Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொதல்ல இத ஜெயிப்போம், அப்புறம் அத பத்திலாம் யோசிக்கலாம் – ரோஹித் சர்மா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”4ஆம் இடத்திற்கு இந்தப் பையன்தான் செட் ஆவான்’’ – இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்….!!

இந்தியாவின் நான்காம் இடத்துக்கும் எந்த வீரர் சரியாக இருப்பார் என்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் மிகப்பெரும் பிரச்னை நான்காம் இடத்தில் யாரை களமிறக்குவது என்பதுதான். இதற்காக இந்திய அணி மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் என பல வீரர்களை சோதனை செய்தது. ஆனால் இதில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!

இந்த சீசனுக்கான ஐஎஸ்எல், ஐ லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் பங்கேற்கலாம் என ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போலவே கால்பந்துப் போட்டிக்கும் இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் ஆகிய தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ட்விட்டரிலும் தோனியை விட்டுவைக்காத விராட் கோலி…..!!

ட்விட்டரில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய […]

Categories
மற்றவை

வைபை காலிங் சேவை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்…!!

இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம் டிசம்பர் 10, 2019 10:49ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.   ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபைஎன்ற  பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.  இந்த சேவையின் முதற்கட்டமாக இது டெல்லியில்  துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் […]

Categories
கால் பந்து விளையாட்டு

நூலிழையில் பறிபோன சென்னை அணியின் வெற்றி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் ஜாம்சத்பூர் அணியும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய இந்திய ஆட்டத்தின் 26’ ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் […]

Categories
விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி: பதக்கப் பட்டியலில் இந்தியா ஆதிக்கம்…!!

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் ஒன்பதாம் நாளான நேற்று இந்திய 27 தங்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 13ஆவது விளையாட்டுத் தொடர் தற்போது நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் மற்றும் மாலத்தீவு என எட்டு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் தெற்காசிய விளையாட்டு போட்டியின் ஒன்பதாம் நாளில் இந்திய அணி 27 தங்கப் பதக்கங்களையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹலுக்கு விருந்து உறுதி – ரோஹித் சர்மா….!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, சக அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த இரண்டாவது டி20 போட்டிக்கு பின், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர […]

Categories
கால் பந்து விளையாட்டு

பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன்…!!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பூமா (PUMA) நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். உலக கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் தற்போதைய இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமாக இருப்பவருமான சுனில் சேத்ரி, தற்போது விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் தன்னை இணைத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பூமா நிறுவனத்துடன் […]

Categories
கபடி விளையாட்டு

கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் மாஸ் காட்ட காத்திருக்கும் தமிழ்நாடு!

வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு – நடுங்கிய வீரர்கள்….!!

ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த பாம்பினால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் அணியில் இடம்பெறும் கேரி கிர்ஸ்டன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராகப் பணியாற்ற முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி கோப்பை: படிக்கல் நிதான ஆட்டம்….. வலுவான நிலையில் கர்நாடகா …!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டு விளையாடிவருகிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் பரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் தொடக்க நாளான இன்று குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]

Categories
விளையாட்டு

ரஷ்யாவுக்கு சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 4ஆண்டுகள் தடை …!!

சர்வதேசமற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு    4 ஆண்டுகள் ரஷ்யாவிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 கால ஆண்டில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி , 2022 கால ஆண்டில் நடக்க விருக்கும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி  மற்றும் உலக கோப்பை கால்பந்துபோட்டி  போன்ற  முக்கியமான  போட்டிகளில் விளையாடுவதற்கு ரஷ்யாவிற்கு , உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது . சென்ற  2014ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் நகரில் குளிர்கால […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

‘பிராவோவுடன் பணிபுரிந்தது ஸ்பெஷல் அனுபவம்… நடனக் கலைஞர் பெருமிதம்..!!

‘த சமியா சாங்’ எனப்படும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் பிரவோவுக்கும், சக்தி மோகனுக்கும் ராகுல் ஷெட்டி என்னும் நடனக் கலைஞர் நடனமாட பயிற்சியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நடனக் கலைஞர் ராகுல் ஷெட்டி, பிராவோவுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம் என்றார். இதைத்தொடர்ந்து ‘ஒரு சர்வதேச பிரபலமான வில் ஸ்மித்துக்குப் பிறகு பிராவோவுடன் பணிபுரிகிறேன். ஒரு பாடகர் என அறியும் முன்னரே, பிராவோவை கிரிக்கெட் வீரராக நான் ரசித்துள்ளேன். இதற்காக பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்’ என ராகுல் […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

டி.20கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி …!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.   திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : “தொடர்ந்து பாகிஸ்தான் முதலிடம்”…. இந்தியாவுக்கு 5 -ஆம் இடம்..!!

ICC கடந்த டிசம்பர் 02_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  270       ♦      தரவரிசை : 1 ♥  ஆஸ்திரேலியா                 ⇒         புள்ளி  269   […]

Categories
விளையாட்டு

இன்னும் நாலே வருடங்களில் பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி..!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .  மகளிருக்கான  ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம்  ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற  இருபது  ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில்  மகளிருக்கான  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி  இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐ.பி.எல்….-கங்குலி

அடுத்து வரும் 4 ஆண்டுகளில்  திறமையான வீராங்கனைகளை கொண்ட  7 அணிகள் கொண்டு  ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.   மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட  20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி […]

Categories
விளையாட்டு

டிஎன்பிஎல்-லில் 225 கோடி சூதாட்டம்….!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது தமிழ்நாட்டில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவில் சூதாட்டம் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எல் தொடரில் மதுரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட், தோனியாக மாற 15 வருடம் ஆகும் – கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ எல்லாம் ஒரு குழந்தை டா”….. பும்ராவை சீண்டும் பாக் வீரர் ….!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்மித்துடனான ரேஸில் முந்திய கோலி?! ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்ஸ் வெளியிடூ!

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன்மெஷின் என இந்தியஅணியின் கேப்டன் கோலி அழைக்கப்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இவர்களில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நீண்ட நாட்களாக […]

Categories
மற்றவை விளையாட்டு

பாலியல் வழக்கு – ஒலிம்பிக் சாம்பியனுக்கு 5 ஆண்டுகள் சிறை…!!

ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக, ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மித்தாலி ராஜ் பிறந்தநாளில் வெளியான அவரின் பயோபிக் டைட்டில்..!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராஜஸ்தான் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் குடிபெயர்ந்து இந்தியாவின் மகளாக வெற்றிவாகை சூடியவர் மித்தாலி ராஜ். சிறந்த பேட்ஸ்வுமன், அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் உமன் சச்சின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்… டான்… டானுக்கெல்லாம்… டான்… இந்த வார்னர் தான்!

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்ததன் மூலம் வார்னர் பல சாதனைகளை முறியடித்துள்ளார். வார்னரின் சாதனைகள்: ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை வார்னர் படைத்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் 299 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி 302 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடா..!… யார் கிட்ட….. ”பிராட்மேன் 73 ஆண்டு சாதனை”…தூள் தூளாக்கிய ஸ்டீவ் ஸ்மித்

மிக குறைந்த இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ஆஷஸ் தொடரில் பல்வேறு சாதனைகளை புரிந்தும் முறியடித்தும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித், தற்போது 73 வருடமாக யாருமே முறியடிக்க முடியாத சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்மித், 23 ரன்கள் அடித்திருந்தபோது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்தார். இதன்மூலம் மிக குறைந்த இன்னிங்ஸில்(126 இன்னிங்ஸ்) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”தோனி பற்றி பேசமுடியாது” – BCCI தலைவர் கங்குலி….!!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து தற்போது பொதுவெளியில் வெளிப்படையாக பேச முடியாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு குறித்து ஒவ்வொரு நாளும் புரளிகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்குலி, தோனி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னரின் முச்சதத்தால் உச்சம் தொட்ட ஆஸ்திரேலியா… அச்சத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சாக்னே மற்றொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அடிபட்ட சிங்கம் கர்ஜனை யங்கரமா இருக்கும்” வார்னரின் அதிரடியான முச்சதம்

ஆஷஸ் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது விமர்சனத்துக்குள்ளான ஆஸ்திரேலிய வீரர் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து அனைவரது வாயையும் அடைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரை மீசை, அரை தாடியுடன் காட்சியளிக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் – ஏன் தெரியுமா?

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ஜாக் காலிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காண்டாமிருகங்களைப் பாதுகாக்க புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் – ரவுண்டரான முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, தனது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நேற்று காலிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் காலிஸ் தனது மீசை, தாடியின் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜான்டி ரோட்ஸூக்கு முன் இவர்தான் கெத்து..!!

ஜான்டி ரோட்ஸூக்கு முன்னதாக, மாற்று வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆட்டநாயகன் விருதை பெற முடியும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் குஸ் லோகி நிரூபித்து நேற்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ”catches win matches” என்று கமெண்டெட்டர்கள் ஃபீல்டர்கள் குறித்து அதிகம் பேசிவருவதை ஒவ்வொரு போட்டியிலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பேட்டிங், பவுலிங்கைவிட ஃபீல்டிங்கில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இருப்பினும், போட்டியில் ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஆட்டநாயகன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்காத இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேட்டிங்கில் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பர். இதனால் இவர்களிடையேயான ஒப்பீடு எப்போதும் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டே இருக்கும். இந்த நால்வரும் அந்தந்த அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, இந்த வீரர்களின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி பண்ணிட்டியே…!… ”நாங்க எப்படி விளையாடுறது” பும்ரா பாத்தா வேள ….!!

இந்திய பந்துவீச்சாளர் பும்ரா பயிற்சியின்போது மிடில் ஸ்டெம்பை உடைத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழும் பும்ரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். இதனால், அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிராவில் முடிந்த தாய்லாந்து – வியட்நாம் போட்டி…..!!

பிலப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய கால்பந்துத் தொடரில் தாய்லாந்து – வியட்நாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னடா..!.. மனுஷன்…. இப்படி பறக்கிறான்…. வியந்த ரசிகர்கள்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் பறவையைப் போல் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடருக்குப் பிறகு, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்லிங், சான்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சான்ட்னர் பிடித்த கேட்ச் தற்போது ரசிகர்களிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிற வெறியால் நொந்து போன ஆர்ச்சர்….!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிற வெறியால் அவமானப்பட்ட போது தன்னால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் மன வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார். பெ ஓவல் நகரில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.இதில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுக்க, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் பின்தங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

94 ரன்கள் தான்….. கஷ்டப்பட்டு சேஸ் செய்த தமிழ்நாடு…..!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் சுற்றில் தமிழ்நாடு அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இன்னிங்ஸ் தோல்வி” இங்கிலாந்தை தும்சம் செய்த நியூசிலாந்து..!!!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சௌதி, வாக்னர் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

360 டிகிரியிலும் இந்தியாதான் டாப்…..!!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகமானப் பின், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியது. அந்த வகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்தூரில் நடைபெற்ற இதன் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி10 சாம்பியன் பட்டம் வென்ற யுவராஜ் டீம்….!!

டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மரத்தா அரேபியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெக்கான் கிலாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆண்டுக்கான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் கிறிஸ் லின் தலைமையிலான மரத்தா அரேபியன்ஸ் – வாட்சன் தலைமையிலான டெக்கான் கிலாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மரத்தா அரேபியன்ஸ் அணி முதலில் பந்து வீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க மோசமானவங்கள்ல முக்கியமானவங்கே…’ – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து இப்படியும் ஓர் சாதனை!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், அதிக வைடுகள் வீசிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வாட்லிங், சாண்ட்னர் அதிரடியால் ரன்குவிப்பில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தந்தை மரணத்தினால் தொடரிலிருந்து விலகிய அகுட்..!!

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்]பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!

 இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி […]

Categories
விளையாட்டு

மீண்டும் ஏமாற்றம்…!… தல தோனி இல்லை…. இந்திய அணி அறிவிப்பு …!!!

மேற்க்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்க்கிந்திய தீவு அணி 3 20 ஓவர் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் விளையாட இருக்கின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மஹேந்திர சிங் தோனி. உலக கோப்பை தொடருக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தோனி இந்த தொடரில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது.  மேற்க்கிந்திய தீவு அணி தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு வேளை இவரா இருக்குமோ?… ரசிகர்களை குழப்பிய சிஎஸ்கே… பதில் கண்டுபிடித்து அசத்திய ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீழ்ந்தாலும் எழுவோம்… காயம் குறித்து ஷிகர் தவான் …!!

கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அவர் அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 91 ரன்களைக் குவித்தார். அதன்பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்தார். இதனிடையே ஷிகர் தவானின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கும்-பொல்லார்ட்டுக்கும் மோதலா? – ரசிகர்கள் குழப்பம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் தனது நீண்ட கால நண்பரான ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இன்று அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் கிரான் பொல்லார்ட் தலைமையில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று பொல்லார்ட் ஐபிஎல்லின் சக அணி வீரரான இந்தியாவின் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஆண்கள் அழுவதால் என்ன குறையுள்ளது?” – சச்சினின் உணர்ச்சிவசமான கடிதம்…!!

சர்வதேச ஆண்கள் தினத்தன்று கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆண்களின் அழுகை பற்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நேற்று முன் தினம் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்நாளில் முதல் முறையாக வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார். அவர் அக்கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அவரின் அந்த கடிதமானது ஆண்கள் ஏன் அழக்கூடாது என்பது […]

Categories

Tech |