ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வருகிற 8- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால் மதியம் 12.30 மணி […]
Category: வழிபாட்டு முறை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவள்ர்மங்கலம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சந்தியாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாசினி, பைரவர் பலி தானங்கள், வடுகபூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபா ஆராதனை நடைபெற்றுள்ளது. இதே போல் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகரில் புகழ்பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சுவாமியை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் இருக்கும் விநாயகர், மருத மரத்து விநாயகர், புஷ்பவனம் புஷ்ப […]
மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்து கொள்வது ஒருவகையில் சிறப்புத்தான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால் தீர்க்காயுள், செல்வம், புகழ், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் […]
எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் […]
எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் […]
சுப காரியங்கள் செய்யும் போது ராகுகாலத்தில் செய்யக்கூடாது என பலரும் கருதுவது உண்டு ஆனால் அது விஷேச பூஜைகளுக்கு மட்டுமே பொருந்தும். ராகு காலத்தில் மற்ற கிரகங்களின் பலம் குறைந்து இருக்கும். இதனால் தான் எந்த சுப நிகழ்ச்சிகளையும் ராகுகாலத்தில் செய்யாமல் தவிர்க்கின்றனர். ஆனால் தேவி பாகவதம் துர்கா தேவியை ராகு காலத்தில் பூஜிப்பது அதிக பலனை கொடுக்கும் என கூறுகிறது. நமக்கு வேண்டிய நல்லவற்றை அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்று யாரும் கிடையாது. நமது ராசியில் ராகுவின் […]
பல்வேறு பரிகாரங்களை செய்வதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபட்டு சனீஸ்வர பகவானின் அருளை பெறலாம். சனிக்கிழமை நாளன்று சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேறலாம். ஜோதிடத்தில் சனீஸ்வர பகவான் நியாயவதி என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். அதனாலேயே சனீஸ்வர பகவான் தராசு சின்னம் உடைய துலாம் ராசியில் உச்சமாக இருக்கிறார். மேலும் சனீஸ்வர பகவானின் சன்னதியில் நின்று வழிபடும் போது நேரில் நின்று வழிபடாமல், ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபாடு செய்ய […]
வீட்டில் செல்வ வளம் பெருக கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 3 முறை கூற வேண்டும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் நடத்தப்படும் போராட்டம் தான் வாழ்க்கை. ஒருவரது வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. அதுவே ஒருவரது வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்து வந்தால் அவருக்கு அந்த வாழ்க்கையே வெறுத்து விடும். இரண்டும் சரியான அளவில் அமைந்தால் மட்டுமே ஒருவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்காக இந்து மதத்தில் எண்ணற்ற அளவு மந்திரங்களும் பாடல்களும் இருக்கிறது. இந்த […]
ராமருடன் போர் புரிய முடிவெடுத்த ராவணன் மயில் ராவணன் என்று ஒரு அசுரனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் ராமரை அளிப்பதற்காக யாகம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்தான். அந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் ராம-லட்சுமணன் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருக்கும் என விபீஷணன் கூறியதால் மயில் ராவணனை அழிப்பதற்கு ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார். இதனை அடுத்து ஆஞ்சநேயர் வராகர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியுடனும் சக்தியுடனும் மயில் ராவணனை வதம் […]
கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். கார்த்திகை மாதம்: தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை நாள்: […]
கார்த்திகை தீபத்தின் இந்த தவறுகளை பண்ணாமல் இருப்பது பெரும் புண்ணியத்தை தேடித்தரும். கார்த்திகை தீபத்தன்று நாம் மறந்தும் செய்யக்கூடாத ஒரு சில செயல்கள் பற்றி தான் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கார்த்திகை நாளில் நாம் வீடு முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைப்பதனால் இருள் அகன்று ஒளி பிறக்கும். அதேபோல் நாம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒளி மயமான , சந்தோசமான , நிறைவான வாழ்வை நாம் பெறுவோம். அதற்காகத்தான் இந்த கார்த்திகை […]
திருக்கார்த்திகை தீபம் அன்று பூஜை அறையில் ஏற்ற வேண்டிய முக்கியமான மூன்று விளக்குகள் அது என்ன என்பதை பார்க்கலாம். திருக்கார்த்திகை தீபம் என்றால் நம் வீடுகளில் நிறைய விளக்குகளை ஏற்றி வைப்போம். பின்வாசல் போன்ற நிறைய இடங்களில் விளக்குகளை ஏற்றி வைத்து வழக்கமான ஒன்று. அப்போது பூஜை அறையில் முக்கியமான மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அது என்ன என்றால் ? திருக்கார்த்திகை தீபம் அன்று வீட்டின் நிலை வாசல், கதவு எல்லாவற்றையும் நல்லா சுத்தம் பண்ணி […]
கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்,.. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். கார்த்திகை தீபத்தை நாம் மூன்று நாட்கள் கொண்டாடுவோம். ஒன்று பரணி , இன்னொரு திருக்கார்த்திகை மற்றொன்று ஊர் கார்த்திகை என்று சொல்வார்கள். நாம் திருக்கார்த்திகை கொண்டாடுவதற்கு முன்னாடி நாள் அனைத்து வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவோம். பரணி அன்னைக்கு நாம வீட்டில் விளக்கு ஏற்றுவது ரொம்ப நல்லது. அதிகமான விளக்கு ஏற்ற முடியவில்லை […]
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக நடைதிறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் நாள் தோறும் இலவச தரிசன டோக்கன் பெற 3000 தரிசனத்துக்கு அனுமதி […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை […]
கோயில்களில் இறைவனை பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு கோவிலில் பெண்கள் இறைவனை வணங்கும் போது அவர்களின் தலைமுடி தரையில் படக்கூடாது. அவ்வாறு பட்டால் பெரியவர்களின் ஆசியும் தெய்வத்தின் அருளும் கிடைக்காதபடி தேவதைகள் தடுத்து விடுவார்கள் என்று கூறப்படும். பூமித்தாயை பெண்கள் விழுந்து வணங்கும்போது தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டு வணங்க வேண்டும். இது வெகு நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் தலை, முழங்கால் இரண்டு, […]
தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை வணங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவ்வகையில் எந்த திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்விலிருந்து துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷம் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு வாங்கும் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது. செப்டம்பர் […]
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பது கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். அதனால் ஜென்மாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். அதன் பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை சின்ன கண்ணன் நடந்து வருவது போல அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்கவேண்டும். கண்ணன் குழந்தைப் பருவத்தில் வெண்ணை திருடி உண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு. அதை […]
கிருஷ்ண ஜெயந்தி முதலில் பூஜைக்குரிய பொருட்களை பார்ப்போம். பூஜைக்குரிய இலை துளசி இலை, பூஜைக்குரிய மலர் மல்லிகை, நிவேதனப் பொருட்கள் பால், வெண்ணை, தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன. படிக்க வேண்டிய நூல் பகவத் கீதை, கிருஷ்ண அஷ்டோத்ரம் ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஸ்டோத்திர நாமாவளி, ஸ்ரீ மத் பாகவதம், மகாபாரதம் கதைகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில் கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணையை தடவி விடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருட்களாக […]
இந்த உலகத்தைக் காத்து ராட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமரின் அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமும் தான் ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து மக்களை காத்து அருளினார். அதோடு மகாபாரதப்போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே எல்லோரது மனதிலும் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடி எல்லோர் வாழ்விலும் சிறப்பை பெறலாம். கிருஷ்ணஜெயந்தி […]
கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]
மகாலட்சுமி உடைய இன்னொரு உருவமான வலம்புரி சங்கு தரிசித்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும், தேவர்களும், அசுரர்களும், பாற் கடலைக் கடைந்தபோது 16 வகையான தெய்வீக பொருளாம் வெளிய வந்தது. அதுல வலம்புரி சங்கு முக்கியமானது. திருமகள் வலம்புரி சங்கை எடுத்து வர மஹா விஷ்ணு இடக்கையில் சங்கையும், வலக்கையில் தேவியையும், ஏந்திட்டு வராரு. வலம்புரி சங்கைய் வழிப்பட்டால் லக்ஷ்மி, மகாவிஷ்ணு, இவர்களை சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். வலம்புரி சங்கு வீட்டில் வைத்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், நம்மை […]
வியாழக்கிழமை தோறும் இந்த விரதத்தை பண்ணுவதால் சாய் வின் பரிபூரண அருள் கிட்டும் … விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம் விரதத்தை ஆரம்பிக்கும் முன்னர் சாய்வின் நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதம் ஆண் பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். மாலை அல்லது காலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு […]
பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம் மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும் பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]
சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் […]
நரசிம்மர் ஜெயந்தியற்று நரசிம்மரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்…! நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை நாம் ஜெபிக்க வேண்டும். நரசிம்மரை வழிபடுவதன் பயனாக உங்கள் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையவீர்கள். இந்நாளில் நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மரண பயம் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
நரசிம்ம ஜெயந்தி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்…!! இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களை காப்பது இறைவனின் கடைமையாகும். அப்படி தன்னை நம்பும் பக்தனை காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் வரலாறு நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதார நாளை நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையாகும். அன்று […]
வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை விரட்டி நேர் மறை சக்திகளை கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான தாந்த்ரீக பரிகாரம்… தேவையான பொருட்கள்: 1.சிறிய தட்டு 2.சிறிதளவு கல் உப்பு 3.கனிந்த எலுமிச்சைப்பழம் ஓன்று 4.கத்தி 5.பிளாஸ்டிக் பை எவ்வாறு இவைகளை கொண்டு செய்வது.? எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு நான்கு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முழுவதுமாக வெட்டக் கூடாது, அடிப்பகுதியில் நான்கு முனைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவாறு இருக்க வேண்டும். உப்பை தட்டில் பரப்பி வைக்க வேண்டும். […]
அட்சய திருதியை இன்று செய்யும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்று அன்னதானம் செய்யுங்கள் ஆயுள் பெருகும். அட்சய திருதியை இன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் மனைப் பலகை போட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை […]
வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர். சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள் வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும். பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் […]
ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி […]
ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால் ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..! விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். தானம் செய்யும் முறை: ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் […]
ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை. ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். […]
வீட்டில் எளிய முறையில், வாழ்வில் வளம் சேர்க்கும் ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்..! திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராம அவதாரம் ஆகும். மனிதனின் நீதி முறைகள் இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக மண்ணில் அவதரித்தார். ஸ்ரீராமர் அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு […]
ஸ்ரீ ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்ரீ ராம மந்திரங்கள் பற்றி பார்க்கலாம். ஸ்ரீ ராமா என்ற சொல்லாலே நம்முடைய வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். நாம் ராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும் ராம் என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே, ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும் என்பது ஒரு குறிப்பிடதக்கது. இவ்வாறு மனிதர்களிடம் இருக்கும் மனித நேயத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். பொருளாதார நலன் கருதி எடுத்த எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வது சுப விரயங்கள் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் கொஞ்சம் கருத்து கொஞ்சம் ஏற்படலாம். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அவ்வளவு திருப்திகரமாகவே இருக்கும். என்று கூற முடியாது .கொஞ்சம் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. வாழ்க்கை துணையின் ஆதரவு […]
வீட்டில் தெய்வ கடாட்சம் சூழ சில குறிப்புகள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்துவதற்கு நீர் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் ஜென்ம ஜென்மமாக இருந்த தரித்திரம் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும். ஒற்றை ருத்ராட்சத்தை கழுத்துக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்க கூடாது. எப்பொழுதும் கழுத்தில் தான் இருக்க வேண்டும். அம்மாவாசை அன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜைகள் எதுவும் செய்யாமல் […]
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் […]
இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]
பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]
செம்மையான மனதினைப் பெறுவதற்காகத் தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது. இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் […]
மகாசிவராத்திரி இந்தியாவின் புனித திருவிழா இரவுகளில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும். இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது. இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும் செங்குத்து நிலையில் விழித்திருப்பது மற்றும் விழிப்புடன் இருப்பது ஒருவரின் உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு பெரிதும் நன்மை பயக்கும். […]
கோவிலில் கடவுளை வணங்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. அறிந்து கொண்டு கடவுளின் முழு அருளையும் பெறுங்கள்.. மன அமைதிக்காக பெரும்பாலானோர் அவரவர் மதத்திற்கு ஏற்ற கோயில்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது இந்து கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னவென்று தெரியுமா..? கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை தூய்மையாக இருக்கவேண்டும். நெற்றியில் ஆண்கள் திருநீறும், சந்தனமும், பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது. கோயில் வாயிலில் நுழையும் முன் தண்ணீரால் கை, கால்களை கழுவிக்கொண்டு செல்ல […]