Categories
கால் பந்து விளையாட்டு

கோப்பா டெல் ரே காலிறுதிப் போட்டியில் பார்சிலோனோ, ரியல் மாட்ரி தோல்வி

ஸ்பெயினில் நடத்தப்படும் கோப்பா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனோ, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் தோல்வியைத் தழுவின. ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோப்பா டெல் ரே தொடர் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படுகிறது.இதனிடையே இந்தாண்டுக்கான தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனோ அணி அத்லெட்டிக் பில்பாவ் அணியுடன் மோதியது.இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெங்களூருவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா!

இந்தியன் மகளிர் கால்பந்து லீக் தொடரில் பெங்களூரு யுனைடெட் அணியை வீழ்த்தி கோகுலம் கேரள அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்தியன் மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்வருகின்றன. இதன் நான்காவது சீசன் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதில், சேது மதுரை, கோகுலம் கேரளா, பராடோ எஃப் ஏ உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவால் தள்ளிப்போன கால்பந்து போட்டிகள் …!!

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன கால்பந்து கிளப் அணிகள் ஆடவுள்ள ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். […]

Categories
கால் பந்து விளையாட்டு

இரண்டு கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்!

ஃபியோரெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள் உள்பட 3-0 என்ற கணக்கில் ஜுவண்டஸ் அணி வெற்றிபெற்றது. சீரி ஏ லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து ஃபியோரெண்டினா அணி ஆடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜுவண்டஸ் அணிக்கு முன்னால், ஃபியோரெண்டினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனிடையே முதல் பாதியின் ஜுவண்டஸ் அணிக்கு 40ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நட்சத்திர வீரர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்சத்பூரை புரட்டியெடுத்த ஏடிகே!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 0 என்ற கோல்கணக்கில் ஜாம்சத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 02’ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதனையடுத்து முதல் […]

Categories
கால் பந்து விளையாட்டு

சரமாரியாகக் கோலடித்து அசத்திய சென்னை: கேரளா அணியை வீழ்த்தி அபாரம்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்று முன்தினம் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி 6-3 என்ற கோல்கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ (rafael crivellaro) ஆட்டத்தின் 39’ஆவது, 45+1’ஆவது நிமிடங்களில் […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஒரே கிக்… ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள். அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து – 50 பேர் காயம் ……!!

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெங்களுரை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த மும்பை எஃப்சி

இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னை எஃப்சி அபாரம்: வீழ்ந்தது கவுகாத்தி …!!

ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின்  60வது ஆட்டம்  சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது. நார்த் ஈஸ்ட்   எஃப்சி (கவுகாத்தி)அணியும் சென்னை எஃப்சியும் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு அடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. […]

Categories
கால் பந்து டென்னிஸ் விளையாட்டு

என்னமா ஏர்ல பறக்குறார்… ஜோகோவிச்சுக்கு ஹெட்டிங் சொல்லித்தந்த ரொனால்டோ..!!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என்று செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கற்றுத் தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சர்வதேச கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சீரி ஏ லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் சாம்ப்டோரியா அணியை வீழ்த்தியது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

ISL கால்பந்து போட்டி : சொந்த மண்ணில் கேரளாவை வீழ்த்திய சென்னை..!!!

I S L கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில்  கேரளா  பிளாஸ்டர்ஸ்சை வீழ்த்தி சொந்த மண்ணில் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது  வெற்றியை பதிவு செய்தது.   6-வது இந்தியன் சூப்பர் லீக்  கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக்  போட்டி  ஆட்டத்தில் சொந்த மண்ணில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி,மற்றும்  கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 4-வது […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!

இந்த சீசனுக்கான ஐஎஸ்எல், ஐ லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் பங்கேற்கலாம் என ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போலவே கால்பந்துப் போட்டிக்கும் இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் ஆகிய தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட […]

Categories
கால் பந்து விளையாட்டு

நூலிழையில் பறிபோன சென்னை அணியின் வெற்றி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் ஜாம்சத்பூர் அணியும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய இந்திய ஆட்டத்தின் 26’ ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன்…!!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பூமா (PUMA) நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். உலக கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் தற்போதைய இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமாக இருப்பவருமான சுனில் சேத்ரி, தற்போது விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் தன்னை இணைத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பூமா நிறுவனத்துடன் […]

Categories
கால் பந்து விளையாட்டு

8 கோல்கள், 2 ரெட் கார்ட், 2 பெனால்டி, இரண்டு செல்ஃப் கோல் – ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் அரங்கேறிய டிராமா!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அஜாக்ஸ் – செல்சீ அணிகளுக்கு இடையே ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டி 4 – 4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஹெச் பிரிவில் நேற்று லண்டனில் உள்ள ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணி, இங்கிலாந்தின் செல்சீ அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அஜாக்ஸ் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மாரடைப்பிலிருந்து மீண்டு அணிக்கு திருப்பிய கேப்டன்… ரசிகர்கள் உற்சாகம்..!!

ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார். அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

7 நிமிடத்தில் மெஸ்ஸி அணியை போட்டுத் தள்ளிய லெவாண்டே…!!

லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியிடம் தோல்வியடைந்தது. லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை எதிர்த்து லெவாண்டே அணி மோதியது. இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நட்சத்திர அணியான பார்சிலோனா களத்தில் தீவிர ஆக்ரோஷத்துடன் செயல்பட்டது. = முதல் பாதியின்போது பார்சிலோனா அணியின் ஆர்தர், நெல்சன், சமீடோ ஆகியோர் மெஸ்ஸிக்கு பந்தை பாஸ் செய்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை மீண்டும் தகர்த்த இங்கிலாந்து….!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் […]

Categories
கால் பந்து விளையாட்டு

#ENGvNZL : என்னது..! இதுலயும் பவுண்டரி கணக்கா? #RWC2019 …!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இதுவரை நியூசிலாந்து அணி இந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டியில் வெற்றியையும் நடைபெறாத ஒரு போட்டியில் சம புள்ளிகளையும் பெற்றது. போட்டிகள் […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னையின் எஃப்சிக்கு எதிரான போட்டி – முதல் பாதியில் எஃப்சி கோவா முன்னிலை ….!!

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது […]

Categories
கதைகள் கால் பந்து விளையாட்டு

”மகன் கால்பந்தாட காரை விற்ற தந்தை” கனவை எட்டிப்பிடித்த கால்பந்து வீரனின் கதை…!!

இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கம்பேக் தந்து வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்….!!

ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில், இந்தியாவில் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தொடரின் ஆறாவது சீசன் இன்று கொச்சியில் கோலகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதலில் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.   இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் கேரளா அணி இரண்டு […]

Categories
கால் பந்து விளையாட்டு

#T20WorldCup: நெதர்லாந்தின் டென் டெஸ்காடே அதிரடியில் வீழ்ந்தது நமிபியா அணி….!!

கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஏழாவது ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணியை வீழ்த்தியது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறியது. இதனால் […]

Categories
கால் பந்து விளையாட்டு

”மீண்டும் மலிங்கா” இலங்கை ரசிகர்கள் உற்சாகம் …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாதுகாப்பு காரணம் கருதி இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்று அசத்தியது.தற்போது, இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி….!!

பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய கால்பந்து லீக் தொடரில் அதிக கோல்களை அடித்து ஆறாவது முறை கோல்டன் ஷூவை கைப்பற்றினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் கால்பந்து விளையாட்டு வீரர் பார்சிலோனா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் 36 கோல்களை அடித்து லீக்கின் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இதன் காரணமாக இன்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

#VijayHazare2019: ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ – தமிழ்நாடு அணி அசத்தல்!

2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. #VijayHazare2019: 2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து குஜராத் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, தமிழ்நாடு சார்பாக அபினவ் முகுந்த் – முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தில் இறங்கிய […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஒலிம்பிக் கால்பந்து போட்டி நிறைவு…இந்திய ஆண்கள் பிரிவில் பதக்கம்!!..

சென்னையில் நடைபெற்ற சிறப்பு  ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் நிறைவு பெற்றன. ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஆண்களுக்கு மூன்று பிரிவுகளாகவும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளாகவும் நேரு உள்விளையாட்டு அரங்கில்  மூன்று நாட்களாக நடைபெற்றது.  இதில் ஆண்கள் “A” பிரிவில்  இடம் பெற்றிந்த இந்தியா 1வது அணி மூன்றாவது இடத்தையும் “B” பிரிவில் இடம் பெற்றிந்த இந்தியா 2 வது அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. பெண்களில் “A” பிரிவில் ரஷ்யா முதலிடத்தையும்”B” பிரிவில் இந்தோனேசியா முதல்  இடத்தையும்  பெற்றுள்ளது. […]

Categories

Tech |