10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]
Category: சற்றுமுன்
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம் : தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது நடத்துவது சரிய அல்ல என குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களின் மன நிலை கடுமையாக […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தொடங்கி தற்போது வரை 2,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் […]
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 3 இலக்கத்திலும், உயிரிழப்பு இரட்டை இலகத்திலும் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 24,586ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,595ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 13706 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் 10680 பேர் மருத்துவமனையில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கிறார். கொரோனாவிற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரக்கூடிய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேரடியாக ஆளுநரை சந்தித்து […]
10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இந்த […]
தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலேசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 60 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் கொரோனா இருக்கிறது. தற்போது வரை 15776 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். […]
கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் […]
கல்லூரி தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில், கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக யுஜிசி தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டபோது ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வு நடத்தலாம். ஒருவேளை ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வை நடத்த முடியாத சூழல் […]
தமிழ்நாடு வேளான் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. விவசாய விளைபொருட்களை மத்திய மாநில அளவிலாக விற்பனை செய்ய ஒருங்கிணைந்த உரிமையை வழங்கல் மற்றும் ஒரு முறை விற்பனை கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண் விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் நன்மை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் […]
விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் […]
ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 50 வயதான இவர் சென்னையில் இருக்கக்கூடிய அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய 3 இடங்களுக்கு ஆவின் பால்பாக்கெட் சப்ளை செய்வது சம்பந்தமான அனைத்திற்கும் பொறுப்பான அதிகாரியாக இருந்துள்ளார் என்று தெரிகின்றது. இவர் மாதவரம் பால்பண்ணையில் தான் அதிக நாட்கள் வேலை பார்த்துள்ளார். மாதவரம் […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
கொரோனாவால் சென்னையில் மட்டும் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்றுவரை 23 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு, 13 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 10 ஆயிரத்து 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நாட்டிலே குறைந்த இறப்பு வீதத்தில் உள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளதில், அதிகபட்சமாக […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நேற்று வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 500 களில் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது ஒரு […]
முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சலூன்கள் அழகு நிலையம்,ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கார்டை கொண்டு செல்வது அவசியம். வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர், செல்போன் ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சலூன், அழகு நிலையம் உரிமையாளர், ஸ்பா நிலைய உரிமையாளர், பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் […]
தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை மறுநாள் தலைமைச்செயலர் ஆலோசனை’ நடைபெற இருக்கின்றது. மத வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சமயத் தலைவர்களுடன் நாளை மறுநாள் தலைமைச்செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கின்றார்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஷாக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 10,964 பேருக்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் […]
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை […]
அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் […]
18 மாநிலங்களவை எம்பி களை தேர்வு செய்ய வருகின்ற ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். ஆந்திரா ( 4), குஜராத் (4 ), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம் ( 3), மணிப்பூர் (1), மேகாலயா (1), ராஜஸ்தான் (3) இடங்களுக்கு ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்று அன்று […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஜாமின் வழங்கி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
சென்னையில் டாஸ்மாக் திறப்பு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது. சென்னையில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கத்தில், சென்னையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த […]
காட் மேன் வெப்சீரிஸ் இணை இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். காட் மேன் வெப்சீரிஸ் ட்ரைலரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பாக பிஜேபி உள்பட அமைப்பினர் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது, அதே போல அந்த வசனங்களை நீக்க வேண்டும் . இந்த வெப் சீரிஸ் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு […]
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் மூடபடு இருக்கின்றது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானி மும்பையிலிருந்து பயணம் செய்து டெல்லி வந்திருக்கிறார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சோதனையில் அவருக்கு குறைவாக இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை தவிர ICMR அலுவலகத்திலேயே சில கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருந்தார். ஆகவே […]
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட12,757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 14,802 பேர் கொரோனோவால் […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக 11 கட்சித் தலைவர்களும் ஆலோசித்த நிலையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. போதாது இரண்டு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு ரூபாய் 5000மும், மத்திய அரசு ரூபாயை 7500 […]
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 1286 12 வயத்துக்குற்ட்பட்டோர் […]
தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது.
பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பேருந்து இயக்குவதற்கான அரசாணை வெளியிட்டப்படுள்ளது. அதில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேருந்துகள் நாளை முதல் மண்டல வாரியாக இயக்கப்படுகின்றது. எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டத்தில் எட்டாவது மண்டலமான சென்னை, ஏழாவது மண்டலமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மண்டலங்களில் பேருந்துகள் இயங்காது. மற்ற 6 மண்டலங்களில் பேருந்தை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதற்கான அரசாணையில் மாதாந்திர பயணச்சீட்டு […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
புலப்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் சாலைகளில் பல நுறு கிலோ மீட்டர் நடந்தும், சைக்கிளிலும் சென்றவர்கள் பல துயரத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் […]
போலி ஐஏஎஸ் என்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியலில் கொடுத்த புகாரில், தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அரசு செயலாளராகப் பணி புரிகிறேன் என்று கூறி, அரசு வேலைக்காக 15 லட்சம் வாங்கி, வேலை கொடுக்காமல் பணத்தை மட்டும் மோசடி செய்ததாக மோசடி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் […]
மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ச்சி அடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். நெஞ்சை தொட்டு விட்டது: […]
பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் […]
கொரோனாவுக்கு எதிரான ஒரு போரில் இந்திய மக்கள் வலுவுடன் போராடி வருகின்றார்கள் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் ( மங்கி பாத் ) வானொலி உரையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை இந்தியா எதிர்கொண்டு எப்படி சாதித்தது என மற்ற நாடுகள் ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், பொது […]
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. கிட்டத்தட்ட 215க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனாவுக்கு அறுபத்தி 61.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.70 லட்சம் பேர் உயிரை காவு வாங்கிய கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 27.34 லட்சம் பேர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த 3 பேர், சத்தீஸ்கரில் இருந்து வந்த ஒருவர், டெல்லி – 2, குஜராத் – 6 , கர்நாடகாவில் இருந்து வந்த […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் […]
மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாம் என முதல்வர் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் […]
அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகார் அளித்தபோது செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் […]