நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், […]
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை தொடர்ந்து திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே நாட்டில் கொரோனா […]
ஆந்திரப்பிரதேசம் அனகாபல்லி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் யூனிட் 3ல் கடந்த 26 ஆம் தேதி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என […]
உலகம் முழுவதும் பி எஃப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக youtube சேனல் ஒன்றில் செய்தி பரவியது. இதற்காக மோடி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கூறப்படும் செய்தி வதந்தி என்றும் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் விமானங்களை […]
சத்தீஸ்கர் மாநிலம் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்திலுள்ள சரியா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமையாசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் […]
புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை […]
ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் […]
ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவிட்ட உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவிப்பு வெளியீட்டு இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய […]
ஆன்லைன் கேம்மின் நோடல் ஏஜென்சியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவால் ஆன்லைன் ரம்மி போன்றவை மாநில அரசுகளால் தடை செய்ய இயலாது. ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதா ? தடை செய்வதா ? என இனி மத்திய அரசே முடிவு எடுக்கும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 1 புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 9 கவுண்டர்களில் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான […]
இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது இந்திய அரசு. ஒழுங்கமைக்கப்பட்ட வீடியோ கேம்கள் உள்ளிட்ட மின்னணு விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்தது ஒன்றிய அரசு. அரசின் அங்கீகாரத்தை அடுத்து நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மின்னணு விளையாட்டும் போட்டியாக கருதப்படும்.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும். அதேபோல் அடுத்த […]
மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுதிர் ஜாதவின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டு சிறுமி ஜெல்லி மிட்டாய் கொடுத்துள்ளார். அதனை விழுங்கிய அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுதிர் ஜாதவ் […]
சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்திலுள்ள ஜாஷ்பூரில் துத்ராம் பன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம்(20) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் நீல்குஷம் சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மதன்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு போக ஜாஷ்பூர் -கோர்பா இடையில் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்து கண்டெக்டர் ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து தொந்தரவு […]
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவும் கன்யதன் திட்டத்தை எல்.ஐ.சி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.3600 செலுத்தினால் போதும், 25 வருடத்தில் ரூ.26 லட்சம் கிடைக்கும். அதேபோல் பாலிசிதாரர்கள் மூன்று […]
மத்திய மந்திரி இரானி தன் சமூகஊடகத்தில் அவரது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது ஆகிய வாசகர்களை கவரும் அடிப்படையிலான காட்சிகள், பதிவுகளை வெளியிடுவது வழக்கம் ஆகும். சில வாரங்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராமில் அவர் சமையல் செய்த விபரங்களை வெளியிட்டார். அவற்றில், மந்திரி இரானி சமையல் அறையில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் புகைப்படம் காணப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாவில் பின்தொடருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்க் […]
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் மற்றும் குடும்பத்தினர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி, தனது மனைவி, […]
திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு தரிசன டிக்கெட், காணிக்கை, லட்டு விற்பனை என வருடத்திற்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவில், இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இப்பட்டியல் ஓயோ கலாச்சார பயண அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி, வாரணாசி முதல் இடத்தையும், திருப்பதி […]
ஜெய்சால்மரிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானமானது நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து விமான பயணிகள் இறங்கும்போது, ஒருவர் விமானத்தின் இருக்கையில் “இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது” என இந்தியில் எழுத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் உடனே விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முற்பட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த விமான நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் டெல்லி […]
மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் சகோதரிகளின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயம் அடைந்தார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரகலாத் மோடி அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். காயமடைந்த பிரகலாத் மோடி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக […]
மத மாற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரபல மந்திரி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலைக்கு பின்னால் […]
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு உரிய ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால் தன் சொந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]
குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை சக மாணவர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தங்களுடைய மகளுடன் ஒரே பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவனின் பெற்றோரிடம் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரரின் […]
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு வங்க மாநிலம் […]
கொரோனா பரவல் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பகிர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருடன் திங்கட்கிழமை காணொலி வழியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே மற்றவர்களுக்கு பகிர வேண்டும். ஏனென்றால் கொரோனா […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
கர்நாடகாவில் கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கொரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். மேலும் கொரியர் […]
தனியார் மருத்துவமனையில் ரூபாய் 800, அரசு மருத்துவமனையில் ரூபாய் 325 ஆக நாசி கொரோனா மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. Bharat Biotech's nasal Covid vaccine to be priced at Rs 800 for private and Rs 325 for […]
தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம். அமேசான் பே அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. […]
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹௌரா […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் மிகக்குறைவு. அதன் பிறகு சிலர் வேலை மற்றும் சொந்த காரணங்களுக்காக சில சமயங்களில் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை உங்களுடைய இருசக்கர வாகனத்தை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரயில் […]
2023-ம் வருடம் டிசம்பர் மாதம் வரையிலும் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். அதை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கிகொள்ளலாம். ஆகவே நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அதன் செயல்முறை என்ன என்பதை தற்போது […]
வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரக்கூடிய அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான வரி ஆகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இப்போது இதுகுறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்திருக்கிறது. வருமான வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணமானது கொடுக்கப்போகிறது. அதாவது, வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் அடிப்படையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது. அதன் புது உத்தரவை நிதயமைச்சகம் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி குஜராத் பாஜகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதே முடிவு வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களிலும் கிடைக்கும். பிரதமர் மோடிக்கு இந்தியா மற்றும் குஜராத்தில் கிடைத்த புகழ்தான் குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றிக்கு காரணம் […]
நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் வருகை பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி 1ஆ-ம் தேதி முதல் டிஜிட்டல் வருகை பதிவேடு அமலுக்கு வருகிறது. அதாவது நாடு முழுவதும் தொழிலாளர்களின் பணி தொடர்பாகவும், வருகை தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் மத்திய அரசு டிஜிட்டல் வருகை […]
இந்தியாவில் ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதோடு ரெப்போ வட்டி விகிதமும் 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்ந்தது. இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன், வாகன கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனமும் தற்போது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகித உயர்வு டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு […]
உலக அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துறைகளான சுற்றுலா, மருத்துவம், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய தொழில்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு […]
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட தொந்தரவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.
எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சக்லாசி கிராமத்தில் வாஹிலா என்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் அந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாஹிலா தனது மனைவி, 2 மகன் […]
பீகார் கயாவில் வருகிற டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் “போத் மஹோத்சவ்” எனும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தலாய் லாமா பீகார் மாநிலத்திற்கு வந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வர இருகின்றனர். இதன் காரணமாக கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு […]
2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]
உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ஐசியுவிலேயே மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கொள்ள பான் அட்டை கட்டாயம் தேவை. பான் கார்டு இல்லை என்றால் வங்கியில் பண பரிவர்த்தனை கூட செய்ய முடியாது. நம்முடைய வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன்ஸ் முதல் அன்றாட அனைத்து பயன்பாட்டிற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு எண் அல்லது அட்டையை தொலைத்து விட்டால் அதனை ஆதார் மூலமாக மீண்டும் தெரிந்து […]
தெலங்கானா ஹைதராபாத்திலுள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் ஸ்ரீனிவாஸ் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற 2 நாட்களுக்கு முன் காசிராம் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்துள்ளார். இதற்காக ரூபாய்.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காசிராம் என்பவருக்கு ஸ்ரீனிவாஸ் ரூபாய்.800 மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையில் மீதமுள்ள 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை […]
தனியார் ஊழியர்களுக்கும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை பென்சன் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் கடைசி காலத்தில் பென்சன் வழங்கப்படும். அதேபோல் தற்போது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் கைநிறைய பென்சன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் குடும்ப செலவுகள் போக ஒரு சிறு தொகையை சேமித்து வைத்தாலே அது கடைசி காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்நிலையில் கடைசி காலத்தில் பண பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு […]
எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தி உள்ளது. இன்று முதல் இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தாற்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]