Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் யார்?…. இன்று காலை அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை (இன்று)  காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு – ஓபிஎஸ்.!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில்  நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசின் அலட்சியம்”…. இரு பச்சிளங்குழந்தைகள் பலியானது மிகுந்த வேதனை… முக ஸ்டாலின் அறிக்கை..!!

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச்  சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.   டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் இவர் தான்”…. முக  ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.   இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : “அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை”… முதல்வர் ஈபிஎஸ் .!!

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது . இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் இன்று (23-ஆம் தேதி) மாலை 3 மணிவரை விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்காக  90 பேர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக விருப்ப மனு வழங்கிய அவகாசம் நிறைவு… நாளை நேர்காணல்.!

விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று  காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 6 மணியுடன் விருப்பமனு நிறைவு… மகனை தேர்ந்தெடுப்பாரா ஸ்டாலின்?.. நாளை திமுக நேர்காணல்..!!

திமுக சார்பில் இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான  விருப்பமனு தாக்கல் நிறைவடைகின்ற நிலையில் நாளை முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : விருப்பமனு விநியோகம் நிறைவு… யாரை தேர்வு செய்யப்போகிறது அதிமுக?..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் பரபரப்பு…. விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியா?…. திமுக எம்.பி விருப்பமனு தாக்கல்.!!

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து  திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் வேட்பாளர் யார்?…. இன்று அதிமுக நேர்காணல்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வருகின்றது. இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக சார்பில் விருப்பமனு”…. 2 தொகுதிக்கு இத்தனை பேரா?

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ 25,000 பெற்றுக்கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றன. இதில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை  தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வெல்வது யார்? முடிவாகாத பாஜக கூட்டணி….!!

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை. 288 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகள்” மீண்டும் வெற்றி பெறும் பாஜக….!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அரியானா.இந்த மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவின் தலைநகர் சண்டிகர் . இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும்  இருக்கிறது. 2014_ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்” 15 தொகுதிக்கு இடைத்தேர்தல்….!!

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.இந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் பலம் 99 ஆக குறைந்து விட்டது.இதனால் 106 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாரதிய ஜனதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை”… அமைச்சர் தங்கமணி விமர்சனம்.!!

இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும்,  வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும்,  கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது”… கமல் ஹாசன்..!!

இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஆர்.லட்சுமணன் விருப்ப மனு.!!

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும்  முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அதிமுக தலைமை  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்.!!  

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இதையடுத்து அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி தேர்தல் : ”வெற்றியே பெறாத அதிமுக” சம பலத்துடன் மோதுகிறது…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி….. திமுக VS அதிமுக ஆதிக்கம் செலுத்தியது யார்?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதை தொடர்ந்து மாவட்ட நாங்குநேரி தொகுதியான திருநெல்வேலி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியான விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை அமுல் படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதியிலும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

#Breaking : அக்.21-ஆம் தேதி ”புதுச்சேரி இடைத்தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதே போலபுதுச்சேரியின் காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : நாங்குநேரி,விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதில் , விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21 வாக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்…!!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் பேச்சை கேட்டு விஜய் இப்படி பேசினார்- அமைச்சர் கடம்பூர் ராஜ் கருத்து…!!

நடிகர் விஜய் யார் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி பேசுகிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஒரே நாடு , ஒரே தேர்தல்” தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு…..!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”இடைத் தேர்தல்” தேதி இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மகாராஷ்டிரா , […]

Categories
அரசியல்

அலட்சியம் அதிகரிக்க… கொலையும் அதிகரிக்கும்… அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம்… கமல் பேட்டி..!!

அரசு  தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக கமல்  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கயவர்களை தப்பிக்க விடுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து  உங்களுக்கு பேனர் வைக்க வில்லையா? என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். அதில், தனக்கும் ரசிகர்கள் பேனர் வைக்க தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறிய அறிவுரையானது, […]

Categories
அரசியல்

அறிவில்லாத அரசியல்வாதிகள்… மக்களே பைத்தியக்காரதனத்தை விடுங்கள்… என் கைய புடிச்சிக்கோங்க… வைரலாகும் கமலின் வீடியோ..!!

சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர்  விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக  நடிகர் கமல் தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும்  அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதை இல்ல, படம் ஓடாது….. அதுக்கு தான் இப்படி பேசுறாரு விஜய்….. மீண்டும் சீண்டும் அதிமுக..!!

கதையே இல்லாத படத்தை ஓட்ட வேண்டுமென்று நடிகர் விஜய் இப்படி பேசியுள்ளார் என்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அப்பா சொல்லிட்டா அவ்ளோதான்” எச்சரிக்கும் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுக தலைமை அறிவித்த்தால் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமென்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தில் பேசிய கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு சர்சையாகியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஆளும் பல்வேறுகர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் , அமித்ஷாவில் விளக்கத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக பனங்காட்டு நரி” எந்த சலசலப்புக்கு அஞ்சாது- முக.ஸ்டாலின் பேச்சு

திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக  முன்னாள் சட்டமன்ற உசேன்  நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

மெர்சலான தளபதி…”அரசியல்ல புகுந்து விளையாடுங்க”…. கதிகலங்கும் அதிமுக, பாஜக…!!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வியூகம் மாறுகிறது….. ரஜினி விளக்க வேண்டும்…. ஸ்டாலின்- ரஜினி மீது பாய்ந்த ஜெயக்குமார்…!!

திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை ”பாஜக விபரீத விளையாட்டு” ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே மத்திய அரசு பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை நியமித்து வருகின்றது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சமீபத்தில் மதுரை கோட்ட இரயில்வே பணியாளர் பணிக்கு 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களும் , 10_க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதற்க்கு திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்…!!

நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காவலை செப்.30 வரை நீட்டியுங்கள்”….. ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு….!!

ப.சிதம்பரத்திற்கு காவலை செப்டம்பர் 30_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நல்ல சாப்பாடு கொடுங்க….. 3 KG குறைச்சுட்டாரு…. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார்.இதில் ப.சிதம்பரத்திற்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்ய சிபிஐ , அமலாக்கத் துறையினர்  திட்டமிட்டுள்ளனர்.அதே வேளையில் ப.சிதம்பரதிற்கு கூடுதலாக உணவுகளை வழங்கவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. கடந்த […]

Categories
அரசியல்

நேரு குறித்து சர்ச்சை பேச்சு… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்…. மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட பாஜக எம்.எல்.ஏ…!!

மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் கட்சினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதோடு நேரு பற்றிய தவறான கருத்தை   வாபஸ் பெற்றுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு தடை… பாக் க்கு கண்டனம்… IND VS PAK நீடிக்கும் விரிசல்…!!

மோடியின் வெளிநாட்டு பயணத்தை  தொடர்ந்து  அவர்  பாகிஸ்தான்  வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான்  தடைவிதிக்கபட்டுள்ளதாக  பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை  பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் ட்விட்” வீர சாவர்க்கர் குறித்து விசாரியுங்கள்…. மும்பை நீதிமன்றம் அதிரடி…!!

இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கூறியதாகவும், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாக வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வடமாநிலத்தவர் : ”அதிர்ச்சி அளிக்கிறது” திமுக MP திருச்சி சிவா வேதனை…!!

ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு […]

Categories
அரசியல்

பெரியார் மட்டும் தான் சாதி ஒழிப்பு போராளியா..?? சீமான் கேள்வி…!!

சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  கேள்வி  எழுப்பியுள்ளார். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரு பெண் பித்தர்… அவரது குடும்பம் பிச்சையை விரும்பும் குடும்பம்… பாஜக எம்.எல்.ஏ பாஜக சர்ச்சை பேச்சு…!!

மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி பாரதமாதாவை தான் மோடி பார்ப்பார் என்றும் அவர் நேரு அல்ல மோடி என்று பதிவிட்டிருந்தார். […]

Categories
அரசியல்

ரஜினி கருத்தும் தமிழக மக்களின் கருத்தும் ஒன்னு தான்…. கடம்பூர் ராஜு பேட்டி…!!

ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடி போன ஆளும் கட்சி..”ஆளுநர் சந்திப்பு,அமித்ஷா விளக்கம்”.. கட்சிதமாக பயன்படுத்திய முக.ஸ்டாலின் …!!

இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல்” உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம்…!!

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற ஒரு கேள்வி தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் முக்கியமாக நடத்தப்படும் என்று தொடர்ச்சியாகவே பல்வேறு அமைச்சர்கள் தங்களது பேட்டி வாயிலாகத் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே மேற்கொண்டு வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக போராட்டம் ஒத்திவைப்பு” ஸ்டாலின் அறிவிப்பு….!!

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் TR பாலு ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி […]

Categories

Tech |