Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் பதவி ஏற்பு “டெல்லியியை நோக்கி தலைவர்கள்” பலத்த பாதுகாப்பு…!!

மோடி பதவியேற்பையடுத்து தலைநகர் டெல்லியில் பல்வேறு தலைவர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க  இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் புதிய அமைச்சரவையில் 70 அமைச்சர்கள்…..!!

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 65 முதல் 70 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு  ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி  வருகின்ற 30_ஆம்  தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல்

விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ்க்கு தடை..!!

ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது . நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..!!

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடி காந்தி ,வாஜ்பாய் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தினார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 7 மணி அளவில் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாக அவர் டெல்லியில் உள்ள போர் நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ,அதன்பின் மகாத்மா காந்தி மற்றும் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ராகுல் ராஜினாமா ..!!”காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு “

ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின . இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக […]

Categories
அரசியல்

நடிகர்கள் அரசியலில் குதிப்பது ஏன்..??, ரஜினிக்கு சீமான் அறிவுரை ..!!

மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]

Categories
அரசியல்

ராஜினாமா செய்தார் அமித்ஷா ..!!

பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து கொண்டார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை  அடுத்து, பாஜகவின் தேசியத் தலைவரான அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை இன்று ராஜினாமா செய்தார் .அவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது . மேலும் பாஜக சார்பில் புதிய மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதவியேற்றுக்கொண்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த பாஜக ..!!

அருணாச்சல பிரேதேசத்தில் வரலாற்றில்  முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி சாதனை படைத்துள்ளது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையில், மற்றொரு வரலாற்று சாதனையை அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்று அனைவராலும் புகழப்பட்டவர்  பெமா காண்டூ . இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொடர்ந்து 5_ஆவது முறையாக முதல்வர்” பொறுப்பேற்றார் நவீன் பட்நாயக்…!!

ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5_ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர , ஒடிசா போன்ற மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும்  பிஜூ ஜனதாதளம்  112 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 5_ஆவது முறையாக வெற்றி பெற்றது. அதே போல மக்களவையில் உள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டசபையில்  பிஜூ ஜனதாதளம் வெற்றியை தொடர்ந்து அக்கட்சியின் சட்டசபை தலைவராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA_வாக பதவியேற்ற 9 பேர் “தப்பியது அதிமுக அரசு” பெரும்பான்மை கிடைத்தது..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில்  , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]

Categories
அரசியல்

“தேர்தல் 2019 மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல “டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி ..!!

நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன்  கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி […]

Categories
அரசியல்

“மம்தாவுக்கு நடந்த துரோகம் “பாஜக அதிரடி ..!!

சொந்த கட்சிக்காரர்களே பாஜகவுடன் இணைந்து துரோகம் செய்தது மம்தா பேனர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டனர். இச்சம்பவம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும்  பாஜகவில் இணைந்து விட்டனர். மேற்கொண்டு இன்னும் பல எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சரை நியமிப்பதில் குழப்பம் “பாஜக தீவிர ஆலோசனை..!!

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவியிலிருந்து விலக வேண்டாம்” முக ஸ்டாலின் வேண்டுகோள்..!!

ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்க்கு காங்கிரஸ் செயற்குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும்  ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராகுல் பதவி விலகக்கூடாது” ரஜினி கூறியது மகிழ்ச்சி- கே.எஸ். அழகிரி..!!

ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories
அரசியல்

பிரதமர் மோடிக்கு கிரண்பேடி வாழ்த்து ..!!

பிரதமோடிக்கு புதுசேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது .நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடியின் தலைமைக்கு கிடைத்தது” வெற்றி குறித்து ரஜினி கருத்து..!!

மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் பரபரப்பு” சசிகலாவுடன் ஆலோசனை நடத்தும் டிடிவி…!!

டிடிவி தினகரன்  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும்  வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்  படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும்  குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]

Categories
அரசியல்

“தொடரும் ராகுல் காந்தி சர்ச்சை “ராஜினாமா உறுதி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி  தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சியின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேராத அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக MLA_க்கள் பதவி ஏற்பு” சட்டசபையில் 101ஆக உயர்வு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக  எம்.எல்.ஏக்கள் 28ம் தேதி பதவி ஏற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி” தொண்டர்களிடையே பிரதமர் பேச்சு…!!

தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி தேர்தல் பனி செய்துள்ளதாக பிரதமர் மோடி வாரணாசியில் தொண்டர்களிடம் பேசியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாக்களித்த மக்களுக்கு நன்றி” வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி …..!!

மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தேர்தலில் காங்கிரஸ் தோல்வி” 10 நாட்களுக்குள் நடவடிக்கை…!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களுக்குள்  நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இதையடுத்து இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து  விவாதிப்பதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க M.L.A க்கள் 28 -ஆம் தேதி பதவியேற்பு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து  ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவி ஏற்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக […]

Categories
அரசியல்

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது, திருமாவளவன் சூளுரை ..!!

மதசார்பற்ற கொள்கைகளை பின்பற்றுவதில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார் .. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் அவர் பேசுகையில் ,தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக மாற்றியதில் முக்கியப் பங்கு அண்ணாவுக்கும் ,கருணாநிதிக்கும் உண்டு . மதசார்பற்ற கொள்கைகளை கடை பிடிக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கே மதசார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்க வழிகாட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதவியாளர் உடலை சுமந்து சென்ற பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி ..!!

அமேதியில் உதவியாளரின் சடலத்தை ஸ்மிருதி ராணி தூக்கிச் சென்றது காண்போர் மனதை உருக வைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி பகுதியில் ஸ்மிருதி ராணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேந்தர் சிங். இவர் அமேதியில் உள்ள பிரவுலி என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது .அப்போது அவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பொழுது உதவியாளர் சுரேந்தர் சிங் உடலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி” நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி..!!

கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று  கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான்   எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக  தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]

Categories
அரசியல்

“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசு மோடி அரசு “திருமாவளவன் பரபரப்பு பேச்சு ..!!

மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ  ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி…!!

டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.   நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
அரசியல்

“விசிகவுக்கு ஏற்பட்ட புதிய திருப்பம் “வைகோ பெருமிதம் ..!!

திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார்  வைகோ உரை : பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு  புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் . மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும்” தோல்வி குறித்து TTV கருத்து…!!

 அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட  அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“300 பூத்களில் 0 வாக்கு” முகவர்கள் போட்ட வாக்கு எங்கே..? TTV தினகரன் கேள்வி….!!

300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின்  முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஸ்மிரிதி ரானிக்கு ஆதரவு” பஞ்சாயத்து தலைவர் சுட்டுக் கொலை..!!

ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில்  பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.  முன்னாள் மத்திய அமைச்சரான  இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள  பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது.  இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது” வெற்றி குறித்து முக.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சபரிமலை காரணமில்லை” தோல்வி குறித்து கேரள முதல்வர் கருத்து…!!

கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வேட்பாளர்களாக மாறிய விவசாயிகள்” தோற்கடிக்கபட்ட முதல்வர் மகள்….!!

தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள  17 தொகுதிகளில் 9 இடங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு” 30_ஆம் தேதி முதல்வராகும் ஜெகன்மோகன் …..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற  YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories

Tech |