ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் மேடன் துப்பாக்கிச் சுடுதல் தொடரின் மகளிர் தனிநபர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கப் பதக்கம் வென்றார். மேடன் துப்பாக்கிச் சுடுதல் கோப்பை ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா பங்கேற்றார். இதில், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 251.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து […]
Category: மற்றவை
திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]
ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது…!! உயரம் அதிகமாக இருந்தால் கூட பரவாயில்லை.உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 1.தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், இது நீங்கள் சீராக வளர உதவும். 2. உயரம் அதிகரிக்க சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல […]
கமிட்டெட் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு அந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது…!! சிங்கிள் சிங்கிள் என்று கூறிக்கொண்டு ஒண்டிக்கட்டை ஆக இருப்பதை விட கமிட்டெட் ஆக ஒரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சில இளைஞர்கள் நினைக்கின்றனர். கமிட்டாகி இருப்பவரை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு பெண் இருப்பார் அவர் அந்த ஆணின் சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார். சில சமயங்களில் உடல் சரியில்லாத நேரத்திலும் கூட அருகில் இருந்து அன்புடனும் அரவணைப்புடனனும் பார்த்துக்கொள்வார். காதல் திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் […]
சிங்கிளாக இருப்பதே பெஸ்ட் என்று கெத்தாக சொல்லும் அளவிற்கு இளைஞர்கள் உண்மையிலேயே அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்…? காதல், திருமணம் என கமிடட் வாழ்க்கை வாழ்வதை விட சிங்கிளாக இருப்பதுதான் சுகம் என பல இளைஞர்கள் கெத்தாக சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு முரட்டு சிங்கிள் என பெயர் வைத்துக்கொண்டும் இளைஞர்கள் அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்..? சிங்கிளாக இருப்பவர் உங்களை நீங்கள் கவனத்துக் கொள்வீர்கள். குறிப்பாக உடல் நலம், எதிர்கால வாழ்க்கை,கல்வி போன்றவற்றில் நீங்களே கவனம் செலுத்துவீர்கள். […]
போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். […]
டீ அதிக அளவில் அருந்துவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன…!! அநேக மக்களுக்கு டீ குடிக்கும் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போகும்போதும் வரும்போதும் டீ யில் பால் சேர்த்தோ சேர்க்காமலோ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இதுபோதாது என்று பெட் டீ,ஆபீசுக்கு போகும்போது ஒரு டீ ஆபீசை விட்டு வரும்போது டீ என டீ குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.இதுபோன்ற டீ பிரியர்களால் தான் நம் ஊர்களில் டீ கடைகள் நல்ல ஓட்டம் பிடிக்கிறது. […]
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் […]
சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம் பல்வேறு உணவுகளின் மாதிரியை சேகரித்து ஆய்வுகளை நடத்தி உள்ளது. பாக்கெட் தின்பண்டங்களான, நூடுல்ஸ்,பர்கர், பீட்சா, சூப் பவுடர்கள், பிரைடு சிக்கன், வேப்பர் பிஸ்கட் மற்றும் பல்வேறு துரித உணவுகளை ஆய்வுக்கு எடுத்தார்கள். இதன்படி பிரபலமான நிறுவனங்களின் 19 பர்கர்-பீட்சா வகைகள், 14 சிப்ஸ்-நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 33 தின்பண்டங்களை ஆய்வு செய்து அதில் கொழுப்பு, உப்பு,கார்போ ஹைட்ரேட் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சி செய்தனர். இதுபோன்ற உணவுகளில் சேர்க்கப்படும் […]
இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம் டிசம்பர் 10, 2019 10:49ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபைஎன்ற பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இந்த சேவையின் முதற்கட்டமாக இது டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் […]
ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக, ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் […]
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் இளவேனில் 250.8 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.250.7 புள்ளிகளை எடுத்த […]
உலகக்கோப்பை ரக்பி தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 19-16 என்ற புள்ளிக்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் […]
பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]
உலக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை விளையாட்டு போட்டியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சீனியர் உலகக் கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். […]
என்னுடைய அடுத்த கட்ட இலக்கு சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் என்று இளவேனில் தெரிவித்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வளரிவன் சீனியர் உலக கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, […]
தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் […]
இன்று மாலை 4 மற்றும் 6 மணியளவில் pubg போட்டி நடத்தப்பட இருப்பதாக தனியார் இணையதளம் ஒன்று அறிவித்திருக்கிறது. தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோருக்கு பயனாக இருக்கும் வகையில், கேமிங்மோங் என்ற இணையதள குழு நாள்தோறும் பப்ஜி […]
உலக கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இந்தியர் என்ற சாதனையை ஐஸ்வர்யா நிகழ்த்தியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் மகளிர் பிரிவுக்கான உலக கோப்பை மோட்டார் வாகன பந்தயத்தின் அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்றில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே துபாயில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த நிலையில் நேற்று அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்று […]
தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை இந்தியா பிடித்தது. 23-வது ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், ஜப்பான், குவைத், தாய்லாந்து, ஓமன் உட்பட 43 நாடுகளில் இருந்து 800-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 800 […]