Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இந்த 4 பேர் இருந்த சரியா இருக்கும்” ….! இர்பான் பதான் கருத்து…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என முன்னாள் வீரர்  இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது .இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் அடுத்த சீசனில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டெஸ்டில் ஷ்ரேயாஸ் அணியில் விளையாடுவாரா ….? விவிஎஸ் லக்ஷ்மன் ஓபன் டாக் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில்  ஸ்ரேயாஸ் அணியில் விளையாடுவது சந்தேகம் தான் என விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கியது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  345  ரன்கள் எடுத்தது .இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார் .அதோடு இந்திய அணியில் அறிமுகமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் பிக் பாஷ் லீக் டி20 :முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்….!!!

ஆஸ்திரேலியாவில் நடந்த  மகளிர் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது .இதில் நேற்று  பெர்த் நகரில் நடந்த இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்-அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற அடிலைட்  அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்  அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : அபித் அலி, ஷபிக் சிறப்பான தொடக்கம் ….! 2-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 145/0….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  ஹசன் அலி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காள தேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லிட்டன் தாஸ் 114 ரன்னில் வெளியேற , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர் நடக்குமா….?அனுராக் தாக்கூர் பதில் ….!!!!

தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது . தென்னாபிரிக்காவில் தற்போது உருமாறிய ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வீரியமிக்க புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது அதோடு உலக சுகாதார அமைப்பும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த புதிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : பந்துவீச்சில் மிரட்டிய அக்சர் பட்டேல் ….! நியூஸி 296 ரன்களுக்கு ஆல் அவுட்….!!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்  நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கான்பூரில் தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து நடந்த 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து  விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : பாக். அணிக்கெதிரான தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு …..!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் , டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இதனிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து ஃபாஃபியன் ஆலன், ஒபெட் மெக்காய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய சாதனை “- ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி …..!!!

நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 173 பந்துகளில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தம் 105 ரன்கள் குவித்துள்ளார். 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார் .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய வகை கொரோனா எதிரொலி…..! இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடர் நடைபெறுமா …..?

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டிசம்பர் 17-ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . தென் ஆப்பிரிக்கா தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதோடு இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை கொண்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி ,இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும்  இத்தாலி உட்பட நாடுகள் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு கடும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :லிட்டன், முஷ்பிக்கூர் அசத்தல் ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 253/4….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 253 ரன்கள் குவித்துள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் களமிறங்கிய  ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : டாம் லாதம், வில் யங் அபாரம் ….! 2-ம்  நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 129/0 …..!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம்  நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி  விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனானர் பேட் கம்மின்ஸ் ….! வரலாற்று சாதனை ….!!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸும்,  துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் ஸ்மித் தடை செய்யப்பட்டார். இதன்பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன், ஒருநாள் மற்றும் டி20 தொடரின் கேப்டனாக ஆரோன் பின்ஞ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2017 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 1st Test : அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில்  அறிமுக வீரராக இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது .நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்னும்,ஜடேஜா  50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆள விடுங்கடா சாமி” ….’எனக்கு அது வேண்டவே வேண்டாம்’ ….! ரசிகருக்கு வார்னர் பதில் ….!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில்  குறித்து பதில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக டேவிட் செயல்பட வேண்டும் என ரசிகரின் விருப்பத்துக்கு வார்னர் பதிலளித்துள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால்  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சீசனில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனி சொன்ன டிப்ஸ் தான்”….! ‘சிக்ஸர் அடிக்க உதவியா இருந்துச்சி’ …. ஷாருக்கான் பகிர்ந்த ரகசியம் …..!!!

சையது முஷ்டாக் அலி தொடரில்  இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த  ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022-லில் ‘லக்னோ’அணிக்கு கேப்டன் இவரா ….? வெளியான தகவல் …..!!!

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக இடம்பெறும் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கபட  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .இதில் சிஎஸ்கே அணி      4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே  அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அடுத்த சீசனுக்கான  ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி ….! இன்று தொடக்கம் …..!!!

பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .  வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது . இதில் இரு  அணிகளுக்கிடையே நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட்

“உன்னை நினைச்சா பெருமையா இருக்கு”…. ! ஸ்ரேயாஸ்க்கு பாண்டிங் வாழ்த்து ….!!!

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார் .அதேசமயம் இன்றைய போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி உள்ளார் .இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது  டுவிட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெண் குழந்தைக்கு தந்தையானார் புவனேஷ்வர் குமார் ….! குவியும் வாழ்த்து ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் புவனேஸ்வர் குமார்-  நுபுர் நாகர் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை  புவனேஸ்வர் குமார் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI முதல் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….! 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ், ஜடேஜா அசத்தல் ஆட்டம் ….முதல் நாள் முடிவில் இந்தியா 258 ரன் குவிப்பு …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 258 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் 13 ரன்னும், சுப்மன் கில்52 ரன்னும், புஜாரா 26 ரன்னும் மற்றும் ரகானே 35 ரன்னும் எடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: CSK அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்தான்…. மாஸ் அறிவிப்பு…..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 14வது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றியது. இதையடுத்து தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் அணியில் தக்க வைக்கப் படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி : டி20 பேட்டிங் தரவரிசையில்…. கே.ல்.ராகுல் முன்னேற்றம் ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  இந்திய அணியில் கே.எல்.ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் . அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்கு ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் பண்ணிருக்னும்” ….! தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .மேலும் இத்தொடரில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு  முன்பாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை  ஸ்ரேயாஸ் அய்யரிடம் வழங்கி அவரை அறிமுகப்படுத்தினார். You're a blessed […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் தொடருக்கான …..பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 சீசன் : முதல் போட்டியே சிஎஸ்கே VS மும்பை மோதல் ….! வெளியான முக்கிய தகவல் ….!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனிடையே இந்த சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பன்றி, மாட்டிறைச்சிக்கு தடை…. பிசிசிஐ பதற்றத்துடன் விளக்கம்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த இறைச்சியை எவ்விதமான உணவு வடிவிலும் சாப்பிடக்கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வீரர்களின் உணவுக் குறிப்பு குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே தொடர் : தமிழக அணி அறிவிப்பு …..! நடராஜனுக்கு இடமில்லை ….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது .இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன .இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விஜயசங்கர் ,விஜய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க அப்படி சொல்லவே இல்ல” …..! ‘ஹலால்’ உணவு விவகாரத்தில் ….பிசிசிஐ நிர்வாகி வெளிப்படை பேச்சு ……!!!

இந்திய அணி வீரர்கள் ‘ஹலால்’ உணவுகளை  மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, பன்றி கறி ஆகிய உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக் கூடாது எனவும், அதோடு அசைவ உணவு வகைகளில் ‘ஹலால்’ உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என பிசிசிஐ உத்தரவு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் : பேட்டிங் தரவரிசையில் ….. 3-வது இடத்தில் நீடிக்கிறார் மிதாலி ராஜ்…..!!!

மகளிர்  ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய வீராங்கனையின் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்  738 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் நீடிக்கிறார் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை லிசல் லீ 761 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனைஅலிசா ஹீலே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘IPL 2022-ல் டெல்லி அணி லிஸ்டில்’…. ‘நாங்க 2 பேருமே கிடையாது ‘….! ஓப்பனாக பேசிய அஸ்வின்….!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்பது குறித்து  அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மெகா ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் உள்ள முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவிப்பதற்கான  வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது .அதேசமயம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகமும் ஒரு அணியில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்என்பதை இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த வெற்றி இவர்களுக்கு உரித்தானது. “….! தமிழக வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த  இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களான ஷாருக் கான் , சாய் கிஷோர் ஆகிய இருவரையும்  தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று டெல்லியில் நடந்த  இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ….! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது .அதோடு தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது .இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  ட்விட்டர் பதிவில்,’ சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ :”இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சிறப்பான உணர்வாக உள்ளது “….! அஜாஸ் படேல் ஓபன் டாக் ….!!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறுகிறது .இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ஸ்டைலில் ஆட்டத்தை முடிந்த ஷாருக் கான் ….ரசித்து பார்த்த ‘தல தோனி’…..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய  ஷாருக் கான் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார். 2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு ….!!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ….! டி20 தொடரை கைப்பற்றி அசத்தல் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  3-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது . வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3 வது டி20 போட்டி டக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள் தான்….! இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்த பாண்டிங் …!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார். தற்போது இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்,, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடடே அவரே சொல்லிட்டாரு…!அப்பறம் என்ன ? திருவிழா தான்… அடுத்த ஐபிஎல் குறித்த சூப்பர் தகவல் ….!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் வெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். 14வது ஐபிஎல் சீசனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறும்போது, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவதை பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 சையத் முஷ்டாக் அலி : மாஸ் காட்டிய ஷாருக் கான் ….! தமிழக அணி கோப்பையை வென்று அசத்தல் ….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக அணி கோப்பையை வென்றது . சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தொடக்கத்திலேயே தடுமாறியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்சர் அடித்ததால் ஆத்திரம் “…..! எதிரணி வீரரை காயப்படுத்திய பாக் வீரருக்கு அபராதம் …..!!!

வங்காளதேச அணி வீரர்  காலில் வேண்டுமென பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான்  அணி வீரரான ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. இப்போட்டியின் போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தமிழக அணி …. பந்துவீச்சு தேர்வு ….!!!

13-வது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இதில் 38 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம போடு போட்ட ஹிட்மேன் ரோகித்” ….! டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ….விவரம் இதோ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் இந்திய அணி 73  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : “கோலியின் ரெகார்டை காலி செய்த ஹிட்மேன் ரோகித்” ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில்  73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற  இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா ….! டி20 தொடரை வென்று அசத்தல் …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : மிரட்டிய இந்திய அணி …..! நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் இஷான் கிஷன் 29 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : டாஸ் வென்ற இந்திய அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து  முடிந்த  2 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவன்: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களை மிஞ்ச யாருமில்லை..! பாக்.வீரர்களுக்கு டப் கொடுத்து…. கெத்து காட்டிய ரோஹித், கே.எல் ராகுல் …!!

டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடும் ரோகித் சர்மா அதிகமுறை 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் . இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம்  நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பிரபல கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி….!!

இலங்கை – வெட்ஸ் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சின் 24-வது ஓவரில் கருணாரத்னே பந்தை லெக் திசை நோக்கி வேகமாக அடித்தார். அந்த பந்து பேட்டருக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அறிமுக வீரர் ஜெர்மி சோலோசனோ ஹெல்மெட் மீது வேகமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அவர், அப்படியே ரத்த வெள்ளத்தில் சுருண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :இறுதிப்போட்டியில் தமிழ்நாடு VS கர்நாடகா மோதல் …!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு ,கர்நாடகா ,ஹைதராபாத் மற்றும் விதர்பா ஆகிய அணிகள் தகுதி பெற்றன இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து […]

Categories

Tech |