தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Category: சற்றுமுன்
ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]
நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]
மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 […]
சென்னை MGR நகர் சந்தையில் உள்ள வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள பல மாவட்டத்தை சேர்ந்த 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது . இதே போல தற்போது எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் 50 […]
டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் […]
தமிழகத்தில் உள்ள மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில் தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலர்களில் வண்ண அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதனால் தான் தேர்வு தேதி […]
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் நேரம் மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல நிம்மதி அளிக்கும் வகையில் குணமடைந்தவர்கள் வீதமும் அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை […]
ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து […]
நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், […]
நாடுமுழுவதும் போக்குவரத்து சேவையை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலோடு மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சொல்லியது போலவே இந்த முறை ஊரடங்கும், அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு பக்கம் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பின் மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலத்தை நிர்ணயம் செய்வதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. ஊரடங்கில் […]
நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் […]
நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது தகவலாக கிடைத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை […]
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்ததில் 73 பேர் மகாராஷ்ராவில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வரும் அளவிற்கு குணமடைந்து எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இன்றோடு ஊரடங்கு நிறைவடைவதால் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. 10 நாட்களாக தினமும் […]
சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,500யை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது. 10 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 தாண்டி இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 500 க்கும் கீழ் சென்றது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று […]
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11யை தாண்டியுள்ளது. தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 நாட்களாக தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அதன் தாக்கம் 500க்கும் கீழ் சென்ற நிலையில் இன்று ஒரே நாளில் 639 பேர் பாதிப்பு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி […]
சென்னையில் கொரோனா பாதித்து தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 பகுதிகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்த விவரங்களை ட்விட் மூலம் மாநகராட்சி விளக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது […]
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, […]
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை […]
வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே உள்ள பணிகளுக்கு அனுமதி. திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி. 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-Pass இல்லாமல் இயக்க அனுமதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
தமிழகத்தில் பொது ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதில் கொரோனா பாதிப்பு குறைவான 25 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ➤ 25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணி, அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு போக்குவரத்து அனுமதி ➤ இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது ➤ 25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம். ➤ தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 சதவீத […]
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை […]
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை […]
கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக 500க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கும் கீழாக குறைந்தது. மொத்த பாதிப்பு 10,000யை கடந்துள்ள தமிழகத்தில் அதிகமான பரிசோதனை நடத்தியதால் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது என்று அரசு தெரிவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது […]
1 லட்சம் பிசிஆர் பரிசோதனை உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை வேகமாக கண்டறியும் துரித பரிசோதனை கருவிகளை இந்தியா சீனாவிலிருந்து வாங்கியது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அதைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தின. மேலும் சீனாவில் இருந்து வாங்கிய அனைத்து பரிசோதனை கருவிகளும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த […]
மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். ஆகவே இன்றோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடித்து மே 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்திருக்கின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பாக […]
அனைத்து தொழில்துறைகளிலும் தனியாருக்கு அனுமதி, பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர், தொழில் செய்வதை எளிமையாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும் என கூறியுள்ளார். அதன்படி , கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது. கொரோனா காரணமாக […]
ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட உள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில்,கல்வித்துறைக்கான அறிவிப்பில், டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கல்வி கற்பித்தல் உடனடியாக செயல்படுத்தப்படும். பள்ளிகள் திறக்கப்பட […]
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் மதுரை மண்டலமே முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதியை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே காத்துக் கிடந்து மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். அனைத்து மதுக்கடைகளையும் சமூக இடைவெளி கடைபிடிக்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 […]
வங்கக்கடலில் ‘உம்பன் புயல்” உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தற்போது புயலாக மாறி இருக்கிறது. இதற்க்கு ”உம்பன்” என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதற்குப் பிறகு வடகிழக்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் யாருக்கும் இல்லாத வகையில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மக்களுக்கு எதிர்பார்க்காத மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தான் சொல்ல வேண்டும். தமிழக்தில் இன்று ஒரே நாளில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது. இன்று […]
தமிழக்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து, 6,278ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது
CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் […]
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற […]
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]
கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதல் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறுகின்றது. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அந்தந்த ஊரில் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக ஆரம்பித்து உதவி செய்து வருவது குறித்து பேசப்பட்டது. இதன் மூலமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சம் பேர் பலன் அடைந்திருப்பதாக ஸ்டாலின் […]
முடிதிருத்துவோர் அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை ஆயிரம், ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முடிதிருத்தும் நல வாரிய உறுப்பினராக உள்ள 14, 660 நபர்களுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்க கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு […]
CBCSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. பத்தாம் வகுப்பு […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்றைய தினம் வரை 10,108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 436 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது […]
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என மாவட்டத்தின் அருகே இருக்கக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் இதுவரைக்கும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 63 பேர் […]
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கண்டந்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கோரவனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 6947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை இன்று 6 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகின்றார். கொரோனா பாதிப்பால் 20லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை 3 கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் தவிர மிகவும் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய சந்தை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும், சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் நிதி அமைச்சர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் […]