Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்படுவார்களா குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ.கள் ?

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிசிஐடி போலீசார் முதல்கட்டமாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் ரத்தக்கறை சாட்சி…. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொடூரம் …!!

பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் டி.எஸ்.பியாக ராமநாதன் நியமனம் – டிஜிபி நடவடிக்கை …!!

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என் நெஞ்சம் பதறுது…. உடனே கைது செய்யுங்கள்… முக.ஸ்டாலின் காட்டம் …!!

ஜெயராஜ் பெண்ணிஸ் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும். இரட்டை கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். ஜெயராஜ்,  பென்னிக்ஸ்ஷை விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்துவதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க தான தலைமை…. ஏன் அமைதியா இருக்கீங்க ? டேக் செய்த ஸ்டாலின்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக  நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் முதல்முறையாக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காவல்துறை மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு காவல் நிலையத்தை கூட நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதல்வர் பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக […]

Categories
அரசியல் சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரலாற்றில் இப்பதான் இப்படி நடக்குது…. முதல்வராக தகுதி இழந்த பழனிச்சாமி…. ஸ்டாலின் காட்டமான அறிக்கை …!!

சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக  நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார். காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவ தினத்தின் காணொளி  பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. காவலர்கள் கிண்டல் செய்ததால் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் சித்திரவதை மரணம் – டிஎஸ்பி பரத் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் டிஎஸ்பி பரத் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து 16 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று தந்தை மகன் இறந்த குடும்பத்தினரிடம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் சித்திரவதை மரணம் – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்….!!

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#BREAKING: இளைஞர் மீது தாக்குதல் : காவல் ஆணையருக்கு நோட்டீஸ் …!!

சென்னையில் இளைஞர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க சென்றபோது அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் மருந்து வாங்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே சதாம் உசேனுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதாம் உசேன் அடித்து தரதரவென  காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை-மகன் சித்ரவதை மரணம் – மேலும் ஆதாரங்கள் கிடைத்தன ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மேற்கு வங்கம் – 2021 ஜூன் வரை இலவச அரிசி – மம்தா அதிரடி அறிவிப்பு ..!!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் கே.ப.அன்பழகனுக்கு கொரோனா – மியாட் மருத்துவமனை தகவல் …!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் ஆரம்பத்தில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும்,   அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் உடல்நிலை நார்மலாக இருந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருக்கணு என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அமைச்சருக்கு குறைந்த அளவு இருமல் இருந்ததாகவும் இதனால் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: பெண் காவலரிடம் நீதித்துறை நடுவர் மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார். சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது …!!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

80 கோடி குடும்பம்… ”ரூ.1,50,000,00,00,000 ஒதுக்கீடு…. 5மாசம் இலவசம்… அள்ளி கொடுக்கும் மோடி அரசு …!!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.90,000,00,00,000 ஒதுக்கீடு… ”நவம்பர் வரை இலவசம்” மோடி அதிரடி அறிவிப்பு …!!

நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரு இந்தியர் கூட பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது – பிரதமர் மோடி பேச்சு

கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் மரணம் – டி.ஐ.ஜியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை  நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள்,  நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சாத்தான்குளத்தில் நீதிபதி மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சி – விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் … பெண் அதிகாரி வாக்குமூலம் …!!

சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர்கள் மீது ”கொலை வழக்கு” முகாந்திரம் இருக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை கேட்காதீங்க….. தந்தா வாங்கிக்கோங்க…. தமிழக அரசு தகவல் …!!

கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பு … அடுத்தடுத்து நிகழும் பரபரப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடம்பில் அதிக அளவு காயம் இருப்பதாகவும், இதனால் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு : ”சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு” ஐகோர்ட் கிளை அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மூன்று விஷயத்தை முக்கியமாக தெரிவித்திருந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ்  உடலில் அதிக காயம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி எஸ்.பி மாற்றம் – சாத்தான்குளம் சம்பவத்தால் அதிரடி நடவடிக்கை …!!

தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பி ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைதாகி நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் சாத்தான்குளம் போலீஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 மணிக்குள்ள சொல்லுங்க…. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்…. அரசுக்கு கெடு விதித்தது ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐ.கோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த இருவரின் உடல் நிலை பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இருவரது உடலிலும் காயங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் மீது […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம்…. எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? பரபரப்பு உத்தரவு …!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார்,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு நொடி கூட வீணாக கூடாது…. போலீஸ் மீது கேஸ் போடலாம்… ஐகோர்ட் அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை …!!

பொதுமுடக்கம் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாட்டு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் சில மாநில அரசுகளும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது.  உதாரணமாக தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதேபோல மாநிலம் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ….!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: பொது முடக்கதளர்வு- 2.0…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு …!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தட்டிய சீனா…. ஓடிய இம்ரான்… மாஸ் காட்டும் மோடி…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

இந்தியா – சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் மேற்கொள்ளப்பட்டது.  சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சீனாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை குறைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

#BREAKING: தந்தை மகன் மரணம் : ”வழக்கு சிபிஐக்கு மாற்றம்” அரசாணை வெளியீடு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் கண்டனம் …!!

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், .கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும், பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது முறையாக…. வேற வழி தெரியல…. இதான் முடிவு….. வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் பொதுமுடக்கம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது  பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பொதுமுடக்கம் நீட்டிப்பு ? வெளியாக போகும் அறிவிப்பு…!!

பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ள இருப்பதாகவும்,  இன்று மாலைக்குள் அதை அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய கள நிலவரத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொரு மாவட்டமும் எப்படி இருக்கு? நிலவரங்களுக்கு ஏற்ப ஊரடங்கு …!!

தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா ? போன்ற  விவாதங்கள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்… வெளியான CCTV பதிவு… FIRல் முரண்பாடு …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவலறிக்கையில் முரண்பாடு இருப்பது வெளியாகியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை கொடூரமாக தாக்கியதால் தான் இவர்கள் இருவரும் மரணம் நிகழ்ந்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரையா ? ட்விட் மூலம் கசிந்த தகவல் …!!

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட் செய்துள்ளார். ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான பிரதீப் கவுர் தற்போது போது ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவில் அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் பார்த்தோமென்றால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: துணை முதல்வரின் சகோதரருக்கு கொரோனா – அதிமுகவினர் அதிர்ச்சி …!!

தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் உயிரிழப்பு : நீதிபதிகள் விசாரணை !

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்சரித்த முக.ஸ்டாலின்…. சரண்டர் ஆன எடப்பாடி… நல்லது நடந்தால் சரி தான் …!!

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு மீது ஏற்பட்ட களங்கம்…. ”முக்கிய முடிவு எடுத்த எடப்பாடி”…. மக்கள் வரவேற்பு …!!

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டாலின் வீட்டுக்குளேயே இருக்கின்றார்…. நாங்கள் அப்படி கிடையாது … தமிழக முதல்வர் பதிலடி …!!

திமுக சார்பில் அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, திமுக தலைவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு. தினமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் செய்வதற்காக அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக என்ன அறிக்கை விட்டார். நோய் பரவலை எப்படி தடுக்க முடியும் ? நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் ? என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா ? தினம்தோறும் அரசை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு – சிபிஐக்கு மாற்ற முடிவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது – பாஜக அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர்  வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்.  இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஜாதி, மத, பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டன குரல் எழுப்புகிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது, பிரேத பரிசோதனைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் …!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த  பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருவரின் மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியளவில் பூதகரமாகியுள்ளது. இந்த மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது…. சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது… பிரதமர் மோடி உரை …!!

நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]

Categories

Tech |