Categories
விளையாட்டு ஹாக்கி

மகளிர் ஹாக்கிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது – ராணி ராம்பால்..!!

பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்ப்பதாக கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடிவருகிறார். 2009ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா

தமிழில் கெட்ட வார்த்தை மட்டும் தான் சொல்லிக்குடுத்தாங்க….. முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி…!!

83 என்ற திரைப்படத்திற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலை  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  83 திரைப்பட முன்னோட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய  கபிலதேவ், நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருக்கும் சேப்பாக்கம் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து  நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழ் கற்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கண்ணீரோடு வெளியேறிய 15 வயது வீராங்கனை கோகோ; ரசிகர்கள் சோகம்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தோல்வியடைந்தார். 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபை எதிர்த்து அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின் ஆடினார். முன்னதாக நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகாவை, கோகோ வீழ்த்தியிருந்ததால், […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

“தோனிக்கு நிகரான வீரர் இல்லை” – கபில் தேவ்

நேரம் வந்தால் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற தான் வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 83. அந்தப் திரைப்படம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள என்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கபில்தேவ் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட்

இந்திய அணி உலக கோப்பை வென்றது… திரைப்படமாக உருவாகியுள்ளது..!!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு வென்றது. அதை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘83’. திரைப்படம் குறித்து இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.  சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கபில்தேவ் ஸ்ரீகாந்த், திரைப்படம் 83ல் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரமாக நடித்து திறமையை வெளிக்காட்டியுள்ளார். நடிகர் ஜீவா, […]

Categories
விளையாட்டு

பந்து வீச்சில் இந்திய அணி

முதல் T20  போட்டியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து இரண்டாவது T20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியை பந்து வீச கூறியுள்ளது. ஆக்லாந்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றது. இந்திய அணி  1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்துவீச நிர்ணயித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அது கோலியின் முடிவு… கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் அவதாரம் குறித்து கங்குலி!

ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கேப்டன் கோலியின் முடிவு என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷார்ட் பந்துவீச்சில் வலுவிழந்த சிட்னி தண்டர்ஸ்!!

சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றிபெற்றது. பிக் பாஷ் லீக் தொடரின் 50ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஹோபர்ட் அணி கேப்டன் மேத்யூ வேட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹோபர்ட் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் ஷார்ட், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாஸ் காட்டிய ராகுல், ஸ்ரேயஸ் ஐயர்… நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மேத்யூஸ் இரட்டை சதம்… ஜிம்பாப்வேவை பந்தாடிய இலங்கை!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரைக் எர்வின் 85 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

வெறும் 32 நிமிடம்…. காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை …!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனையுமான கரோலினா மரின் – தாய்லாந்தின் பார்ன்பாவே சொச்சுவாங்குடன் மோதினார். இதில், ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-11, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க தலை முடியை விட…. ”அதிகமா என்னிடம் இருக்கு”…. கிண்டல் செய்த அக்தர் …!!

பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினரைப் பாராட்டுவது பற்றிய சேவாக்கின் கருத்திற்கு, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2016ஆம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், இந்தியா வீரர்களைப் பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவது பணம் பெறுவதற்காகவே எனப் பேசியிருந்தார். பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதில், ”சேவாக் தலையில் உள்ள முடியோடு ஒப்பிடுகையில், என்னிடம் அதிகமான பணம் உள்ளது. நான் கிரிக்கெட்டில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி சானியா!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்சா விலகிய நிலையில், இன்று மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் பாதியிலேயே விலகினார். மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து தான் விலகுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்திருந்தார். இருப்பினும், மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நடியா கிச்னோக்குடன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

முத்தமுடன் சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நடால்….!!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது பந்தை எடுத்து தரும் சிறுமையை தாக்கியதால் நடால் அவரிடம் மன்னிப்பு கேட்டார். நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் ஃபெட்ரிகோ டெல்போனிஸுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ரோஹித்துடன் இணைந்த சர்ஃபராஸ் கான்” டிராவில் முடிந்த மும்பை – உபி ஆட்டம் …!!

ரஞ்சி டிராபி தொடரில் மும்பை – உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2019-20ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சி டிராபி சீசன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பிரிவு போட்டிகளில் மும்பை – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அக்‌ஷ்தீப் நாத், உபேந்திர யாதவ் ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் 8 விக்கெட்டுகளை இழந்து 625 ரன்களைக் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஒரே கிக்… ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள். அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சம ஊதியம் கேட்பதற்கு இது சரியான தருணம் அல்ல’ – ஸ்மிருதி மந்தனா!

ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மகளிர் கிரிக்கெட்டர்களுக்கும் கொடுக்கவேண்டும் என கேட்பதற்கு இது சரியான நேரம் இல்லை என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஆடவர், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 7 கோடியாகவும், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க பவுலரின் தலைக்கு மேல் குதித்த பேட்ஸ்மேன்.!!

பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் குதித்து காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 47ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மெல்போர்ன் அணிக்கு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி வெல்லுமா?… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

 இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான  கிரிக்கெட்,  முதலாவது  20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது.  அங்கு 5,  20 ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

99 வெற்றிகள்… ஆஸ்திரேலிய ஓபனில் சதம் விளாச காத்திருக்கும் ஃபெடரர்!

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்தத் தொடரில் 99 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜினோவிக்குடன் ( Filip Krajinovic) பலப்பரீட்சை நடத்தினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கில் மிரட்டிய பீட்டர் சிடில்… அடிலெய்ட் வெற்றி!

பிக் பாஷ் டி20 தொடரின் 48ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், இன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், மூன்றாவது இடத்திலிருக்கும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் நண்பரின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன்: சச்சின்

’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீங்க லோக்கல பாருங்க போதும்”…. பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை …!!

உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாள்களுக்கு முன்னதாக ஹர்திக், உடல்தகுதி சோதனையில் தன்னால் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கூறியிருந்ததால், தற்போது இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’பெங்காலின் ஜடேஜாவாக இருக்க விருப்பம்’ – ஹாட்ரிக் நாயகன் அகமது!

ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் ஷாபாஷ் அகமது, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ஹாட் ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து அந்த அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மனோஜ் திவாரி முற்சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

0-3 என்ற நிலையிலிருந்து 7-5 என மாறிய மூன்றாவது செட்; ரசிகர்களை அசரடித்த கோகோ!

15 வயதே நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து, ரோமானிய வீராங்கனை சொரானா கிறிஸ்டியா ஆடினார். அமெரிக்க வீராங்கனை கோகோ, தனது முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்ததால் கோகோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதனிடையே இன்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

”கடுப்பாகிய உலக சாம்பியன்” டென்னிஸ் மட்டையை தூக்கியெறிந்தார் …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றைய பிரிவின் இரண்டாவது சுற்றின்போது கோபமடைந்த நவோமி ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசாகா பங்கேற்கும் போட்டிகளில் ரசிகர்கள் முழுவதும் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

முதல் சுற்றிலே….. ”3 இந்திய வீரர்கள் காலி” அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர். 2020ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் தொடங்கியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்த்து இந்தோனேஷியாவின் சேஷார் ஆடினார். இதில் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்களில் 14-21, 11-21 என தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியின் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு கோப்பைக்காக மோதும் ஐந்து டீம்… பிக் பாஷ் புதுமை!

நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் புதிய விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேற ஐந்து போட்டிகளில் விளையாடும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர் உலகளவில் மிகவும் பிரபலமானது. தற்போது பிக் பாஷ் டி20 தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுவரை வரலாற்றில் இல்லாத புதிய விதிமுறையை மாற்றியமைத்துள்ளது. அதன்படி இந்தத் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டென்மார்க் வீராங்கனை….. முதல்முறை தோல்வியடைந்த சாய்னா நேவால்…!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் டென்மார்கின் லைன் ஜார்ஸ்ஃபெல்டிடம் தோல்வி அடைந்தார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்க்கைச் சேர்ந்த லைன் ஜார்ஸ்ஃபெல்ட்டை (Line Kjaersfeldt) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் – மூன்றாம் சுற்றில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். மெல்போர்னில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் டட்சுமா இடோவுடன் மோதினார். இப்போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1,6-4, 6-2 என்ற நேர் செட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து சானியா மிர்சா விலகல்!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் சானியா மிர்சா. கடந்த சில ஆண்டுகளாக இவர் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். குழந்தை பெற்றபின் இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடாமல் இருந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஹோபார்ட் இன்டர்நேஷனஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிரபல கிரிக்கெட் வீரர் தற்கொலை முயற்சி” பின்னணி என்ன ?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார். 2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி  வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம்   ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் – ஜெர்மன் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹாவுக்கு அலர்ட் தந்த பிசிசிஐ!

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அடுத்தபோட்டியில் பங்கேற்க வேண்டாம் என இந்திய வீரர் சஹாவிடம் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றபின் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துவருபவர் விருத்திமன் சாஹா. இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று சதம், ஐந்து அரைசதம் உட்பட ஆயிரத்த 238 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’இதோ வந்துட்டோம்ல’… நியூசிலாந்துக்கு சென்றடைந்த கோலியின் படை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின், கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து தவான் நீக்கம்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர் ஷகர் தவானின் இடது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், […]

Categories
மற்றவை விளையாட்டு

”தூக்கி எறியப்பட்ட ஜாம்பவான்கள்” கொதிக்கும் ரசிகர்கள் …!!

இந்திய விளையாட்டுத் துறையின் ஆலோசகர் குழுவிலிருந்து இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2015இல் அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அகில இந்திய விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் ஆலோசகர் பட்டியலில் விளையாட்டுகளில் சாதித்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில், டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே வரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: டெல்லியில் 11 பேர் கைது

டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை மையமாகக்கொண்டு சில இளைஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்துசென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைதுசெய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேட்டைக்கார பய சார் இந்த ரோஹித்!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இந்திய வீரர் சாஹலை ஒப்பீடு செய்தது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் செல்லப்பிள்ளையாக வலம்வருபவர் சுழற்பந்துவீச்சாளர் சாஹல். இவர் களத்தில் செய்யும் சம்பவங்களை விட, களத்திற்கு வெளியே செய்யும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகிவிடும். இவரது சாஹல் டிவிக்காக தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பின்பும், இவரது சாஹல் டிவி பேட்டிகளுக்காகவே ரசிகர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தான் ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது – சானியா மிர்சா

 நான் விளையாட வேண்டிய டென்னிஸ் எனக்குள் இன்னும் அதிகம் உள்ளதாகக் கருதியதால் மட்டுமே டென்னிஸிற்கு திரும்பினேன் என சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் டென்னிஸ் விளையாட்டிற்குத் திரும்பிய சானியா மிர்சா, ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் ஆடி பட்டத்தைக் கைப்பற்றினார். இதனால் 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பங்கேற்றுள்ளதால், பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியன் ஓபன் […]

Categories
மற்றவை விளையாட்டு

மேடன் கோப்பை: தங்கம் வென்ற அபூர்வி சண்டிலா தங்கம்!

ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் மேடன் துப்பாக்கிச் சுடுதல் தொடரின் மகளிர் தனிநபர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கப் பதக்கம் வென்றார். மேடன் துப்பாக்கிச் சுடுதல் கோப்பை ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா பங்கேற்றார். இதில், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 251.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”5 பேர் டக் அவுட் … 3 பேர் 1 ரன்”…. 41 ரன்னில் ALL OUT …. இந்தியாவிடம் வீழ்ந்த ஜப்பான் …!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கத்துக்குட்டியான ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ப்ரியம் கார்க் முதலில் ஜப்பான் அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயமடைந்த இஷாந்த் … நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…!!

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இஷாந்த் சர்மா. தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் தேடி தந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு சவாலளிக்குமா ஜப்பான்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணி ஆடுகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணி ஆடுகிறது. நடப்பு சாம்பியனாகக் களமிறங்கியுள்ள இந்திய அணி முதல் போட்டியில் இலங்கை அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு களமிறங்கவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி தொடர்: 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஆதித்யா

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணி பந்துவீச்சாளர் ஆதித்யா தாக்கரே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் குரூப் சுற்றில் டெல்லி அணியை எதிர்த்து விதர்பா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் துருவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணியை விதர்பா பந்துவீச்சாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் சச்சின்

ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரண உதவிக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் அணிகளுக்கு இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக நிவாரண உதவிகள் திரட்டும் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ’புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ என்னும் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனர். அதில் வசூல் செய்யப்படும் நிதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மோசமான சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆனால் இந்தப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டூ ப்ளஸிஸ் ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. மூன்றாவது போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு டூ ப்ளஸிஸ் ஆட்டம் மீதான விமர்சனங்களும், கேப்டன்சி மீதான விமர்சனமும் அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இங்கிலாந்து அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”19 ஆண்டு சாதனை 19 ஆல் பறி போனது” அக்தரை தூசி தட்டிய பொடியன் …. !!

அதிவேகமாக பந்து வீசி 19 ஆண்டுகளாக அக்தர் வைத்திருந்த சாதனையை 19 வயது பந்து வீச்சாளர் முறியடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் ஆடிய போது இலங்கை அணியின் 17 வயதான மத்தீஷா பதிரானா 4 ஓவரை வீசினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘2021 வரை சிஎஸ்கேவுக்காக தோனி ஆடுவது நிச்சயம்’ – சீனிவாசன் உறுதி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2021ஆம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் விளையாடுவார் என்று அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியளித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பிசிசிஐ அண்மையில் வெளியிட்ட வீரர்கள் ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

Categories

Tech |