Categories
கிரிக்கெட் விளையாட்டு

பகல் – இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் – விராட்!

இந்திய அணி பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிரிக்கெட் வாரிய விதி மீறில்” சிக்கிக்கொண்ட ஷாகிப்-அல்-ஹாசன்…!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹாசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. வங்கதேச டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஷாகிப் அல் ஹாசன். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப், சமீபத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சில வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றபின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கங்குலியைப் புகழ்ந்துதள்ளிய ரவி சாஸ்திரி….!!

பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான்காவது இடத்திற்கு மணீஷ் பாண்டேதான் சரி…!

இந்திய அணியின் நான்காவது இடத்தின் தேடல் பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்துவரும் நிலையில், அந்த இடத்திற்கு விஜய் ஹசாரே தொடரில் நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடிய மணீஷ் பாண்டே சரியாக இருப்பார் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் பல ஆண்டாக நான்காவது இடத்தில் மியூசிக்கல் சேர் ஆடிவரும் நிலையில், அந்த இடத்தை மணீஷ் பாண்டே நிச்சயம் நிரப்புவார் என இந்திய அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கண்ணான கண்ணே….! தோனி_க்கு மசாஜ் செய்யும் ஸிவா” வைரலாகும் வீடியோ …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AUSvSL: மாற்று வீரராக அணியில் இடம் பிடித்த சர்ச்சை பந்துவீச்சாளர்!

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvsENG2019: காயம் காரணமாக நட்சத்திர வீரர் விலகல்- ரசிகர்கள் சோகம்…!!

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனிடையே நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE : களமிறங்குகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் டி10 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளார். அபுதாபியில் நடத்தப்படும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னாள் வீரர்களும் களமிறங்குகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி மன்னரான யுவராஜ் சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் இந்திய அணியை வழிநடத்தியது போல் ஊழலின்றி வழிநடத்துவேன் – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#GraemeSmith49 – முன்னாள் கேப்டனுக்கு கிடைத்த கௌரவம் …!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மிதிற்கு கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) கௌரவித்து. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துக்கு தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து எம்சிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்திற்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்த்தை வழங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளது. யார் இந்த கிரேம் ஸ்மித்: தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கிரிக்கெட் : இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு ..!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பெங்களூருவில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை எதிர்த்து ஆடியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். மைதானத்தில் ஈரப்பதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார் …..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விண்ணப்பித்து இருந்தார். கடந்த 33 மாதங்களாக தலைவர் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று BCC_யின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு  பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsBAN…. போட்டியை காண ரூ 50 மட்டுமே… ரசிகர்களை ஈர்க்க ஈடன் கார்டன் அறிவிப்பு ..!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை 50 ரூபாயாக குறைப்பதாக ஈடன் கார்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது.இதில் இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியை காண வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா நேரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஞ்சி மைதானத்துக்கு ராணுவ ஜீப்பில் வந்த தோனி….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது புதிய காரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானத்திற்கு வந்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய ஓய்வு என இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் தோனி, அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைக் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் டெக்னாலஜி விளையாட்டு

தோனி, சச்சின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள்….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய நமிபியா….!!

 கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று 19ஆவது ஆட்டத்தில் நமிபியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நமிபியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமிபியா அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்”…. கோலின் முன்ரோ சாதனையை சமன் செய்த அயர்லாந்து வீரர்.!!

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோவின் உலகச் சாதனையை அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரெய்ன் சமன்செய்துள்ளார். டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக இந்தத் தொடரில் விளையாட தகுதிப் பெற்றன. இந்த நிலையில், மீதமிருக்கும் ஆறு அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ணிட்டிங்க ரோகித்… அப்பமே வந்திருந்தீங்கன்னா… புகழ்ந்து பேசிய அக்தர்.!!

ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING : ஒயிட்வாஷ் ”தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா ”…! இன்னிங்ஸ் வெற்றி….

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றிக்காக இன்னும் ஒருநாள் காத்திருக்கும் இந்திய அணி….!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AUSvPAK டி20 தொடர்…. காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீரர்.!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

71 ஆண்டுகால சாதனை முறியடிப்பு… பிராட்மேனை தூக்கி வீசிய “ஹிட் மேன்”..!!

உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#TheHundredDraft…. “கெய்ல், மலிங்காவை எந்த அணியும் வாங்கவில்லை “… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மலிங்கா  ஆகியோர் இங்கிலாந்தின் ‘100 பந்துகள்’ என்ற புதிய போட்டிக்கான, எந்த அணிகளாலும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள ‘100 பந்துகள்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்”… தோனிக்கும் தான் வயசாயிடுச்சு அவர் விளையாடலால?… சர்பராஸ் மனைவி கேள்வி.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமதுவின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்ஃபராஸ் அகமதுவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்குப் அப்புறம் நாதான் டா.. இதோ என்னோட புதிய சாதனை….!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் சுவாரஸ்யமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பொதுவாக, பேட்டிங்கில் டெய்லெண்டர்ஸ்கள் களமிறங்கியவுடனே அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டால், பலருக்கும் ஆச்சரியமாகதான் இருக்கும். பந்தை வீசுவதில் செலுத்தும் வேகம் சில சமயங்களில் அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும். அந்தவகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ என்ன ஸ்டைல் காட்டுறியா” சன் கிளாஸ் எதுக்கு? யுவியை ட்ரோல் செய்த சச்சின்…!

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங்கை கலாய்த்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். தற்போது மூவரும் ஓய்வுபெற்றதால் களத்தில் அடித்த லூட்டிகளை தற்போது சமூக வலைதளங்களில் அடித்துவருகின்றனர்.அந்தவகையில், ஹர்பஜன் சிங் நேற்று முன்தினம் (18.10.2019) தனது ட்விட்டரில் சச்சின், யுவராஜ் ஆகியோருடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை நினைவுகூர்ந்தார். அந்தப் பதிவில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே சதம் …… இரண்டு சாதனை ….. ரோஹித் புதிய ரெக்கார்டு …..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சதமடித்த ரோஹித் 117*…. அசத்திய ரஹானே 83*… வலுவான நிலையில் இந்திய அணி..!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதானமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயோ பாவம்… சர்ஃப்ராஸ் பதவி நீக்கம்… கொண்டாடிய பாக். கிரிக்கெட் வாரியம்… கோபத்தில் ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸின் பதவி நீக்கப்பட்ட நேரத்தில் அதனைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அகமது கடந்த 2016ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் அவரே தேர்வானார். அணியின் கேப்டனாக இருந்தாலும் இந்தாண்டு நடைபெற்ற உலக்கோப்பைத் தொடரில் சர்ஃப்ராஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுமட்டுமில்லாமல் ஒரு கேப்டனாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சீ….சீ …. இவன் கேப்டனா ? ”முட்டாள் , தைரியமில்லாதவன்” அக்தரின் ஆக்ரோஷம் …!!

பாகிஸ்தான் டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃப்ராஸ் அகமதுவை நீக்கியது சரிதான் என்ற முறையில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 போட்டிகளின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது செயல்பட்டு வந்தார். சமீபத்தில், பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியோடு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் தலைமையில், இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”முதல் போட்டிக்கே போகல” என்னடா இது தலைவருக்கு வந்த சோதன …!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி நாளை தொடங்கவுள்ள ஐஎஸ்எல் தொடக்க விழாவிற்கு செல்கிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று ராஞ்சியில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுடன் செல்ல இருந்தார்.ஆனால் அவர் நாளை கேரளாவில் தொடங்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசனுக்கான தொடக்க விழாவிற்கு செல்ல வேண்டியிருப்பதால் இந்த பயணம் ரத்தானது.   […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. Virat […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்ப பாத்துடேன்… இது அவங்களேதான்- இந்திய வீரர்களை புகழ்ந்த முன்னாள்  ஜாம்பவான் …!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள்  ஜாம்பவான்களில் ஒருவருமான பிரைன் லாரா இந்திய அணியையும், வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பார்க்கும் பொழுது 80களில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்ப்பதைப் போல் உள்ளது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜாஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோரை காணும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் போடல …. வேற ஆள அனுப்பலாம்னு இருக்கேன்… டூபிளஸ்ஸிஸ் ஐடியா …!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதற்கு வேறு வீரரை அனுப்பவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்பயாவது பாக்கலாம்ல….. ”ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தோனி” கொண்டாடும் ரசிகர்கள் …!!

 இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் 3_ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தோனி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவர் என்னா பண்ணிட்டாரு? – கங்குலி ‘நச்’ பதில் …….!!

BCCI_யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்ப  ட்டுள்ளார். அவர் வரும் 23ஆம் தேதி அப்பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நான் எப்பவும் உங்க பக்கம் தான் மம்மி” ஹர்திக் பாண்டியா பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

”ஊழல் வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்” ஐந்து ஆண்டு சிறை தண்டனை …!!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நீங்க இருந்தது போதும்… “கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் நீக்கம்”… பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமதை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கான 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றியையும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியையும் சந்தித்தது.   அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்தான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“T10 கிரிக்கெட்” மீண்டும் களத்தில் இறங்கும் சிக்ஸர் நாயகன்…… உலக பௌலர்களுக்கு அதிர்ச்சி….. இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி….!!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் அபுதாபில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட் வரலாறானது டெஸ்ட் வடிவில் தொடங்கி காலப்போக்கில் ஒருநாள், டி20 என்பதையெல்லாம் தாண்டி தற்போது டி10 தொடராக உருமாறியுள்ளது. அந்த வகையில் டி10 தொடர்கள் 2017ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு நடைபெறவுள்ள டி10 தொடரில் பல முன்னணி அணிகளின் நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அந்த வரிசையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: கேப்டன் உள்பட 3 வீரர்களுக்கு ஐசிசி தடை …!!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வீரர்களில் அந்த அணியின் கேப்டன் முகமது நவீதும் ஈடுபட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈட்டுபட்டதாக அந்த அணியின் பேட்ஸ்மேன் ஷைமன் அன்வர், பந்துவீச்சாளர் கதீர் அகமது ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தது.அந்த சூதாட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#HBDAnilKumble : ஆஸியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அனில் கும்ப்ளே…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளரான அனில் கும்ப்ளே நேற்று  தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டியது கங்குலி என்றால், அதே ஆஸ்திரேலியாவை இந்தியாவை பார்த்து பயப்பட வைத்தவர், அனில் கும்ப்ளே. சாந்தமாக இருந்த அவரும் அந்தத் தொடரின் போது ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.அனில் கும்ப்ளே என்ற பெயரை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தாடை உடைந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 14 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சேட்டை செய்யும் ஹர்பஜன்” ஜான்டி ரோட்ஸ் அதிரடி பதில் …..!!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கோரிக்கைக்கு, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் சரியாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது மட்டுமின்றி அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் வார்த்தைகளால் விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாது சக வீரரின் பதிவுகளுக்கு கேலியான பதில்களை பதிவிட்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறுகின்றனர்.அந்த வகையில் ஃபீல்டிங் ஜாம்பவானான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அனில் கும்ளே_க்கு வாழ்த்துக்கள்” சேவாக்கின் சேட்டைய பாருங்க….!!

முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே நேற்று  தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியாவின் பெரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டுக்கு முன்….. ”மொஹாலியில் தீபாவளி”….. சச்சினை நினைவு கூறும் BCCI ..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் முறியடித்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.   இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸி. கிரிக்கெட் அணிக்கு கிடைத்த புதிய கௌரவம்….!!

ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்காக வழங்கப்படும் விருதில் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் Women’s Health Women in Sport Awards என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணி கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருதை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நானும் மனுஷன்தாங்க”… எனக்கும் கோபம் வரும் – மனம் திறந்த தோனி …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு ஏற்படும் கோபம் குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் என்றாலே பரபரப்பான ஆட்டங்கள், நெயில் பைட் நிமிடங்கள் என பல்வேறு தருணங்கள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். அதிலும் அணியை வழிநடத்தும் கேப்டன்கள் இதுபோன்ற சமயங்களில் தவறுகள் நேரும்போது, பிறர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் மிகவும் உணர்ச்சிகரமிக்க கேப்டன்களாக வலம் வந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்றா வெடிய….. ”சச்சின் , சேவாக் வந்துட்டாங்க” ….. ரெடியான 90ஸ் லெஜண்ட்ஸ்…!!

சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரில் சச்சின், சேவாக், உள்ளிட்ட 110 ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடவுள்ளனர். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளனர். சாலை பாதுகாப்பின் விழப்புணர்வுக்காக அடுத்தாண்டு உலக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற 90ஸ் […]

Categories

Tech |