Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.! மாநிலத்தையே சீர்குலைத்துவிடும்..ttv தினகரன் எச்சரிக்கை ..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தின் பொது விநியோகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும்  ttv தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை  வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று  ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]

Categories
அரசியல்

குடும்ப அரசியல் செய்யும் திமுக புலி அல்ல பூனை…தமிழிசை விமர்சனம்..!!

திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல்

“ஆட்சி கவிழும் என்று 2 வருடங்களுக்கு ஸ்டாலின் கூவிக்கொண்டேதான் இருப்பார் “அமைச்சர் கேலி பேச்சு..!!

அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமமுகவில்  இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே  மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார்,  ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்” – டிடிவி தினகரன் ட்விட்..!!.!!  

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மு.க ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” கிண்டல் செய்த ஓ.எஸ் மணியன்..!!

“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்  சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை  ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் நியமனம்..!!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா வைத்தியநாதன். இவருடைய பதவிக்காலம் ஆனது நாளையுடன்   முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இவருக்குப் பின் யார் தமிழகத்தின்  அடுத்த தலைமைச் செயலாளர் என்ற கடும் போட்டியானது நிதித்துறை செயலாளர் சண்முகம்,வீட்டுவசதி துறை செயலாளர் கிருஷ்ணன்,கவர்னரின் செயலாளர் ராஜகோபால், உள்ளாட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரம் வளர்ப்போம் ! மழைபெறுவோம் !அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்..!!

புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும்  போராட்டம்  நடத்தி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் இலவச லேப்டாப் எப்ப வரும்னு தெரியுமா…??

3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின்  வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தன்மானத்தை இழக்கவில்லை” பதவியை கேட்டு பெறமாட்டேன்…. அவர்களே கொடுப்பார்கள்… தங்க தமிழ் செல்வன் பேட்டி..!!

திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ  சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் தி.மு.கவில் இணைந்தார்..!!

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]

Categories
அரசியல்

“சஸ்பெண்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை “காரத்தே தியாகராஜன் கருத்து..!!

சஸ்பன்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி இவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி கராத்தே தியாகராஜன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் ஒழுங்கீனம் காரணமாகவும் இந்த முடிவை காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்கத்தை இயக்கும் பாஜக” நமது எம்ஜிஆர் நாளிதழ் விமர்சனம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை  அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை ,  தி.மு.க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் “என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்குவார்” டிடிவி தினகரன்..!!

 என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை  டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும்  தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மழைக்கு யாகம் நடத்தவில்லை” பதவிக்கு யாகம் நடத்தினார்கள் – முக ஸ்டாலின்..!!

மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று  முக ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால்  கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக  காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக  அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை”- அமைச்சர் ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் அதிமுக தலைமை செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் படி […]

Categories
அரசியல் புதுச்சேரி

“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“தண்ணீர் பஞ்சம் தீர மரங்கள் நட வேண்டும்”அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து..!!

தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]

Categories
அரசியல் கரூர் சென்னை மாநில செய்திகள்

மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்…திமுக தொடர் போராட்டம்..!!

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில்  கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” அமைச்சர் உதயகுமார் விமர்சனம் …!!

திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை “மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி..!!

தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் அரசிடம் சொன்னால் , அரசு கடவுளிடம் சொல்கிறது… துரைமுருகன் விமர்சனம் …!!

மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்” கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் …!!

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்   KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி” திருச்சியில் கே.என்.நேரு பேச்சு …!!

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில்  கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்னை மாவட்டம் முழுவதும் இன்று திமுக போராட்டம் …..!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக எங்களின் எதிரி கட்சி” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் …!!

திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி …!!

அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று டெல்லியில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடும் இந்தியாவும் கடனில் தான் உள்ளது” பிரேமலதா பேட்டி…!!

தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவே கடனில் தான் உள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் IOB வங்கியில் வாங்கிய ரூ 5,52,73,825 கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை என்று கூறி அவர் செலுத்த வேண்டிய வட்டி ,  இதர செலவை வசூலிக்க அவரின்  சாலிகிராமத்தில் உள்ள வீடு , மதுராந்தகம் மாமண்டியூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியல் கல்லூரியை வருகின்ற ஜூலை 26_ஆம் தேதி ஏலம் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாலிகிராமத்தில் உள்ள […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்” முத்தலாக் குறித்து அசாதுதீன் ஒவைசி விமர்சனம்…!!

முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்  என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள  பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே கேள்வி OPS அவுட்… சிக்ஸர் அடித்த EPS … ஆளுமையை நிரூபித்த எடப்பாடியார் …!!

அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இது குறித்து துணை முதல்வரிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவேரி குறித்து பேசிய திருமாவளவன்… கூச்சலிட்ட கர்நாடக MP_க்கள் ..!!

மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு  கர்நாடக MP […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாங்கிய கடனை செலுத்தாதலால் “விஜயகாந்தின் வீடு ஏலம்” IOB அறிவிப்பு ….!!

வாங்கிய கடனை கட்டாததால் நடிகர் விஜயகாந்தின் வீட்டை ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் நடிகராக இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்ததும் சினிமைவை கைவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்து இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதில் வாங்கிய கடனுக்கான வட்டி என்று எதுவுமே செலுத்தாத நிலையில் இன்று விஜயகாந்தின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு தாவிய MP_க்கள் “கவலைப்பட எதும் இல்லை” சந்திரபாபு நாயுடு ட்வீட் …!!

தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று  சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற சந்திரபாபு நாயுடு_வின்  தெலுங்குதேச கட்சி  படுதோல்வி அடைந்தது. மேலும் தந்து தலைமையில் நடந்து வந்த ஆட்சியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம்   பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு . இந்த மோசமான தோல்வியையடுத்து  தெலுங்குதேசம் கட்சியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை MP 4 பேர் பாஜகவின்  செயல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

28_ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகின்றது….!!

வருகின்ற 28_ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகின்ற அறிவிப்பை தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து 13 சட்டமன்ற தொகுத்திருக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் 13 இடங்களில்  தி.மு.க.வும், 9 இடங்களில்  அ.தி.மு.க. வும் வெற்றி வெற்றி பெற்று நூலிழையில் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது . அதிமுக ஆட்சி பெருன்பான்மையுடன் இருக்கின்ற சூழலில் தமிழக சட்டசபை கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி  மாதம் கூடிய தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள்

“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நேரடி எதிர்ப்பு கிடையாது” ஒரே தேர்தல் முறை குறித்து ராஜ்நாத் சிங் பேட்டி…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” குழு அமைப்பதாக மோடி கருத்து ….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய  ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல்  காங்கிரஸ் , திமுக  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!!

டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்  நாளை டெல்லி செல்கிறார்.   மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின்  கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பாக நாளை மறுநாள் (21-ம் தேதி) மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் தண்ணீர் பஞ்சம்…. ஜூன் 22_ஆம் தேதி முதல் போராட்டம் ….ஸ்டாலின் அறிவிப்பு …!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனையில் அதிமுகவிற்கு அனுமதி மறுப்பு….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக_வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ மீது தேச துரோக வழக்கு” ஜூலை 5_ஆம் தேதி தீர்ப்பு …!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதி பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5_ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009_ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்க்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுவாகவும் ,  மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரசியல் கட்சி MLA போன்றோரை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் பாலமாக செயல்படுவார்” ஓம் பிர்லா குறித்து மோடி புகழாரம் …!!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின்  சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு…!!

மக்களவையின்  சபாநாயகராக பாஜக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….!!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “  ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே தேர்தல் நடத்த மோடி தலைமையில் ஆலோசனை…மம்தா புறக்கணிப்பு ….!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெறும் அஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார் பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘ஒரே தேர்தல் முறை’ அனைத்து கட்சித்தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…..!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்த இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் துரைமுருகன் அப்பல்லோ_வில் அனுமதி….!!

திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற எதிர்க்கட்சி கூட்டம்” சோனியா அழைப்பு…!!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின்  முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட  313 பேர் MP-யாக பதவியேற்ற […]

Categories

Tech |