Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை..!!

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில்  திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“மோடி -டிரம்ப் சந்திப்பு “அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர்  தொலைபேசி மூலமாக வாழ்த்து […]

Categories
அரசியல்

“சட்டசபையில் அடுத்தகட்ட நகர்வு “மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் !!..

சட்ட மன்றத்தில்  நிகழ்த்த இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது . மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு திமுக பாராட்டு  அளிக்கும் வகையில் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை  இன்று நடத்த இருக்கிறது.மேலும் இக்கூட்டமானது  மக்களவை தேர்தலுக்கு  பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும் திமுக தலைவர் மு க […]

Categories
அரசியல்

“தோல்வியால் தனது பதவியை ராஜனாமா செய்கிறார் ராகுல் காந்தி “தொடரும் தேர்தல் பரபரப்பு !!..

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குடும்ப அரசியலால் காங்கிரஸ் படுதோல்வி “ராகுல் காந்தி மீது கட்சி தொண்டர்கள் கடும் விமர்சனம் !!..

காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம்  மற்றும் குடும்ப அரசியல்  காரணம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  நடைபெற்று  முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியானது  பெரும்பான்மையான தொகுதிகளில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில்  மாபெரும் வெற்றி பெற்று  காங்கிரஸ் கட்சியை  படுதோல்வியடைய செய்தது . இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது , தேர்தலுக்கு முந்தைய காலங்களில் பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“303 இடங்களில் பாஜக முதலிடம்” தேசியளவில் 3_ஆம் இடம் பிடித்த திமுக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக தேசியளவில் முதல் கட்சியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு குறித்து நேற்று இந்திய தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ராஜினாமா…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு..!!

பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற  தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க  272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும்   23 இடங்களில் வெற்றி பெற்று  3-வது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு  எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு கனட பிரதமர் ஜஸ்டின் வாழ்த்து..!!

மக்களவை தேர்தலில் மாபெரும்  வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு  நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா  கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் படு தோல்வி…. தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ராஜ் பப்பர்…!!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த காரணத்தால் ராஜ் பப்பர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்..  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம்முள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் ஆகிய கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலில் தேசியளவில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள்….!!

மக்களவை தேர்தலில் தேசியளவில்  இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்கள் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக கூட்டணி 350 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. இதே போல தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார்.  பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர். தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம்” டி.டி.வி தினகரன்..!!

 அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை  பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜனநாயக முறைப்படி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம்” முக ஸ்டாலின்..!!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.     நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் 92 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால்  மோடியே மீண்டும் பிரதமராவார் என்பது உறுதியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம்” முக ஸ்டாலின் ட்விட்..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நடைபெற்று  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக 38 மக்களவை தொகுதிகளில் மகத்தான  வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

 பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில்  பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவின் வெற்றி உறுதி” மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர்..!!

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் மோடியே பிரதமர்” பல்வேறு நாட்டு அதிபர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பேசும் மக்கள் ஆதரவு” ஆதிக்கம் செலுத்தும் பிஜேபி…..!!

இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் பாஜக 161 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்” பிரதமர் மோடி ட்விட்..!!

பிரதமர் மோடி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னிலை நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அமித்ஷா…..!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் கட்சியின் தலைவர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் பிரதமராகும் மோடி” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜக 301 தொகுதி தனித்து முன்னிலை” நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டம்…!!

மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜக மட்டும் 301 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொண்டர்களை சந்திக்கும் மோடி” 20,000 பேருக்கு அழைப்பு…. களைகட்டும் பிஜேபி தலைமையகம்…!!

மக்களவை தேர்தல் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து இன்று மாலை கட்சி தொண்டர்களை மோடி சந்திக்க இருக்கின்றார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் 7 தொகுதியில் பாஜக முன்னிலை….!!

டெல்லி மாநில  மக்களவை தேர்தலில் பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 334 கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 14 தொகுதி முன்னிலை…. அதிமுக 08 தொகுதி முன்னிலை..!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல்   நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி  18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள   4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 23 தொகுதிகளில் பாஜக முன்னிலை…..!!

கர்நாடக மாநிலத்தின்  மக்களவை தேர்தலில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி முன்னிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

30-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கும் ஜெகன்மோகன் ரெட்டி….!!

ஆந்திர மாநில ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு…..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால்  முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அம்போ” 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை…!!

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது.  அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலை கை விட்ட வட மாநிலம்…. “கை கொடுத்த தென் மாநிலம்” 1 லட்சம் வாக்குகள் முன்னிலை….!!

வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள்  தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக 11 தொகுதி, அதிமுக 11 தொகுதி சமநிலை…!!

சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு  சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி   சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல்  நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஆட்சி மாற்றம்” முதலவர் பதவியை இழக்கும் சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திர மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்ற வாக்குபதிவில் YSR காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகுத்து வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கனிமொழி 41,000 வாக்குகள் முன்னிலை…..!!

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கூட்டணி 322 தொகுதியில் முன்னிலை……!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி  322 மேற்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி : திமுக 37 தொகுதி முன்னிலை…. அதிமுக 2 தொகுதி முன்னிலை..!!

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தொகுதியில் திமுக  தமிழகம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது.  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி…. தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்…. பிரியங்கா காந்தி வேண்டுகோள்..!!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பான்மையாக  பிரதமர் மோடியே  மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன. இதனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி 28–வது நினைவு தினம்” சோனியா, ராகுல் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வேறு வழியின்றி ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டது. பின்னர் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த போது ஸ்ரீ பெரம்பத்தூரில் வைத்து திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி படு கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்” பாஜகவினர் விளக்கம்….!!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது  ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் உருவத்தை லோகோவாக கொண்ட நமோ டிவி கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  தொடங்கப்பட்டு தன்னுடைய  ஒளிபரப்பை  தொடங்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரும் கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் அரசியல் குறித்த பல்வேறு விஷயங்கள் 24 மணி நேரமும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கருத்து கணிப்பை நம்ப மாட்டேன் “வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய சூழ்ச்சி – மம்தா பானர்ஜி ட்விட்…!!

கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வதற்கு சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில்   543 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட  வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி…. விருந்து வைக்கும் அமித்ஷா…. தமிழக முதல்வருக்கு அழைப்பு…!!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அக்கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு  நாளை விருந்து அளிக்கிறார்.  இந்திய நாடாளுமன்ற தேர்தல்  543 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட  வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும்  பாஜக 300 இடங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார்.!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார்  என  எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு   நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக   இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும்” – கமல் ஹாசன்.!!

ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கே.பாக்கியராஜ், கே. எஸ் ரவிக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” கேதார்நாத்துக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது” பிரதமர் மோடி பேட்டி..!!

பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு  தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக  தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில்  நடந்து சென்று வழிபாடு செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக இல்லாத ஆட்சி…. அகிலேஷ், மாயாவதியை சந்தித்த சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க இல்லாத அரசை அமைப்பதற்காக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது . ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தலில்   59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஓன்று சேர்க்கும்  முயற்சியில் ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிராந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள  கேதார்நாத் குகையில்  தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள  பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]

Categories

Tech |