Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் ரெடியா இருக்கேன் ….! ”ட்ரம்ப் போட்ட ட்விட்” உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதோடு இந்திய எல்லையான லடாக் பகுதி அருகே சீனாவின் எல்லையோரம் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : 10, 12ஆம் வகுப்பு தேர்வு – புதிய உத்தரவு ….!!

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சமரசம் செய்து வைக்கத் தயார் : ட்ரம்ப்

இந்தியா – சீனா பிரச்சனையை சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சைனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ”சைனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சமரசம் செய்து வைக்க நான் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேஸ் போட்டுட்டாங்களே…. ! கேள்வி கேட்குதே என்ன பண்ண ? புலம்பும் எடப்பாடி …!!

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பரபரப்புக்கு இடையே, எதிர்ப்புகளை கடந்து, தடையைத் தாண்டி, சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மதுபானக்கடை மூடுவது அரசின் வருவாயை பெருமளவு பாதிக்கப்படுகிறது என்ற வாதங்களை முன்வைத்து தான் மேல் முறையீட்டில் மதுக்கடையை தமிழக அரசு திறந்தது நமக்கு தெரியும். இந்த நிலையில்தான் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பாலி.விரிவுரையாளர் தேர்வு – 199 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை ஒத்திவைப்பு ?

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. இதற்கான திட்டமிடலும் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் , உலகெங்கும் உள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த ஒத்திவைப்பு குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ரூ.15 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் காணொலி மூலம் இந்த கையெழுத்திடும் பணியானது நடைபெற்றுள்ளது. ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் போன்ற நாடுகளின் இருந்து ரூ. 15,128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குஷியான அறிவிப்பு….! ”இந்தியாவிலே நாம தான் இப்படி” அதிரடி காட்டும் தமிழகம் …!!

இன்று காலை தமிழக அரசு அதிரடியான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா ரேஷன் பொருட்கள் ஆனது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்களை கொடுக்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அலறும் அமெரிக்கா…! ”1 லட்சம் பேர் மரணம்” வேட்டையாடிய கொரோனா ..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,637,367 பாதிக்கப்பட்டு, 349,290 உயிரிழந்துள்ளனர். அதிகமான பாதிப்பை சந்தித்த நாடாக உலகில் அமெரிக்கா உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா தொற்று கதிகலங்க வைத்துள்ளது. அங்கு மட்டும் இன்று புதிதாக 6,774  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,713,000 தொட்டது. அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 216 பேர் மரணம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிப்பது யார் ? நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு …!!

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருக்கிறது. அதே போல கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கிறது. இதனை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதற்கான நபர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க ? செக் வைத்த நீதிமன்றம்… நடுங்கிய மத்திய அரசு …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும் வலக்கை பதிவு செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,728ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களம் இறஙகிய மோடி….! ”இனியும் சும்மா இருக்க முடியாது”பரபரப்பு தகவல்கள் …!!

இந்திய எல்லையோரம் சீனா ராணுவ வீரர்களை குவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்திய எல்லை பகுதியான லடாக் எல்லையோரம் சீனா அதிக ராணுவ வீர்ர்களை குவித்து வருகின்றது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,331 பேர் குணமடைந்துள்ள நிலையில் 83 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் சடலம் …!!

சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த  நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திரையரங்கு திறப்பது எப்போது ? அமைச்சர் பதில் …!!

நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமைச்சர் நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்பது ஆர்கே செல்வமணி க்கு தெரியும். தயாரிப்பாளர்கள், திரையரங்கம், நடிகர் சங்க பிரதிநிதிகள் பேச ஏற்பாடு செய்தால் அரசு உதவும். கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல கனவு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு – அமைச்சர் தகவல்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசு 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 16,277 பேருக்கு தொற்று உறுதியாகி இந்தியாவிலே 2ஆம் இடத்தில தமிழகம் உள்ளது. இந்த நிலையில் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், கொரோனவை பொறுத்தவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் உடல்நிலை – நேரில் சென்று முதல்வர் விசாரிப்பு …!!

தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். இது வழக்கமான பரிசோதனை என்றே மருத்துவமனை தரப்பிலும், துணை முதல்வர் தரப்பிலும் சொள்ளபட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விசாரித்தார். இதில் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி …!!

தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்காட்டுள்ளார். வழக்கமான பரிசோதனையாகவே  மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதே போல அவரை சந்திப்பதற்காக 12 மணியளவில் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக செல்கிறார் என்றும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா ? முக.ஸ்டாலின் கேள்வி

கடைமடை வரை தூர் வாரவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்குதடையின்றி தூர்வார வேண்டும். அணை திறக்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் டெல்டாவில் கால்வாய்களை தூர் வாரி விட்டீர்களா ? மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்துவிட்டு இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்துள்ளது அரசு. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிக்கு சென்று அடையுமா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25க்கு மட்டும் அனுமதி கொடுங்க….! தலைமை செயலாளர் கடிதம் ….!!

நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதனால் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதியுள்ள கடிதத்த்தில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 25 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும். கோயமுத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமானங்களை இயக்கலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விமானத்தில் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அரசாணை வெளியிட்டது …!!

நாளை முதல் உள்நாட்டு விமான பயணம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழக அரசு விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதற்கான வழிகாட்டல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும். விமான நிலையத்தில் காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருக்கக் கூடியவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : சமூக இடைவெளியை பின்பற்றி புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு!

சமூக இடைவெளியை பின்பற்றி புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கட்டணம் வாங்க மாட்டீங்க தான…! அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி …!!

விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டம் அமலாக்கினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க முடியாது, எனவே புதிய மின்திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தடைசெய்ய இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது மின்சார வாரியம் விவசாய மின்சாரத்துக்கு மின்மோட்டார்  பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மதுபான கடைகளை விற்க ஆளுநர் ஒப்புதல் …!!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நான்காவது ஊரடங்கை பிறப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக மாநிலங்களில் மதுபான கடைகளை இயக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மதுபான கலால் வரியை செலுத்தாத […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்கு பதிவு …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்759 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வேண்டான்னு சொல்லுங்க…! ”ரத்து பண்ணுங்க” நீதிமன்றம் ஓடிய திமுக ..!!

தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக  எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே  தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் அப்படி ஆகல…! ”மகிழ்ச்சியில் தமிழகம்” முதல்வர் சொல்லிட்டார் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக ஏற்படவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் கிடையாது.சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தான் தொற்று கண்டறியப்படுகின்றது. கட்டுப்படுத்தப்பட்டபகுதியில் சின்ன சின்ன வீடு, குறுகிய தெர,  நெரிசலான வீடுகள் இருக்கின்றன.  ஒரே வீட்டுல பேரில் 7 பேர் வசிக்கிறார்கள். அதுல தான் அந்த பகுதியில் அதிகமானோர் கண்டறியப்படுகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே பேசணும் …!! ”இதை இப்படியே விடக்கூடாது” ஸ்டாலின் போட்ட உத்தரவு ..!!

நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி சொல்லிட்டாருல்ல….! ”எல்லாம் முடிஞ்சு போச்சு” உற்சாகத்தில் கழகத்தினர் …!!

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை இரத்து செய்ய சொல்லி சென்னை உயர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தப்புமா இந்தியா ? ”ஜெட் வேகத்தில் பாதிப்பு” ஷாக் கொடுத்த கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக உலகையே மிரட்டி வரும் கொடிய பெருந்தொற்றான கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை நாலாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவகின்றது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முக்கிய நகரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி நீங்களும் போகலாம்….! ”உத்தரவு போட்ட முதல்வர்” குஷியான மக்கள் …!!

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை சலூன் கடைகளை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர இதர மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையம் நாளை முதல் இயங்கலாம் என்ற ஒரு அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் டிஸ்சார்ஜ் – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,128ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

37 நாட்களுக்கு பின்….! ”ஈரோட்டில் கொரோனா” சோகத்தில் மக்கள் ….!!

37 நாட்களுக்கு பின்பு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் மட்டும் 70 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் . மற்ற 69  பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 37  தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது. இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: WHO நிர்வாக குழு தலைவரானார் ஹர்ஷ வர்தன் …!

உலக சுகாதார நிறுனத்தின் நிர்வாகக்குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவியேற்றுக் கொண்டார். உலக சுகாதார மையத்தின் இரண்டு மிகப்பெரிய அவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் தற்போது பதவி ஏற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை இரண்டு மிக முக்கிய பிரிவாக உள்ளது.  ஓன்று உலக சுகாதார அமைப்பின் கீழ் சுகாதார […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் சேதத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் பிரதமர் மோடி!

ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கான நேரம்….! ”7am TO 7pm” முதல்வர் உத்தரவால் குஷியோ குஷி …!!

தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர  பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : நாளை முதல் தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையும் செய்து, கொலையும் செய்வார்கள் – முக.ஸ்டாலின் அறிக்கை …!!

தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரமலான் தொழுகை நடத்த அனுமதி – வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் …!!

ரமலான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருப்பதால் மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசலில் 9 காலை 11 மணி வரை இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]

Categories

Tech |