Categories
அரசியல் தேசிய செய்திகள்

இரவோடு வந்த ஆட்சி இரவோடே மறைந்து போகும்: ஜயந்த் பாட்டில்

இரவில் தொடங்கப்பட்டட பாஜக ஆட்சி இரவோடு இரவாக மறைந்து போகும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜயந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக- 105 தொகுதிகளும், சிவ சேனா – 56 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் – 54, காங்கிரஸ் – 44 தொகுதிகளையும் வென்றன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிவ சேனா, இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என பாஜகவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியம் யாருக்கு ? தொடங்கியது விவாதம் …!!

நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் மகாராஷ்டிர அரசியல் களத்தின் முக்கியத் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்.சி.பி.-சிவசேனா ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட தேதியிலிருந்து இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்தது தான் அனைவரையும் வாயைப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் பிரதமர் மோடி இன்று பரப்புரை ….!!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16, 20 என ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆளும் பாஜக சார்பாக பிரதமர் மோடி இன்று தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவுக்கு சடங்கு….. ”வைரலாகும் அழைப்பிதழ்”…. அதிரடி காட்டும் அர்ஜுன் சம்பத் …!!

விசிக தலைவர் திருமாவளவனை இந்து மதத்திலிருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள் சிலைகள் குறித்து அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்து மக்கள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் நவம்பர் 26 […]

Categories
அரசியல்

அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளில் திடீர் மாற்றம்!!!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீட் தேர்வில் இருந்து விலக்கு” அதிமுக அதிரடி தீர்மானம் ….!!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிவசேனாவிற்குச் சரியான பாடத்தை பாஜக கற்றுக்கொடுத்துள்ளது! – ஹெச். ராஜா..!!

மகாராஷ்டிராவில்  பாஜக பெற்றிருந்த 105 தொகுதிகளை விட சிவசேனா வாங்கியிருந்த 56 தான் பெரியது என்று கூறிய மேதைகளுக்கு, பாஜக ஆட்சியமைத்து சரியான கணக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கியின் 116 ஆவது ஆண்டு தொடக்கவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:45 மணிக்குத் தொடங்கியது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுமாா் 2,500 போ் வரையிலும், செயற்குழு உறுப்பினா்கள் ஆயிரம் போ் வரையிலும் உள்ளனா். கூட்டத்தில் பங்கேற்க வரும்போது அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ்களுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நான் உங்களோடையே இருக்கேன்”பாஜக_வை மீண்டும் நாடும் சந்திரபாபு நாயுடு..!!

 கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடித் தலைமையிலான பாஜக-வுக்கு எதிராக அணி திரட்டிய சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜக பக்கம் திரும்பச் சமிக்ஞை காட்டுவதாக தெரிகிறது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியிலிருந்த சந்திரபாபு 2018ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறி மோடி தலைமையிலான பாஜக-வை கடுமையாகத் தாக்கத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவுக்கரம்… அஜித் பவாரின் பதவி பறிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல்”… ஒன்று சேர்ந்துவிட்டோம்… எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”… பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக… மீறினால் ரூ 1,00,00,000 இழப்பீடு..!!

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அவதூறு கூறியதற்காக, ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்களுக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்….! ஆத்திரமடைந்த ஸ்டாலின்….!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கே இப்படீன்னா… மக்களின் நிலை?.. அசிங்கப்பட்ட அமைச்சர்கள்… ஆத்திரமடைந்த ஸ்டாலின்.!!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்” – திருமாவளவன்.!!

ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு …!!

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இதில் திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு பேசுகையில், மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ….!!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

’ஒரே நாடு ஒரே மொழி’ அமித்ஷாவை எதிர்த்த மத்திய இணை அமைச்சர்?

’ஒரே நாடு ஒரே மொழி’ திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாகப் பேசியிருந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் பேசினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும்’ – சஞ்சய் ராவத்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது. அடுத்த இரண்டு நாட்களில் […]

Categories
அரசியல்

‘புலிகளால் ஆபத்து’ – திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்….!!

தனது அரசியல் சுய லாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட (SPG) சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் டி.ஆர்.பாலு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல…!!

இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சிகளும் ரெடியா… ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம்… சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”சபாநாயகருக்கு KISS கொடுத்த MLA” அதுவும் ஃப்ளையிங் கிஸ்….!!

ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட அவர், யாரும் எதிர்பாராதவிதமாக சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து, தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை’ – சாடிய பா. ரஞ்சித்…!!

தனி மனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது சிலருக்குப் பண்பாடாகவே இருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித், திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பை விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தேசியக் குடியுரிமை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடரை எவ்வாறு கையாள்வது, எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பதெல்லாம் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்…!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 7 _இல் நடைபெற்று முடிந்தது.இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் இன்று கூடி இருக்கிறது.இதில் பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது . உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் , நகராட்சி   , பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: கேப்டன் கேட்பது கிடைக்குமா?

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள்! – மோடிக்கு மன்மோகன் அறிவுரை

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகவும் அதை சீர்செய்ய மக்களிடம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக நுகர்வில் சுணக்கம் ஏற்பட்டு தனியார் முதலீடுகள் முடங்கியுள்ளன. இதை சரி செய்ய உடனடி நடவடிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு வேறு வேலையே இல்லை – நிலோபர் கபில்…..!!

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குறை கூறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி, கமல் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார். நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 821 பயனாளிகளுக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இருக்கு இங்க….”வெற்றிடம் இருக்கு” – பொன். ராதாகிருஷ்ணன் பளீர்…!!

தமிழ்நாட்டில் நிச்சயமாக வெற்றிடம் உள்ளது என பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வஉசி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி VS அஞ்சா நெஞ்சன்….. போஸ்டர்களால் பரபரப்பு…. நடப்பது என்ன?

ரஜினியுடன் அழகிரி இணைந்து அமர்ந்திருக்கும் சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டி மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தண்ணீர் அரசியல் செல்லாது – அரவிந்த் கெஜ்ரிவால்

தண்ணீரை வைத்து அரசியல் செய்வது சரி அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்டார். டெல்லியிலிருந்து பெறப்பட்ட 11 மாதிரிக்களின் தரத்தை ஆராய்ந்ததில், அங்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் தரம் இந்திய தர நிர்ணயம் விதித்த அளவுகோலுக்கு கீழ் உள்ளது என ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதேபோல், சென்னை, பெங்களூரு, சண்டிகர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை தீர்ப்பாரா மத்திய அமைச்சர்?

முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு..!!

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து  டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய  வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களை யாராலும் அழிக்க முடியாது” துரைமுருகன் சூளுரை …!!

திமுகவை யாராலும் அழிக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி தயாநிதி மாறன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், “மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைப்பதாகக் கூறிய பாஜக கூறிய தற்போது தினறி வருகிறது. இந்த மாநிலங்களில் மோடி அலை என்ன ஆனது. தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உச்சி முதல் பாதம் வரை” திமுக ஜெயிக்கும் ….. உளறி தள்ளிய அமைச்சர் …!!

நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதாக அமைச்சர் கே.சி. வீரமணி உளறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை […]

Categories
அரசியல்

தேமுதிக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த விஜயகாந்த்….!!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று விருப்ப மனுக்களை வழங்கினார். மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்’ – ஜி.கே.வாசன்

சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்…கால் பட்டா குத்தம் – அமைச்சர் காமராஜ் காட்டம்

வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பிறாண்டுவதிலேயே ஸ்டாலின் குறி – செல்லூர் ராஜு

 “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை – தம்பிதுரை

“தமிழ்நாட்டில் தற்போது வெற்றிடம் ஏதுமில்லை மேலோகத்தில் சென்று பார்த்தால் வெற்றிடம் இருப்பது போல் தெரியும்” என்று நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு, தம்பிதுரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது – ஸ்டாலின் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் .  சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் ”தில்லுமுல்லு” முக.ஸ்டாலின் காட்டம் …!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவு பின்வருமாறு: ”உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? […]

Categories
அரசியல்

’இவர் மூலம்தான் எடப்பாடி எனக்கு தூது விட்டார்’ – அமமுக பழனியப்பன்

அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார். அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார். ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி […]

Categories

Tech |