Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஒல்லி ராபின்சன் விலகல் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : 4-வது டெஸ்ட் போட்டிகான….ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான  4-வது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3  போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ட்ராவிஸ் ஹெட்டிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னோட சாய்ஸ் ரிஷப் பண்ட் தான்” ….முன்னாள் வீரர் ஓபன் டாக்….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பும்ரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பேஷ் டி20 லீக் :ஸ்டார்ஸை வீழ்த்தியது ரெனிகேட்ஸ் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி….!!!

பிக் பேஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்டார்ஸ் அணி  20 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 35/1 ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார் .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய புஜாரா, ரஹானே ….! இந்தியா 202 ரன்னில் ஆல் அவுட் ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட்கோலி தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டுள்ளார் .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : வங்காளதேசம் அபார ஆட்டம் ….! நியூஸிலாந்து அணி சறுக்கல் ….!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 328 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் .இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ….. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ,614 ரன்கள் எடுத்துள்ளார் .அதோடு 134 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அதேபோல் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2440ரன்களும், 61 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் . மேலும் 55 டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்களும் 53 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில்  முகமது ஹபீஸ் சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென்ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் …. தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா- தென்னாப்பிரிக்காஅணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது . இந்திய அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது .இப்போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி ….! விவரம் இதோ ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி இந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து சதமடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .இந்நிலையில் இந்திய  அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் …. தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு ….!!!

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில்  நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN முதல் டெஸ்ட் : நியூசிலாந்து 328 ரன்கள் குவிப்பு …. வங்காளதேசம் நிதான ஆட்டம் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு  175 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணி …. 4 இந்திய வீரர்கள் இடம்பிடிப்பு ….!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி தரப்பில் வீரர்கள் 4 இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய  11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர் .இதேபோல் பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களும் ,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளில் தலா ஒரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ….! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வலுவாக திரும்பும் ….! முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா நம்பிக்கை ….!!!

ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா கூறியுள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க்கில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி- ரோகித் இடையே மோதலா ….? தேர்வு குழு தலைவர் ஓபன் டாக் ….!!!

விராட் கோலி- ரோகித் இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் , ஒருநாள் மற்றும் டி20 அணியின்  கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே விரிசல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது ,”சில சமயம் விராட் கோலி- ரோகித் இடையே மோதல் இருப்பதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது ….! 2021-ம் ஆண்டின் சிறந்த தருணம் …. பாபர் அசாம் பேட்டி ….!!!

2021-ம் ஆண்டு நடந்த டி20  உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று  ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : புத்தாண்டின் முதல் சதம் …. டேவன் கான்வே அசத்தல் சாதனை ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே 122 ரன்கள் குவித்து அசத்தினார் . வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்ட் போட்டி …. பயிற்சியை தொடங்கிய இந்திய அணி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்  போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள்  வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : முதல் நாளில் சதமடித்தது மகிழ்ச்சி ….! டேவன் கான்வே பெருமிதம் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே சதம் அடித்து அசத்தினார் . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பேஷ் டி20 லீக் : அச்சுறுத்தும் கொரோனா …. மீதமுள்ள போட்டிகள் எங்கு நடக்கும் ….? வெளியான தகவல் ….!!!

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மீதமுள்ள போட்டிகள் மெல்போர்னில் நடத்த  திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  11-வது சீசன் பிக் பேஷ்  டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . பலத்த பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டிய புத்தாண்டு ….. இந்திய அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டம் …! இணையத்தில் வைரல் ….!!!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி 2021-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி தான் சரியாக அமையவில்லை. ஆனாலும் மற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN முதல் டெஸ்ட் :டேவன் கான்வே அதிரடி சதம் ….! வலுவான நிலையில் நியூசிலாந்து…!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் 1  ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான …. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு ….!!!

இங்கிலாந்து மற்றும் அயர்லந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதையடுத்து இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது . இந்த தொடருக்கான ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அயர்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த 2 பேர் தான் எங்க டீம்முக்கும் டேஞ்சர் “….! தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் ஏல்கர் ஓபன் டாக் ….!!!

இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா இருவரும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது :டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ….இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை ….!!!

2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயர் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20  மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்,வீராங்கனைகள் உள்ளடங்கிய பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது .இதில் ஆண்கள் ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் , பாகிஸ்தான் அணியில்  பாபர் அசாம் , தென் ஆப்பிரிக்காவின் மலன் மற்றும் நெதர்லாந்து அணி வீரர்  பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அணியில் ஓரங்கட்டப்பட்ட காரணம் எனக்கு தெரியல” ….! ‘தோனி கிட்ட கேட்டும் பதிலும் இல்ல’ -ஹர்பஜன் சிங் ….!!!

 இந்திய டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 1998ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . இதில் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளவர் 417 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .இதைப்போல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க யாரும் விராட் கோலி கிட்ட சொல்லல” ….! போட்டு உடைத்த தேர்வுக்குழு தலைவர் ….!!!

டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி விராட் கோலியிடம் யாரும் சொல்லவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்  கூறியுள்ளார் . இந்திய டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக  முடிவெடுத்தபோது இந்த முடிவை கைவிடுங்கள் என அவரை வலியுறுத்தியதாகவும் ,ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் .ஆனால் கேப்டன்  பதவியிலிருந்து  விலக வேண்டாம் என பிசிசிஐ தரப்பில் யாரும் என்னை கேட்கவில்லை என விராட் கோலி சமீபத்தில் கூறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணி அறிவிப்பு …. கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்கள் ….!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இத்தொடர் முடிந்தபிறகு இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது .இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.ஆனால் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் …! பிசிசிஐ அறிவிப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி மீண்டும் பழைய பார்ம்க்கு திரும்புவார் “….! இந்திய அணியின் முன்னாள் வீரர் கணிப்பு…!!!

உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி என்று இந்திய அணியின் முன்னாள்  வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார் . இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியை  பலரும் பாராட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெதுவாக பந்து வீசியதற்கான …. இந்திய அணி வீரர்களுக்கு 20 % சம்பளம் கட் ….!!!

இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள்  ஒரு ஓவர் குறைவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது .இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது .அதேசமயம் செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்நிலையில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 டெஸ்ட் கிரிக்கெட் : 2 முறை இரட்டை சதம் விளாசியதில் …. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடம் ….!!!

இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் . டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது .இதில் கடந்த ஜனவரியில் இருந்து இன்று வரை 58 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது .இதில் இலங்கை அணியில் கருணாரத்னே 244  ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோர் ஆகும் . இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி ….! சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் ….!!!

ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின .ஆனால் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் VS அயர்லாந்து : 2 வீரர்களுக்கு  கொரோனா பாதிப்பு ….! அதிர்ச்சியில் சக வீரர்கள் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில்  பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . அயர்லாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி ஃபுளோரிடாவில் இருந்து ஜமைக்காவிற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரூபா குருநாத்….!!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார் .இந்நிலையில் போட்டியின்றி தேர்வான ரூபா குருநாத் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் சவுரவ் கங்குலி ….! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ….!!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி கடந்த 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள  உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில்  லேசான அறிகுறிகளுடன் கங்குலிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த  சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு …!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில்  டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லிப்டில் மாட்டிக்கொண்ட ஆஸி.கிரிக்கெட் வீரர்’ ….! ‘திக் திக் நிமிடங்கள்’ ….!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் மாட்டிக்கொண்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இதில் அடிலெய்டில்  நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்  93 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“2021 இந்திய அணிக்கு சூப்பர் ஸ்பெ‌ஷலான ஆண்டுதான்” ….! கே.எல்.ராகுல் மகிழ்ச்சி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான  செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது .இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷ் டி20 லீக் :11 வீரர்களுக்கு கொரோனா உறுதி ….! போட்டி தொடர்ந்து நடைபெறுமா ….?

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் 2 அணிகளைச் சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா தொற்று  பாதிப்பு உறுதியாகியுள்ளது . பிக் பாஷ் டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கு பெற்றுள்ளன .இப்போட்டி கடந்த 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒமைக்கரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  காரணமாக போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த வண்ணம் விளையாடி வந்தனர். இந்நிலையில்  சிட்னி […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒய்வு பெறுகிறேன்…. குவின்டன் டிகாக் திடீர் அறிவிப்பு…!!!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவின்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 29 வயது மட்டுமே ஆன டிகாக் இந்த முடிவை எடுத்துள்ளது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக  விளையாடி வந்தார். ஜோகானஸ் பேர்க்கைச்  சேர்ந்த இவர் தனது 16வது வயதில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதுவரை யாரும் படைக்காத சாதனை’ …. “டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்ட பும்ரா”….! விவரம் இதோ ….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய  சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருந்ததால்தான் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : தரவரிசை பட்டியலில் …. 4-வது இடத்தில் இந்திய அணி ….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில்  நடைபெற்றது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4-வது பிடித்துள்ளது .இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீரர்களுக்கான விருது ….! பட்டியலில் முகமது ரிஸ்வான் இடம்பிடிப்பு….!!!

2021 -ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான டி20 போட்டியில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலிய வீரர்   மிட்செல் மார்ஷ், பாகிஸ்தான் வீரர்  முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனைக்கான விருது ….! ஸ்மிருதி மந்தனா பெயர் பரிந்துரை ….!!!

இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி  2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா , இங்கிலாந்து அணியில்  நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்து வீராங்கனை கேபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA செஞ்சூரியன் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …..! ராகுல் காந்தி வாழ்த்து ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U 19 ஆசிய கோப்பை :பாகிஸ்தானை வீழ்த்தி ….இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை ….!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 23-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோதின. இதில் இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது .இந்நிலையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசியக் கோப்பை :வங்காளதேசத்தை பந்தாடியது இந்தியா ….! பைனலுக்கு முன்னேறி அசத்தல் …..!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிப்பு …! 3 புதுமுக வீரர்கள் இடம்பிடிப்பு ….!!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஆட்டங்கள் வருகின்ற 15-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் ‘குரூப் டி’ பிரிவில் தமிழ்நாடு , சவுராஷ்ட்ரா ,ஜம்மு காஷ்மீர் ,ஜார்க்கண்ட் மற்றும் ரயில்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன . இந்நிலையில் இத்தொடருக்கான விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அணியில் சாய் […]

Categories

Tech |