Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு ….!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 1,47,195 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,41,842 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கின்றது. அமெரிக்காவில் 20 லட்சம், பிரேசிலில் 8 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் 4ஆவது இடத்துக்குச் சென்ற இந்தியா

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் பிரிட்டனை பின்னுக்குத்தள்ளிய இந்தியா 4ஆம்  இடத்திற்குச் சென்றுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 9000 நபர்கள் வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 97 ஆயிரத்து […]

Categories
சற்றுமுன்

984னு அரசு சொல்லுது… 2098னு மாநகராட்சி சொல்லுது…. டெல்லியில் கொரோனா இறப்பு எவ்வளவு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எணிக்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 984 என்று டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கொடுத்த தகவலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். டெல்லி மாநகராட்சியின் அதிகாரம் என்பது துணை நிலை ஆளுநருக்கு கீழ் வரக்கூடியது. மாநகராட்சி சார்பில் தனியாகவும், அரசு சார்பில் தனியாகவும் வேலை செய்வார்கள். எனவே இந்த இரண்டு தரப்பினரும் கொரோனா இறப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது இருக்கிறதா ? என்று அம்மா என்னிடம் கேட்டார்கள்….!!

சேலத்தில் ரூபாய் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதோடு, 35 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழக முதல்வர், சேல மக்களுக்கு இதையெல்லாம் வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் மேம்பாலங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். உடனே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க அரசாணை!

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் : ex., மயிலாப்பூர் – MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI கோயம்புத்தூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,390, கடலூர் – 7, தருமபுரி – 3, திண்டுக்கல் – 3, ஈரோடு – 1, கள்ளக்குறிச்சி – 3, புதுக்கோட்டை – 5காஞ்சிபுரம் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,685 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,243, செங்கல்பட்டு – 158, திருவள்ளூர் – 90, காஞ்சிபுரம் – 32, திருவண்ணாமலை – 19 பேர், மதுரை – 16, வேலூர் – 16, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : குட் நியூஸ் – தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ்!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு (2020) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.  ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன என்று ரேலா மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.    

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,562 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,149, செங்கல்பட்டு – 134, திருவள்ளூர் – 57, வேலூர் – 33, தூத்துக்குடி – 26, கள்ளக்குறிச்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.265.46 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

ரூ.265.46 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து வேலூரில் ரூ.6.35 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் ரூ.34.33 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், பாலங்களை திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 2.93 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தல் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,423 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,146, செங்கல்பட்டு – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

கொரோனா காலத்தில் சேமிப்பு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்பகுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை – முதல்வர் பழனிசாமி!

சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக “ஒளிரும் மாநாடு” என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை, சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: ”ரூ.5000 TO ரூ.15,000வரை” வாங்கிக்கோங்க.. அரசு அறிவிப்பு …!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கு கட்டணம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களில் வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான சில பரிந்துரையை தமிழக  அரசுக்கு வழங்கியது. […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

ஜூலை 3ஆவது வாரத்தில் 10, 11, 12 தேர்வு முடிவுகள் வெளியீடு ….!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளில் முனைப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு  முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில, 10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியீடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 19,809ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தல் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,60,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.500 கேட்குறாங்க… என்ன சொல்லுறீங்க ? பதில் சொல்லுங்க… நீதிமன்றம் கேள்வி …!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யானை கொல்லப்பட்ட விவகாரம் – அறிக்கை கேட்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் …!!

கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள  பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனியும் விட்டு வைக்க கூடாது…. கொரோனாவுக்கு சாட்டையடி…. EPS எடுத்த அதிரடி முடிவு …!!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களை ஐந்தாக பிரித்து மூன்று மண்டலத்திற்கு  ஒரு அமைச்சர் என இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில், ஜெயக்குமார், கேபி அன்பழகன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,392 பேர் குணமடைந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். ராயபுரம், கோடம்பாக்கம் , திரு.வி.க நகரில் , அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் 1,000கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்ல என்னென்ன கட்டுப்பாடு ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் 11ம்தேதி முதல் அனைவரும் தரிசிக்கலாம் …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுசா சொல்லாதீங்க… நிதியும் கொடுக்காதீங்க… மாஸ் காட்டும் மத்திய அரசு …!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படிப்போடு…! ”சரியான நேரத்தில், செமையான உத்தரவு…. அதிரடி காட்டிய எடப்பாடியார் …!!

முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் வேகமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையே குஷியான செய்தி…!” நிம்மதி அடைந்த ஸ்டாலின்” உற்ச்சாகத்தில் உப்பிக்கள் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் திக் திக் ….. ”மரணத்தின் பிடியில் சென்னை” காலையே 7 பேர் மரணம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றதை போல, உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி மக்களை நடுங்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் மாலையில் தான் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

OK சொன்ன தமிழக அரசு…. வாபஸ் பெற்ற மருத்துவர்கள்…. ஹேப்பி ஆன எடப்பாடி ..!!

தமிழகத்தில் நாளை மருத்துவர்கள் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டம் நடைபெற இருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க கோரிக்கையும் விடுத்து போராட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வீடு வீடா போங்க… இது தான் உங்க லட்சணமா ? பொங்கி எழுந்த ஸ்டாலின் …!!

சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்ய வேண்டும்.சென்னையில் ஐந்து மண்டலங்களில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பாதிப்பை விட சென்னை பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா ? கேரளா, அசாம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 வாங்கிக்கோங்க….! ”மாஸ் உத்தரவு போட்ட எடப்பாடி” மெர்சலான மாணவர்கள் …!!

தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு  பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல …. 5ஆவது நாளாக…. மிரட்டும் கொரோனா… பதறும் தமிழ்நாடு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக மக்களை பதற வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த 4 நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் கதிகலங்க வைத்த நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே …!!

சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து  பணத்தை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வீடு கிடையாது முகாம் தான் ….. சாட்டையை சுழற்றிய சென்னை …!!

சென்னையில் வீட்டில் தனிமைபடுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பல்வேறு முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சென்னையில் வீட்டில் தனிமைப் படுத்தப் படுவது அல்லது கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுவது ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில்  தடையை மீறி, பாதுகாப்பு இல்லாமல் வெளியே […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாசத்துக்கு கொடுங்க…! ”உத்தரவு போட்ட கோர்ட்” புதுவை மக்கள் மகிழ்ச்சி …!!

புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து  முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 11 நாளில் பொதுத்தேர்வு……! 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா ….!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி பொது முடக்கத்திற்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக இருப்பதால் அவர்கள் இ – பாஸ் எடுத்து மாணவியும், அவரது தாயாரும் ஒரு வாகனத்தில்  கொடைக்கானல் திரும்பி உள்ளனர். அவர்களை கொடைக்கானலில் கொரோனா சோதனை செய்தபோது அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், தனிமைப்படுத்தி ஒருநாள் கழித்து மருத்துவர்கள் பரிசோதனை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/  என்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க இந்தியா வாங்க…. வரவேற்க காத்திருக்கோம்…. புகழ்ந்து தள்ளிய மோடி …!!

இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காட்மேன் இயக்குனருக்கு 2-ஆவது சம்மன்… அதிரடி காட்டும் போலீசார் …!!

காட்மேன் வெப் சீரீஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்  காட்மேன் வெப் சீரிஸ் இயக்குனர் பாபு, யோகேஸ்வரன் அதேபோல தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்திருக்கிறார்கள். நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த சம்மன்னில் அவர்கள் நேற்று ஆஜராகவில்லை, அதேபோல அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது.எனவே அவர்களுக்கு இரண்டாவது சமன் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா கட்டணம்: 10 நாளுக்கு ரூ. 2,31,820…. 17 நாளுக்கு ரூ 4,31,411…!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என  IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை கொடுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தத்த்து. கட்டணத்தை அரசு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டனர். இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு ?

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என  IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவு என்பது […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

Breaking: சிறுமி நரபலி : பெண் மந்திரவாதி கைது …!!

புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை.  அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தலைநகர்….! ”இல்லாத உச்சம் தொட்ட கொரோனா” கலங்கிய சென்னை …!!

தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் உயிரிழப்பும், இரட்டை இலக்கத்தில் பதிவாகியது மக்களை  செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும்  கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியள்ளதை போல உயிரிழப்பும் இரட்டை இலக்கை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 3 மாசம் நீங்கதான்…! ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு ….!!

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் என்பது மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. வருகின்ற 31.07.2020ஆம் தேதியோடு தலைமைச்செயலாளரின் பதவிக்காலம்  முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்களை எப்போது திறக்கலாம் ? தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் வழிபட்டு தளங்கள் திறப்பது குறித்து சமய தலைவருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். வருகின்ற எட்டாம் தேதி முதல் கோவில்கள் வழிபாட்டுத் தளங்களை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை  நடத்த தலைமை செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 8ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கும் போது ஏற்படக் […]

Categories

Tech |