Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சில ஆண்டுகளாக பார்க்கிறேன்” உலகிலேயே தலை சிறந்த ஆட்டக்காரர் இவர் தான்…. ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

எனது பார்வையில் ரோகித்  தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகிய பிருத்வி ஷா..!!

தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார்  மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முதலில் மதிக்கக் கத்துக்கோ” மஞ்சரேகருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா..!!

“சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜடேஜா சஞ்சய் மஞ்சரேகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக உள்ளனர்.இதில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகரும் இடம் பிடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும்  வர்ணனையாளர்களாக இருந்துள்ளார். அப்போதிலிருந்து இப்பொது வரை இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இவர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் சதம் விளாசிய ஜானி பேர்ஸ்டோ…. நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு..!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 305 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ரிவர்சைடு மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமாக ஆடியது. தொடக்கம் முதலே இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பையுடன் “தல தோனி ஓய்வு” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடப்பு உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றவர் தோனி. இந்திய அணியை 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என 3 ICC கோப்பையை இந்திய அணிக்கு இவரின் தலைமையில் கிடைத்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸரால் காயம் பட்ட ரசிகைக்கு ஹிட்மேன் பரிசு” நெகிழ்ச்சியான சம்பவம்..!!

ரோகித் சர்மா தான்  சிக்ஸர் அடித்த பந்து பட்ட  ரசிகை மீனாவுக்கு தனது  தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இதுவரை பார்த்ததில் இது தான் சிறப்பான ஆட்டம்” வங்கதேசத்தை புகழ்ந்த சச்சின்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்  நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய  சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.  எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1 அல்ல …. 2 அல்ல …. 3 சாதனையை அரங்கேற்றிய ஹிட் மேன்….. குவியும் பாராட்டுக்கள் …!!

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சதம் அடித்த ஹிட் மேன்” இந்திய அணி அதிரடி ரன் குவிப்பு…!!

வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சத்தத்தை கடந்த நிலையில் ஹிட் மேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காயம் காரணமாக விலகும் ஷிகர் தவான்” ரிஷப் பண்டுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

ஷிகர் தவான் காயம் காரணமாக விலகுவதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது   12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் கடந்த 09-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில்  ஷிகர் தவான் பேட்டிங்கின் போது  இடது கை பெரு விரலில் பந்து பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போட்டியில் தவான் சதமடித்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

“பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி” ட்விட்டரில் வாழ்த்திய ராஜ்நாத்சிங்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியா போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 336 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார். மேலும் கோலி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் மீது நடத்திய மற்றொரு தாக்குதல்” இந்திய அணிக்கு அமித்ஷா புகழாரம்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தான் மீது நடத்தியுள்ள மற்றொரு  தாக்குதல் இது என்று ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியா போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 336 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு..!!

கிரிக்கெட் வீரர் சச்சின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது ராயல்டி வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளார். அந்த ஒப்பந்தம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் பொருள்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஆண்டிற்கு ஒருமில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான். அதன் படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும். ஆனால் ஒப்பந்தத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டியும் மழையால் தடைபட்டால் உலககோப்பை யாருக்கு ?….

ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் . தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS AUS போட்டியை காண ஓவல் மைதானம் வந்த விஜய் மல்லையா..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார்.  உலகக்கோப்பை போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 57 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அடித்த அடியில் இந்திய வம்சாவளிக்கு காயம்..!!

பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து இந்திய வம்சாவளியை தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14 வது லீக் ஆட்டத்தில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் ஜெய் கிஷான் பந்து வீசினார். அப்போது வார்னர் அடித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜம்மி நிஷம் பந்து வீச்சில் திணறும் ஆப்கான்…!!

ஜம்மி நிஷம்மின் அசத்தல் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகின்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 13_ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும்  ஆப்கானிஸ்தான் மோதியது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு டெளன்டன் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான்  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா மற்றும் நூற் அலி ஜத்றான்  களமிறங்கினர். பொறுமையாக ஆடிய இந்த தொடக்க ஜோடி 66 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜேசன் ராய் அதிரடி பேட்டிங்… வங்கதேசத்துக்கு 387 ரன்கள் இலக்கு..!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 386 ரன்கள் குவித்துள்ளது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 12-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து   –  வங்காள தேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில்  பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னணி வீரர்கள் சொதப்பல்…. கோல்டர் – நிலே அதிரடி…. ஆஸ்திரேலியா 288 ரன்கள் ரன்கள் குவிப்பு..!!

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில்அனைத்து  விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா   –  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி” உலக கோப்பை கேப்டனின் பயிற்சியாளர் மரணம்….!!

இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி  முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது. ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை  பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம்  29 போட்டி விளையாடி 1132 ரன்களும்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியும், தோனியும் மிரட்டுவார்கள்” – ஜே.பி டுமினி..!!

விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக  ஆடுவார்கள்  என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்.  12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குறைந்த ரன்னில் சுருண்ட இலங்கை…. விக்கெட் இழக்காமல் வென்ற நியூசிலாந்து..!!

நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –  இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ்  மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பந்து வீச்சு…. சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்  –  பாகிஸ்தான்  அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்  3வது ஓவரில் ஷெல்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து…!!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்ச்சர் அபார பந்து வீச்சு…. தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 173/6…!!

தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் விளையாடி வருகிறது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அதிரடி….. 4 வீரர்கள் அரைசதம்…. தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு…!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் “அசத்தும் இங்கிலாந்து” 106 குவித்த இரண்டு ஜோடிகள்…!!

 தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பையின் முதல் போட்டியில் 100 ரன் பார்ட்னர் ஷிப்பை இரண்டு ஜோடிகள் குவித்து அசத்தியுள்ளது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் “அசத்திய இங்கிலாந்து அணி” 4 வீரர்கள் அரை சதம்….!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது.ஆட்டத்தின் முதல் ஓவரின் 2 வது பந்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் அடித்து மிரட்டிய ரூட், ராய் அவுட்…. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 135/3…!!

இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 135 ரன்களுடன் விளையாடி வருகிறது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேர்ஸ்டோ ஏமாற்றம்…. ராய், ரூட் அசத்தல் பேட்டிங்… இங்கிலாந்து 12 ஓவரில் 72/1…!!

இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்று தொடங்கும் உலககோப்பை கிரிக்கெட்”வெளியிட்டது கூகுள் டூடுள் …!!

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில்  கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. I.C.C  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போட்டி இன்று முதல்  இங்கிலாந்தில் தொடங்குகின்றன. உலகளவில் முதன்மையாக இருக்கும் முதல் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றது . இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ICC உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுநடைபெறும்  நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக்கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் “சச்சின் கணிப்பு ..!!!

உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை  முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.  பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து  அணிகளும்  உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள்  செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக்கோப்பையின் கிங்மேக்கர்கள் பவுலர்கள் தான் “மலிங்கா பரபரப்பு பேட்டி ..!!!

உலககோப்பையின் கிங்மேக்கர்களாக பவுலர்கள் திகழ்வார்கள் என இலங்கை  வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.  பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து  அணிகளும்  உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா  உலகக்கோப்பை போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது, உலக கோப்பை போட்டியை பொருத்தவரையில் பேட்ஸ்மேன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிரடியாக விளையாடிய தோனி “வங்கதேச அணிக்கு 360 ரன்கள் இலக்கு ..!!

உலகக்கோப்பைக்கான 10வது பயிற்சி ஆட்டத்தில் தல தோணி அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார் . உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதியது . இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய தல தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் ராகுல் 108 ரன்களும்  எடுத்துள்ளனர். கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேக பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உலகக்கோப்பை..!!

இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு  சாதகமாக இருப்பதால் வேக பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வருகிறது . 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்களிலே  மிக     திறமையாக விளையாடி அணி பலத்தை  காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக எப்பொழுதும்  அமைந்திருக்கும்.     ஆகையால் உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள்..!!

உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள் :  நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க                              உள்ள அனைத்து அணிகளும் விறுவிறுப்பாக விளையாடி தங்களது திறமையினை காட்டி வருகின்றனர். இந்நிலையில்   இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.  மற்றொரு மைதானமான பிரிஸ்டோல் மைதானத்தில் நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயிற்சி போட்டியை வைத்து இந்தியா அணியை எடை போட முடியாது “ஜடேஜா பரபரப்பு பேட்டி ..!!

நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .                               நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய  அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் விராட் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

” நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு “

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது  தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய ஹர்பஜன் சிங்.!!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை  பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு  நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வெளியிட்ட வீடியோ..!!

 காலில் அடிபட்டு ரத்தம் வந்த பிறகு  சென்னை ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு ஷேன் வாட்சன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் பரபரப்பாக நடந்த மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் கால் முட்டியில் அடிபட்டு  ரத்தம் வழிந்தும் விளையாடியது தெரிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷேன் வாட்சனை வலைத்தளங்களில் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.  சென்னை ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த இந்திய முன்னாள் அதிரடி வீரர்..!!

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.   தற்போது நடந்த 2109 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய  காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா. அதற்க்கு ஆதாரம் அவர் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே சாட்சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  வரும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்” சவுரவ் கங்குலி கருத்து..!!

உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு  பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது.  இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்  கங்குலி, பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கால் முட்டியில் அடி பட்டு ரத்தம்…. வெற்றிக்கு போராடிய வாட்சன்…. ஹர்பஜன் பெருமிதம்!!

ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும்  விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்  சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அவுட் இல்லை”அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..!!

மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : 1 ரன்னில் கோப்பையை இழந்த சென்னை…. 4வது முறை சாம்பியனான மும்பை..!!

ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியை  1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது     2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : மும்பை அணி 149 ரன்கள் குவிப்பு…. கோப்பையை கைப்பற்றுமா சென்னை.!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது  2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!!

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது  2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணி 147 ரன்கள் குவிப்பு… இலக்கை எட்டுமா சென்னை..?

டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 […]

Categories

Tech |