Categories
அரசியல் உலக செய்திகள்

பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து  இரண்டு ஆளுநர்கள் பதவி விலகல்….

இலங்கையில் பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து  இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில்  இவர்கள்  பதவி விலகவேண்டும் என்று பெளத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதான தேரோ உள்ளிட்டோர், உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர் . அனால்  இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மறுத்து வந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள்  பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” ராகுல் காந்தி ட்வீட் …!!

தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி….. காங்கிரஸ் புகழாரம்….!!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாள்” முக.ஸ்டாலின் மரியாதை …!!

திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது …..!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக_வின் மாவட்டச் […]

Categories
அரசியல்

“ராஜதந்திரம் அறிந்தவர் கலைஞர் “மம்தா புகழாரம் ..!!

ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம்  சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு  அரசியல் […]

Categories
அரசியல் புதுச்சேரி

புதுவை சபாநாயகராக சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு….!!

புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை  சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர்  பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

” தேர்தல் தான் முடிந்தது, தேடல் முடியவில்லை…” சீமான் பரபரப்பு பேச்சு..!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]

Categories
அரசியல் கல்வி

“பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது “ஸ்டாலின் எச்சரிக்கை ..!!

மும்மொழி கல்வித் திட்டத்தை பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை  மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருமொழிக் கொள்கையை  தவிர்த்து மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கட்டாயமான முறையில் முன்மொழிகிறது. இந்நிலையில் திராவிட […]

Categories
அரசியல் கல்வி

“நேருவின் வாக்குறுதியை காப்பாற்றுங்க ” வைரமுத்து வேண்டுகோள் ..!!

நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் […]

Categories
அரசியல்

“பிரச்சனைன்னு வந்தா ஒன்னு கூடிருவோம் “அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

பிரச்சனை என்றால் அதிமுகவினர் ஒன்று கூடி விடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் . தேர்தல் முடிவுகள் வெளியானது முதல்   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் அதிமுக தரப்பினர் பலர் இதனை பொய் எனக் கூறி நிராகரித்து விட்டனர். தற்பொழுது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து பேசியதாவது, அதிமுகவில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் பிரச்சினை என்று வந்தால் […]

Categories
அரசியல் கல்வி

“மீண்டும் மொழிப் போர் ” அறிக்கை வெளியீடு செய்த வைகோ ..!!

புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தினாள் மீண்டும் மொழிப்போர் நடக்கும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் . அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தமிழ்நாடு இந்திய மாணவர் சங்கத்தினர் இதற்கு  எதிராக மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு அது தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு மற்றொரு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து […]

Categories
அரசியல்

“ஏமாந்து போன ஸ்டாலின் “அமைச்சர் காமராஜ் கிண்டல் ..!!

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் . கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!

எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை  to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜரானார் கமல் ..!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வெறும் 30 % பெற்ற பாஜக” மக்களவையில் எப்படி வென்றது….காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “மக்களவை முடிவை புரட்டி போட்ட உள்ளாட்சி” காங்கிரஸ் 509 , பிஜேபி 366 …..!!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களவையின் காங்கிரஸ் தலைவர்” தொடங்கியது M.P_க்கள் கூட்டம்…!!

மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற  கூட்டத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வயநாட்டிற்கு புறப்படும் ராகுல்” வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்…!!

வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில்  தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” பாஜக MP எச்சரிக்கை…!!

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை  எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக  டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன் 3_இல் திமுக M.L.A மற்றும் M.P_க்கள் கூட்டம்….!!

ஜூன் 3_ஆம் தேதி திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22  சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட இக்கூட்டணி 37 இடங்களிளிலும் , 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களை பிரித்தாளும் பாஜக” மேற்கு வங்க முதல்வர் குற்றசாட்டு …!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கடந்த முறை பதவி “இந்த முறை அம்போ” பாஜகவின் முக்கிய தலைகள்…!!

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” மம்தாவுடன் மோதும் பாஜகவினர்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அம்மாநில முதல்வரிடம் ஆக்கட்சியினர் மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா […]

Categories
அரசியல்

பிஜேபியை “பீப் ஜனதா பார்ட்டி” என்று மாற்றிய ஹேக்கர்கள்…..!!

மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில் ஹேக்கர்கள் பாஜகவின் டெல்லி இணையத்தை ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.இதற்கிடையே பாஜகவின்  டெல்லி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் அந்த இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி ,  மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளின் புகைப்படம்  பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை ஹேக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “கைதட்டி மகிழ்ந்த மோடியின் தயார்” வைரலாகும் புகைப்படம்..!!

மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2_ஆவது முறையாக மோடி” இந்தியா கண்ட 15 பிரதமர்கள் பட்டியல்…!!

இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.  இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய மத்திய அமைச்சரவை” 24 கேபினட் , 25 இணை அமைச்சர்கள் பட்டியல்…!!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அதே போல அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 24  இணையமைச்சர்கள் பெறுப்பேற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் […]

Categories
அரசியல்

பதவியேற்றார் மோடி ..!! 17வது பிரதமருடன் அமைச்சர்கள் பதவியேற்பு ..!!

தொடர்ந்து 2 வது முறையாக குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்க பதவியேற்றார் நரேந்திர மோடி . டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியை பிரதமராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது பிரதமராகவும், தொடர்ந்து இரண்டாவது  முறையாகவும் மோடி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தேசிய கட்சி தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். […]

Categories
அரசியல்

“விதிகளை மீறிய புகையிலை நிறுவனம் “ராமதாஸ் கண்டனம் ..!!

சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் . சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய  வாசகங்கள் கொண்ட புகையிலை  விளம்பர பலகைகள் வைத்துள்ள தனியார்  புகையிலை நிறுவனத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ,ஆனால்   அதனை  மீறி விளம்பரங்கள் செய்ததால் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இளம் தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக_வில் சலசலப்பு “மகனுக்கு பதவி” OPS மீது கடுப்பில் EPS அணி…..!!

தனது செல்வாக்கை பயன்படுத்தி OPS தனது மகனுக்கு பதவி வாங்கியுள்ளார் என்று அதிமுக_விற்க்குள் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் ஏற்கனவே நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் வைத்தியலிங்கம் அதிமுக_வின் நிர்வாகியாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சார்பில் தேனி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்.மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.அமைய இருக்கும் மத்திய அமைச்சரவை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தனது […]

Categories
அரசியல்

சற்றுமுன் :அமைச்சரவையில் அமித்ஷா..!!

அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பட்டிருப்பதாக குஜராத் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.  அதற்க்கு முன்பாக பிரதமர்  மோடி தலைமையில் புதிய அமைச்சரவை […]

Categories
அரசியல்

மோடி சர்க்காரை பின்னுக்கு தள்ளிய நேசமணி ..!!

modisarkar என்ற ஹாஷ்டேக் ஐ பின்னுக்கு தள்ளி நேசமணி ஹாஸ்டேக் ஆனது  ட்ரெண்டிங்கில் வளம் வலம்வந்து கொண்டு இருக்கிறது  வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு  தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். […]

Categories

Tech |