Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 2-வது  டி20 போட்டி …. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது  டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்போ இன்னக்கி மேட்ச்ல தவான் இல்லனா ….கேப்டன் யாரு ….? வெளியான தகவல் ….!!!

இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனான ஷிகர் தவான் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான 2- ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி ….!!!

திருச்சிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிக்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த  திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி தான் காரணம்…. பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த ஷாக்…!!!!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியால் தான் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இரண்டுமாக இருந்தார் என கூறியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஆஸ்திரேலியா…! ஒருநாள் தொடரை வென்றது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .  வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும்       5  டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடைபெற்ற டி20 தொடரில்4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நடந்த முதல் 2  போட்டிகளில் இரு அணிகளும் தலா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திருச்சி VS திண்டுக்கல் அணிகள் …. இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு  நடைபெற உள்ள 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை நடந்த  போட்டிகளில் திருச்சி வாரியர்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தரவரிசையில்  4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரருக்கு கொரோனா….. டி20 போட்டி ஒத்திவைப்பு….!!!!

கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை கைப்பற்றுமா இந்தியா ….? 2-வது டி20 போட்டி …. இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.  இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நெல்லையை வீழ்த்தி …. திருப்பூர் தமிழன்ஸ் முதல் வெற்றி ….!!!

நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ்  அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Exclusive: தோனி ரிட்டன்ஸ் – இந்திய அணி ஜெர்சியில்…. வா தல…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதையடுத்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அணிந்துள்ள ரெட்ரோ கிட் ஜெர்சியை தோனி அணிய முடியவில்லையே என்று வருத்தப்பட்டனர். இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக தோனி இந்திய அணியின் ரெட்ரோ கிட் ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய டிரெண்டிங்கில் தோனி தான் நம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து பறக்கவுள்ள 2 வீரர்கள் …. வெளியான புது அப்டேட் …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட்  4-ம் தேதி தொடங்குகிறது . விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு  எதிராக 5  டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும்  அவேஷ் கான் ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: நெல்லை VS திருப்பூர் அணிகள் …. இன்று மோதல் …!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முந்தைய ஆட்டத்தில்  திருச்சியிடம் தோற்ற நெல்லை அணி , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : 2-வது ஒருநாள் போட்டி …. வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : மணிபாரதி, ஹரி நிஷாந்த் அதிரடி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

கோவைக்கு  எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீரராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 3 விக்கெட் வித்தியாசத்தில்…. மதுரையை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ் ..!!!

மதுரைக்கு எதிரான 8-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி-20 போட்டியில் 8-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – ரூபி  திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: மீண்டும் தொடங்கும் ஐபிஎல் …. சென்னை vs மும்பை மோதல்….வெளியான போட்டி அட்டவணை ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி  நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா  தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடக்க உள்ள  மீதமுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : சூர்யகுமார் , புவனேஸ்வர் அசத்தல் ….! 38 ரன்கள் வித்தியாசத்தில்…. இந்தியா அபார வெற்றி ….!!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் அறிவிப்பு: முதல் போட்டியில் CSK vs MI மோதல்…!!!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-19 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 10  குவாலிபயர்-1 , அக்டோபர் 11 இல் எலிமினேட்டர், அக்டோபர் 13 இல் குவாலிபயர், அக்டோபர் 15ல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை ….! பீல்டிங் தேர்வு செய்தது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை மோதும் ….. முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : அபராஜித், ரஞ்சன் அசத்தல் …. நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி…!!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டிஎன்பிஎல் டி20 போட்டியின்  6-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள்  மோதிக் கொண்டன .இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் …. இன்று பலப்பரீட்சை…!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. இதற்கு முன் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 8 விக்கெட் வித்தியாசத்தில் ….. திருச்சியை வீழ்த்தியது கோவை ….!!!

திருச்சிக்கு எதிரான 5-வது லீக் போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் 5-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இறுதியாக திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 3-வது ஒருநாள் போட்டியில் …. இலங்கை அணி ஆறுதல் வெற்றி …!!!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி  பெற்றுள்ளது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான  3-வது ஒருநாள் போட்டி நேற்று  கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால்  மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 225 ரன்களுக்குள் இந்தியா ஆல் அவுட் …! இலங்கைக்கு 227 ரன்கள் இலக்கு …!!!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானும் பிராமணன் தான்”… ரெய்னாவை தொடர்ந்து ஜடேஜா சர்ச்சை…!!!

டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல் …. காயத்தால் விலகிய தமிழக வீரர் ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு  இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி  லெவன்  அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 3-வது ஒருநாள் போட்டி ….. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு …. !!!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலமையிலான 2-தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டு வந்த ரிஷப் பண்ட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தார். அவரை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ….? 3-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: திண்டுக்கல் டிராகன்ஸை பந்தாடிய மதுரை …. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி …!!!

திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி அபார வெற்றி பெற்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் போட்டியின் 4-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி , மதுரை பாந்தர்ஸ் அணியுடன்  மோதியது . இதில் டாஸ் வென்ற மதுரை  அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.5 ஓவர் முடிவில்  96 ரன்களில் சுருண்டது. இதில் மதுரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்மேல ரொம்பவே நம்பிக்கை வைச்சாரு” …. எல்லாமே அவராலதான் … தீபக் சாகர் பேட்டி ….!!!

என்னுடைய பேட்டிங் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான  தீபக் சாகர்  கூறியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பேட் செய்த இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 193 ரன்களுக்குள் இந்திய அணி 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்ட ரிஷப் பண்ட் …. மீண்டும் அணியில் இணைந்தார் ….!!!

இந்திய அணியின்  இளம் வீரரான ரிஷப் பண்ட் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து அணி அறிவிப்பு …. முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை…!!!

இந்தியாவுக்கு எதிரான  முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் அடுத்த மாதம் 4-ம் தேதியும்,  2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் வீரர்களின் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 74 ரன்கள் வித்தியாசத்தில்…. நெல்லையை வீழ்த்தி …. திருச்சி அபார வெற்றி …!!!

நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி  74 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்கள் மழையால்  ரத்தானது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று துவங்குகிறது ‘தி ஹன்டர்ட்’ கிரிக்கெட்… வெளியான தகவல்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு நடத்தும் தி ஹன்டரட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 100 பந்துகள், ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகள் வீசலாம், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து 5 பந்தோ, 10 பந்து வீசலாம் என பல புதிய நடைமுறைகள் இந்த போட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் பெண்களுக்கான முதல் ஆட்டம் இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த தி ஹன்டரட் ரூபாய் 59 கொடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை போட்டி …. இங்கிலாந்தில் கண்டு ரசித்த சீனியர் வீரர்கள் …. இணையத்தில் வைரல் …!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் வீரர்கள் இந்தியா-இலங்கை 2- வது ஒருநாள் போட்டியை கண்டு  மகிழ்ந்தன இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில்   நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது .இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா ,இஷான் கிஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன கோச் கோவமா போறாரு” …. ‘ஆத்திரமடைந்த இலங்கை பயிற்சியாளர் ‘….வைரலான வீடியோ …!!!

இந்தியாவுக்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : 3-வது டி20 போட்டி …. பாகிஸ்தானை வீழ்த்தி …. தொடரை வென்ற இங்கிலாந்து ….!!!

பாகிஸ்தான் அணிக்கு  எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது . இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது . இதில் தொடக்க வீரரான ரிஸ்வான் பொறுமையுடன் விளையாடி 76 ரன்களை குவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் VS திருப்பூர் அணிகள் மோதிய ஆட்டம் ….மழையால் ரத்து …. !!!

டிஎன்பிஎல் டி20 போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர்  தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தீபக் சாகரின் அதிரடி ஆட்டம் …. இலங்கையை வீழ்த்தி …. தொடரை வென்ற இந்தியா ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது . இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : பெர்னாண்டோ, அசலங்கா அசத்தல் …. இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா-இலங்கை  அணிகளுக்கிடையிலான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  275 ரன்களை குவித்துள்ளது . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2- வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வருகிறது . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி களமிறங்கினர். இதில் மினோத் பானுகா 36 ரன்களில் ஆட்டமிழக்க  அடுத்து  களமிறங்கிய ராஹபக்க்ஷெ முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் …. இன்று மோதல் ….!!!

நேற்று நடைபெற்ற 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தபோது  மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL 2-வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இலங்கை …. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி  தொடங்கிய முதல் ஒருநாள்  போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் …. அலெக்ஸ் கேரி நியமனம் ….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று  4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை வெல்லுமா இந்தியா ….? 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடக்கம் ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது . இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் 2021 : கொட்டி தீர்த்த மழையால் ரத்தான போட்டி …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல்  டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில்  நேற்று நடந்த  தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அட எல்லாமே பக்கா பிளான்தான்” ….. சொல்லி அடிச்சிருக்காரு …. ‘இஷான் கிஷனின் கெத்தான பேச்சு ‘….!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்  அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  263 ரன்கள் குவித்து அபார வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிவேக 6 ஆயிரம் ரன்களை கடந்து …. தவான் புதிய சாதனை ….!!!

 ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரதேசா  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன ஆளு டோட்டலா மாறிட்டாரு “…. ‘எல்லா டிராவிட் சார் ட்ரைனிங் தான் போல’ ….!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள  பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் […]

Categories

Tech |