Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசையில் …. டாப் 10-ல் இடம்பெறாத இந்திய பவுலர்கள் ….!!!

ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை . டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள்  தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 841 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் .இதையடுத்து பாகிஸ்தான் அணி கேப்டனான பாபர் அசாம் 819 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் ‘ …. தோனியை புகழ்ந்து பேசிய உத்தப்பா ….!!!

கடந்த 2007 -ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை பவுல்-அவுட்முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றதை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறியுள்ளார் . தென் ஆப்பிரிக்காவில் கடந்த 14 வருடங்களுக்கு முன்  நடந்த  டி20 உலகக் கோப்பை தொடரில்  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணியை              பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கங்குலி, தோனி இருவரில் யார் பெஸ்ட் ….? முன்னாள் வீரர் ஷேவாக் பதில் ….!!!

இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பதிலளித்துள்ளார் . இந்திய அணி கேப்டன்கள் வரிசையில் கங்குலி ,எம்.எஸ்.தோனி இருவரும் சிறந்த  கேப்டன்களாக கருதப்படுபவர்கள் . இருவரும் இந்திய அணிக்கு புத்துயிர் அளித்துள்ளனர் . இதில் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது .மேலும் ஆஸ்திரேலியாவுடனான தொடரையும் சமன் செய்தது .அதோடு 2002 இங்கிலாந்தில்  நாட்வெஸ்ட்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 5-வது டெஸ்ட் விவகாரம் …. விராட்கோலி மீது …. முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது .இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது . இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி  பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சிஎஸ்கே-வின் ‘கடைக்குட்டி சிங்கம்’ …. சாம் கர்ரன் அமீரகம் வந்தடைந்தார் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரரான சாம் கர்ரன் இன்று அமீரகம்  வந்தடைந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில் ஐபில் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரர்கள்  ஜடேஜா ,புஜாரா மற்றும்  மொயீன் அலி  ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தடைந்தனர் .ஆனால் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற     சாம் கர்ரன்  அவர்களுடன் துபாய் வரவில்லை. #KadaikuttySingam is Home 💛#WhistlePodu #Yellove 🦁 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை …. முக்கிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் …. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வீரர் டூ பிளசிஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .இந்நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் முதல் சில போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தென்னாபிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஆர்சிபி அணிக்கே விளையாட விரும்புகிறேன்’…. யுஸ்வேந்திர சாஹல் பேட்டி ….!!!

இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் . ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். இவர் நேற்று  அளித்த பேட்டியில் கூறும்போது,” தற்போது என்னுடைய முழு கவனமும் 19-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டி மீது தான் இருக்கிறது .கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைமைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன் .இலங்கை தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : 5 வருடங்களுக்கு பிறகு …. வங்காளதேசம் செல்லும் பாகிஸ்தான் அணி ….!!!

வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணி  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது . இத்தொடர் நவம்பர் -டிசம்பர் மாதங்களில்  நடைபெற உள்ளது.  இதில் முதலில் நடைபெறும் டி20 போட்டி டாக்காவில் நவம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. 📢 Pakistan men to travel to Bangladesh after five years 📢 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசையில் …. முதலிடத்துக்கு முன்னேறினார் லிசெல் லீ….!!!

ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங்  தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேறினார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தர வரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் .இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : ஹென்ரிக்ஸ், டி காக் அசத்தல் ஆட்டம் …. டி20 தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்கா …!!!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது .இதில் முதலில்  நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-1  என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்… ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மலிங்கா…!!!

இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச போட்டியில் இருந்தும், டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா. இவரின் துல்லியமான பந்துகள் எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கலங்கவைக்கும். குறிப்பாக எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு, இவர் வீசும் பந்துகள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். 30 டெஸ்டுகள், 226 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2020 மார்ச்சில் இலங்கை அணிக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2022 : புதிதாக 2 அணிகள் …. மெகா ஏலம் எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

ஐபிஎல் 2022-ம் ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் ரசிகர்களிடையே போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மெகா ஏலம்  நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ….. தீவிர பயிற்சியில் இந்திய மகளிர் அணி ….!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது . ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 21-ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IRE vs ZIM 3-வது ஒருநாள் போட்டி : ஜிம்பாப்வேவை வீழ்த்தி …. தொடரை சமன் செய்தது அயர்லாந்து….!!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தொடரை சமன் செய்தது . ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது . இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதையடுத்து  டக்வொர்த் விதிப்படி அயர்லாந்து அணிக்கு 32 ஓவரில் 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .அதன்படி களமிறங்கிய அணி அயர்லாந்து 22.2 ஓவரிலேயே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எல்லாருமே திறமை சாலிங்கதான்’ ….. பொறுத்திருந்து பார்ப்போம் …. விராட் கோலி ஓபன் டாக் ….!!!

ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மாற்று வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-வது பாதி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளனர் . இதனால் இவர்களுக்கு பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்க …. அமீரகம் வந்தடைந்த ஆப்கான் வீரர்கள் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரஷீத் கான், முகமது நபி இருவரும் அணியில் இணைந்தனர் . 14-வது சீசன் ஐபில் தொடரின் 2-வது பாதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கான்  வீரராக ரஷீத் கான், முகமது நபி இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக …. முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நியமனம் …!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவராக ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின்  புதிய தலைவராக முன்னாள் வீரர்  ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் 36-வது தலைவராக தெரிவாகியுள்ள ரமீஸ் ராஜா அடுத்த மூன்று வருடங்களுக்கு தலைவர் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 1984 -1997 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ரமீஸ் ராஜா இதுவரை 255 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 8474 ரன்கள் குவித்துள்ளார். இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாப்வே அணி வீரர் பிரெண்டன் டெய்லர் …..சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனா பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் . ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் பிரெண்டன் டெய்லர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணியில் அறிமுகமானார் .35 வயதான பிரெண்டன் டெய்லர் இதுவரை 34 டெஸ்ட் போட்டியிலும், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார் .அத்துடன் டெஸ்டில் 6 சதங்களுடன் 2320 ரன்களும் ,ஒருநாள் தொடரில் 11 சதங்களுடன் 6677 ரன்களும்,  டி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகுகிறாரா கோலி ….? பிசிசிஐ விளக்கம் ….!!!

விராட் கோலி கேப்டன் பதிவிலிருந்து  விலகுவது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.  இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கூடிய விரைவில் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது .மேலும் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது இந்த நிலையில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது …. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வென்றார் ….!!!

ஐசிசி -யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  தட்டி சென்றார். ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இவருடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின்  ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தனர் .ஆனால் ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒட்டுமொத்த நாடே திறந்திருக்கிறது …. விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன் மீதான  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூன்று பயிற்சியாளர்களுக்கு  கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதில் கடுமையான பயோ பபுள்  வளையத்தை மீறி பயிற்சியாளர்களுக்கு தொற்று தாக்கியது எப்படி என விசாரிக்கும்போது ,அவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி …. புதிய கேப்டன் யார் ….? வெளியான தகவல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்குபிறகு கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை குறித்து விராட் கோலி அறிவிக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் இவர் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது பேட்டிங்கில்  கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவுக்கு வழங்க  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்க …. துபாய்க்கு திரும்பிய வீரர்கள் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில்  நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி வீரர்களுக்கும் 2முறை  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .இந்த பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல்  2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா ….! தொடரை வென்று அசத்தல் ….!!!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது . இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 103 ரன்களில் சுருண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பில்  ஷம்சி, மார்க்ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : இளம் வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி …! வெளியான வீரர்களின் பட்டியல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது . டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இத்தொடருக்கான ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு  வீரர்களின் பட்டியலை  அறிவித்து வருகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சக வீரர்களுடன் குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர்…. வைரல் வீடியோ ….!!!

14-வது  ஐபிஎல் சீசன் தொடரின் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன .இத்தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டது. இதில் கடந்த 8ஆம் தேதியன்று இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது .இதில் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது பாதி  ஆட்டத்திலிருந்து …. இங்கிலாந்து நட்சத்திர  வீரர்கள் விலகல் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2-வது பாதி  ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர  வீரர்கள் விலகியுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும்  கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : யு.ஏ.இ-க்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 5-வது டெஸ்ட் போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் யு.ஏ.இ-க்கு சென்றுள்ளனர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் தொடர் 17-ம் தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி  அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : பொல்லார்ட் தலைமையில் …. வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்  டி20 உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியை  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெறவில்லை .இதில் முன்னணி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார் . CWI announces squad for the ICC T20 World […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது ஏன்?… பிசிசிஐ விளக்கம்!!

இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

India vs England 5வது டெஸ்ட் ரத்தானது ஏன்?…. பிசிசிஐ விளக்கம்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ உடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியஅணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5வது டெஸ்ட் போட்டி திடீர் ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட்  போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : கேப்டன்சியிலிருந்து ரஷித் கான் திடீர் விலகல் …. காரணம் என்ன ….?

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது . டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.அதன்படி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் ஆப்கானிஸ்தான்அணியின்  கேப்டன்  ரஷித் கான் உட்பட  20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் டி 20 போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கேப்டன் பதவியை  ரஷித் கான் ராஜினாமா செய்தார் . 🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-வது டெஸ்ட் : இந்திய அணி வீரர்களுக்கு ….கொரோனா தொற்று இல்லை…. வெளியான தகவல் …..!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியானதால் அவர்கள் அனைவரும்    தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அணியின் உடற்பயிற்சியாளரான யோகிஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லை… டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!!

டி20 உலகக் கோப்பைக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. அதேபோல இந்தியாவும் நேற்று 15 பேர் கொண்ட அணி வீரர்களை அதிகார்வப்பூர்வமாக அறிவித்து விட்டது.. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இயான் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நீங்கள் இப்படி செய்தால்… “டெஸ்ட் போட்டியை நடத்த மாட்டோம்”….ஆஸி., கிரிக்கெட் வாரியம் அதிரடி!!

புதிய ஆப்கன் அரசு அந்நாட்டு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்தால் ஆடவர் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு தலைவராக  முல்லா ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.. இதனிடையே தலிபான்கள் ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : நியூசிலாந்தை வீழ்த்தியது வங்காளதேசம் …. தொடரை வென்று சாதனை ….!!!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி டி 20 தொடரை வென்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் குவித்தார் .வங்காளதேச அணி சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே எதிர்பார்க்காத “ட்விஸ்ட்” …. இந்திய அணியில் மீண்டும் “தல தோனி” …. ரசிகர்கள் கொண்டாட்டம் ….!!!

டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது . டி 20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உளளது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை  போட்டிக்கான இந்திய அணியை  பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இதில் முன்னணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி-20 உலகக் கோப்பை…. இந்திய அணி அறிவிப்பு…!!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை அறிவிப்பார்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முக்கிய அறிவிப்பு…. டி20 உலகக்கோப்பை… இந்திய அணியில் யார் யார்?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முடிவடைந்த திருமண வாழ்கை …. தவானை பிரியும் மனைவி …. இன்ஸ்டாகிராமில் வைரல் ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின்  அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை  விவாகரத்து செய்த இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில்  விளையாடி வருகிறார் .சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இளம் படை  இந்திய அணியை தவான் வழிநடத்தினார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை ….தொடரை வென்று அசத்தல் ….!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்  இலங்கை அணி அபார வெற்றி பெற்றது .  தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில இரு அணிகளும் சமனில் இருந்தன .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது.இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் …. ஜஸ்மித் பும்ராவின் மாஸ் சாதனை ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரரும் ,கேப்டனுமான கபில்தேவ் 24 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது இதில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி கொண்டிருந்தது .அப்போது இங்கிலாந்து அணியின் ஒல்லி போப்பின் விக்கெட்டை  இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா அவுட் ஆக்கினார் .இது பும்ராவுக்கு 100 வது விக்கெட்டை ஆகும் .இதன் மூலமாக 24 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரவி சாஸ்திரியை தொடர்ந்து …. மேலும் இருவருக்கு கொரோன உறுதி ….!!!

இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து  அணி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லண்டன் ஓவல் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த  டெஸ்ட் போட்டியில் 50 வருடங்களுக்கு  பிறகு  இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது .இப்போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலமாக லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . Great […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : இங்கிலாந்தை வீழ்த்தி …. வரலாற்று சாதனை படைத்தது இந்தியா ….!!!

இந்தியாவுக்கு எதிரான  5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 210 ரன்களில் தோல்வியடைந்தது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அறிவிப்பு ….! முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த  டி20 உலக கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில்  ஐசிசி வெளியிட்டது .இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Asif […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதத்தை தவறியதால் …. கடுப்பான விராட் கோலி …. வெளியான வீடியோ ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி அரைசத வாய்ப்பை தவறவிட்டார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில்191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதில் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 3-வது டி 20 : 52 ரன்கள் வித்தியாசத்தில் …. வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து ….!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் வங்காளதேச அணி  76 ரன்களில் படுதோல்வியடைந்தது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்களும் , டாம் பிளெண்டல் 30 ரன்களும் குவித்தனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : ரிஷப், ஷர்துல் அதிரடி ஆட்டம் …. இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களும் குவித்தது .இதன் பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் மூன்றாம் நாள் […]

Categories

Tech |