திமுக அவசர செயற்குழு கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், செயற்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், நகர்புறங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட […]
Category: அரசியல்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் […]
CAA, NRC, NPR உள்ளிட்ட சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராடிவரும் போராட்டக்காரர்களைக் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்க்கிறோம். இச்சட்டங்கள் […]
ஊழலை ஒழித்து மாநிலத்தை முன்னோக்கி அழைத்து செல்வதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. காலதாமதமாக சென்ற காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனுது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் […]
1971ல் நடந்த பேரணி குறித்து இல்லாத ஒன்றை பேசவில்லை என்றும், பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் […]
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவை அக்கட்சி களமிறக்கியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், டெல்லி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி பாஜகவுடனான கூட்டணியை சிரோமணி அகாலி தளம் முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக தனுது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், புதுடெல்லி தொகுதியில் […]
துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து பெரியாரிய அமைப்புகள், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் இல்லாத ஒன்றை கூறவில்லை என்று கூறி […]
திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் முக.ஸ்டாலின்முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவை விட திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுகவின் தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் , சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைமை அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை […]
அரசியலில் எனது ஆதரவு எப்போதும் என் தந்தை கமலஹாசனுக்கு தான் என்று நடிகை ஸ்ருதிகாசன் தெரிவித்துள்ளார். செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இன் 46வது கிளையை மதுரையில் நகைக்கடை நிறுவனர் பாபிசிம்நூர் மற்றும் திரைப்பட நடிகை சுருதிஹாசன், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பின்னர் உலக அமைதிக்காக 812 கிலோமீட்டர் ஓடிய பாபி சிம்மநூரின் சாதனையை மையமாக வைத்து எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தை நடிகை சுருதிஹாசன் வெளியிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் […]
பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய […]
ஊழல் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குண்டு ஹரியானா முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு சுயச்சை எம்.எல்.ஏ பால்ராஜ் குண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சராக மணிஷ் குரோவர் இருந்தபோது சர்க்கரை ஆலைகளில் அவர் பல மோசடி செய்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக கட்டார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் […]
இன்று கூடும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில், இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]
பல்வேறு கட்சிகளுக்குச் சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்பது தெரியாமல் குழம்பி போயிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டலாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் […]
இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் […]
பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NPR) ஆகியவற்றிற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக விரைவில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு […]
இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட 10 அம்ச உறுதித்திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். கெஜ்ரிவாலின் உறுதித் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி […]
மு.க. ஸ்டாலின் – கே.எஸ். அழகிரி சந்திப்பு கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாக இருந்து வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். திமுக அரசியல் […]
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , […]
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிராவில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மூவர்ணக் கொடி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பதாகைகளை வைத்திருந்தனர். கூட்டத்தில் பெண்கள் இன்குலாப் […]
மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]
பாஜக முன்னாள் எம்பி மறைவு …!!
பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்பி), மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா குர்கானில் நேற்று காலமானார். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா (63) குர்கானில் நேற்று காலமானார். அஸ்வினி குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததன் காரணமாக அவர் குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 16ஆவது மக்களவை தேர்தலின்போது ஹரியானாவின் கர்னால் தொகுதியிலிருந்து சோப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோப்ராவின் மறைவிற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் […]
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]
126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமனம் தொடர தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலோ இந்தியர்களும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள்தான் என மாநில அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்ததைத் […]
கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]
இணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்..!
ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை மெதுவாக நகர விட்டு அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் […]
ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் […]
பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]
நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன. ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை […]
நிர்பயாவின் தாயாரை பாஜக தவறாக வழிநடத்துகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார். டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய […]
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் […]
சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]
முரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை தமிழ்நாடு மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர். பின்னர், அமைச்சர் […]
தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]
பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]
இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]
காங்கிரஸ் பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தன் தொகுதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார். பத்திரிகை வாயிலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த அவர் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, […]
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காரட்டூர் மணி தலைமையில் கொங்கணாபுரம் பகுதியில் திமுக, அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், அதிமுக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்கின்றன. […]
பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் அண்மையில், ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு சிவசேனா உள்ளிட்ட கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தகத்தையே தடை செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். “பிரதமர் மோடியை, சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்பட்டுள்ளார். எனவே இப்புத்தகம் […]
பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் […]
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போது அவர் செய்தது என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரது கருத்துகளை நாங்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை. அதை நாங்கள் பாஜக கட்சியின் கருத்தாகவும் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்து விடும் எனவும், தங்கள் குடியுரிமையை […]
“பிடிக்காத நபரிடம் ஒதுங்கி அமைதியாக இருப்பேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பள்ளி மாணவியின் கேள்விக்கு கூலாக பதிலளித்த வீடியோ காட்சி வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்த்தும் குரல் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள பஜார் பகுதியில் தனது நண்பரின் தனியார் வாட்ச் கடையில் தனது நேரத்தை கழித்துவரும் ரங்கசாமியிடம் […]
பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் […]
திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் மொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]
மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் […]
மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடாக செயல்பட்டு வருகின்றது என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, […]