ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த […]
Category: விளையாட்டு
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 241 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் […]
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் இந்தாண்டு பிக் பேஷ் லீக்கில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போன்றே ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் டி20 தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் ஒன்பதாவது சீசன் இந்தாண்டு இறுதியிலிருந்து தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இன்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் […]
டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்ர்ஸ், டீம் அபுதாபி மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, மோயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீம் அபுதாபி அணிக்கு அவிஷ்கா […]
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், […]
23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. 23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. […]
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் இளவேனில் 250.8 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.250.7 புள்ளிகளை எடுத்த […]
உள்ளூர் லீக் போட்டியில் சக அணி வீரரைத் தாக்கிய வங்கதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டாக்கா டிவிசன் – குல்னா டிவிசன் அணிகளுக்கிடையிலான ஆட்டம் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் […]
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மான்சூ டி20 தொடரில் கேப்டவுன் அணியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கிரகோரி மகலோக்வானா வலது, இடது என இரண்டு கைகளிலும் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் மான்சூ சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கேப்டவுன் பிளிட்ஸ் – டர்பன் ஹூட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில், கேப்டவுன் அணியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கிரகோரி மகலோக்வானா (Gregory Mahlokwana) இரண்டு […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் வருகிற கோடை காலத்தோடு அணியிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் […]
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியிலிருந்து ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின் நீக்கப்பட்டத்தற்கு, யுவராஜ் சிங் கொல்கத்தா அணியை கடுமையாகச் சாடியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்களை அணியிலிருந்து விலக்கியுள்ளது.அந்த வரிசையில் இருமுறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணி – கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, பியூஸ் சாவ்லா உள்ளிட்ட […]
டி10 கிரிக்கெட் லீக்கின் 10ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது. கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10-ஆவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை […]
டி10 கிரிக்கெட் லீக் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்து கிறிஸ் லின் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 11ஆவது லீக் ஆட்டத்தில் கிறிஸ் லின் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி, மொயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டீம் அபுதாபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அரேபியன்ஸ் அணியில் கேப்டன் கிறிஸ் லின் தனது ஆக்ரோஷமான […]
உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் சர்ஃப்ராஸ் அகமது பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுவார் என அந்நாட்டு பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும், பயிற்சியாளராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பதவியேற்றதில் இருந்து, பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. […]
பிரேசிலியன் கிராண்ட் ஃப்ரீ ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து அசத்தினர். ஃபார்முலா ஒன் கார் பந்தயம் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இன்னும் ஒரு பந்தயம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் நேற்று பிரேசியின் கிராண்ட்ப்ரீ பந்தயம் நடைபெற்றது. நடப்பு சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஏற்கனவே […]
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வீரர் ஜடேஜா குறித்து எழுப்பிய கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தடாலடியான பதிலை அளித்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா நடைபெறுவது போன்ற உணர்வு அனைவரிடத்திலும் தொற்றிக்கொள்வது வழக்கம். காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் பல அதிரடி வீரர்களும் கலர் கலரான ஜெர்சியை அணிந்துகொண்டு கலக்குவர். இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் […]
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் […]
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தான் 97 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தற்போது மனம் திறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். […]
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, சையத் அலி முஷ்டாக் டி20 தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் சையத் அலி முஷ்டாக் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் போட்டிகளில் பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன. இதனிடையே இன்று டி பிரிவில் நடைபெற்ற போட்டியில் மும்பை – அசாம் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரராக […]
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். லண்டனில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டொமினிக் தீன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-வை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் முதல் செட் கணக்கை 7-6 […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் ஸ்டீவன் ஸ்மித். இவர் தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டி20 அணியிலும் இடம்பிடித்தார்.இவர் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கிட்டத்திட்ட மூன்றரை வருடங்களுக்கு தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்மித் […]
டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]
டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு […]
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுள் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.இந்திய […]
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் தகுதிபெற்றுள்ளார். ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் முதல், இரண்டாவது சுற்றுகளில் தோல்வியைத் தழுவி வெளியேறினர்.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சக இந்திய வீரர் சவுரப் வர்மாவை 21-11, 15-21, 21-19 என்ற செட்களில் வீழ்த்தி முன்னாள் நம்பர் ஒன் […]
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 5 வீரர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இதனால் […]
யூரோ கால்பந்து தொடர் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி மாண்டிநீக்ரோ அணியை 7-0 என வீழ்த்தி, தனது 1000ஆவது போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – மாண்டிநீக்ரோ அணிகள் மோதின. இது இங்கிலாந்து கால்பந்து அணியின் […]
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே, அடுத்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அடுத்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தச் சூழலில் அடுத்த சீசனில் களமிறங்கும் வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பிற அணிகளுடன் வீரர்களை பரிமாறிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வீரர்கள் பரிமாற்றம் நவம்பர் […]
இரட்டை பதவி விவகாரத்தில் ராகுல் டிராவிட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலர் டி.கே. ஜெயின் (ஓய்வு) தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, டிராவிட்டிற்கு இந்த புதிய பதவி வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அலுவலரிடம் புகார் அளித்தார். ஏனெனில் டிராவிட் […]
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரவு இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நடப்பு ஆண்டுக்கான ஹாங் ஓபன் பேட்மிண்டன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், ஏற்கனவே இந்திய வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி அடைந்திருந்தாலும், மற்றொரு நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியிருந்தார். இன்று […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஒருநாள் தொடரை பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் […]
பத்தாண்டுக்கு பின் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பு கருதி எந்த அணியும் முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றது. ஆனால் அதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் லசித் மலிங்கா உட்பட முன்னணி வீரர்கள் அந்த தொடரில் பங்கேற்கவில்லை. […]
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்தாண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ‘குரூப் இ’க்கான லீக் போட்டியில் ஜம்மு – காஷ்மீர் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது.இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே […]
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் ஆட்டத்தில் உலகின் நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகின் முன்னணி ஆடவர் டென்னிஸ் நட்சத்திரங்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிஸ்நாட்டு நட்சத்திர ரோஜர் ஃபெடரர், உலகின் இரண்டாம் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்று […]
ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 1-1 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை சமன் செய்தது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த அணிகளுக்கு ரவுண்ட் ராபின் முறையில் […]
பேட்டிங்கில் சச்சினைப் போல விக்கெட் கீப்பிங்கில் பலருக்கு ரோல்மாடலாக திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். அவர் ஏற்படுத்திய தாக்கத்தில் இன்றும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் விக்கெட் கீப்பர்கள் பயணித்துவருகின்றனர்.தற்போதைய இளம் விக்கெட் கீப்பர்கள் பெரும்பாலோனருக்கு இன்ஸ்பிரேசனாக திகழும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தனது 48ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பரும் ஒருவகையில் ஆல்ரவுண்டர்கள்தான். ஆனால் இது ஒரு காலக்கட்டதில் ஏற்றுகொள்ளப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது இருந்த பெரும்பலான விக்கெட் கீப்பர்களின் பங்களிப்பு, விக்கெட் […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம், சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர், தனது பந்துவீச்சில் பல வெரைட்டிகளை காட்டி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான […]
டி20 போட்டியில் மூன்றாவது (உள்ளூர் + சர்வதேச போட்டிகள்) ஹாட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்திய வீரர் தீபக் சாஹருக்கு நூலிழையில் நழுவியது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்களில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் புகைப்படத்தைத் தான் நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக், பின் நவம்பர் 12ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் ஹாட்ரிக் […]
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் மணிப்பூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு – மணிப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரின் அசுரத்தனமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி திணறி வருகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் […]
இந்தியா – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர் அஸ்வின் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் […]
2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கபடி தொடர் பஞ்சாபில் டிசம்பர் 1 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கபடி கூட்டமைப்பால் 2004ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட மூன்று தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2019 உலகக்கோப்பை கபடி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை […]
ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ஸசாய், ஆஸ்கர் ஆஃப்கான், […]
ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனெவே கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. […]
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில்,நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற […]