இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]
Category: விளையாட்டு
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே இந்திய ஹாக்கி அணிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்திய ஆடவர் அணி ரஷ்யாவை எதிர்த்தும் […]
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமதை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கான 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றியையும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியையும் சந்தித்தது. அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்தான […]
இந்திய அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் அபுதாபில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கிரிக்கெட் வரலாறானது டெஸ்ட் வடிவில் தொடங்கி காலப்போக்கில் ஒருநாள், டி20 என்பதையெல்லாம் தாண்டி தற்போது டி10 தொடராக உருமாறியுள்ளது. அந்த வகையில் டி10 தொடர்கள் 2017ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு நடைபெறவுள்ள டி10 தொடரில் பல முன்னணி அணிகளின் நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அந்த வரிசையில் இந்திய […]
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வீரர்களில் அந்த அணியின் கேப்டன் முகமது நவீதும் ஈடுபட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈட்டுபட்டதாக அந்த அணியின் பேட்ஸ்மேன் ஷைமன் அன்வர், பந்துவீச்சாளர் கதீர் அகமது ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தது.அந்த சூதாட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் […]
பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது? முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா? (ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளரான அனில் கும்ப்ளே நேற்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டியது கங்குலி என்றால், அதே ஆஸ்திரேலியாவை இந்தியாவை பார்த்து பயப்பட வைத்தவர், அனில் கும்ப்ளே. சாந்தமாக இருந்த அவரும் அந்தத் தொடரின் போது ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.அனில் கும்ப்ளே என்ற பெயரை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தாடை உடைந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 14 […]
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கோரிக்கைக்கு, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் சரியாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது மட்டுமின்றி அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் வார்த்தைகளால் விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாது சக வீரரின் பதிவுகளுக்கு கேலியான பதில்களை பதிவிட்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறுகின்றனர்.அந்த வகையில் ஃபீல்டிங் ஜாம்பவானான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டார். […]
முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே நேற்று தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியாவின் பெரிய […]
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் முறியடித்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் […]
கடைசி நிமிடத்தில் டிஃபெண்டர் செய்த தவறால் கொலராடோ அவலாஞ்சி அணி நேஷனல் ஹாக்கி லீக் தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி எனப்படும் நேஷனல் ஹாக்கி லீக் போட்டி மிகவும் பிரபலமானவை. இந்த சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில், பிட்ஸ்பர்க் பென்குவின்ஸ் – கொலராடோ அவலாஞ்சி அணிகள் மோதின.இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டம் முடிகின்றன நேரத்தில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது. அப்போது, களத்தில் சிறப்பாக ஆடிய பிட்ஸ்பர்க் […]
ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்காக வழங்கப்படும் விருதில் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் Women’s Health Women in Sport Awards என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணி கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருதை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு ஏற்படும் கோபம் குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் என்றாலே பரபரப்பான ஆட்டங்கள், நெயில் பைட் நிமிடங்கள் என பல்வேறு தருணங்கள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். அதிலும் அணியை வழிநடத்தும் கேப்டன்கள் இதுபோன்ற சமயங்களில் தவறுகள் நேரும்போது, பிறர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் மிகவும் உணர்ச்சிகரமிக்க கேப்டன்களாக வலம் வந்தனர். […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாதுகாப்பு காரணம் கருதி இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்று அசத்தியது.தற்போது, இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் […]
சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரில் சச்சின், சேவாக், உள்ளிட்ட 110 ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடவுள்ளனர். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளனர். சாலை பாதுகாப்பின் விழப்புணர்வுக்காக அடுத்தாண்டு உலக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற 90ஸ் […]
கோபத்தில் கையை உடைத்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என இரண்டு துறையிலும் அசத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் […]
பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய கால்பந்து லீக் தொடரில் அதிக கோல்களை அடித்து ஆறாவது முறை கோல்டன் ஷூவை கைப்பற்றினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் கால்பந்து விளையாட்டு வீரர் பார்சிலோனா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் 36 கோல்களை அடித்து லீக்கின் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இதன் காரணமாக இன்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து […]
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பானின் சாயகா தகாஹஷியிடம் தோல்வியடைந்தார். டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சாயகா தகாஹஷியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சாய்னா நேவால், இரண்டாம் செட்டையும் 21-23 […]
2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. #VijayHazare2019: 2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து குஜராத் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, தமிழ்நாடு சார்பாக அபினவ் முகுந்த் – முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தில் இறங்கிய […]
ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராண்டன் கிங், ஹய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் அறிமுகமாகவுள்ளனர். ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கீரோன் பொல்லார்ட் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மீண்டும் அணியின் கேப்டனாக […]
தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய […]
உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கங்குலி சந்தித்தைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளார் என செய்திகள் வலம்வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த கங்குலி, “அமித் ஷாவை முதன் முதலில் சந்தித்தேன். பிசிசிஐ தலைவர் தேர்தல் […]
சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்ஸ்களால் ஹேக் செய்யப்பட்டுவருகிறது.அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ப்பட்டதை அவரது ரசிகர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, இவரது ட்விட்டர் பக்கம் சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது […]
சச்சின், சேவாக் உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளனர். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ். கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல […]
புரோ கபடி லீக் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு புல்ஸ், யூ மும்பா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யூபி யோதா அணியை எதிர்கொண்டது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யூபி யோதா அணி முதல் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் சக வர்ணனையாளர்களுடன் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, சக வர்ணனையாளர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்.லக்ஷ்மண் கோட் சூட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் சக வர்ணனையாளர்களுடன் கோட் சூட் அணிந்து ‘கல்லி கிரிக்கெட்’ எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டார்.இவரது நீக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பில் சிம்மன்ஸ், மீண்டும் […]
துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில் ஜிம்பாப்வே, நேபாளம் ஆகிய அணிகளை மீண்டும் ஐசிசி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் […]
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை […]
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்னும் இளம் வீரரைப்போலதான் செயல்படுகிறார் என சிஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இயங்கிவரும் வேலம்மாள் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார். அவருக்கு […]
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை இந்தியாவின் ’லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. இவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் […]
பிக் பாஷ் டி20 தொடரைப் பின்பற்றி தற்போது ஐசிசியும் சூப்பர் ஓவர் விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில், இம்முறை இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தாதல், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா […]
கம்பீர் பிறந்தநாளில் அவரை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பு கொடுக்கின்றது. இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் கவுதம் கம்பீர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். சச்சின் , கங்குலி என்ற ஒரு சிறந்த வலதுகை , இடதுகை தொடக்க ஆட்டக்காரர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்கு இணையாக சேவாக் , கம்பீர் ஜோடி இருந்தது என்றால் மிகையல்ல. 2007 […]
இந்திய கேப்டன் விராத் கோலியை விட கம்பீர் ஆக்ரோசமானவர் என்றால் மிகையல்ல. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆக்ரோசமாக செயல்படுவதில் விராத் கோலியின் முன்னோடி என்றால் அது மிகையல்ல. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கும் ஆக்ரோஷமாக கருத்துக்கள் கம்பீர் தெரிவித்து வந்தவர். 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான கம்பீர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு இன்று (14.10) பிறந்த நாள். எனவே இன்று அவரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்திய வரைபடத்தை மாற்றும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா ? காஷ்மீரை நீங்க பாகிஸ்தானுக்கு மாற்ற இந்தியாவில் இருந்து நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா ? நீங்களோ அல்லது உங்கள் சக அரசியல்வாதிகளோ காஷ்மீர் இளைஞர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்பதை சொல்ல முடியுமா ? இந்த வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடையது. […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய விளையாடிய கம்பீர் ஆட்டநிலை குறித்து பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 2003_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகளில் 143 இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடிய கம்பீர் , இதில் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 5238 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் […]
பிறந்த நாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்த செய்தி தொகுப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 1981_ஆம் ஆண்டு 14_ஆம் தேதி அன்று பிறந்தார். தீபக் கம்பீர் மற்றும் சீமா கம்பீர் ஆகிய தம்பதிக்கு மகனாக புது டெல்லியில் பிறந்தார். இந்திய அணியின் தொடக்க இடதுகை ஆட்டக்காரராக ஒருநாள் , டெஸ்ட் மற்றும் […]
இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே, இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி… நடிகை அஷ்ரிதா ஷெட்டி யார் என்று […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்து இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்துள்ளார். புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் […]
சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஓமன் வீரர் கவார் அலி படைத்துள்ளார். ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஓமன் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஓமன் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஓமன் அணியின் பந்துவீச்சாளர் கவார் அலி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். […]
டெஸ்ட், ODI , T20 என அனைத்திலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையை அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரைன் படைத்துள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரைனை மறக்காத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனயையை 2011இல் படைத்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]
சிறு வயதில் பயிற்சிமேற்கொள்ளும்போது தன்னிடம் ஒரு செட் ஷூ மட்டுமே இருந்ததாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக யார்க்கர் கிங்காக வலம்வருபவர் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன், துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என பந்துவீச்சில் பல வெரைட்டிகளைத் தன் கையில் வைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த நல்ல அறிமுகத்தின் மூலம், 2016 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மூன்றே வருடங்களில் தற்போது உலகின் தலைசிறந்த […]
50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]
பெண்களுக்கு வித்தியாசமான முறையில் விஜய தசமி வாழ்த்து சொல்லி ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அணியில் பங்கேற்றார். அன்று முதல் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து தெறிக்கவிடுவார். துர்கை அம்மன் துணை!!பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது #தல யின்#நேர்கொண்டபார்வை.அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழியவீரம் கொண்டு […]
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது மாரடைப்பு காரணமாக நடுவர் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த56, கசாப் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பின் கிரிக்கெட் மீதிருந்த அதீத ஆர்வத்தினால் தேர்வுகள் எழுதி நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதய நோயாளியான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று கராச்சியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் நடுவராக இருந்தபோது இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இவரது […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர்கானுக்கு பிறந்தநாள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர். அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து, ஜாகீர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து தனது வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011- ல் நடந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோன்று தோனியின் மகள் ஸிவாவிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் அவரது குறுப்புத்தனமான காணொலி, புகைப்படங்களே ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்தக் காணொலி, புகைப்படங்களை […]
டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் […]