Categories
ஆன்மிகம் கோவில்கள்

மரங்களால் மூடப்பட்ட விஷ்ணு சன்னதி…. 12- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்…. எங்க இருக்கு தெரியுமா…??

அங்கோர்வாட் கோவில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 162 ஹெக்டர் ஆகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சில மன்னர்களின் ஆட்சி காலத்தால் பதினாறாம் நூற்றாண்டில் முழுமையாக கைவிடப்பட்டது. இதனை அடுத்து 20- ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த கோவிலில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட சன்னதி சுமார் 400 ஆண்டு காலம் பராமரிக்காமல் இருந்ததால் மரங்களால் மூடப்பட்ட […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை” பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்…. சுயம்பு விநாயகர் கோவிலின் சிறப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி, சத்திய கணபதி என மக்கள் அழைக்கின்றனர். பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பாறைகளில் சில வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து சிலையாக மாற்றும்படி அவர் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

18 வகையான பொருட்களால் அபிஷேகம்…. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை… ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காளியம்மன் கோவில், லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், கீழ ராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், முத்துசாமிபுரம் காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்….. வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 25-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை கந்தசஷ்டி விழாவில் சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெற உள்ளது. இதனை அடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“உலகளந்த பெருமாள் கோவில்” திருமூல மகோற்சவத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு….. பிரபல கோவிலில் சிறப்பு வழிபாடு….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை” காரையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா சிறப்பாக தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்திருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா” பிரபல கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு….. குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் மதுரை மாவட்ட செய்திகள்

வரம் தரும் “ஆதி ஜோதி முருகர் கோவில்” புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்” மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்….. புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை…..!!!

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பௌர்ணமி சிறப்பு வழிபாடு…. சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட…. சதுரகிரியில் குவியும் பக்தர்கள்….!!!!

சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி பகுதியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை பாதுகாப்பு  கேட் முன்பு குவிந்துள்ளனர். இந்த கேட் இன்று அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் பக்தர்களுடைய உடமைகளை பரிசோதனை செய்த பின்னர் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுந்தர […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

செப்டம்பர் 16-ல் சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சி பூஜைக்கு பிறகு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். நாள் தோறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும். கொரோனா […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஆன்லைன் முன்பதிவுக்கு இனி கட்டணம்…. சபரிமலை பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ய வருவதில்லை. அதனால் மற்ற பக்தர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாக அனுமதிப்பதே இதற்கு காரணம் என […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று  மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஆகஸ்ட் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

வரும் 15-ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் சில முக்கிய பூஜைகளின் போது மட்டும் நடை திறக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருத்தணி தெப்பத்திருவிழா நேரடி ஒளிபரப்பு…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா இன்று முதல்  ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பாக கூறுகையில் “ ஞானபண்டிதன் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படைத் திருத்தலமான , திருத்தணிகை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், வருடாந்திர உற்சவமான. ‘ஆடிக்கிருத்திகை ‘தெப்பத்திருவிழாவை’ ஆன்லைன் மூலம் ஆன்மிக அன்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறோம். பக்தர்கள் https://youtu.be/zCWfy8sfXmk எனும் YouTube அலைவரிசை மூலம் ஆகஸ்ட் 12, 13, […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

வம்சம் தழைக்க பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு…. இறைவன் அருள் அப்படியே கிடைக்கும்……!!!

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

தீராத நோய்கள் தீரும், பாவங்கள் விலகும்…. திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம்….!!!!

1) சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை 2) திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம் 3) உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் . 4) 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை. 5) பூதநாரயணரையும் இரட்டை பிள்ளையாரையும் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

மக்களே ரெடியா?…..ஜூலை 20 காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் கோட்டா ஜூலை 20-ஆம் தேதி வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300தரிசன டிக்கெட்டை 20ஆம் தேதி காலை 9 […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜூலை 17 முதல் சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்….!!!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருமலை பசுமை மண்டலமாக அறிவிப்பு…. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…..!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் கூறியது, திருமலையின் சுற்றுச் சூழலை பாதுகாத்து மாசை குறைக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. தற்போது ஓராண்டு காலம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெற…. புதிய பதிவு மையங்கள் திறப்பு….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில்திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து திருப்பதி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து…. குடும்பம் தழைத்து நிற்க…. இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க….!!!!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார்.ஒரு காலத்தில் மன்னன் ஒருவனின் தலைகுள் தேரை தவளை குஞ்சி ஒன்று இருந்து பாடாய் படுத்தியது. தேரையர் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

புண்ணிய தலங்களில் நீராடினால் பாவம் தீருமா?… விரிவான விளக்கம் இதோ…!!!

நாம் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில், புண்ணிய தலங்களில் நீராடுவதால் நாம் செய்த பாவம் தொலைந்து போகும். ஆனால் தெரிந்து வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயம் தொலைந்து போகாது. அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மட்டுமே மனதை உறுத்துகிற காலத்தில்,மனம் திருந்திய நிலையிலும் தவறு செய்து விட்டோம் என்பதை நீங்கள் உணர்ந்து அதற்கு பிராயசித்தம் தேட வேண்டும் என்று நினைத்தே புண்ணிய தலங்களில் நீராடுவதால் நீங்கள் செய்த பாவம் தொலையும். ஒருவன் தான் செய்தது தவறு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி சுவாமி தரிசன டிக்கெட் வெளியீடு…. 9 மணி முதல் முன்பதிவு தொடங்கியது….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் மாத விரைவு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. அதன்படி தினசரி 5 […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பங்குனி உத்திர விரதம்…எப்படி கடைப்பிடிப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி நிலவின் ஒளி வீசும் தினத்தை விரத நாளாகக் கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் பெரும். இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒருவேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை ஆண் பெண் இருவருமே கடைபிடிக்கலாம். அதிகாலை குடித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பங்குனி உத்திரம்… சுபிட்சம் தரும் உன்னத வழிபாடு… வம்சம் தழைக்கும்…!!!

பங்குனி உத்திரத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக் கொண்டால் குலதெய்வம் நிறைவேற்றி தரும். அனைத்து சௌபாக்கியங்களுடன் நம்மை வாழ வைக்கும் என்பது உறுதி. நாளை பங்குனி உத்திரம் என்பதால், இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக சிறந்தது. படையல் இடுவது அக்கம்பக்கத்தார் வழங்குவது போன்றவற்றை செய்தால் நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும். ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாக தான் இருக்கும். நம்முடைய குலம் வாழையடி வாழையாக வம்சம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலை பக்தர்கள் அனைவருக்கும் இனி கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடை திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு பல்வேறு கோரிக்கைகள் இருந்ததால், தினமும் […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருமணத் தடை நீங்கும்… குழந்தை வரம் கிட்டும்… ஒரு டைம் போயிட்டு வாங்க… தோரணமலையின் அற்புதங்கள்…!!!

தென்காசி மாவட்டம் அருகே உள்ள தோரண மலையில் உள்ள அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார். ஒரு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க… திருப்பதி தேவஸ்தானம் செம அறிவிப்பு…!!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அவ்வகையில் காணொலிக் காட்சி மூலமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகின்றது. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

விபூதியை தப்பித்தவறி கூட இந்த விரலில் எடுக்காதீங்க… எதுவுமே உங்ககிட்ட இல்லாம போயிடும்…!!!

விபூதியை எடுக்க பயன்படுத்தும் விரல்களால் ஏற்படும் தீமை மற்றும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு, அங்கே உள்ள அர்ச்சகர் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுப்பது வழக்கம். அங்கு அழைக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும் போது நாம் அதை எப்படி எந்த விரல்களால் எடுத்து நெற்றியில் வைக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. விபூதியை எடுப்பதற்கு சில விரல்களை பயன்படுத்தும்போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது நன்மைகளும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் என்ன பயன்?… கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!!

எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்…!!!

உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜோதி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பன்… சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஐயப்ப பக்தர்களே… நாளை மகர விளக்கு பூஜை…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலையில் நாளை நடை திறப்பு… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை நடை திறக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலம் முடிந்த நிலையில், மகர விளக்குக்காக நாளை மாலை, மீண்டும் நடை திறக்கப்படுகிறது.’மண்டல காலத்தில், நிலக்கல்லில் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையம், மகரவிளக்கு காலத்தில் செயல்படாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் அல்லது வரும் வழியில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் சபரிமலை வரவேண்டும் என, […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஐயப்ப பக்தர்களுக்கு… இன்று மாலை முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் மூன்று நாட்கள்… அனைத்து சேவைகளும் ரத்து… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட் கொடுப்பது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் நேற்று போராட்டம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று இரவு முதல் நிறுத்தம்… திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் இன்று இரவு முதல் நிறுத்தம்… பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

இந்தியாவின் தனித்துவமான “தொங்கும் தூண் கோவில்”… இன்று வரை வெளிவராத ரகசியம்..!!

இந்தியாவின் தனித்துவமான தொங்கும் தூண் கோவிலின் ரகசியம் பற்றி இதில் பார்ப்போம். இந்தியா கோவில்களின் நாடு என்றால் அது தவறில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆடம்பரத்திற்கும், தனித்துவமான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவை. அத்தகைய ஒரு தனித்துவமான கோயில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் விஷயம் என்னவென்றால் தூண் காற்றில் தொங்குகிறது. ஆனால் அதன் ரகசியம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த கோவிலின் பெயர் லேபாக்ஷி […]

Categories

Tech |