Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ….! 22 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து தொடரை வென்று சாதனை…!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் லார்ட்ஸில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் : சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை…. கைது செய்த போலீசார் …!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது  சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை  போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம்  பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த  அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு  சென்றுள்ளனர் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் …. ! 6 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ் …!!!

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின்  பட்டியல் வெளியிடப்பட்டது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 23 ம் தேதியும் , 2 வது போட்டி ஜூன் 24 தேதியும் கார்டிஃபில் நடைபெறுகிறது. அதோடு 3 வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 26ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும்  இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘குதிரையோடு ஓட்டப்பந்தயத்தில்’….’போட்டிபோடும் தல தோனி’ …! வைரலான வீடியோ …!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர்  வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் கற்க ஆர்வமா…? புதிய செயலி அறிமுகம்….!!!

கிரிக்கெட் கற்றுக்கொள்வதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சங்கர் ஆகியோர் சேர்ந்து CRICURU என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கிரிகுரு என்ற கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு அனுபவ கற்றல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளார். CRICURU என்பது இந்தியாவின் முதல் AI- செயல்படுத்தப்பட்ட பயிற்சி வலைத்தளமாகும். இது இளைய வீரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இது குறித்து தெரிந்து கொள்ள www.cricuru.com இல் அணுகலாம்.ஒவ்வொரு வீரருக்கான பாடத்திட்டத்தை முன்னாள் இந்திய வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய டி காக் … ! தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி …!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட்  மற்றும் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட      தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது . தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது.  இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களில் சுருண்டது . தென் ஆப்பிரிக்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டு பிளசிசுக்கு என்ன நடந்துச்சு “….பீல்டிங்கில் பலத்த காயம்…’கதறும் சிஎஸ்கே ரசிகர்கள்’ …!!!

 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகின்றது . பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 19 வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஜால்மி அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 7 வது ஓவரில் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சென்ற போது ,குவெட்டா அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா  பேட்ஸ்மேன் டு பிளெசிஸ்  பந்தை தடுக்க ஓடிச் சென்றார். அப்போது அதே அணியை சேர்ந்த சக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : ரஷ்யாவை வீழ்த்தி…. பெல்ஜியம் அபார வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . யூரோ  கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன.  ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: பிரபல CSK வீரர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சி வீடியோ…!!!

அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல டூப்ளசிஸ் தடுக்க ஓடினார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியது. அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ்  தலை மோதியதால் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. https://youtu.be/OWF7jUW32zc

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -இலங்கை தொடர் …. தயாராகும் இந்திய அணி ….! 14 நாட்கள் குவரண்டைன் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும்            3 டி20  போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  விராட்கோலி தலைமையிலான  இந்திய அணி 5  போட்டிகள் கொண்ட  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி…! இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்….நியூசிலாந்து 229 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர்    நடந்து வருகிறது. இதில்  லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்  2 வது டெஸ்ட் போட்டி  பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில்  இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் யாக்கர் புயல் நடராஜன்…. விளையாட வாய்ப்பு மறுப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை …. 5 வது இடத்தில் விராட் கோலி…!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  5 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி                5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கேப்டன்…. புதிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final :”என்ன ஒரு வெறித்தனமான ப்ராக்டீஸ்”…! ” இந்திய அணியின் பயிற்சி வீடியோ “…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி  வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18 ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி  சவுதாம்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொயின் அலி, சாம் கரண் சந்தேகம்…. CSK-வுக்கு பின்னடைவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி….! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த  2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் …! கேன் வில்லியம்சன் விலகல்…!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான, 2 வது டெஸ்ட் போட்டி  பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, முதல் டெஸ்ட் போட்டி’ டிரா’ ஆன நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி  பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு  இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக , அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக  ஐசிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

செப்டம்பரில் IPL கிரிக்கெட் தொடர் உறுதி…. பிசிசிஐ தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜடேஜா மேல இவ்ளோ பகையா”…! “வெளியான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் உரையாடல்”…. ரசிகர்கள் கொந்தளிப்பு …!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசிய தனிப்பட்ட உரையாடல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே சஞ்சய் மஞ்ச்ரேக்கரின்  கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட் ‘பிளேயர் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு, ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது முடிவதற்குள் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசிய உரையாடல்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரிஷப் பண்ட் நிச்சயமாக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” ….! ‘தினேஷ் கார்த்திக் நம்பிக்கை’…!!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இளம் வீரர் ரிஷப் பண்ட் , ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதோடு அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவராக ரிஷப் பண்ட் இருக்கிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“‘டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘….! “இதுதான் அல்டிமேட் டெஸ்ட் தொடர்” ….! ஐசிசி அறிவிப்பு …!!!

போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே,   நடந்த டெஸ்ட் தொடர் ,சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது . கடந்த ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான , போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக அந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால், அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  தொடரை கைப்பற்றியது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம்”…! “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பாரா”…?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின்  சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் பங்கேற்க மாட்டார் ,என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த, முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2 வது போட்டி நாளை (ஜூன் 10 ம் தேதி)  எட்ஜ்பாஸ்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்ததும் …. இந்திய வீரர்களுக்கு 3 வாரம் ஓய்வளிக்க முடிவு …!!!

உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18ஆம் தேதி தொடங்க  உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஆகஸ்ட்       4 ம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி சொன்ன அட்வைஸ்”…. “எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு”…! மனம் திறந்த ரஷித் கான்…!!!

 விராட் கோலி , தோனியை குறித்து ஆப்கானிஸ்தான் வீரர்  ரஷித் கான் புகழ்ந்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான  ரஷித் கான் யூடியூப் சேனல்  ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ” போட்டியில் பேட்ஸ்மேனுக்கு நன்றாக  பந்து வீசி, நெருக்கடி கொடுக்கும் போது, அவர்கள் தனக்கு சம்பந்தமில்லாத ஷாட்களை அடித்து ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு மீம்ஸ் போட்டு…. பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக ,இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்னும் சில தினங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது . உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்து சவுதாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இதில்  தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று  400  விக்கெட்டுகளுக்கு மேல்  எடுத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நடுவர்கள் பட்டியல் வெளியீடு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், பணியாற்ற உள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலுள்ள  சவுதாம்ப்டனில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த்  கள நடுவர்களாக பணியாற்ற உள்ளனர் . தொலைக்காட்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இலங்கை தொடர் : ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு …!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 சர்வதேச  டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி, 2 வது போட்டி ஜூலை 16ம் தேதி மற்றும் 3 வது போட்டி ஜூலை 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : கண்டிஷன் சீம்,ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தா …. விராட் கோலி தடுமாறுவாரு – க்ளென் டர்னர்…!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில்  நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் மிகப்பெரிய அளவில் சாதித்தது இல்லை. அதோடு இங்கிலாந்து  சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற , அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய அணியில் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 லீக் போட்டிகளால் …. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்து – டூ ப்ளசிஸ்…!!!

பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆபத்தானவை என்று தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேனான டூ ப்ளசிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பாக  , இரண்டு டி20 லீக்  போட்டிகள் மட்டும் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் டூ ப்ளசிஸ் கூறும்போது, “இந்த டி20 லீக் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது. அதோடு  சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : இலங்கையில் தொடரை நடத்த …. பிசிசிஐ பேச்சுவார்த்தை…!!!

டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ,டி20 உலக கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதற்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : செப்டம்பர் 19ல் மீதமுள்ள போட்டிகள்…! ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும்…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ,தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ,கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வந்தது. மே 2-ம் தேதி வரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , ஒருசில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு …. பதிலடி கொடுத்த இயான் சேப்பல் …!!!

அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்திற்கு , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்  இயான் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக , தமிழக வீரர் அஸ்வின் இருந்து வருகிறார். தற்போது இவர்  டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 409 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு  59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவருடைய சிறந்த பந்துவீச்சாகும். சமீபத்தில் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : இங்கிலாந்தில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் ….! யுவராஜ்சிங் கருத்து …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா-  நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வருகிற 18-ஆம் தேதி  சவுத்தாம்ப்டன் மைதானத்தில்  நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், பேட்டி ஒன்றில் கூறும்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3  போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு 3 போட்டிகளாக இருந்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அறிமுகமான போட்டியிலேயே 7 மாசம் …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒல்லி ராபின்சன் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  . இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது  டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளது . அணியின் அறிமுக வீரரான டேவான் கான்வே ,200 ரன்களை அடித்து விளாசி  அறிமுகமான போட்டியிலேயே அதிரடி காட்டினார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான…. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி , லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய  நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில், 378 ரன்களை எடுத்து  ஆல் அவுட் ஆனது . இதில் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடியாக விளையாடி (200 ரன்கள் )இரட்டை சதம் அடித்த விளாசினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101.1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு இவ்ளோ குறைவான சம்பளமா…?” இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக’…. வீரர்கள் போர்க்கொடி …!!!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டு வீரர்கள் மறுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், வீரர்கள் கையெழுத்திடுவதற்கான கால கெடு , கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில்  புதிய ஒப்பந்தத்தின்படி ,வெளிநாட்டு வீரர்களுக்கு தரும் ஊதியத்தை விட, எங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியமே அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய ஒப்பந்தத்தில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் – பிஎஸ்எல் லீக் தொடர்களை ஒப்பிட்டு…. டு பிளிஸ்சிஸ் கருத்து…!!!

ஐபிஎல்  மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக டு பிளிஸ்சிஸ் விளையாடி  வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் ,இவர் விளையாடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிஎஸ்எல் போட்டி, வருகின்ற 9 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாட உள்ளார். இந்நிலையில்  ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுறது ….! விராட் கோலி ,ரோகித் சர்மா ஆட்டத்தை பாதிக்கும் – திலிப் வெங்சர்க்கார் …!!!

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டமில்லாமல் ,உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது , இவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து  அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி , இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு , நேரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில்…. பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் – தினேஷ் கார்த்திக் தகவல் …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு, கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் , பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : சவுத்தாம்ப்டனில் வெளிப்புற பயிற்சியை தொடங்கினார் ஜடேஜா ….!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக  இந்திய அணி கடந்த 2 ம் தேதி இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்திற்கு சென்றடைந்ததும் வீரர்கள் அனைவரும் சவுத்தாம்ப்டன் உள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்துதலில்  ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது ,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள கூடாது மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை டி20 அணிக்கு கேப்டனாக …. குசால் பெரேரா நியமனம் …!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இலங்கை அணி மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதில் இலங்கை அணியின் டி20 போட்டியில் கேப்டனாக  குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இதற்கு முன்பாகவே  ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார் . இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஓவர் அணிக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 275ரன்கள் …! ரோரி பர்ன்ஸ் சதம் அடித்து அசத்தல் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 275 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல்  டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த  நியூசிலாந்து முதல் இன்னிங்சில், 378 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான  டிவான் கான்வே அதிரடி ஆட்டத்தை காட்டி 200 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு மாற்றம் …! வெளியான தகவல் …!!!

டி 20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு  அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 அணிகள் பங்கேற்க உள்ள 7 வது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை தாக்கத்தால், இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று இடமாக ஐக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகும் …. முன்னாள் கேப்டனின் மகன்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகனான அசாம் கான் அணியில் இடம்பெற்றுள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சென்று , பாகிஸ்தான் அணி 3 ஒருநாள்  மற்றும் மூன்று டி 20  போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்து டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டி 20 அணியில் புதுமுக வீரரான அசாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்’ ….சுனில் கவாஸ்கர்  வாழ்த்து…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றது . இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில்  வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் முதல்முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ளார்.அதோடு  முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து ,தினேஷ் கார்த்திக் பணியாற்ற உள்ளார் . இந்நிலையில் முதல்முறையாக வர்ணனையாளர் பணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நியூசிலாந்து அணிக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம்.- பிரெட் லீ கணிப்பு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ” இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவை நியூசிலாந்திற்கு  ஏற்றவாறு இருக்கும். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : 3 வது நாள் போட்டி மழையால் ரத்து …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்சில்  நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 378 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடி காட்டினார் . அவர் 200 ரன்களை அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள்… ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்…!!!

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட்  வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி  தலைமையிலான இந்திய  அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று காரணமாக தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சவுத்தாம்ப்டன் ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள்…. வைரலான போட்டோ …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,  இந்தியா -நியூசிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன . இதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி  விளையாட உள்ளது . தொடரில் இடம்பெற்ற  இந்திய அணி வீரர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு மும்பையிலிருந்து, இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு , அதன்பின் பயிற்சியை  மேற்கொள்வார்கள். இந்நிலையில்  […]

Categories

Tech |