Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக்பேஷ் லீக் 2021: சிட்னி சிக்சர்ஸ் அணியில் …. பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் ….!!!

பிக்பேஷ் லீக் டி20 போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக  பாகிஸ்தான் வீரர்  சதாப் கான் ஒப்பந்தமாகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் அந்த அணிக்காக 67 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இந்த நிலையில் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :’இந்திய அணியின் வெற்றியை தடுப்போம் ‘ ….! தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் பேச்சு …..!!!

சொந்த மண்ணில்  விளையாடுவது எங்கள் அணிக்கு  கூடுதல் பலம் என தென் ஆப்ரிக்கா டெஸ்ட்  அணியின்  கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சுரியன் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே எதிர்பார்ப்பு மற்றும் சவால் நிறைந்ததாக இருக்கும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனான டீன் எல்கர் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில் ,”சர்வதேச அளவில் அவர்கள் முதல் இடத்தில் இருக்கலாம். ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் :3-வது டெஸ்ட் போட்டிக்கான…. ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து  அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இரு அணிகளுக்கு  இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது . இதற்கு முன் நடந்த 2  டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’83’ படத்திற்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு ….!!!

1983 -ஆம் ஆண்டு  இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட  ‘83’ திரைப்படத்திற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு  தெரிவித்துள்ளார். கடந்த 1983 -ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்ற கதையை ’83’ என்ற பெயரில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது .இதில் கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும் நடித்துள்ளனர் .அதேபோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : அணியில் அதிரடி மாற்றம் …. ! 3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்          2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென்ஆப்பிரிக்காவை பதம் பார்க்குமா இந்தியா ….? முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே  அழைக்கப்படுகின்றது . அதேசமயம் தென்னாபிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்படும்  செஞ்சூரியனில் இதுவரை எந்த ஒரு அணியும் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“711 விக்கெட் சாதாரண விஷயம் அல்ல” ….! ‘ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் புகழாரம்’ ….!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  அனைத்து  வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து  ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார் இந்த நிலையில் அவருக்கு விடைதரும் வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீடியோ ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு ….! கே.எல். ராகுல் பேச்சு ….!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாளை தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல். ராகுல் நேற்று பேட்டியில் கூறும்போது,” கடைசியாக இங்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியை விட இம்முறை இன்னும் சிறப்பாக தயாராகியுள்ளோம். நானும் மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கத்தை தருவோம் என நம்புகிறேன். அதேசமயம் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : சர்வீசஸ்அணியை வீழ்த்தி …..இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹிமாச்சல பிரதேசம் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த சர்வீசஸ் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேசம் – சர்வீசஸ் அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சர்வீசஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது’ ….! டுவான் ஒலிவியர் ஓபன் டாக் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி  தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி  தொடங்குகிறது . இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் கூறியுள்ளார் .இதுகுறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலானது ….! புஜாரா பேட்டி ….!!!

தென் அப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது .இதுகுறித்து இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது ,”தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை:அபாரஜித், வாஷிங்டன் அபாரம் ….! இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில்  தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷெல்டன் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: பிரபல (CSK) இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடியபோது தமிழில் டுவீட் செய்து தமிழக மக்களைக் கவர்ந்தார். இந்நிலையில் எனது 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.!!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து  இன்று விடைபெறுகிறேன், இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மனமார்ந்த நன்றி”. என்று பதிவிட்டுள்ளார்.. இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி ….! விவரம் இதோ ….!!!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் குவித்துள்ளார் .இதில் 27 சதங்கள் மற்றும்  27 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாதனை நாயகன் அஜாஸ் பட்டேலுக்கு இந்த நிலையா….? நியூஸி.அணியிலிருந்து அதிரடி நீக்கம்…. ரசிகர்கள் ஷாக் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல்  நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இத்தொடருக்கான  அணி நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்திய நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல்  நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் ….? தமிழ்நாடு VS சவுராஷ்டிரா இன்று மோதல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில்  தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .இதில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும்  சர்வீசஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணியும் ,மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை :ஹர்நூர் சிங் அதிரடி ஆட்டம் ….! இந்திய அணி அபார வெற்றி …..!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது . 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்த இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று மோதின .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

LPL 2021 FINAL :காலே கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி ….கோப்பையை வென்றது ஜாஃப்னா கிங்ஸ்….!!!

லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில்  வெற்றி பெற்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது .இந்த சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது . இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் – காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் VS இங்கிலாந்து தொடர் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளரான கூறும்போது,” அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் . அதேசமயம் அணியை வலுவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் .உலக கோப்பை போட்டிக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : SRH அணியின் மாஸ்டர் பிளான் ….! புதிய பயிற்சியாளர்களாக பிரையன் லாரா , டேல் ஸ்டெய்ன் ….!!!

2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்  புதிய பயிற்சியாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 15-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  நடைபெறுகிறது .இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டஹைதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது .இதில் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னும் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்….!!!

இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் .அதாவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி கேப்டன்சி விவகாரம் ….! பிசிசிஐ-யை விமர்சனம் செய்த பாக்.முன்னாள் வீரர் ….!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி  விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து  விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்தது .இந்நிலையில்  தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

LPL 2021 FINAL :கோப்பையை வெல்லப்போவது யார்….? காலே கிளாடியேட்டர்ஸ் VS ஜாஃப்னா கிங்ஸ் இன்று மோதல் ….!!!

லங்கா பிரீமியர் லீக்  தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் – ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் போட்டி முதல் சீசன் நடத்தப்பட்டது. இதில்  ஜஃப்னா ஸ்டாலியன்ஸ்அணி சாம்பியன் பட்டம் வென்றது .ஐபிஎல் தொடரை போலவே இந்தப் போட்டியிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் .இதில் இந்த  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து VS வங்காளதேசம் டெஸ்ட் தொடர் ….! கேன் வில்லியம்சன் விலகல் …!!!

வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். நியூசிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது .இத்தொடருக்கான 13 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரிலிருந்து நியூசிலாந்து  அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்…. இன்று முதல் ஆரம்பம் ….!!!

 ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது . 19 வயது உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1989-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது .இதுவரை இப்போட்டியில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது .இந்நிலையில் 9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது .அங்குள்ள துபாய், சார்ஜா ,அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் இப்போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்….!!!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :விதர்பா அணியை வீழ்த்தி …. அரையிறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி  அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-விதர்பா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 150 ரன்னில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக அபூர்வா வான்கடே 72  ரன்கள் குவித்தார் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : விராட் கோலி பின்னடைவு ….! முதலிடம் பிடித்த லபுஸ்சேன்…!!!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீரர்  மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி 7 -வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலியா அணி வீரர்  ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் மெகா ஏலம் எப்போது …? பிசிசிஐ-யின் மாஸ்டர் பிளான் ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது  சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக  என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்தாகிறதா….? வெளியான முக்கிய தகவல் …..!!!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் இத்தொடர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடம்பிடிக்கும் பாண்டியா….! கடும் கோபத்தில் பிசிசிஐ …. காரணம் என்ன ….?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து போட்டியில் விளையாடாமல் இருப்பதால் பாண்டியா மீது பிசிசிஐ  கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் முன்பு போல் ஹர்டிக் பண்டியா விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டது .இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாண்டியா தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் எனஇரண்டிலும்  முழு ஃபார்முக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய பவுலர்களில் பும்ராதான் டேஞ்சர்’…! தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஓபன் டாக்….!!!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளத்தை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த கொள்ள முடியும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன்  டீன் எல்கர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா டீம்ல…. “இவருக்கு பந்து வீசுறது கஷ்டம்”…. ஓப்பனாக சொன்ன பாக்., இளம் வீரர்..!!

பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான வீரர் இவர்கள் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளர் சதாப் கான் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளராக இருப்பவர் சதாப் கான் (23).. சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட சிறப்பாக பந்து வீசி இருந்தார்.. இந்த நிலையில் சதாப் கான் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டியின் போது நெஞ்சு வலியால் துடித்த பாக். வீரர்….! மருத்துவமனையில் சிகிச்சை….!!!

பாகிஸ்தான்  வீரர் அபித் அலிக்கு போட்டியின் போது  நெஞ்சு வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்ஸ்மேனான அபித் அலி அந்த அணிக்காக 16  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு  டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1180 ரன்கள் குவித்துள்ளார் . இந்நிலையில் 34 வயதான அபித் அலி  குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியின்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அமேசான் ப்ரைமில் இனி லைவ் கிரிக்கெட் ….! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….!!!

 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் போட்டிகள்  நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ கடந்த 2020 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட் வாரியம்  ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. அதன்படி பல ஆண்டுக்கான இந்த ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்து நடைபெறும் 3 வடிவிலான சர்வதேச ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை லைவாக அமேசான் பிரைம் வீடியோவில் காணமுடியும் . இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :உ.பி.யை வீழ்த்தியது இமாச்சல பிரதேசம்….! அரையிறுதிக்கு முன்னேற்றம்…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின .இதில்  முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய  உத்தரப்பிரதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 76 ரன்னும் , புவனேஷ்வர் குமார் 46 ரன்னும் குவித்தனர் .இமாச்சல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஜோ ரூட் மோசமான சாதனை ….! விவரம் இதோ ….!!!

ஆஷஸ்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான  2-வது டெஸ்டில்  தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மோசமான சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கடந்த 16-ஆம் தேதி . 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது இதில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய போராடியது .ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை ….! பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு….!

14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது பாலியல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .   பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்  யாசீர் ஷா. இவருடைய நண்பர் ஃபர்ஹான் 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : தென் ஆப்பிரிக்கா அணியில் முக்கிய வீரர் விலகல் ….!!!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும்                      3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 8-ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றடைந்தது .இந்நிலையில் தென்னாபிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு ….! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கர்நாடகா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 354 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்னும் , ஷாருக்கான் 79 ரன்னும் ,சாய் கிஷோர் 61 ரன்னும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் …. அணியில் விகாரி இடம்பெறுவாரா ….?

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது . அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS NZ கிரிக்கெட் தொடர் : 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து ….!!!

நியூசிலாந்து அணி அடுத்த ஆண்டில் 2 முறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அணி கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி ரத்து செய்த போட்டியையும் சேர்த்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! ரசிகர்களுக்கு அனுமதி இல்லை ….!!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,’ தற்போது அதிகரித்து வரும் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா நாளை மோதல்….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் நாளை  நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள்  மோதுகின்றன. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்று லீக் ஆட்டங்கள்  முடிவடைந்தன .இதில் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ,கர்நாடகா , இமாச்சலப் பிரதேசம், சவுராஷ்டிரா,கேரளா , சர்வீசஸ்  மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நாளை முதல்  காலிறுதி ஆட்டம் நாளை முதல் நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …! 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்று முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : ராஜஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா…!!!

விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியது. விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடருக்கான இறுதிக்கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கர்நாடகா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 41.4 ஓவர்களில் 199 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக கேப்டன் தீபக்  ஹூடா 109 ரன்கள் குவித்தார் .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து …. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா …..!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள்  எடுத்துள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC U19 உலககோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு…!!!

ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டர்-19  உலக கோப்பை தொடர் வருகின்ற 14-ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான  இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் யாஷ் துல்  தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்  மானவ் பராக் இடம்பிடித்துள்ளார். இதில் காத்திருப்பு வீரர்கள்  பட்டியலில் ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பி.எம்.சிங் ரத்தோர்ஆகியோர் உள்ளனர் . இந்திய அண்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சண்ட கோழி விராட் “….! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்குலி….!! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் கேப்டன் விவகாரத்தில் விராட் கோலிக்கும் , பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும்  இடையே மோதல் நிலவி வருகிறது. அதேசமயம் ‘டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் […]

Categories

Tech |