Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் 2021 …. இன்று முதல் தொடக்கம் ….. கோவை VS சேலம் அணிகள் மோதல் ….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 போட்டி கடந்த 2016- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2 தடவையும்  , தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும்  சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா  தொற்று பரவல்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : பட்லர், மொயின் அலி அசத்தல்….. 45 ரன்கள் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அபார வெற்றி …!!!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று  லீட்சில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : மாஸ் காட்டிய தவான், இஷான் கிஷன் …. இலங்கையை வீழ்த்தி …. இந்தியா அபார வெற்றி …..!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில்  ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் .  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி     3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அந்த மனசு இருக்கே…. வலியால் துடித்த எதிரணி வீரர்….வியப்படைய வைத்த கேப்டன் செயல்…!!!

இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு 20 ஓவர் T20 Blast, 2021 தொடரின் 118வது போட்டி நேற்று நடந்தது. இதில் லேன்கஷைர்  Vs யார்க்ஷயர் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய யார்க்ஷயர் அணி 20ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ரன் எடுக்க ஓட முயன்று தசை பிடிப்பால்  மைதானத்திலே சுருண்டு விழுந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் திருவிழா 2021 …. நாளை முதல் தொடக்கம் ….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. கடத்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிஎன்பிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி  நாளை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நாளை 19-ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்…. ஆனா அடி….சரவெடி …!!!

இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி 7ஆட்டங்களில்  w,w,w,w,w,w,w… இந்தியா கிட்ட மட்டும்…. சரண்டர் ஆன இலங்கை …!!!

இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி …. இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 262 ரன்களை குவித்துள்ளது . இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கபட்ட 2- ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான  முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணியும், தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன்: இந்திய அணி : ஷிகர் தவான்(கேப்டன் ), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கோட்டை தான்…! குஷியில் இந்தியர்கள்…. தலைகீழான நிலைமை …!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு                       இடையேயான முதல் ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : முதல் ஒருநாள் போட்டி …. கொழும்பில் தொடங்குகிறது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : ரிஸ்வான், பாபர் அசாம் அசத்தல் …. முதல் டி20 போட்டியில்…. பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை போட்டி : ஒரே குரூப்ல இந்தியா, பாகிஸ்தான் …. ரசிகர்கள் செம ஹேப்பி …!!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின்  பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர்      14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக 16 அணிகள் பங்கேற்கும் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 , குரூப்2 என 2 அணிகளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க அப்பவே சொன்னோம் …. ஆனா அவரு கேட்கல ….. பிசிசிஐ எச்சரிக்கையை மீறிய பண்ட் ….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களில்  ரிஷப் பண்ட் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது . இதில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கிடையே 20 நாட்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை…. இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்…. ஐசிசி அறிவிப்பு…!!!!

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : தொடரை வெல்லுமா பாகிஸ்தான் ….? முதல் டி 20 போட்டி இன்று தொடக்கம் ….!!!

இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகின்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியில் 3  வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டர். இதனால் இரு அணிகளுக்கு இடையே நடந்த  3 ஒருநாள் போட்டியில்  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலானா புதிய இங்கிலாந்து அணி களமிறங்கி 3-0 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை …. கோலியை பின்னுக்கு தள்ளி ….. முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் ….!!!

ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன்  விராட் கோலி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 873 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தார் . இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட்க்கு கொரோனா உறுதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இவர் சமீபத்தில் லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரை பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு கொரோனா…. பெரும் அதிர்ச்சி….!!!!!

இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிங் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.  இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மீண்டும் களமிறங்கும் கேப்டன் மோர்கன் …. வீரர்கள் பட்டியல் வெளியானது ….!!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் உட்பட   7 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS AUS : கிறிஸ் கெயிலின் சிக்ஸர் மழை …. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி …தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்….!!!

வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில்  வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் , பின்ச் 30 ரன்கள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டி20 போட்டி …. ஷபாலி , தீப்தி ஷர்மா அதிரடி …. இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடங்கப்பா என்ன ஒரு கேட்ச்….! பவுண்டரி லைனில் செம பீல்டிங் …. மிரள வைத்த இந்திய வீராங்கனை ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : முதல் டி20 போட்டி …. 18 ரன்கள் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள  நார்த்தம்ப்டனில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்கள், ஆலன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: தோனி விலகினால் IPL-ல் இருந்து விலகுவேன்…. பிரபல வீரர் அதிர்ச்சி….!!!!

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும்… சபா கரீம் வேண்டுகோள்….!!

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும் என்று விக்கெட் கீப்பர் சபா கரீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் கடந்த சில மாதங்ளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். மற்ற போட்டிகள் ஆனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் இவரது ஜெர்சி நம்பர் 7. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா …. முதல் டி20 போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டி 20 போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின்  மிட்செல் மார்ஷ், டேனி கிறிஸ்டியன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் பிலிப், ஆஸ்டன் அகர், ஹென்ரிக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர் . சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளர் …. கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி ….!!!

இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள் ,பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மலான்,ஜாக் கிராலி அசத்தல் …. 9 விக்கெட் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL தொடர்: அட்டவணை வெளியீடு….!!!

கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK-வில் தோனி – சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,  தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா ….! 19-ஆம் தேதி தொடங்குகிறது ….!!!

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கும்  இந்த போட்டி சேலம் ,கோவை ,திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த முடிவு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

புதிய இங்கிலாந்து அணி அறிவிப்பு.. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குகிறார்..!!

இங்கிலாந்தின் வீரர்கள் மூவருக்கும், அணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் கொரோனா ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி 3 மற்றும் டி20 போட்டிகள் உடைய தொடர்களில் ஆடுகிறது. எனவே அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்பு தற்போது பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இங்கிலாந்து வீரர்கள் மூவருக்கும், நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் அன்று தோனியுடன் மோதல்… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் தரவரிசை …. மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தில் மிதாலி ராஜ்….!!!

ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங்  தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும்   ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் . ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங்  தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான  மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு …. 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி ….!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய  அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது . இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து வீரர்கள் 3 பேருக்கு கொரோனா…. புதிய அணி அறிவிப்பு….!!!

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. வரும் 8ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் விளைவாக ஒயின் மோர்கன் தலைமையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து தொடர்… பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.  இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள்,  உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெறிக்கவிட்ட “நம்ம கேப்டன்” தன் வசப்படுத்திய வெற்றிகள்… எட்ட முடியாத உச்சத்தில் தல தோனி..!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். இதில் இவருடைய சிறந்த ‘டாப் 3’ சாதனைகளை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு வீரனாகவும் , சிறந்த கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.இன்றளவும் இவருடைய சில சாதனைகள் யாராலும்  முறியடிக்கப்படாமல் உள்ளது.ஒரு கேப்டனாக களத்தில் இருக்கும் போது அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு வழி வகுத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு… வாழ்த்துக்களை சொல்லிடலாமா… “ஹேப்பி பர்த்டே தல தோனி”…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா…. களமிறங்கும் புதிய அணி …. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு …!!!

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி  வருகிற 8-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,  இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது  . இங்கிலாந்துக்கு எதிராக  பாகிஸ்தான் அணி  மூன்று  ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு  அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் வீரர்கள்  3 பேர் , நிர்வாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021 : நான் கண்டிப்பா விளையாடுவேன் …. மீண்டும் அணிக்கு திரும்பும் ஷ்ரேயாஸ் …. டெல்லி அணிக்கு வந்த புது சிக்கல் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று  ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த   ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான  ஷ்ரேயாஸ் அய்யருக்கு  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர்  பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் என்றால் இவர்தான்… எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவார்… கேஎல் ராகுல் புகழாரம்…!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு…!!!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : மழையால் கைவிடப்பட்ட 3-வது ஒருநாள் போட்டி …. தொடரை வென்றது இங்கிலாந்து …!!!

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில்  இங்கிலாந்து அணி  2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான     3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது . ஆனால் 41.1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்நாட்டு கிரிக்கெட் தொடர் : மீண்டும் தொடங்கும் ரஞ்சி கோப்பை …. பிசிசிஐ அறிவிப்பு ….!!!

இந்த ஆண்டு தொடங்க உள்ள  ரஞ்சிக் கோப்பை தொடரானது வருகிற  நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி  அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 2021 2022- ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சையத்  முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் தொடர் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து ரஞ்சி கோப்பைக்கான தொடர் நவம்பர் 16-ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : மிதாலி ராஜ் அதிரடி ஆட்டம் …. 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி ….!!!

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில்  மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI வரலாற்றில் அதிக தோல்வி…. இலங்கை அணி சாதனை…!!!

ஒருநாள் போட்டியில் அதிக தோல்விகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெறுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி பெற்றுள்ளது. இதுவரை 860 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 428 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விகளின் பட்டியலில் இலங்கை அணி முதல் இடத்தை பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் மயங்கி விழுந்த 2 வீராங்கனைகள்…. அதிர்ச்சி….!!!

ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை […]

Categories

Tech |