Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தேசிய செய்திகள்

பிரபல நடிகை”ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா”…… அவருடைய ”மகளுக்கும் கொரோனா ”…!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமர மக்கள் முதல் பெரிய பெரிய பிரபலங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மருத்துவர்களும், முன்கள பணியாளர்களான போலீஸ் போன்றோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: முழுமுடக்கம் 2 நாள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு …!!

மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் நேற்றைய பாதிப்பு ஒரு மாதங்களுக்கு பிறகு 1200 க்கும் குறைவான எண்ணிக்கையில் உறுதிசெய்யப்பட்டது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்கா நகரம் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து இன்று […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பேரதிர்ச்சி கொடுத்த கொரோனா…. இந்த மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்பு …!!

மதுரையில் இன்று காலை வரை மட்டுமே 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு …..!!

தமிழகத்திற்கு Finger Pulse Oximeter  மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி நிலையிலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் கூட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் என ஏராளமாக […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மீண்டும் பொதுமுடக்கம் ? அமைச்சர் தகவல் …!!

மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.; அதன் பலனாக கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. கடந்த ஒரு மாதங்களுக்குப் பிறகு 1200க்கும் கீழ் நேற்று கொரோனா பாதிவாகியது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் வேகமெடுத்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மதுரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்காக அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் – மாஸ் காட்டும் தமிழக அரசு ..!!

தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும், திடமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், தீவிர அறிகுறி உள்ள நோயாளிகளாக  மருத்துமனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இரவு 12 மணி முதல் – அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த  நிலையில் தமிழக அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கி வந்த சென்னையில் தனி கவனம் செலுத்திய தமிழக அரசு, அங்கு உள்ள 15 மண்டலங்களையும் தனித்தனியே பிரித்து சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. மேலும் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கொரோனா தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இன்றைய பாதிப்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி…. கொரோனாவுக்கு மருந்து…. ஐ.சி.எம் ஆர் பரிந்துரை …!!

கொரோனா சிகிச்சைக்கு LTOLIZUMAB மருந்தை பயன்படுத்தலாம் என்று ஐ.சி.எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று வைரஸால் இந்திய நாடு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும், இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆய்வில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் மருத்துவர்களும் உள்ளனர்.  எப்போது கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும் என்ற கேள்வி குறித்தெல்லாம் பல்வேறு யூகங்களே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் என்றாலே கெத்து தான்…. 15 லட்சத்தை தொட்டு அசத்தல்… வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில்கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,900த்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மட்டும் மொத்த பாதிப்பு 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,34,226 ஆக […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் அதிரடி – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவளின் மையமாக தலைநகர் சென்னை இருந்ததை தொடர்ந்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு, கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்த கட்டுப்பாடு உதவிகரமாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 7  நாட்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 2000த்திற்கும் கீழ் சென்றது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – பிரதமர் மோடி நடவடிக்கை …!!

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14ஆம் தேதி…. முக்கிய முடிவு வெளியானது அறிவிப்பு …!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்டது தமிழக அரசாங்கம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஐந்து அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 14ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்……!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்…  தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதிரடி ……!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று  முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு ….!!

தமிழகத்தில் இன்று சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2000த்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த பலி 1,829 ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1,205 பேருக்கு தொற்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை -என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் …!!

கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது. இதில் அப்துல் ரகிம்,  அபூஹனீபா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் முக்கியமான சில விஷயங்களை NIA  கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே எங்க இருக்காங்கனு பாருங்க…. எல்லாருக்கும் இலவசமாக கொடுங்க… உத்தரவு போட்ட நீதிமன்றம் …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில் குமார் சி சரத்கர். சென்னை கிழக்கு மண்டலத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ், சென்னை தெற்கு மண்டலத்திற்கு பாஸ்கரன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள். சென்னை மேற்கு மண்டலதிற்கு சிறப்பு அதிகாரியாக கணேசமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி ஆக பகலவன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல வணிகவியல் குற்றப்பிரிவு எஸ்பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். மாதவரம் காவல்துறை துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஞ்சய் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு – அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்நிலையில் நீட் வகுப்புகளும் ஆம்பிசாஃபட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணையம் மூலம் காணொளியில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஷாக்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு …!!

கொரோனாவால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு – திருச்சி மாநகராட்சி அதிரடி …!!

திருச்சி மாநகராட்சி மாநகராட்சி பகுதியில் 17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கமலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மட்டுமல்லாமல், சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் தினமும் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனாவா ? தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா …!!

கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கர்நாடக மாநில எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது. தொடர்ச்சியாக தான் பணிகளில் அரசு பணிகளில் ஈடுபடுவேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஆகட்டும், மத்திய பிரதேச முதல்வர் ஆகட்டும், பெரும்பாலான முதல்வர்கள் கொரோனா அறிகுறி தெரிந்தால் அல்லது தங்களது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா அல்லது அவர்களுக்கு அறிகுறி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் – என்.ஐ.ஏ தரப்பு அதிரடி வாதம்

தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் …!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தன்னிடம்  சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக மருத்துவ கவுன்சிலிங் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம் தணிகாசலம் கைது செய்யப்பட்டு  சிறையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் தொடங்கல… ஏன் அத பத்தி பேசுறீங்க ? அமைச்சர் பதில் …!!

கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர எழுந்தன. இதில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், டிவி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கும் முன்பே குறை கூறினால் எப்படி ? ஏற்கனவே 5 சேனல்கள் ஒப்புதல் தந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா – அதிர்ச்சியில் தமிழக அரசு ….!!

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அமைச்சராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க தான் அதிகமா இருக்கீங்க ? பட்டைய கிளப்பிய தமிழகம்…. கேட்டறிந்த மத்திய குழு …!!

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். தமிழக்த்திற்கு வந்துள்ள மத்திய குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டு வரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறைச் செயலாளர் கலந்து […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை முதல் அமுலாகிறது … அமைச்சர் அறிவிப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் லத்தி ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

இல்லத்தரசிகளா நீங்கள்….? ”அப்படினா உங்களுக்கு தான்”…. வெளியான மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வீட்டில் முடங்கி இருந்த பொது மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. சென்னையில் கூட கடந்த 2 நாள்களாக புதுப்புது உச்சம்பெற்ற தங்கம் விலை மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்தான் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஊரடங்கால் இல்லத்தரசிகள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை வரை 25 பேர் பலி… சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு …!!

சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் என மொத்தம் 25 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம் …!!

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – மதுரையில் சிபிஐ ஆலோசனை ….!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கு இன்னும் என்ன தேவை ? சொல்லுங்க செஞ்சிருவோம் – முதல்வர் ஆலோசனை …!!

முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆர்த்தி அகுஜா, மத்திய இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவானது நேற்று முழுவதும் சென்னையில் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனைகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டனர். இவை எவ்வாறு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை இது ? இப்படி ஆகிடுச்சே… அரசை புலம்பவிட்ட ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டம் விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 100ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 அரசு, 47 தனியார் ஆகும். தமிழகத்தில் இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா… 75,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பரவிய வதந்தீ…..! அலார்ட் ஆன மத்திய அரசு…. !!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் வராமல் வீட்டிலேயே காத்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிறிது நேரத்துக்கு முன்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தி காட்டு தீயாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: என்.எல்.சி.க்கு ”ரூ. 5,00,00,000” அபராதம் … அதிரடி காட்டிய பசுமை தீர்ப்பாயம் ..!!

நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில் என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பாய்லர் வெடித்ததற்கு காரணம் என்ன ? இப்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லையா ?  இதற்கெல்லாம் யார் காரணம் ? என்று பல்வேறு கேள்விகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே 13 பேர் உயிரிழப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுபோன்ற விஷயங்களில் எங்கெல்லாம் தவறு ஏற்படுகிறதோ அதனை கண்டறிந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு முடிவு செய்தி தவறானது – சிபிஎஸ்இ மறுப்பு …!!

சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில்,  தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – ஜூலை 11, 13-ல் – அறிவிப்பு ……!!

நாடு முழுவதும் சிபிசிஎஸ்இ படப்பிரிவுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் நிறைய தேவை இருக்கிறது. ஏனென்றால் மேற்படிப்புக்கு ஏற்கனவே காலதாமதமாகி இருக்கக் கூடிய சூழலில் மாணவர்கள் மேற்படிப்பு செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த தேர்வின் முடிவு என்பது அத்தியாவசியமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவர், மாணவிகள் தேர்வு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து வராங்க…. ”நாளை முதல் நடக்கும்”…. தெறிக்கவிடும் சிபிஐ …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

இன்னும் 1 நாள் தான் இருக்கு….. நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு ….!!

நாளை மறுநாள் சிபிசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் என்பது வரும் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.nic.in, cbse.nic.in என்ற இணையதள […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவத்தில் உலகிற்கே நாங்க எடுத்துக்காட்டு – மாஸ் ஸ்பீச் கொடுத்த மோடி …!!

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இது இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றனர். இதில் காணொளி மூலமாக பேசிய பிரதமர், இந்தியா திறமைகளின் அதிகார மையம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெறும் 1 வருஷத்துக்கு இருக்கும்… யாரும் அரசியல் செய்யாதீங்க…. மத்திய அரசு விளக்கம் …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,  ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் முக்கியமான பாடங்கள்,  குறிப்பாக இறையாண்மை உள்ளிட்ட முக்கியமான சில பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தயவுசெய்து குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி 60 நொடி கூட நிக்க முடியாது…. சென்னையில் அதிரடி நடவடிக்கை …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன் களப்பணியாளர்களாக இருந்துவரும் காவல்துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் இருக்கக்கூடிய சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் குறைவான நொடிகளே வாகன ஓட்டிகள் நிறுத்தக் கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் இன்று முதல் ஒரு திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக […]

Categories

Tech |