Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து தொடர்: தவான் பங்கேற்பதில் சந்தேகம்?

ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

9 ஆயிரம் ரன்கள்… சச்சின் சாதனையை உடைத்த ரோஹித்!

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 119 ரன்களைக் குவித்தது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இதற்காக ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

வெறும் 40 விநாடி…. வெற்றிபெற்று கம்பேக் தந்த மெக்கிரிகோர்….!!

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் வெல்டர்வைட் பிரிவில் பிரபல அயர்லாந்தின் கனோர் மெக்கிரிகோர் 40 விநாடிகளில் அமெரிக்காவின் டொனால்ட் செரோனை வீழ்த்தினார். அயர்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீரரான கனோர் மெக்கிரிகோர் (Conor Mcgregor) தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் (Ultimate Fighting Challenge 246) சிறந்த வீரராகத் திகழ்கிறார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் ஃவெதர்வைட், லைட்வைட் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவரான இவர், இன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வெல்டர்வைட் பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பழிக்கு பழி…. ஆஸி_யுடன் பழைய பகையை தீர்த்துக்கொண்ட கோலி அண்ட் கோ…!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் சாதனையைத் தகர்த்த கோலி….!!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டியில்… இரண்டு சாதனை…. தோனியை காலி செய்த கோலி …!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை […]

Categories
விளையாட்டு ஹாக்கி

கம்பேக் தந்த இந்திய ஹாக்கி அணி!

எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர்: 2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1ஆ… 2ஆ…. 7 முறை…. ”அடிவாங்கிய வெ.இண்டீஸ்” #U19CWC சாம்பியன் ஆனது …!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை முதன்முறையாக வீழ்த்தியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை வெஸ்ட் […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து – 50 பேர் காயம் ……!!

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’28 பந்துகள்… 1 ரன்… 4 விக்கெட்டுகள்…’ தோல்வியைத் தவிர்க்கப் போராடும் தென் ஆப்பிரிக்கா …!!

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்றுவரும் நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தன. இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த மோரிஸ்

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரின் கிறிஸ் மோரிஸ் தனது காலால் பந்தை எட்டி உதைத்து சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் டேனியல் ஹியூஸை ரன் அவுட் செய்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்வதற்காக பந்துவீச்சாளர்கள், கால்பந்து வீரராக மாறுவதைப் பார்த்திருப்போம். பிட்ச்சில் நடுவே இருக்கும் பந்தை கீழே குணிந்து எடுக்காமல் பந்துவீச்சாளர்கள் தங்களது கால்பந்து திறனை வெளிப்படுத்தி காலால் பந்தை ஸ்டெம்புக்கு எட்டி உதைத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்வார்கள். தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி அவுட் ஆனால்…!… ”இதுவும் ஒரு சாதனை தான்” எதிர்பார்ப்பில் ஸாம்பா …!!

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலியை அதிகமுறை அவுட் செய்த சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஸாம்பா பெற்றுள்ளார். தனது சிறப்பான பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளைப் படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனி ராஜ்ஜியம் நடத்திவருபவர் இந்திய அணியின் கேப்டன் கோலி. ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் ஆவரேஜ் 50க்கும் மேல் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனான இவரை விரைவில் அவுட் செய்ய வேண்டும் என்பதே எதிரணிகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவை ஆஸ்திரேலிய அணியின் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

முதல் நிமிடத்திலேயே கோல்… நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா…!!

 எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. . 2019ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இந்திய அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

22 பவுண்டரி, 2 சிக்சர்… மாஸ் காட்டும் ப்ரித்வி ஷா

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் பயிற்சி போட்டியில் ப்ரித்வி ஷா 100 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதன் முதல் பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி வென்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தற்போது நடந்துவருகிறது. […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வேலைவாய்ப்பு

உங்களுக்கு தகுதி இருக்கா ? ”பிசிசிஐ_யில் வேலை” கெத்தான வாழ்க்கை …!!

இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தேர்வுக்குழு உறுப்பி9னர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை சில நாள்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தினார். இதனால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மகளிருக்கான அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அனைத்து உறுப்பினர்களும் புதிதாக தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் ரஹானே?

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் ஒருநாள் அணியில் மீண்டும் ரஹானே இடம்பெறவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றோடு நிறைவு பெறவுள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. நியூசிலாந்தில் நடக்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று இந்தியா – இலங்கை மோதல் …!!

13-வது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா வில் வெள்ளியன்று தொட ங்கியது. இளசுகள் பங்கேற் கும் தொடர் என்பதால் கிரிக் கெட் உலகம் இந்த தொடரை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் கள மிறங்கும் இந்திய அணி (பிரி யம் கர்க் தலைமையில்) தனது முதல் லீக் ஆட்டத் தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தியா – இலங்கை இடம் : மாங்குவாங் நேரம் : மதியம் 1:30 மணி

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்…..!!

ஆஸ்திரேலிய நாட்டின் தீவு மாகா ணமான டாஸ்மானியா நகரின் தலைநகர் ஹோபர்டில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது.  மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரி வில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரை னைச் சேர்ந்த நாடியா கிச்செனோக்குடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார். தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்திய சானியா ஜோடி இறுதி வரை முன்னேறி அசத்தியது.  இறுதியில் சீனாவின் ஜாங் ஷுயி – பெங் ஷுயி ஜோடியை எதிர்க்கொண்ட […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பேட்மிண்டன்… பரிசு விதிகள் மாற்றப்படுமா?

விளையாட்டு உலகின் முன் னணி பிரிவான பேட்மிண் டன் பிரிவில் ஒற்றையர் இரட்டையர் என இரண்டு பிரிவு உள்ளது. ஆடவர் ஒற்றையர், இரட்டையர் – மகளிர் ஒற்றையர், இரட்டையர் – கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 பிரிவு களில் போட்டி நடத்தப்படுகின்றன.  இவற்றில் முதன்மை மற்றும் கடின மானது என ஒற்றையர் பிரிவைக்  கூறி னாலும், உண்மையில் இரட்டையர் பிரிவு தான் மிகக்கடினமானது. ஏனென் றால் ஒற்றையர் பிரிவில் ஸுமாஷ் குறைவான வேகத்தில் தான் விளாசு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் மரணம்- கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தவருமான பாபு நட்கர்னி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நட்கர்னி வயது மூப்பின் (86) காரணமாக நேற்று மும்பையில் காலமானார். காலமான நட்கர்னிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவர் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 88 விக்கெட்டுகளையும், 1,414 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ் …!!

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. இப்போட்டியில், 341 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்த ஆப்கானிஸ்தான் ….!!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று கோலகலமாக தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று கிம்பேர்லி நகரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எந்த இடத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சியே’ – கேஎல் ராகுல்

எந்த இடத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான் என்று இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் கூறியுள்ளார். சமீப காலமாக இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கியவர் கேஎல் ராகுல். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் சிறிதும் மாற்றமின்றி தனது அதிரடி ஆட்டத்தால் 80 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். போட்டி […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெங்களுரை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த மும்பை எஃப்சி

இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னை எஃப்சி அபாரம்: வீழ்ந்தது கவுகாத்தி …!!

ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின்  60வது ஆட்டம்  சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது. நார்த் ஈஸ்ட்   எஃப்சி (கவுகாத்தி)அணியும் சென்னை எஃப்சியும் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு அடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘உள்நாட்டுத் தொடரில் கவனம் செலுத்துவதில் சவால்…!’

உள்நாட்டுத் தொடர்களில் வீரர்களைக் கவனம்செலுத்தக் கூறுவதில் சவால் ஏற்பட்டுள்ளது என ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்கு நாள்களாகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஆலோசனை நடத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”அனைத்து வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வமாக உள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விளையாட ரபாடாவுக்கு தடை!

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஆட்டமிழக்க செய்தபின், அவரை கிண்டல் செய்யும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால், இந்தத் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று தொடங்கிய மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், கோலி, ராகுல் ஆகியோரால் ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்போல் வார்னர் – ஃபிஞ்ச் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது!

இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பிட்ச்களில் ஓடியதால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்சு இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து இந்திய அணி சிறப்பாக ஆடியது. இந்திய பேட்ஸ்மேன்களான தவான், கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனிடையே இந்திய வீரர் ஜடேஜ ரன்கள் ஓடுகையில், பிட்ச்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே இன்னிங்ஸில் தவிர்க்க முடியாத வீரராக மாறிய ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 341 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் – தவான் இணை களமிறங்கி அதிரடி ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒதுக்கப்படும் சஞ்சு சாம்சன்: பந்திற்கு பதிலாகப் பரத் தேர்வு!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து ரிஷப் விலகினார். இவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹோபார்ட் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி..!!

ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஹோபர்ட் நகரில் மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி பங்கேற்றது. அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடான்செக் – செக்குடியரசு மேரி மேரி போஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் செட் ஆட்டம் ஆட்டத்தில் இரு ஜோடிகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தில் தோனி இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாமல் போனது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட அயர்லாந்து!

வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி நான்கு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அயர்லாந்து பேட்டிங் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இடக்கை கட்டைவிரல் காயத்துடன்தான் ஆஷஸ் தொடரில் ஆடினேன்!

கடந்தாண்டு ஆஷஸ் தொடரில் இடக்கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்துடன் தான் விளையாடியதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைத் தக்கவைத்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அதில் அனுபவ வீரர் பீட்டர் சிடில் ஆஷஸ் தொடருக்காக ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது குறித்து பீட்டர் சிடில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் 87 வயது ரசிகை காலமானார் – பிசிசிஐ இரங்கல்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரபலமடைந்த 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை, உடல்நலக்குறைவால் காலமானார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு பெரும் ஆதரவை அளித்தனர். அப்போது எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியைக் காண 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. மீண்டும்வந்த வில்லியம்சன் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலையில் தாக்கிய பவுன்சர்; காயத்தால் விலகிய ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது, பட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டு நாளில் நியூசிலாந்து செல்லும் இளம் வீரர் ப்ரித்வி ஷா!

தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற உடல்தகுதியை நிரூபித்த பின், இளம் வீரர் ப்ரித்வி ஷா நியூசிலாந்து தொடருக்கு பயணம் செய்யவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. தடை செய்யப்பட்ட மருந்தினை உபயோகப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாடுவதற்கு பிசிசிஐயால் அவருக்கு எட்டு மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்ததையடுத்து உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி போட்டியில் ப்ரித்வி ஷா கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராவிதமாக தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து!

2020ஆம் ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். இந்த ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடர் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்ட்டாவில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்றில், ஐந்தாம் நிலையில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஓஹோரி மோதினார். இதில் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஓஹோரி 14-21 என்ற கணக்கில் கைப்பற்ற, ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது திறமையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் வேணும்னா அப்படி செய்யட்டுமா ? அணிக்காக ஷிகார் எடுக்கும் முடிவு …!!

இந்திய ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன் என தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய மூவரும் அபாரமான ஃபார்மில் உள்ளதால், யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம், யாரை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்பதால் கடந்த போட்டியில் விராட் கோலி, ராகுலுக்காக நான்காவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே…!

 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]

Categories
நாமக்கல் மற்றவை மாவட்ட செய்திகள் விளையாட்டு

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

கிரிக்கெட் வீராங்கனையாக அவதாரம் எடுக்கும் அனுஷ்கா ஷர்மா..!!

முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார். முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்…  

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.  2019-ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு இந்த ஆண்டின் இரு அணிகளும் மோதும் முதல் போட்டிஇதுதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி பத்திரிகையாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்களுக்குத் தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் தனி வியூகம் வகுப்பதில் கில்லாடிகள். அதாவது ஒரு தொடரில் பங்கேற்கும் போது எதிரணி பந்துவீச்சாளர்களின் பிட்ச் மையத்தைக் கணிக்க ஒரு போட்டியை முழுமையாக ஒதுக்கி கணிப்பு வேலையைத் தொடங்குவார்கள். தான் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை பிட்சின் கணிப்பு கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு பேட்ஸ்மேனும் திட்டத்தோடு விளையாடுவார்கள். ஆனால் அடுத்த ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார்கள். இதனால் தான் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் ஆஸ்திரேலிய அணியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் தரும் சாம்பியன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]

Categories

Tech |