தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]
Category: சற்றுமுன்
பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி […]
தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும், வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து […]
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 4 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மருத்துவ வல்லுநர் குழு கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் தமிழக மருத்துவ குழுவினருடன் […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 21 […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசித்து அவர்களுடைய […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர் […]
தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் […]
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்து, பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம் அதேபோல் நடக்க உள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ குழுவினர் பிரதிநிதி குகானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்து பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
இந்தியாவில் கொரோனா நவம்பர் மாதம் கொரோனா உச்சம் அடையும் என்ற செய்தியை ICMR மறுத்துள்ளது. நவம்பர் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடையும் என்றும், அந்த காலகட்டத்தில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சிகரமான ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதுவும் இந்த ஆய்வு முடிவுகளை ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது ஊடகங்களில் வெளியாகியிருந்த […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசை நோக்கி 5 கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது, இறுதியாக இந்த அரசுக்கு உங்கள் மூலமாக சொல்ல விரும்புவது, கொரோணா பேரிடர் காலத்தில் நடக்கும் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்கள் வாயிலாக தமிழக அரசிடம் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை தனது இல்லத்தில் இருந்து இணையம் வாயிலாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பில் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஸ்டாலின் அரசிடம் 5 கேள்விகளை முன் வைத்தார். அப்போது, இந்தக் கேள்விக்கான பதில் எனக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் எனவே இந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு கேள்வியை முன்வைத்தார். […]
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை. நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்தது. அரசின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலுள்ள […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 இந்திய அதிகாரிகளை காணவில்லை என ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை முதல் இரண்டு அதிகாரிகளையும் காணவில்லை என பாகிஸ்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இருநாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Two Indian officials working with Indian High Commission in Islamabad (Pakistan) are missing: Sources — ANI (@ANI) June 15, 2020
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களாக இருக்கும் பலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் மட்டும் […]
கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த வாரம் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் […]
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் […]
சென்னையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் RB.உதயகுமார் பதிலளித்துள்ளார். சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கின்றது. இதனால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் போட்டு இருக்காங்க. அதுல முதலமைச்சரே அறிவிப்பார்கள். சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக வெளியே போய்கிட்டு இருகாங்க என்ற கேள்விக்கு 85 லட்சம் பேர் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யாரையும் போக கூடாதுன்னு சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு பேர் போய் கிட்டு இருப்பதாக […]
சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்… நம்ம காவல் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டு, 314 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் சூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியலை கொண்டு சைபர் கிரைம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 160ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே இரட்டை எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்க எண்ணிக்கையில் பதிவாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக சென்னை புறநகர் பகுதியில் இருக்க கூடிய பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரிசோதனையும் அதிகரித்துள்ளதால் கொரோனா எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்றும், இன்னும் கூடுதலாக இருக்கும் எனவும் […]
2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட […]
மு.க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்து செல்வது மக்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. கொரோனா மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும், சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் தமிழக சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம், மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக 1000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் இதுவரை 42 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 397 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 444 பேர் […]
தமிழக அரசு கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைக்கிறது. கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுயதால் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில், 397 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உயிரிழப்புகளை மறைகின்றது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் நலம் விசாரித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி. அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து இருக்கிறார். உடல்நிலை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கூறிய தமிழக முதல்வர், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி, […]
முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிமாநில நிறுவனங்களை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் […]
பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகின்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதை தடுப்பதற்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ?என்பது குறித்து ஆலோசனை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 42,687ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1487 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 14ஆவது நாளாக கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் இல்லாத அளவாக 30 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விகிதம் 49 புள்ளி 95 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆய்வாளர்கள் மருந்தை கண்டுபிடிக்க மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல கொரோனா அறிகுறி குறித்தும் பல்வேறு நாடுகளில் குழப்பமே […]
பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்ளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனவைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் 77 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு மட்டும் 21 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒரு லட்சத்து 16 […]
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் காலமான நிலையில் தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]
இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, இதுவரைக்கும் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் டெஸ்ட் செய்துள்ளோம் எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் டெஸ்ட் எடுத்திருக்காங்க, ராஜஸ்தானில் 5.4 லட்சம் எடுத்திருக்காங்க, ஆந்திரப் பிரதேசத்தில் 5 லட்சம், கர்நாடகாவில் 4 லட்சம், உத்தரப்பிரதேஷத்தில் 4 , மேற்கு வங்கத்தில் 3 […]
மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை தொடக்கி வைத்து, செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை மாநகராட்சி அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ள நிலையில் 8,718 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவோர் விகிதமும் இருந்து வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – […]
இந்தியா – நேபாளம் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிதமாக்கி என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பகுதியிலிருந்து துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தீடிரென நடைபெற்ற துப்பாக்கி சூட்டால் இந்தியா – நேபாள எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியார் மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் அதிரடி பதிலளித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மத்திய அரசு நிர்ணயித்த கட்டணம். அதைவிட குறைத்து தான் நாம் நிர்ணயித்துள்ளோம். டாக்டர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு தான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் பலருக்கு கொரோனா வந்துருக்கு. அப்படி வந்தா அவர 14 நாள்கள் தனிமையில் வைக்கணும். இதுயெல்லாம் […]
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய சுகாதாரத்துறை செயலாளரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு 1500யை தாண்டி தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக […]
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டிஉள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு வரக்கூடியது சூழலில் ஏற்கனவே சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார. இவர் சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுகாதாரத்துறை செயலாளர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பேரிடர் […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் […]
8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக குருவை சாகுபடிக்காக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் குறுவை […]