இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]
Category: கிரிக்கெட்
வங்க தேச அணிக்கு புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் . இங்கிலாந்தில் கடந்த மே 30-ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதில் 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டத்திலேயே வங்கதேச அணி வெளியேறியது. இதன்பின் , வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ரஹோட்ஸ் உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும், ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று வேட்டியால் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும், ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின் பயிற்சியாளராகவும் […]
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]
நம் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இந்த சுதந்திரதின நன்னாளில் […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு […]
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு […]
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் ஓட ஓட விரட்டிய வயதான தம்பதியினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் […]
2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறவுள்ளது. இதில் மகளிர் டி-20 ஓவர் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளது. அந்த வகையில், சர்வதேச […]
எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து இடையே 2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் […]
ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைத் தொட்டு வணங்கினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணைத்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் வருகை தந்துள்ளார். நெல்லையில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகப்படுத்திய வாட்சன் கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து படகு மூலம் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாற இருக்கிறார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான் அணி ரஹானே தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், அவர் நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ரஹானே டெல்லி அணிக்கு மாற இருக்கிறார். அவரை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி […]
கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]
ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம் எஸ் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றுவரும் எம் எஸ் தோனி தற்போது காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் 106 டி.ஏ பாட்டலினில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மாதம் 15-ம் தேதி வரை அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கவும் அதில் இளைஞர்களுக்கு […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்காக அவரது மனைவி சாக்க்ஷி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்கு எப்போதும் வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது. பைக்குகள்,கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்துள்ள தோணி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். தோணியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடையும் நிலையில் அவரது மனைவி சாக்க்ஷி தோணிக்காக விலை உயர்ந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று மதியம் நடக்கவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அமித் தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைக்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடக்கவிருக்கிறது. இந்தப் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது t20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 […]
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது . இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் . இதன்பின் இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீப்பர் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்கு கிடைத்தது. இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு […]
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள் மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய […]
இந்திய அணி கேப்டன் சக வீரர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் சரியாக பேசிக் கொள்வது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் […]
பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய […]
நாடைபெற இருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எங்களது அணிக்கு சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பர்மிங்காமில் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி […]
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20-20 கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றிபெற்றது. இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி அணியும் , காஞ்சி அணியும் மோதியது. முதலில் ஆடிய காஞ்சி […]
இந்திய கிரிக்கெட் வீரர்களை சரியாக கையாள தெரிந்தவர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளரில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் விமர்சனம் எழுந்தது. மேலும் ரவிசாஸ்திரி தன்னிசையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் காலக்கெடு முடிந்த […]
TNPL தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.TNPL தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. திண்டுக்கல் MGR கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் […]
இந்தியா கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ விளையாட தடை விதித்துள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இளம் வீரரான ப்ரித்விஷா மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஆவார் . இவர் இந்திய அணிக்காகவும் விளையாடியவர் ஆவார். இந்நிலையில், இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது சோதனை நடத்த உத்தரவிட்டது. சோதனையின் முடிவில் இந்தியாவின் இளம் வீரரான ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது . இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் […]
இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற […]
பல பெண்களுடன் தொடர்பு விவகாரத்தில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் வாசிம் கான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் சுற்றுடன் வெளியேறியது . அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மட்டும் அணியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்_கின் மருமகனான சமீபத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த ஒரு சர்சையில் சிக்கினார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் […]
எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]
இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது பற்றி புகார் எழுந்தால் ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐசிசி யின் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என முன்னாள் […]
பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 27 வயதான இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் கூட இவர் சிறப்பாக பந்துவீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக அமீர் 38 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்க்ரீன் சாட் இப்பொழுது இணையத்தில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவை பாக். கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் சில போட்டியில் சிறப்பாக ஆடினார். வங்கதேச அணிக்கு […]
இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார் உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 வகையான கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் […]
தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார் உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக […]
இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெற்று […]
என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் […]
இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதாலேயே ரிஷப் பண்டை தேர்வு செய்தோம் என்று இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டால் ஆத்திரமடைந்த ராயுடு டுவிட்டரில் கிண்டலாக பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ராயுடு . […]
லசித் மலிங்கா இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்கிறார் 35 வயதான ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் லசித் […]