Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு – மதுரையில் சோகம் …!!

தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5409பேருக்கு கொரோனா…! ”ஆண்- 3,730, பெண்- 1677” தமிழகத்தில் எகிறும் பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5000யை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து  கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 771 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 316 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 5,000யை தாண்டிய தமிழகம்….! 2,000ஐ தாண்டிய சென்னை …!!

தமிழகத்தில் தொடர்ந்து  கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளார் என்று தமிழக […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: நெல்லையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு….!

திருநெல்வேலியில் கொரோனா பாதிப்புக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. குறிப்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் சிக்கினர் …!!

NLCயில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 தொழிலாளர்கள் சிக்கி காயம் அடைந்துள்ளனர். கொரோனா  அச்சத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதில் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பதால் பல நாட்களுக்கு பின்பு நெய்வேலி அனல் மின் நிலையமும் பணியை தொடங்கியது. ஊரடங்கால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் மின் தேவையும், உற்பத்தியும் பல மடங்கு குறைந்திருந்தது. இந்தநிலையில் இன்று முழு உற்பத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க குடும்பம் தானே…! ”நியாயமா பேசுங்க” விளாசிய செல்லூர் ராஜீ ..!!

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்…! ”இன்றைய விற்பனை ஓவர்” மதுக்கடைகள் மூடப்பட்டது …!!

தமிழகத்தில் இன்று தொடங்கிய மதுக்கடைகளின் நேரம் முடிந்ததால் அடைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன்? இப்படி பண்ணுறீங்க….! ”மது நமக்குத் தேவைதானா” விஜயகாந்த் கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விஷவாயு விபத்து : ”ரூ. 1 கோடி நிவாரணம்” ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.   இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மதுவா ? பிரேமலதா கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யப்பாடா….! ”கொரோனா இல்லை” நிம்மதியான எடப்பாடி …!!

தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள தூக்கிட்டீங்களா ? ”115 பெட்டி மதுபானம் மாயம்” அதிகாரிகள் விசாரணை …!!

மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க வர கூடாது ….! ”ஒழுங்கா போயிருங்க” மது வாங்க வந்த கேரளத்தினர் …!!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் வாங்க வந்த கேரளத்தினரை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். கொரோனா தொற்று தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக கூட்டணி காட்சிகள் போராட்டமும் நடத்தினர். இன்று காலை 10 மணி முதல் மதுக்கடைகள் தொடங்கி வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகின்றது. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களின் ஆதார் கார்டு காட்டி மது வாங்கிச் செல்கின்றார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விலைய ஏத்திட்டீங்களா? ”பரவாயில்லை கொடுங்க” ஆவலோடு குவியும் குடிமகன்கள்…!!

தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#குடிகெடுக்கும்_எடப்பாடி : மனைவி, மகனோடு போராடிய ஸ்டாலின் ….!!

மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்தது இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே வந்து கருப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கருப்பு சட்டை, கருப்பு மாஸ்க்…! குடும்பத்துடன் போராடிய ஸ்டாலின் …!!

மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது, மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டனர். மேலும் மதுக்கடையை திறந்ததை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே 15 நிமிடங்கள் கருப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது …..!!

தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக + பாஜக….! ”ரெண்டுமே வேண்டாம்” முழக்கமிடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அதிமுக அரசின் முடிவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போரட்டம் நடத்துகின்றன தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா …!!

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிப்பா செய்வோம்…! ”மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டம்” – திருமா

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து நாளை கருப்பு சின்னம் ஏற்றுவோம் என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி ஒரு படி மேலே சென்று போராட்டம்  அறிவித்தது. நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் என்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு  தமிழகம் கேட்ட நிதியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா நடத்துங்க….! ”தப்பு செஞ்சீங்க அவளோ தான் ” அரசுக்கு எச்சரிக்கை …!!

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 771 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 4,829ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளதால் 2328ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது. இன்று மட்டும் 31-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  இதுவரை 1,516-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 31.4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்குகின்றது ….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3275 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் அனுப்பாதீங்க….! ”எல்லாமே நமக்கு தான்” சூப்பர் முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேபாளம், பங்களாதேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் சானிடைசர் போன்ற விஷயங்கள் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு சானிடைசர் (கிருமிநாசினி)யை ஏற்றுமதி செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது. ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிரிமிநாசினியின் தேவை இந்தியாவில் அதிகளவு தேவை இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வில் பல பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுக்கடையை திறந்துக்கோங்க…! ஆனால் இதையெல்லாம் செய்யுங்க …!!

தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆதார் கட்டாயம்….! ”மூன்று நாளைக்கு ஒரு பாட்டில்” நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கும்,  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிபி உத்தர விட்டது போல முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மதுபானக் கடைகளின் பார்களை […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு வாங்கி குடிக்க முடியாது – புதுக்கோட்டையில் செக் …!!

நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தள்ளுபடி செஞ்சுட்டாங்க….! ”இனி கவலையில்லை” உற்சாகமான ஆளும் தரப்பு …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் கேள்வி: […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதான் முடிவு…! ”ஃபுல் வாங்கு” இல்ல ”ஹாஃப் வாங்கு” புதுக்கோட்டையில் உத்தரவு …!!

நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன நடக்க போகுதோ ? ”எப்படி இருக்குனு தெரிலையே” காத்திருக்கும் எடப்பாடி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டோக்கன் தாறோம்….! ”ஒரு புல் மட்டும் வாங்கிக்கோங்க” சேலத்தில் அதிரடி முடிவு ..!!

சேலத்தின் ஓமலூரில் டஸ்மார்க் கடையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சத்தியம் பண்ணுனீங்க….! ”யாருடைய தேவை இது” அதிமுக மீது பாய்ந்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி குடிநீர் கிடையாது….!!

சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பார்த்தோமானால்  நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து இருக்க கூடிய நிலையில் சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்பல்வேறு விஷயங்களை சொல்லப்பட்டுள்ளது. அதில் லாரிகளில் குடிநீர் வழங்கும் போது பொதுமக்கள் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இதனால் கூடுதலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுமா? இல்லையா? ….. இன்று 5 மணிக்கு முக்கிய தீர்ப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 43 பேருக்கு கொரோனா…..! கோயம்பேடு மூலம் கலையிழந்த காஞ்சி …!!

இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதில் 41 நபர்கள் கோயம்பேடு மாவட்டத்தில் பணி புரிந்து வந்தவர்கள். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 நபர்களும், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 12 நபர்களும் அடங்குவார்கள். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! ”இன்னும் கொஞ்ச நேரம் தான்” என்ன பண்ணலாம் ? திணறும் எடப்பாடி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சரக்கு வாங்கணுமா ? ”இப்படி தான் வரணும்” எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க …!!

மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிக்கு டிஜிபி ஜேகே திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டம் காணும் அரியலூர்….! மொத்தமாக அடிச்சு தூக்கிய கொரோனா …!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.  கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேற ஐடியா இருக்கா ? ”உடனே சொல்லுங்க” அரசுக்கு செக் வைத்த நீதிமன்றம் ….!!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 போலீஸ்ஸை நிக்க சொல்லுங்க….! டாஸ்மாக் கடைய பாத்துக்கோங்க….!

மதுக்கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது பலரின் கண்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 3,47,76,00,000….! ”அள்ளிக்கொடுத்த வள்ளல்கள்” அரசுக்கு அடித்த அதிஷ்டம் …!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உங்களால் இயன்ற நிவாரண உதவியை செய்யவேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனால் அனைவரும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 347. 76 கோடி நன்கொடை வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா …!!

சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எங்களை அழைச்சுட்டு போங்க….! 100 நாடுகள்…. 50,000 தமிழர்கள் விண்ணப்பம் …!!

வெளிநாடுகளில் உள்ள 50,000 தமிழர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தமிழகம் வருவதற்கு விண்ணப்பிப்பிக்கும் வகையில், ஒரு இணைய பக்கத்தை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த இணைய பக்கத்தில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து விமானம் மூலமாக 200 பேர் தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 பேர் நில்லுங்க…! ”15 நிமிடம் இருங்க” திமுக கூட்டணி பரபரப்பு அறிக்கை …!!

மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது மக்கள் கருப்பு சின்னம் அணியவேண்டும் என திமுக கூட்டணி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் மதுபானக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிதது. அரசின் இந்த உத்தரவு தமிழக மக்களை கடும் அதிர்ச்சியடைவாய்த்தது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டணி தலைவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எகிறிய காய்கறி விலை…! ”என்ன செய்யுறதுனு தெரியல” புலம்பும் தலைநகர் வாசிகள் …!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுதன் காரணமாகவும், ஆந்திரா – கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவேண்டிய லாரிகள் சென்னைக்கு வராததன் காரணமாகவும் சென்னையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல நாட்டு […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதல் பலி…! தி.மலையில் 55 வயது பெண் உயிரிழப்பு …..!!

கொரோனால் ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதுவரை கொரோனாவால் 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது 34ஆவது உயிரிழப்பு நிகழ்ந்திருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா  பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து -தமிழக அரசு உத்தரவு!

வீட்டு வேலையை பணியாளர்கள் பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதியை மே 17ஆம் தேதி வரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதால் மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு  முடியும் வரை வீட்டு வேலை பணியாளர்கள் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்; தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து  உத்தரவு  பிறப்பித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் மே 18-க்குள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு; குடிமகன்கள் ஷாக்!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிஷன் போட்டு…. ”உத்தரவு போட்ட அரசு” காண்டான இல்லத்தரசிகள் …!!

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

Categories

Tech |