Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : ஜோ ரூட், மாலன் அசத்தல் அரைசதம் ….! 3-ம் நாள் ஆட்ட  முடிவில் இங்கிலாந்து 220/2 ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் 3-ம் நாள் ஆட்ட  முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220  ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணிக்கு கோலி ரொம்ப முக்கியம் ‘ ….! ரோகித் சர்மா ஓபன் டாக் ….!!!

ஒரு பேட்ஸ்மேனாக  விராட் கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியமானதாகும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் டி20  கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி நீக்கப்பட்ட நிலையில்  ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என  விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் …. மும்பை அணி வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்  பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 20 -வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .இப்போட்டி மும்பை, கவுகாத்தி , திருவனந்தபுரம் , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்ட 35 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் ‘எலைட் பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் மும்பை – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் : பாகிஸ்தான் வந்தடைந்தது வெஸ்ட்இண்டீஸ் அணி …!!!

3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில்  பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக 26  பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று காலை விமானம் மூலமாக பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு சென்றுள்ளது குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு  பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது . இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை போட்டிக்கான …. இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு …!!!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் நடைபெற உள்ளது .இப்போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய அண்டர் 19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அண்டர் 19 அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து காத்திருப்பு வீரர்கள்  பட்டியலில் ஆயுஷ் சிங் தாக்கூர், உதய் சஹாரன், ஷஷ்வத் டங்வால், தனுஷ் கவுடா, பிஎம் சிங் ரத்தோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம் ….! மகாராஷ்டிரா அசத்தல் வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் மகாராஷ்டிரா அணி வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் எலைட் ‘குரூப் டி’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சத்தீஸ்கர் அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட் இழந்து திணறியது. இதில் அதிகபட்சமாக  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க சொன்னதை விராட் கோலி கேட்கல’ …. பதவி நீக்கம் குறித்து மௌனம் களைத்த கங்குலி ….!!!

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர்  கங்குலி விளக்கமளித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டி20  கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னாபிரிக்கா  அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு  கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ  நியமித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழக அணி ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இன்று நடந்த தமிழ்நாடு- கர்நாடகா  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது . 20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி மும்பை ,திருவனந்தபுரம் ,கவுகாத்தி , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.  இதில் லீக் சுற்று முடிவில் எலைட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம் ….! 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 343/7…!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு  343 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-வது இடத்திற்கு  முன்னேறியது பாகிஸ்தான் ….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.இதில் இரு அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில்       3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0  என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : அஸ்வின் அசத்தல் முன்னேற்றம் …. ஜடேஜா சறுக்கல் ….!!!

ஐசிசி டெஸ்ட்  தொடருக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் இங்கிலாந்து அணி  கேப்டன் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,ஆஸ்திரேலிய வீரர்  ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து  இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : முதல் நாள் ஆட்டம் ….மழையால் பாதியில் ரத்து…!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் – ஹசீப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் தொடர்: துணைக் கேப்டன் பதவியை இழந்த ரகானே….! இந்திய அணி அறிவிப்பு …!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பறிபோன விராட் கோலியின் பதவி ….ஒருநாள் அணியின் கேப்டனானர் ரோஹித் சர்மா….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு டி20 கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார் .அதோடு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு …..! தொடரை வென்றது பாகிஸ்தான் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது  .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘புதிய அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்’ ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆலோசகராகவோ பகுதி நேர பயிற்சியாளராகவோ  அல்லது வழிகாட்டியாகவோ  செயல்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார் .ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆ‌ஷஸ் தொடர் : முதல் பந்திலேயே விக்கெட் …. 85 வருடங்களுக்கு பிறகு ஸ்டார்க் சாதனை….!!!

ஆ‌ஷஸ் தொடர் வரலாற்றிலேயே  85 வருடங்களுக்கு பிறகு முதல் பந்திலேயே  விக்கெட் வீழ்த்தி  ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்சை, ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர்  ஸ்டார்க் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருது ….. டேவிட் வார்னர் பெயர் பரிந்துரை…!!!

ஐசிசி நவம்பர் மாதத்திற்கான  சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்  டேவிட் வார்னரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி  நவம்பர் மாத ஐசிசி விருது பட்டியலில்  ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்,  நியூசிலாந்து வீரர் டிம் சவுதி  மற்றும் பாகிஸ்தான் வீரர் அபித்  அலி ஆகிய மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதேபோல் மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆ‌ஷஸ் டெஸ்ட்: பந்துவீச்சில் மிரட்டிய பேட் கம்மின்ஸ் ….! 147 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து …..!!!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது .இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனி- யுவராஜ் சிங் திடீர் சந்திப்பு …! இணையத்தில் வைரல் ….!!!

தோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிரும்வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் களத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட தோனி-யுவராஜ் சிங் ஜோடியை மீண்டும் களத்தில் பார்ப்பது சாத்தியமற்ற நிகழ்வு .இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துக்கொண்டனர். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  டோனியுடன் ,யுவராஜ் சிங்  அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் . Yuvraj Singh's latest Instagram story:#Yuvi […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் தொடர் : முதல் டெஸ்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  போட்டியில்  இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இருந்து இங்கிலாந்து வீரர்  ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை தொடங்குகிறது . இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் தொடர் : இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு ….!!!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்து. ஆனால் தற்போது அங்கு  ‘ஒமைக்ரான்’  கொரோனா வைரஸ் பரவல் பரவி வருவதால் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணியின்  பயணத்தில் சில மாற்றம் செய்யப்பட்டதோடு ,டி20 தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது . இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN : பாபர் அசாம் அசத்தல் ஆட்டம் ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 300/4….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள்  குவித்துள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4- ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் தொடர் :முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்டுக்கான  12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள  இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை  பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையே ‘ஆஷஸ்’ தொடர் நூற்றாண்டுக்கும்  மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க தொடராகும். இதனால்  இரு அணி வீரர்களும் இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ட்விட்டரில் அஜாஸுக்கு ப்ளூ டிக் இல்லையா ….? கோரிக்கை வைத்த அஸ்வின்….!!!

ஒரே  இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில்  ப்ளூ டிக் வழங்க வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ,மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . அதோடு 2  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 சீசன் மெகா ஏலம் எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் நடக்க  இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே  ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது .இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் அணியில் ரஹானே நீடிப்பாரா ….? போட்டு உடைத்த விராட் கோலி….!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே நீடிப்பது குறித்து  கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்  . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது .இதனிடையே அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது .இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .ஏனெனில் ரஹானே கடைசியாக விளையாடிய 23 டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீனியர் வீரர்கள் இடத்திற்கு ஆபத்து”….! சூசகமாக சொன்ன டிராவிட்….!!!

அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது என இந்திய அணியின்  தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  கூறியுள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்நிலையில் இந்திய அணி வெற்றிக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  நிருபர்களிடம் கூறும்போது, “டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .இதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம் .அதேசமயம் இளம் வீரர்கள் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! வெளியானது புதிய போட்டி அட்டவணை….!!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் இந்திய அணி ,தென்ஆப்பிரிக்கா பயணத்துக்கான தேதியில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதோடு டி2-  தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ….! மீண்டும் சாதனை படைத்த அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அம்பயர் கொடுத்த வித்தியாசமான Wide’ …. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ …!!!

கிரிக்கெட் அம்பயர் ஒருவர் தலைகீழாக நின்று வைடு பாலை அறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் நடுவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது .குறிப்பாக கிரிக்கெட்டில் நடுவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது .இதில் சில நடுவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தங்களுக்கே உரிய உடல் மொழியில்  முடிவை அறிவிப்பார்கள் .அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் அம்பயர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது . மராட்டிய மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க 4 பேருக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்க” ….! இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 50 வெற்றிகள் ….! ‘கிங்’ கோலியின் மாஸ் ரெகார்ட் …..!!!

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

# IND VS NZ TEST : ரிச்சர்டு ஹேட்லியின் சாதனையை சமன் செய்த அஸ்வின்…..!!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர்  ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றிய சாதனையை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர்  நடந்தது. இதுவரை 22 டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது .இதில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார் .இதில் 14 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : நியூஸியை ஓரங்கட்டிய இந்தியா ….! முதலிடம் பிடித்து அசத்தல் …!!!

ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணி  முதலிடத்தை பிடித்துள்ளது.  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : தொடர் நாயகன் விருது ….! அஸ்வின் புதிய சாதனை ….!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் ….! கேப்டன் பொல்லார்ட் விலகல் ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் விலகியுள்ளார் . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும்                3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடிமேல் அடி வாங்கும் நியூசிலாந்து “….! இந்திய மண்ணில் தொடரும் மோசமான சாதனை ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” வெற்றிநடை போடும் இந்திய அணி” ….! ‘சொந்த மண்ணில் அசாத்திய சாதனை’ ….! விவரம் இதோ ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள  இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு 1-0 என்ற கணக்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ…. 372 ரன்கள் வித்தியாசத்தில்…. இந்திய அணி வெற்றி…. தொடரை வென்று முதலிடம்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 150 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே டெஸ்டில் 14 விக்கெட் …..! புதிய சாதனை படைத்த அஜாஸ் பட்டேல் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதன்மூலம் 2-வது டெஸ்ட் மொத்தமாக 225 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு ….!!!

பாகிஸ்தான்-வங்காளதேசம்  அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.  பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அபித் அலி ,ஷபிக்  களமிறங்கினர் .இதில் அபித் அலி 39 ரன்னும் , ஷபிக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு அசார் அலி -கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இதில் பொறுப்புடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை நான் பார்த்ததே இல்ல” ….! இந்திய அணி குறித்து கங்குலி ஓபன் டாக் ….!!!

சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது. சமீபத்தில்  நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது.இது குறித்து முன்னாள் வீரர்கள் , ரசிகர்கள் பலர் இந்திய அணிக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ,”கடந்த 4 முதல் 5 வருடங்களில் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக செயல்பட்டது உலக கோப்பை டி20 போட்டியில் தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம்” …..! ஒரே ஆண்டில் 50 விக்கெட் …. புதிய சாதனை படைத்த அஸ்வின் ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான  அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் .  இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 3-வது இடத்தைப் பிடித்து  அசத்தினார். தற்போது இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அஸ்வின் மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ: கெத்து காட்டும் இந்தியா ….! நியூசிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு  140 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்தார் .நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் கைப்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ :ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் ….! மாபெரும் சாதனை படைத்த நியூஸி வீரர் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் 10 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது .இதில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் இந்திய அணியில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அகமதாபாத் மீதான சூதாட்ட சர்ச்சை….! விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் – ஜெய்ஷா…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத்  அணி மீது எழுந்த  சர்ச்சை குறித்து  விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் போட்டி 26-ல் தொடங்கும்….! பிசிசிஐ அறிவிப்பு….!!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி  வருகின்ற  26-ம் தேதி நடைபெறும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதற்கான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 -ஆம் தேதி  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில்  ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதை என்னால நம்பவே முடியல’ ….! ‘ரொம்ப பெருமையா இருக்கு’- அஜாஸ் படேல்…..!!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.இதனிடையே இதுகுறித்து அவர் கூறும்போது,” என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று .உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதை என்னால் நம்ப முடியவில்லை .அதுவும் இந்த சாதனையை பிறந்த ஊரிலேயே நிகழ்த்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு ….! பாகிஸ்தான் 161 ரன்கள் குவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலி -அப்துல்லா ஷபீக் ஜோடி களமிறங்கினர். இதில் அபித் அலி 39 ரன்னும் , அப்துல்லா ஷபீக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் […]

Categories

Tech |