Categories
ஆன்மிகம் விழாக்கள்

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை…. ஏன் தெரியுமா…. வெளியான தகவல்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நூர்சாகிபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் விரதம் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் காட்டழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து 28 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தனர். இதனை அடுத்து தீர்த்த நீரை […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள் விழாக்கள்

“1008 திருவிளக்கு பூஜை” மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா…. திரளான பெண்கள் தரிசனம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

கொரோனா பரவிட்டே இருக்கு…. ”அந்த நாளில் மட்டும் வாங்க”…. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு …!!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா  பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழா வருகிற 26-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்திளே  திருவிழா நடைபெறும் என்றும், திருவிழாவில் பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது…!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள் விழாக்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு….. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி…!!!

கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு  திருவிழாவை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14ம் தேதி திறக்கப்பட்டு, கடந்த 28ஆம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 14ஆம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள் விழாக்கள்

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள் விழாக்கள்

பொங்கலை சோலிமுடித்த மழை… நெல்லை மக்கள் வேதனை …!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை காலம் முடித்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால்  பொங்கல் திருநாள் வழக்கமான  கொண்டாட்டங்களில் இன்றி  களை இழந்து காணப்பட்டது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர்.

Categories
செய்திகள் மாநில செய்திகள் விழாக்கள்

கொரோனா பரவல் இருந்தா என்ன ? பொங்கலோ பொங்கல் தான்… தமிழகம் முழுவதும் உற்சாகம் ..!!

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது தை  முதல்  நாள் ஆன  இன்று பொங்கல் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. குடும்பமும் உறவுமாக சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை இதனை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை புது பானையில் பச்சை அரிசியும், வெல்லமும் ஈட்டு மஞ்சள் குலை கட்டி சூரியபகவானுக்கு அதை  படைத்து பொங்கல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]

Categories
ஆன்மிகம் இந்து சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல் விழாக்கள்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் – கார்த்திகை பொரி செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் : நெல் பொரி – 2 கப் பொட்டு கடலை – 1 டேபுல் ஸ்பூன் வெல்லம் -1/2 கப் தேங்காய் -2 டேபுல் ஸ்பூன் ஏலக்காய் -2 சுக்கு – 1 செய்முறை : ஒரு கடாயில் நெய் சிறிதளவு சேர்த்து நறுக்கிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து அதை வடிகட்டவும்.பின்னர் வெல்ல பாகினை மீண்டும் நன்கு […]

Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகை தீபம் அன்று வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றி வைங்க …!!

கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபங்கள்  ஏற்ற வேண்டும்,.. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். கார்த்திகை தீபத்தை நாம் மூன்று நாட்கள் கொண்டாடுவோம். ஒன்று பரணி , இன்னொரு திருக்கார்த்திகை மற்றொன்று ஊர் கார்த்திகை என்று சொல்வார்கள். நாம் திருக்கார்த்திகை கொண்டாடுவதற்கு முன்னாடி நாள் அனைத்து வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவோம். பரணி அன்னைக்கு நாம வீட்டில் விளக்கு ஏற்றுவது ரொம்ப நல்லது. அதிகமான விளக்கு ஏற்ற முடியவில்லை […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

கார்த்திகை திருநாளன்று… வீட்டில் இப்படி விளக்கேற்றுங்க… நடக்குறத பாருங்க…!!!

கார்த்திகை திருநாளன்று, வீட்டில் விளக்கேற்றும் முறைகளும், அவற்றின் பலன்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தமிழ் மாதமான எட்டாவது மாதம் தான் கார்த்திகை. அம்மாதத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைத்துள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவன், அக்னியில் உதித்த ஆறுமுகன், காக்கும் கடவுளான விஷ்ணு, என அனைத்துக்கும் ஏற்றதாக கார்த்திகை திகழ்கிறது. ஆதலால் கார்த்திகை மாதம், பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது தான். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 14-ஆம் தேதி திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என   அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக நடைதிறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை […]

Categories
இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் விழாக்கள்

நாகை கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு …!!

ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சரஸ்வதி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். வீடுகளிலும் பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சிக்கல் என்ற இடத்தில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் வழிபாட்டு முறை விழாக்கள்

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் நாள் தோறும் இலவச தரிசன டோக்கன் பெற 3000 தரிசனத்துக்கு அனுமதி […]

Categories
ஆன்மிகம் திருவண்ணாமலை வழிபாட்டு முறை விழாக்கள்

அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை […]

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி கோலாகலம்…!!

நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளிப்பார். அதன்படி ஐந்தாம் நாளான நேற்று அலங்கார மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனாக காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் […]

Categories
தேசிய செய்திகள் விழாக்கள்

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது…!!

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை  கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த  சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும்  பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று சுந்தரகாண்டம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை  ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை  தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை  படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று நீர் மோர், பானகம், விசிறி கொடுப்பதன் காரணம்..?

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு. ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர் உடன் சென்ற பொழுதும்  14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும் சித்திரை மாதம் கோடை காலத்தில்தான். ராமர் பிறந்த பொழுது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு தசரதன் நீர்மோரும் விசிறியும் கொடுத்துள்ளார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உருவானது.  

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“ராம நவமி” விரதம்… வழிபாடு முறை…!!

ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி எளிய பூஜை முறை…!!

ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை. ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி வழிபாடு அவசியம் தானா?

ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த  திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது. ராம நவமி வழிபாடு அவசியம்தானா? ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால் கடன் பிரச்சனை தீரும். […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

சிவராத்திரியின் உண்மை வரலாறு….!!

மகா சிவராத்திரி – வரலாறு! பிரம்மனும் அவரால்  படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி  பரமேஸ்வரனை  நினைத்து  பூஜை  செய்தாள். நான்க ஜாமங்களிலும்  இரவு  முழுவதும்   அர்ச்சனை செய்தாள்.  பூஜையின் முடிவில் அம்பிகை பரமேஸ்வரனை வணங்கி அடியேன்  தங்களைப்  பூஜித்த  இந்த  இரவை தேவர்களும் மனிதர்களும்  தங்கள்  திருநாமத்தாலேயே அதாவது சிவராத்திரி என்று கொண்டாடிட வேண்டும் என்று வேண்டினாள். அந்த சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில்  மோட்சத்தையும் அருள வேண்டும் என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். பரமேஸ்வரரும் அப்படியே  ஆகட்டும்! […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு……. வரம் அளிக்கும் சிவராத்திரி….. உங்கள் ராசி உள்ளதா…?

மகா சிவராத்திரி அன்று ருத்திரனான சிவபெருமானை அக்னி ராசியான மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும் எந்த முறையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பு. அம்பிகையின் அருளைப் பெற நவராத்திரி இருப்பதைப் போல சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற இந்த மகா சிவராத்திரி இருக்கின்றது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்தது இந்த மகா சிவராத்திரி விரதம். சிவராத்திரி அன்று விரதம் இருந்து நான்கு சாமங்கள் சிவபெருமானை வழிபட்டால்  தெரிந்தோ தெரியாமலோ செய்த […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை விழாக்கள்

மகா சிவராத்திரியன்று கடைபிடிக்க வேண்டிய விரதமுறைகள் மற்றும் பலன்கள்!

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சிவனுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி….தோன்றிய வரலாறு!

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

மகாசிவராத்ரியின் மகத்துவம்…

நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள் மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல சிவராத்திரி வந்தாலும், மகா சிவராத்திரி விரதம்  எல்லா சிவராத்திரி களையும் விட சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். ராத்திரி என்ற சொல்லிற்கு அனைத்து செயலற்ற உடல் என்று பொருள். அதாவது உயிர்கள் செயலின்றி ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி காலத்தில் சிவனின் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

மகா சிவராத்திரி விரதத்தின் மஹிமை

மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவமும் அதோடு தெரிந்தே செய்த பாவமும் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதீகம். இரவில் சிவனை வணங்குவதற்கான காரணம் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து விடாமல் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். அந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தை அதாவது அந்த […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

கன்னியாகுமரி சிவாலய ஓட்டம் – வரலாறு

சிவாலய ஓட்டம் சிவாலய ஓட்டம் மிகவும் புகழ்பெற்றதாகும். சிவாலய ஓட்டம் என்பது மகா சிவராத்திரி அன்று 12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்று தரிசிப்பது தான் இந்த வழிபாட்டின் தனிச்சிறப்பாகும். குமரிமாவட்டத்தில் நிகழும் இந்நிகழ்வில் சிவபக்தர்கள் கோபாலா கோவிந்தா எனும் முழக்கத்துடன் கையில் விசிறியுடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. சுமார் 110 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள 12 […]

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

மகா சிவராத்திரி சிறப்பு விழா… ருத்ராட்சமும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதம்

சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறந்த அளவில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஈஷாவின் 26 ஆம் ஆண்டு சிவராத்திரி வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 22ம் தேதி காலை 6 மணி வரை விழா ஆதியோகி […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை விழாக்கள்

தைப்பூசத்தின் உண்மை காரணம்…. முருகனுக்கு அல்ல..

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

தமிழ்நாட்டின் கோவிலில்…… வருடம் பல கழிந்து…. தமிழுக்கு இடம் அளித்துள்ளனர்

தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்…..  தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]

Categories
விழாக்கள்

காப்பு கட்டுவதில் இவ்வளவு நன்மையா… இனியாவது கட்டலாமே…!!

போகி பண்டிகையில் காப்பு கட்டுவதின் அவசியம்….. போகி பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். உண்மையில் இப்பண்டிகை கொண்டாடுவதின் முக்கிய நோக்கம், பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாக பிரித்தான். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென்கிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது, அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது, இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் […]

Categories
விழாக்கள்

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. போகியன்று நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் விழாக்கள்

மாட்டுப் பொங்கல் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டுமா..? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி- அமைச்சர் செங்கோட்டையன்

பொங்கல் பண்டிகையின்  மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியியை  தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் […]

Categories
ஆன்மிகம் இந்து திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து திருவள்ளூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

தவறவிடாதீங்க….. தயவு செய்து நாளைய (12.11.2019) தினத்தை விட்டுறாதீங்க….!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் நாளைய தினத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இதை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் நாளைய தினம் , அதாவது […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்….!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் வரும் நவம்பர் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

அஷீரா நோன்பு 9_ஆம் நாள் நோன்பு எதற்காக தெரியுமா ?

அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ? இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

ரமலானுக்கு பின் மிகச்சிறந்த நோன்பு மொஹரம் நோன்பு….!!

அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம்  கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

மொஹரம் இருவகையாக கொண்டாடும் முஸ்லிம்கள் …..!!

மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள்,  முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள். மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் […]

Categories

Tech |