மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம் . நிதானமாக பாடங்களைப் படியுங்கள். […]
Category: அரசியல்
நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், […]
ஸ்டாலின் நாக்கில் சனி இருப்பதால்தான் அனைத்தையும் தவறாகவே பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், […]
தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார். அவது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 39 தொகுதிகளில் வென்ற ஸ்டாலின் தான் சரியான தலைமை என திமுகவினரும், பல சிக்கல்களுக்கு இடையே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் சரியான தலைமை என அதிமுகவினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கருத்து […]
பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பதால் தாங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக சிறு, குறு நிறுவனங்கள் கூறுகின்றன. நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாகவும் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பல பெரு நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துவருகின்றன. இதனால் தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க தாமதமாவதாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு சிறு, குறு […]
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.104 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு […]
கோவையில் அதிமுகவின் கொடிக் கம்பம், பெண் ஒருவரின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து இது மாதிரியான அராஜகப் போக்கில் ஈடுபடுவதை அதிமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காட்டமாக வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “திமுக பொதுக்குழுக் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்றையத் தேவைக்கு […]
நடிகர் கமலஹாசனுக்கு என்ன ? தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவரை விட மிகச் சிறந்த நடிகர் இல்லை அதே நிலைமைதான் கமலஹாசனுக்கு ஏற்படும். கமலஹாசன் வயது முதிர்ந்த காரணத்தினாலே அவர் அரசியல் என்று முன் ஏற்பாடு செய்து கொண்டார்.அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தால் கூட போதும் என்ற நிலைக்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]
பாஜகவுடனான கூட்டணி முறிவைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில […]
விருச்சிகம் ராசி அன்பர்களே….!! இன்று பிறரை நம்பி எவருக்கும் எந்தவிதமான வாக்குறுதியும் தர வேண்டாம். இதனால் அவப்பெயர் வராமல் தவிர்க்கும்.தொழில் வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு அவசியமாக இருக்கும்.சராசரி அளவிலேயே பண வரவு கிடைக்கும்.இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு சமரசம் பேசுவதில் நிதானம் இருக்கட்டும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பங்களும் ஏற்பட்டு , பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் […]
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா – பாஜக இடையே ஆட்சிப் பகிர்வில் கடும் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வருகின்ற […]
அயோத்தி தீர்ப்பின் முடிவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொந்தம் கொண்டாட முடியாது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த நாள் […]
ராமர் கோயிலை வைத்து இனி பாஜக அரசியல் செய்ய முடியாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு […]
பாஜகவுக்கும் தனக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் கூறியுள்ளார் என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி […]
எனக்கும் , திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை மதம் , ஜாதிக்குள் அடக்க முடியாது என்று தெரிவித்த ரஜினி எனக்கு காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள் , அதில் நான் சிக்க மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதற்க்கு பல்வேறு கட்சியினர் வரவேற்றப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் […]
பா.ஜ.க.வின் ஆதரவின்றி தமிழகத்தில் எது நடந்தாலும் நல்லதுதான் என்று டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் தனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்றும் , அதில் நானும் , திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு தமிழக பாஜக அரசியலில் ரஜினி பாஜக ஆதரவு என்று தவறாக சித்தரிக்கப்பட்ட கருத்தை சுகுசுக்காக உடைத்தெறிந்தது.நடிகர் ரஜினியின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் […]
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவை இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மகாராஷ்டிராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் , ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா மற்றும் பட்னாவிஸ் அடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் , பாஜக பொய் உரைத்ததால் தாங்கள் அவர்களுடன் […]
மராட்டியத்தில் சட்டமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தபடுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து பாரதிய ஜனதா சிவசேனா இடையிலான மோதலால் அம்மாநில ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில் 105 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சியினர் பகத் சிங்க் […]
சிவசேனா பாரதிய ஜனதா இடையே சமரசம் ஏற்படாமல் போனதால் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் வந்த போது ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் தேர்வு செய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். மெகா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்ததாக பட்னவிஸ் கூறியுள்ளார்.உத்தவ் தாக்கரே குறித்து பாரதீய ஜனதா கட்சி ஏதும் புகார் கூறாத நிலையில் பிரதமர் மோடி மற்றும் […]
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால், […]
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று […]
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதீஷ் தசீர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டை- யுடன் (Overseas Indian Citizenship Card – OIC) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஆதீஷ், இந்திய அரசியல் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரை எழுதி வருகிறார்.அந்த வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். […]
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]
முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , அவரிடம் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு , பொன்ராதாகிருஷ்ணன சந்திப்பு போன்ற ஏராளமான விஷயங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது திருவள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யப்படுகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினி, திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஞானி. அவர் ஒரு சித்தர். ஞானிகளையும், சித்தர்களையும் எந்த ஒரு மதம் , ஜாதி என்ற எந்த ஒரு எல்லைக்குள் அவர்களை […]
அதிமுக பொதுக்குழுவில் சசிகலா இணைக்கப்படுவாரா ? என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலா சேர்க்கப்படுவாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , ஏற்கனவே கட்சி எடுத்த ஒருமித்த முடிவு என்பது அந்த குடும்பத்தில் யாரையும் சேர்ப்பது இல்லை என்பதாகும். […]
மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று முக.ஸ்டாலின் விளக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் , மிசா காலத்தில் கைது செய்தது குறித்து இஸ்மாயில் கமிசன் , ஷா கமிசனில் முக. ஸ்டாலின் பெயர் இல்லை. MP ஆக இருந்த செழியன் மிசா கால கொடுமை குறித்து […]
துணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் […]
ஸ்டாலினை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் […]
கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் […]
தேமுதிகவை எந்த கட்சியுடனும் கம்பர் பண்ணாதீங்க என்று அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு அதிக இடம் , பாஜகவுக்கு அதிக இடம் தேமுதிகவுக்கு மட்டும் குறைவான […]
உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தேவையான இடங்களை கேட்டு பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு விசுவாசமான வேட்பாளரை […]
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நாளை நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நவம்பர் 5ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிமுக […]
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நவம்பர் மாதம் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், சிறப்பு அலுவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. […]
தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் […]
மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]
அரசு கலைக்கல்லூரியின் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா என அச்சிடப்பட்டிருந்தது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
முக.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றார். மேலும் பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் […]
திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]
‘திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவராகவே இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு: உள்ளாட்சித் தேர்தல்: கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் […]
திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் . அப்போது அவர் கூறுகையில் திருவள்ளுவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என தெரிவித்தார். திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று […]
கனிமொழிக்கு எதிராக தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி […]
இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் , வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த்தின் தந்தையுமான துரைமுருகன் உடல் சோர்வு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. முக்கிய தலைவராக திகழும் இவரின் மருத்துவமனை அனுமதி திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.
இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து வெற்றி விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி உச்சினிமகாளி அம்மன் கோயில் முன்பு நடைபெற்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி […]
உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]
பாஜக ட்விட்டரில் வெளியிட்டதைப் போலதான் 1800 காலக்கட்டத்தில் திருவள்ளுவர் படங்கள் இருந்துள்ளது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் சகதியைப் பூசி அவமரியாதை செய்ததை கண்டிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாஜக சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]
பொருளாதார மந்தநிலையை மக்களிடம் எடுத்துச் சொல்ல நாடு முழுவதும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் கூறியுள்ளார். இந்திய பொருளாதார சரிவுக்கு பாஜக அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பேசுகையில், […]