுவும் அந்த இடத்துல…. அத்து மீறிய வாலிபரை அலறி துடிக்க விட்ட பெண்…. வைரல் வீடியோ….!!!!!

சமூக வலைதளமான டுவிட்டரில் BornAkang என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும் பெண்ணும் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் லிப்ட்டில் இருந்தால் ஆண் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். உடனே அந்தப் பெண் பயப்படாமல் அந்த நபரின் கன்னத்தில் அடிக்கிறார். அதோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை நினைத்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை”…. இந்திய கோவிட் குழு தலைவர் சொன்ன நிம்மதி தகவல்….!!!!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் என்.கே. அரோரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஓமைக்ரான் வைரஸின் பிஎஃப் 7 திரிபு 15 சதவீதம் பாதிப்புகளுக்கு காரணம். அதன் பிறகு 50 சதவீத பாதிப்புகள் பிஎன், பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்திருக்கிறது. அதாவது, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புது விதிகள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்கள் தங்களது நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க நோடல் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்…. சுகாதார அமைச்சகம் தகவல்….!!!!

கடந்த சில வாரங்களாக சீன நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இவ்வாறு சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை அடுத்து ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் புது கொரோனா விதிகளை வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. சிறுமியை கொடுமைப்படுத்தும் பெண்…. கதறி துடிக்கும் தாய்…. போலீஸ் விசாரணை….!!!!

சிறுமியை தாக்கிய பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஷெபாலி என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அனிதா என்று சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  ஷெபாலி அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து லிப்டில் வந்துள்ளார். இதனை பார்த்த ஷெபாலி அந்த  சிறுமியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துள்ளார். பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5.10 கோடி பேருக்கு வேலை இல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில்  திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்(SSY) (அ) PPF ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இச்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். 12 சிறு சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொறுத்தவரையிலும் தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இதில் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டமும் ஒன்றாகும். மகள்களின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 3 […]

Categories
தேசிய செய்திகள்

வேறு யாருடனும் பழகுகிறாரா?… காதலன் போட்ட திட்டத்தில் பலியான கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா திருவனந்தபுரம் மாவட்டம் வட சேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவருடைய மகள் சங்கீதா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதில் சங்கீதாவும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு(20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தன் காதலி வேறு யாருடனும் பழகுகிறாரா? என்பதை அறிய கோபு ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன்படி கோபு சமூகவலைதளத்தில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு (பேக் ஐடி) […]

Categories
தேசிய செய்திகள்

“தாய்க்கும், மகனுக்கும் இடையிலான அன்பு விலைமதிப்பற்றது”…. பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் வாழ்த்து…!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்‌ ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த…. ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்குரிய 3வது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தெறி பேபி!… செண்டை மேளம் அடித்து அசத்திய மணப்பெண்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண கொண்டாட்டத்தில் இருந்த மணமகள் தன்னுடைய கணவர், தந்தை ஆகியோருடன் இணைந்து செண்டை மேளம் அடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையில் மணப்பெண்ணிண் தந்தை செண்டை மேள கலைஞர் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். Longer video of a joyous bride taking part in the chenda melam (WA forward; said to […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அகவிலைப்படி 12% உயர்வு….. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதிலிருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அகவிலைபடியானது தற்போது 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது ஒரு குத்தமா….? வெஜ்க்கு பதில் நான் வெஜ் வழங்கிய ஊழியர்…. கொந்தளித்த வாலிபர்…. போலீசார் விசாரணை….!!!!

வாடிக்கையாளருக்கு உணவை மாற்றி வழங்கிய ஒட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஒட்டலுக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் அவர் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் உடனடியாக ஒட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஒட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

Viral Video: திடீரென ஆய்வு சென்ற ஐ.ஜி… துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் திணறிய சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்கு சென்ற போது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சந்த்கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு ஐ.ஜி கூறினார். ஆனால் அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் திணறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேபோல் பல […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை….!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்ராநகரில் இருந்து கிளம்பிய லாரி காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஜம்முவின் தவிநகர் பாலத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது லாரிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். அதன்பின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருட்டு…. அதிர்ச்சியில் எலான் மஸ்க்‌..!!!!

உலகம் முழுவதும் twitter பயன்படுத்தும் 40 கோடி பேரின் பர்சனல் கணக்குகள் திருடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது 40 கோடி டுவிட்டர் தரவுகளை ஹேக்கர் ஒருவர் திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனம் செய்தி  வெளியிட்டுள்ளது. இதில் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம், நாசா, அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின்  தகவல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 40 […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல நிர்வாக வாரம்… 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை… வெளியான தகவல்…!!!!!!

மத்திய அரசின் சார்பாக நாடு முழுவதும் ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் நல்ல நிர்வாக வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “இதில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாவது வார நல்ல நிர்வாகம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் “கிராமத்தை நோக்கி நிர்வாகம்” எனும் கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் கடன் பெற?… இதை மட்டும் பண்ணுங்க போதும்…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இவை கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் இருக்கும். இதுகுறித்து பிடிஐ செய்தியின் அடிப்படையில், தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு அரசுக்கு அளித்த பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி இருக்கிறது என்று கூறப்பட்டது. நாட்டில் மொத்தம் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: 39 பயணிகளுக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிச. 24,25,26ம் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு bf.7 ரக கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

“இனி 1 போதும்”…. நாடு முழுவதும் மொபைல் போன் வைத்திருப்போருக்கு…. அரசு GOOD NEWS…!!!!

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஊழியர்களுக்கு 214 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! ஜனவரியில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா…? இதோ முழு லிஸ்ட்…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் ஜனவரி மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி, கார்களின் விலை குறைந்தபட்சம் 23,000 முதல் உயர்வு. கிரெடிட் கார்டுகளில் புதிய நடைமுறைகள் வரவுள்ளது. ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம். -ரேஷன் கடைகளில் ‘கரீப் கல்யாண யோஜனா திட்டம்’ மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: போராட்டம்…. பேருந்து ஓடவில்லை…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருப்பதியில் ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories

Tech |